என் மலர்
டெல்லி
- இந்த விவகாரத்தில் இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.
- நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன் என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் அசோகன் கூறுகையில், " இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இனி பதில் சொல்லும் அரசியல் விருப்பம் அவர்களுக்கு இருக்கும்.
ஏனென்றால் நாம் கேட்டது அவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. நாங்கள் மிகவும் அடிப்படை உரிமையை, வாழ்வதற்கான உரிமையை கேட்கிறோம். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவோம்.
அவரது தலையீட்டிற்கான நேரம் கனிந்துள்ளது. நிச்சயமாக, அது (பிரதமர் மோடி தனது ஆகஸ்ட் 15 உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டது) அவர் அக்கறையுடன் இருப்பதைக் காட்டும் ஒரு அம்சமாகும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐஎம்ஏ அதைச் செய்யும்." என்றார்.
- மனித குலத்தின் மூன்றில் இரண்டு பங்குக்கு நாம் ஒன்றாக அங்கீகாரம் கொடுப்போம்.
- அடுத்த மாதம் ஐநாவில் எதிர்கால உச்சி மாநாடு நடைபெறுகிறது.
புதுடெல்லி:
3-வது தெற்கு உலக உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:-
140 கோடி இந்தியர்கள் சார்பாக 3-வது குரல் உலக தெற்கு உச்சி மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சுற்றிலும் நிச்சயமற்ற சூழல் நிலவும் நேரத்தில் இன்று நாம் சந்திக்கிறோம். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக வெளிவர வில்லை.
மறுபுறம் போர் சூழ்நிலை அபிவிருத்திப் பயணத்திற்கு சவால்களை உருவாக்கியுள்ளது.
நாம் பருவநிலை மாற்றத்தின் சவால்களை மட்டும் எதிர்கொள்வதில்லை, ஆனால் இப்போது சுகாதார பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பற்றிய கவலைகள் உள்ளன. இதுபோன்ற சவால்களை தெற்கு உலகம் எதிர்கொள்கிறது.
பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கின்றன.
தொழில்நுட்ப பிளவு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புதிய பொருளாதார மற்றும் சமூக சவால்களும் உருவாகி வருகின்றன.
கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலகளாவிய நிர்வாகமும் நிதி நிறுவனங்களும் இந்த நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை.
தெற்கு உலக நாடுகள் ஒன்றுபடுவதும், ஒரே குரலில் ஒன்றுபடுவதும், ஒருவருக்கொருவர் பலமாக மாறுவதும் காலத்தின் தேவையாகும். மனித குலத்தின் மூன்றில் இரண்டு பங்குக்கு நாம் ஒன்றாக அங்கீகாரம் கொடுப்போம்.
மேலும் இந்தியா தனது அனுபவங்களையும், அதன் திறன்களையும் உலகளாவிய தெற்கின் அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது. பரஸ்பர வர்த்தகம், உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்க விரும்புகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு மூலம் எங்களது பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.
நிதி சேர்த்தல் மற்றும் கடைசி மைல் டெலிவரி பற்றிய எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோம். உலகளாவிய தெற்கின் பல்வேறு நாடுகளை யு.பி.ஐ.யுடன் இணைக்க ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி, திறன் மேம்பாடு மற்றும் திறன் ஆகிய துறைகளில் எங்கள் கூட்டாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பிற்கான எங்கள் நோக்கம்-ஒரு உலகம்-ஒரே ஆரோக்கியம்.
ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளில் உள்ள மருத்துவமனைகள், டயாலிசிஸ் இயந்திரங்கள், உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதன் மூலம் இந்த நட்பை நாங்கள் வளர்த்துள்ளோம்.
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாக இருந்தாலும் சரி, அல்லது கென்யாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சம்பவமாக இருந்தாலும் சரி. காசா மற்றும் உக்ரைன் போன்ற மோதல் பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம்.
நமது பலம் நமது ஒற்றுமையில் உள்ளது என்று நான் நம்புகிறேன், இந்த ஒற்றுமையின் பலத்தில் நாம் ஒரு புதிய திசையை நோக்கி நகர்வோம்.
அடுத்த மாதம் ஐநாவில் எதிர்கால உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், எதிர்கால ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தில் உலகளாவிய தெற்கின் குரல் ஒலிக்கும் வகையில் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு நேர்மறையான அணுகுமுறையை எடுக்க முடியுமா?
இவ்வாறு மோடி பேசினார்.
- பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
- சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
ஆஸ்பத்திரியின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் பிணமாக கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பெண் டாக்டர் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சமூகம் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது.
இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை டாக்டர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும், அவசர சிகிச்சை மட்டும் வழக்கம்போல செயல்படும். விருப்ப அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது.
வழக்கமான புறநோயாளிகள் பிரிவு மூடப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்தது. இப்போராட்டத்தில் அகில இந்திய மருத்துவ மாணவர் சங்கம், உறையிட டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள் ளிட்ட மருத்துவ சங்கங்களும் இணைந்துள்ளன.
இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தப்படி நாடு முழுவதும் இன்று டாக்டர்களின் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகள் மூடப்பட்டன.
பல்வேறு மாநிலங்களில் டாக்டர்கள் பணிக்கு வராமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா, பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
மேற்கு வங்காளத்தில் டாக்டர்களின் போராட்டம் தீவிரமாக நடந்தது. கொல்கத்தாவில் உள்ள நூற்றுக்கணக்கான டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்ட னர். இதேபோல் டெல்லி, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் நடந்தது.
தமிழ்நாட்டில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாடு முழுவதும் டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். டாக்டர்கள் இல்லாததால் புறநோயாளிகள் பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம்போல் இயங்கின.
இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் 5 முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை வருமாறு:-
1. ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரியில் 36 மணிநேர பணி மற்றும் ஓய்வெடுக்க பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் இருந்துள்ளது. எனவே உறைவிட மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.
2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3. பெண் டாக்டர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்.ஜி. கர் ஆஸ்பத்திரியை சூறையாடியவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
4. விமான நிலையங்களில் இருப்பது போல் ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளை கட்டாய பாதுகாப்பு உரிமைகளுடன் பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றலாம்.
5. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு ஏற்ப உரிய மற்றும் கண்ணியமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த 5 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாக்டர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட ஆர்.ஜி.கர் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தி சூறையாடிய சம்பவத்தில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து உருக்கமாக அறிக்கை ஒன்றை வினேஷ் வெளியிட்டிருந்தார்.
- ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.
அதில், "என்னுடைய எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் தற்போது கணிக்க முடியாது. ஆனால் நான் எதை நம்புகிறேனோ, அதற்காகவும் சரியான விஷயத்திற்காகவும் எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இன்று, வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.
விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.
- பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்து போராட்டம்.
- கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.
குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .
இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
அம்ரிஸ்தரில் பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி, ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் உள்ளிட்டவை நேற்று முதலே காலவரையின்றி இந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் PCMS உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள், சிவில் மருத்துவமனை, குரு நானக் மருத்துவமனை பயிற்சி ஜூனியர் மருத்துவர்கள், டெல்லியின் RMS மருத்துவமனை மருத்துவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் மருத்துவர்கள், ஹைதராபாத்தில் இயங்கி வரும் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், மும்பையில் செயல்படும் மருத்துவமனை டாக்டர்கள், கொல்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் என நாடு முழுவதும் நேற்று முதில் தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தபடி இன்று காலை 6 மணி முதல் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது
- டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிறந்தநாளை கொண்டாடினார்.
- கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் உள்பட பலவேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். அநீதிக்கு எதிரான இந்தப் போரில் இந்தியா உங்களுடன் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள தமிழக முதலமைச்சர் உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
- தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் உரை.
- வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் வலியுறுத்தல்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இதைதொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார்.
வங்கதேசத்தில் இந்துகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், மோடியுடன் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது, வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அப்போது, வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கருத்துப் பரிமாற்றம் இருந்தது. ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என முகமது யூனுஸ் மீண்டும் வலியுறுத்தினார்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு காக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை அவர் உறுதியளித்தார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள ஐ.பி.எல். போட்டிகளின் எண்ணிக்கையை 84 ஆக உயர்த்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:
பி.சி.சி.ஐ.யின் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களுக்கு இதுபோன்ற விரிவாக்கம் தேவைப்படுகிறது. ஆனாலும், வீரர்களின் பணிச்சுமையைக் கணக்கிட விரும்புகிறோம்.
ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் 2025-26ல் 84 போட்டிகளாகவும், அதைத் தொடர்ந்து 2027ல் 94 போட்டிகளாகவும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
84 போட்டிகள் கொண்ட ஐ.பி.எல். போட்டிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நீடித்திருக்க வாய்ப்புள்ளது.
பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் முடிவு எட்டப்படலாம். இறுதி முடிவு பி.சி.சி.ஐ.யிடம் உள்ளது.
ஆனால் வாரியம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கருத்துக்கள் இரண்டையும் சமமாக பரிசீலிக்கும்.
அடுத்த ஐ.பி.எல். தொடரில் 84 போட்டிகளை ஏற்பாடு செய்ய நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. போட்டிகளின் அதிகரிப்பால் வீரர்களின் சுமையை நாங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், பிசிசிஐ தான் 74 அல்லது 84 போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும் என தெரிவித்தார்.
- வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
வயநாடு தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.
ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், வயநாடு மக்களவை தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதனால், வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலச்சரிவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், 4 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார்.
அதன்படி, வயநாட்டில் இயற்கை பேரிடம் காரணமாக தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உரிய நேரத்திற்குள் வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் முதல் தேர்தல்.
- வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில். சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் அறவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் அறிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக சட்டப்சபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 90 சட்டசபைத் தொகுதிகளில் 74 பொது மற்றும் 16 இடஒதுக்கீடு (எஸ்டி - 9, எஸ்சி - 7) ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
87 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர், அரியானா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
- ஏ.ஆர்.ரகுமானுக்கு இது 7வது தேசிய விருது ஆகும்.
70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்கள், நடிகைகள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த பின்னணி இசைக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு இது 7வது தேசிய விருது ஆகும்.
முன்னதாக, 1990ம் ஆண்டு தனது முதல் படமான ரோஜா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.

இதைதொடர்ந்து, 1996ம் ஆண்டு மின்சார கனவு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.

2001ம் ஆண்டு கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.

2017ம் ஆண்டில், ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அதில், காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், இந்தியில் மாம் என்கிற படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதும் ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.


இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் பொன்னியின் செல்வன்-1ம் படத்திற்காக 7வது தேசிய விருது பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறந்த இயக்குனராக சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சிறந்த இசையமைப்பாளராக பிரிட்டம் (Brahmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.
கன்னட திரைப்படமான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்கியவரும் ரிஷப் ஷெட்டிதான். மேலும் இந்த படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர்: ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை: நித்யா மேனன் மற்றும் மானசி பரேக்
சிறந்த துணை நடிகை: நீனா குப்தா (உஞ்சாய்)
சிறந்த பின்னணி பாடகர்: அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த இசையமைப்பாளர்: பிரிட்டம் (பிரம்மாஸ்திரா)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1)
சிறந்த இயக்குனர்: சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்)
சிறந்த படம்: ஆட்டம் (Feature Film), பிரம்மாஸ்திரா (சிறந்த விஎஃப்எக்ஸ்), காந்தாரா (முழுக்க முழுக்க பொழுபோக்கு)
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






