என் மலர்tooltip icon

    டெல்லி

    • டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி உதகை செல்கிறார்.
    • ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27ம் தேதி அன்று தமிழ்நாடு வருகிறார்.

    அதன்படி, டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார்.

    நவம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் உதகையிலும், நவம்பர் 30ம் தேதி திருவாரூரிலும் சில நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

    ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
    • ஆம் ஆத்மியில் இருந்து துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை

    தலைநகர் டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான கைலாஷ் கெலாட் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விலகியுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளை கைலாஷ் கெலாட் கவனித்து வந்தார். அடுத்த வருட தொடக்கத்தில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஆம் ஆத்மி - பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில் கட்சியில் நீண்ட காலமாக இருந்த மூத்த தலைவர் அசோக் கெலாட் ராஜினாமா ஆம் ஆத் மிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அசோக் கெலாட் எழுதியுள்ள கடித்ததில், ஆம் ஆத்மி மிக மோசமான உட்கட்சி சவால்களில் சிக்கி உள்ளது. கட்சி முன்வைத்த பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

    யமுனை ஆற்றை தூய்மைப் படுத்துவேன் என்ற வாக்குறுதியே அதற்கு சாட்சி. இனியும் ஆம் ஆத்மியை நம்பலாமா? என்ற என்று மக்கள் யோசிக்கின்றனர்.பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் போட்டிப் போட்டுக் கொண்டே இருந்தால் டெல்லி உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது.

    நான் எனது அரசியல் பயணத்தை மக்கள் சேவை என்ற இலக்கோடு தொடங்கினேன். அதையே தொடர விரும்புகிறேன். அதனால் இப்போது ஆம் ஆத்மியில் இருந்து துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று தெரிவித்துள்ளார். கைலாஷ் கெலாட் தற்போது பாஜகவில் சேருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • 18-ந்தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
    • இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21-ந்தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக புறப்பட்டு சென்றார்.

    17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். நாளை அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசுகிறார்.

    நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ந்தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.

    அதனை தொடர்ந்து பிரேசில், கயானா செல்லும் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 

    • முந்தைய காலத்தில் பயங்கரவாதம் மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது.
    • தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடந்த தனியார் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    உலக நாடுகளில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிகள் மாறுகின்றன. இந்திய மக்கள் 3-வது முறையாக பா.ஜ.க, அரசை தேர்ந்து எடுத்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் வெற்றிக்காகவே அரசுகள் இருந்தன. பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளோம். மக்களின் வளர்ச்சியே அரசின் தாரக மந்திரம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே எங்களது அரசு நோக்கமாக கொண்டுள்ளது. மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

    முந்தைய காலத்தில் பயங்கரவாதம் மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாளை அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசுகிறார்.
    • கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று மோடி வரும் 19-ந்தேதி அந்நாட்டுக்கு செல்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21-ந்தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார்.

    17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து பேச உள்ளார். நாளை அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசுகிறார்.

    நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18-ந்தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.

    இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் உட்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இது அவரது 3-வது பிரேசில் பயணமாகும். இதற்கு முன்பு 2014 மற்றும் 2019-ல் பிரேசில் சென்று இருந்தார்.

    அதை தொடர்ந்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று மோடி வரும் 19-ந் தேதி அந்நாட்டுக்கு செல்கிறார். 20-ந்தேதி அதிபர் இர்பான் அலியை சந்தித்துபேச உள்ளார்.

    இதையடுத்து கயானா பாராளுமன்றத்தில் மோடி உரையாற்றுகிறார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 21-ந்தேதி அவரது கயானா பயணம் நிறைவடைகிறது.

    • பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேறுபட்டவை.
    • இந்தியாவின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    அஜர்பைஜானில் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி 29-வது ஐ.நா. பருவநிலை (சிஓபி29) மாநாடு நடந்து வருகிறது.

    இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள எல்லாருமே அதிக வெப்பத்திற்கும், நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உள்ளது.

    கிராமப்புறங்களில் சமையலுக்கு விறகுகளையும் மரக்கட்டைகளையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே, தூய்மை எரிசக்திக்கு ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்பதே முன்னுரிமையாக உள்ளது.

    இது, உள்புறக் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை மட்டும் குறைக்காது.

    இந்தியாவின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது நீடித்த நிலைத்தன்மைக்கான முக்கிய படி.

    பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேறுபட்டவை.

    காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவது முதல் வேளாண்மை சுழற்சி பாதிக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வரையிலான பாதிப்புகள் அவை என தெரிவித்துள்ளார்.

    • சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • முதல் போடோ திருவிழா இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    2020 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு வன்முறையைத் தவிர்த்து அமைதியின் பாதையை தேர்வு செய்ததற்காக போடோ சமூக மக்களை நரேந்திர மோடி பாராட்டினார். டெல்லியில் நடைபெற்ற முதல் போடோலாந்து திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு போடோ சமூக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போடோலாந்து மஹோத்சவின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, "போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, போடோலாந்து பகுதி 'புதிய வளர்ச்சி அலையை' கண்டுள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இன்று கார்த்திகை பூர்ணிமாவின் புனிதமான நாள். இன்று தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாளில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று குருநானக் தேவின் 555வது பிரகாஷ் பர்வ். இந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த தேசத்திற்கும், குறிப்பாக உலகம் முழுவதும் பரவியுள்ள சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

    "இன்று நாடு முழுவதும் ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இன்று காலை, பீகாரில் உள்ள ஜமுய் நகரில் பகவான் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இப்போது மாலையில், முதல் போடோ திருவிழா இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."

    "கடந்த நான்கு ஆண்டுகளில், போடோலாந்தின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, போடோலாந்து வளர்ச்சி அலைகளை கண்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்தின் நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் முடிவுகளைப் பார்த்து நான் மிகவும் திருப்தி அடைகிறேன்."

    "இன்றைய சந்தர்ப்பம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. 50 வருட இரத்தக்களரி, 50 வருட வன்முறை மற்றும் 3-4 தலைமுறை இளைஞர்கள் இந்த வன்முறையில் நுகர்ந்துள்ளனர். பல தசாப்தங்களுக்குப் பிறகு, போடோ இன்று திருவிழாவைக் கொண்டாடுகிறது. 2020 ஆம் ஆண்டில், போடோ அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு, கோக்ரஜாருக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பும் பாசமும், நீங்கள் என்னை உங்களில் ஒருவராகக் கருதுவது போல் உணர்ந்தேன். அந்த தருணத்தை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன்."

    "போடோலாந்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி சிறப்பு தொகுப்பு வழங்கியுள்ளது. அசாம் அரசும் சிறப்பு வளர்ச்சி தொகுப்பை வழங்கியுள்ளது. போடோலாந்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது."

    "என்னைப் பொறுத்தவரை, அசாம் உட்பட முழு வடகிழக்குமே இந்தியாவின் அஷ்டலட்சுமிகள். இப்போது வளர்ச்சியின் சூரியன் கிழக்கு இந்தியாவில் இருந்து உதயமாகும், இது வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும். எனவேதான் வடக்கு கிழக்கில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம். வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண நாங்கள் முயன்று வருகிறோம்," என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.
    • ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது.

    காற்றின் தரம் அபாயகர நிலையில் இருப்பதை அடுத்து டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை ஆரம்ப பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டார். இதையடுத்து 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

    காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவானது.

    இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் ஆனந்த் விஹார் பகுதியில் காற்று மாசுடன் பனிமூட்டமும் சூழ்ந்து கொண்டது. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    • போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர்.
    • அக்னிவீரர் திட்டத்தின் கீழ் கடற்படையில் தற்போது 1,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, பெண் அதிகாரி ஒருவர் போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், இவரது சகோதரரும் ஒரே நேரத்தில் இருவேறு போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்திய முப்படைகளில், பெண்கள் அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படும் நடைமுறை 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

    போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர். அதிகாரிகள் பதவிக்கு பெண்களை முதல்முறையாக நியமனம் செய்த பெருமை, நம் கடற்படையை சேரும்.

    அக்னிவீரர் திட்டத்தின் கீழ் கடற்படையில் தற்போது 1,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். கடற்படையின் போர் கப்பல்களில், 4 பெண் அதிகாரிகள் கடந்த 2021-ல் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

    இதை தொடர்ந்து 40 பெண் அதிகாரிகள் தற்போது பணியில் உள்ளனர். ஆனால் போர் கப்பலுக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை.

    இதனை மும்பையை சேர்ந்த பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் முறியடித்து முதல்முறையாக பெண் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2009-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார்.

    ஐ.என்.எஸ் சென்னை போர் கப்பலின் முதல் லெப்படினன்டாகவும் இருந்தவர்.

    கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., டிரிங்கட் போர் கப்பலின் முதல் பெண் கமாண்டராக அவர் நியமிக்கப்பட்டார். கடற்படையில் கடந்த 2000-ம் ஆண்டில் இணைந்த ஐ.என்.எஸ்., டிரிங்கட், 50 வீரர்களை கொண்டது. அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவின் நினைவாக கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

    கனரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல், நிலப்பரப்பு தாக்குதல்களை எதிர்க்கும் திறன் உடையது. அதிவேகத்திலும், ஆழம் குறைவான பகுதிகளிலும் இயங்கும் திறன் உடையது. இந்த கப்பலின் கமாண்டராக பிரேர்னாவின் தியோஸ்தலி நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது சகோதரர் இஷான் தியோஸ்தலியும், கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவர், ஐ.என்.எஸ்., விபூதி போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டார்.

    ஐ.என்.எஸ். விபூதி அரபிக் கடலில் கோவா கடற்கரையோரம் ஜனாதிபதி முர்மு பங்கேற்ற விழாவில் இந்த கப்பலும் பங்கேற்றது கூறிப்பிடத்தக்கது.

    சகோதரனும், சகோதரியும் ஒரே நேரத்தில் கடற்படை போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணியாற்றுவது இதுவே முதல்முறை.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக எக்ஸ் வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த முதலீடு அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கவுதம் அதானி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வரும் வேளையில், அதானி குழுமம் தனது உலகளாவிய வர்த்தக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    • ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் 133 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்
    • பாஜகவின் கிஷன் லால் 130 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார். தேவ் நகர் வார்டு கவுன்சிலரான அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கிஷன் லாலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகையை சூட்டியுள்ளார்.

    மொத்தமுள்ள 265 வாக்குகளில், மகேஷ் 133 வாக்குகளை பெற்றார். கிஷன் லால் 130 வாக்குகள் பெற்றார். 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இந்த வெற்றியின் மூலம் டெல்லியின் முதல் தலித் மேயர் என்ற பெருமையை மகேஷ் பெற்றுள்ளார்.

    மேலும், டெல்லி துணை மேயர் தர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ரவீந்திர பரத்வாஜை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கவுன்சிலர் நீதா கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் டெல்லி துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ரவீந்திர பரத்வாஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டெல்லியில் 120 கவுன்சிலர்களை கொண்டுள்ள பாஜக மேயர் தேர்தலில் 130 வாக்குகளை பெற்றுள்ளது. ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் சில கவுன்சிலர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.

    • டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவாகி இருக்கிறது.
    • ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    டெல்லி காற்று மாசு அளவு தொடர்ந்து அபாயகர நிலையிலேயே உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 432 ஆக பதிவாகி இருக்கிறது. இது நேற்றிரவு 11 மணிக்கு பதிவான 452-வை விட குறைவு தான் என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து காற்றின் தரம் அபாயகர நிலையில் இருப்பதை அடுத்து டெல்லியில் மறு உத்தரவு வரும் வரை ஆரம்ப பள்ளிகள் ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் அதிஷி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியில் பாடம் கற்க அம்மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

    காற்று மாசுடன் பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக 283 விமானங்கள் தாமதமாகி இருக்கின்றன. மேலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    ×