search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "official visit"

    • மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிப்பு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி அன்று பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை பூடான் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "" பூடானுக்கு சென்றுக் கொண்டிருக்கிறேன். இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். மாட்சிமை பொருந்திய பூடான் அரசர், நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
    • டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அரசுமுறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்யும் வகையில், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் முக்கிய தாதுக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பு பற்றி பேசினர்.

    மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்கள்) காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் அந்நாட்டு ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முன்னதாக ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 

    இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் ஐந்து நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்ல உள்ளார். #BipinRawat #Russia #TombofUnknownSoldier
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத் 5 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இந்தியா திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ள பயண திட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    ரஷ்யாவில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இடமான உலகில் உள்ள பல்வேறு போர்களிலும் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லறைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.

    அதைத்தொடர்ந்து, ரஷ்ய பொது ஊழியர்கள் அகாடமி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் ராணுவ தளபதி பிபின் ராவத், அங்கு சிறப்பு விருந்தினர் உரையாற்ற உள்ளார். #BipinRawat #Russia #TombofUnknownSoldier
    ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ள நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
    புதுடெல்லி:

    இந்தியா ஒரு நடுநிலையான நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளுடனும் நட்பு பாராட்டி வருகிறது. உலக அரங்கில் இருதுருவங்களாக பார்க்கப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுடனும் இந்தியா நட்புடன் உள்ளது.

    இதையடுத்து, சமீபத்தில் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. இந்த பொருளாதார தடையினால் இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு பாதிக்கப்படும் சூழல் நிலவியது.

    ஏனெனில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவதால், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை இந்தியா மீதும் விதிக்க முடியும். இதையடுத்து, ரஷ்யாவுடனான நட்பை இந்தியா கைவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என்றும், இருநாட்டு நட்பு தொடரும் எனவும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



    இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #VladimirPutin #NewDelhi #PMModi #PresidentRamNathGovind
    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RajnathSingh #Bangladesh
    புதுடெல்லி:

    வங்கதேசத்தின் உள்துறை மந்திரி  அசாதுஸமான் கான் விடுத்த அழைப்பை ஏற்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஜூலை 13 முதல் 15 வரை 3 நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு பிறகு இருநாட்டு உள்துறை மந்திரிகள் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளது.

    இந்த சந்திப்பின் போது ராஜ்நாத் சிங் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் வங்கதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய விசா அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

    உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் இந்த அரசு முறை பயணத்தில் இருநாட்டு உறவுகள் மற்றும் எல்லைப்பாதுகாப்புகள் குறித்து பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #RajnathSingh #Bangladesh
    ×