அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண ஆஸ்திரேலிய பிரதமர், அந்நாட்டு ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி
Published on

அரசுமுறை பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்யும் வகையில், பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் முக்கிய தாதுக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பு பற்றி பேசினர்.

மேலும் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்கள்) காண ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மற்றும் அந்நாட்டு ரசிகர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். முன்னதாக ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com