டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதானி: அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டம்

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த அதானி: அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டம்
Published on

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக எக்ஸ் வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். இந்த முதலீடு அமெரிக்காவின் எனர்ஜி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கவுதம் அதானி வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டாண்மை வலுவடைந்து வரும் வேளையில், அதானி குழுமம் தனது உலகளாவிய வர்த்தக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 15,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com