என் மலர்tooltip icon

    பீகார்

    • திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 18-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
    • நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது

    இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முக்கியமான கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    அதேநேரத்தில், எதிர்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாக திரட்டி, பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அதிரடி முயற்சி நடக்கிறது.

    குறிப்பாக இமாசல பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணம் உருவாகி, மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்- மந்திரியுமான நிதிஷ் குமார் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்த விஷயத்தில் அவர் எற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித்தலைவரும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுடன் சென்று சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

    எதிர்க்கட்சிகள் கூட்டம் அதன் அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு- வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்- மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார்.

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார சென்றுள்ளார். அப்போது, பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார். மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "நான் பாட்னா வந்தடைந்தேன், மாண்புமிகு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் தமிழ் சங்கத்தின் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடமிருந்து அன்பான வரவேற்பைப் பெற்றேன். 'ஆசியாவின் ஒளி' புத்தர், 'ஜன்நாயக்' கர்பூரி தாக்கூர் மற்றும் திரு பி.பி. மண்டல் போன்றோரை நமக்கு வழங்கிய மண்ணில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த பாசிச, எதேச்சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை அனுமதிக்க, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரியமில்லை" என்று பதிவிட்டுள்ளர்.

    தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், "மூத்த தலைவர் லாலுபிரசாத்யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தலைவர் கலைஞர் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளை வாழ்த்தினேன். நாளை (இன்று) வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு தயாராகி வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
    • மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

    இந்த நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் பீகார் புறப்பட்டார்.

    இந்நிலையில், பீகார் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் ராஷ்ட்ர ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாவை சந்தித்தார்.

    மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவிடம் ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

    மேலும், இரு தலைவர்களின் சந்திப்பின் அடையாளமாக கருணாநிதி பற்றிய நூல் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பீகாரில் மாம்பழ சீசன் களை கட்டி உள்ள நிலையில் தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மை துறையால் மாம்பழம் உண்ணும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
    • மேற்கு சம்பாரன் தொட்டியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் மாம்பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.

    பீகாரில் மாம்பழ சீசன் களை கட்டி உள்ள நிலையில் தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மை துறையால் மாம்பழம் உண்ணும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மேற்கு சம்பாரன் தொட்டியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அவர்கள் முன்பு ஒரு தட்டில் நிறைய மாம்பழங்கள் வைத்திருந்தார்கள். அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் சாப்பிட்டு முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோட்டா பகுதியில் கடந்த 6 மாதங்களில் நீட் தேர்வில் தோல்வியடைந்து இதுவரை 12 பேர் உயிரிழப்பு.
    • கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

    பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்தவர் ரோஷன் (21). இவரது சகோதரர் சுமன். இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தனர். இதில் ரோஷன் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். ரோஷன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், ரோஷன் 720 மதிப்பெண்ணுக்கு 400 மதிப்பெண்கள் எடுத்தார். மருத்துவம் படிக்க தேவையான மதிப்பெண்ணிற்கும் குறைவாக எடுத்ததால் ரோஷன் வருந்தி வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், ரோஷன் அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    ரோஷன் வெகு நேரமாக போன் எடுக்காததை அடுத்து, சுமன் நேரில் வந்து பார்த்துள்ளார். அப்போது, ரோஷன் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின், ரோஷனின் அறை முழுவதும் ஆய்வு செய்தனர். இதில், தற்கொலை குறிப்பு எதுவும் சிக்கிவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    கோட்டா பகுதியில் கடந்த 6 மாதங்களில் நீட் தேர்வில் தோல்வியடைந்து இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை 23-ந்தேதி கூட்டி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    பாட்னா :

    பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் வருகிற 23-ந் தேதி கூட்டி உள்ளார்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்து, தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.

    இது ஒருவகையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் பாட்னாவில் நிதிஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசுகையில் மக்களவைக்கு முன்கூட்டியேகூட தேர்தல் வரலாம் என கூறியது பற்றி கேட்கிறீர்கள். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்போதுமே இந்த விருப்பம் இருக்கிறது. 2004-ம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆதரவாக இல்லாதபோதும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

    இருந்தாலும் நான் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என அப்போது கூறியது வேடிக்கையாகத்தான். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் என்னாவது? இது அவர்களுக்கு பேரிழப்புகளைத் தரும். எனவே அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார்.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

    அதே நேரம், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பாட்னாவில் வருகிற 23-ந்தேதி எதிர்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

    தேர்தல் முன்கூட்டியே (இந்த ஆண்டு) நடைபெறக்கூடும் என்பதால் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். திட்டங்களை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும், பிரதம மந்திரியின் கிராம் சதக் யோஜனா திட்டத்தில் மத்திய அரசின் பங்கை 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்ததற்காக மத்திய அரசை நிதிஷ்குமார் தாக்கி பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடத்தப்படலாம் என அவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • பீகார் மாநிலத்தில் தன்வீர் கான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ராஞ்சி:

    பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நிறுவன அதிபரான தன்வீர் கானுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவர் மாடல் அழகியை விதவிதமாக ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது

    சில மாதங்களுக்கு முன்பு தன்வீர் கான் மாடல் அழகியை பாங்காங் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். மேலும் மாடல் அழகியை மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்தார்.

    இதுபற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் உள்ள ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் நண்பர் ஒருவர் அறிவுரை கூறியதால் அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.

    பின்னர் இது குறித்து மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால் மும்பை போலீசார் இந்த வழக்கை ராஞ்சிக்கு மாற்றினார்கள். போலீசர் தன்வீர் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    அவரை ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என அவர் போலீசில் தெரிவித்து உள்ளார். தன் நிறுவனத்தில் அந்த பெண் மாடலிங் தொழில் செய்து வந்ததாகவும், அவரால் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் என்னுடைய நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி வந்தார் என்று தன்வீர் கான் குறித்து போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் யார்? சொல்வது உண்மை என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • பாட்னாவில் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
    • இந்த கூட்டத்தில் பங்கேற்க இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    பாட்னா :

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23-ந் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.

    அதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங்கிரஸ்), தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), உத்தவ்தாக்கரே (சிவசேனா-உத்தவ்) ஆகியோர் பங்கேற்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    • பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.

    நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    • வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன.
    • நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது இல்லை.

    பாட்னா :

    பீகார் மாநிலத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, பாட்னாவில் உள்ள ஹஜ்பவனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு, ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் இந்த மாநிலத்துக்கு சேவையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்த நாள் முதல், சகோதரத்துவ உணர்வை உறுதி செய்து வந்திருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சச்சரவை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

    வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது இல்லை. இந்த நாட்டின் முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்தான், அவர்கள் வேறெங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல என்று என் தந்தை எனக்கு போதித்து இருக்கிறார்.

    ஆனால் இந்த நாட்களில் அரசியல் சாசனத்துக்கு எதிரான எல்லாவிதமான செயல்களும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவும் அவர்கள் (பா.ஜ.க.வினர்) முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் யாத்திரை தடைப்பட்டு வந்த நிலையில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கி இருப்பது குறித்து நிதிஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பீகாரில் இந்த ஆண்டு 2,399 பெண்கள் உள்பட 5,638 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

    ×