மாடல் அழகியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த வாலிபர்

பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.பீகார் மாநிலத்தில் தன்வீர் கான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாடல் அழகியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த வாலிபர்
Published on

ராஞ்சி:

பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார். அப்போது அந்த நிறுவன அதிபரான தன்வீர் கானுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி அவர் மாடல் அழகியை விதவிதமாக ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகிறது

சில மாதங்களுக்கு முன்பு தன்வீர் கான் மாடல் அழகியை பாங்காங் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். மேலும் மாடல் அழகியை மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்தார்.

இதுபற்றி வெளியில் சொன்னால் தன்னிடம் உள்ள ஆபாச படங்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாடல் அழகி சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் நண்பர் ஒருவர் அறிவுரை கூறியதால் அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.

பின்னர் இது குறித்து மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்பதால் மும்பை போலீசார் இந்த வழக்கை ராஞ்சிக்கு மாற்றினார்கள். போலீசர் தன்வீர் கான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் அவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

அவரை ராஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என அவர் போலீசில் தெரிவித்து உள்ளார். தன் நிறுவனத்தில் அந்த பெண் மாடலிங் தொழில் செய்து வந்ததாகவும், அவரால் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இது பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் என்னுடைய நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி வந்தார் என்று தன்வீர் கான் குறித்து போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதில் யார்? சொல்வது உண்மை என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com