என் மலர்tooltip icon

    பீகார்

    • தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு காற்றில் நான்கு கிலோமீட்டர் வரை பரவியது.
    • விபத்து நடந்த தொழிற்சாலைக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரில் பால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற ஓடினர். இதில் நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர்.

    கியாஸ் கசிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அம்மோனியா வாயு காற்றில் நான்கு கிலோமீட்டர் வரை பரவியது. அதை சுவாசித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு கியாஸ் கசிவு கட்டுப்படுத்தப்பட்டது.

    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது.

    வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். சந்திர சேகர் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாட்னா நீதிமன்றத்தின் ஆர்டர் வீடியோவின் தொடர்ச்சியாக 16.06.2023 தேதியிட்ட மெமோ எண்.-8534/L, மாவட்டத்தில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய அதிக வெப்பநிலை காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.

    எனவே, நான், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 144ன் கீழ், பாட்னா மாவட்டத்தில் உள்ள 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின்(முன்பள்ளி மற்றும் அங்கன்வாரி மையங்கள் உட்பட) கல்வி நடவடிக்கைகளை 28.06.2023 வரை தடை செய்கிறேன்.

    மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவு 26.06.2023 மற்றும் 28.06.2023 வரை அமலில் இருக்கும். 24.06.2023 அன்று எனது கையொப்பம் மற்றும் நீதிமன்ற முத்திரையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் கவலை அளிக்கிறது.
    • நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

    பாட்னா:

    பாட்னாவில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தபோது, ராஷ்டிரிய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார். பின்னர், தனக்கே உரிய பாணியில், 53 வயதான ராகுல்காந்தியிடம் நகைச்சுவையாக பேசினார். அவர் கூறியதாவது:-

    திருமணம் செய்து கொள்ளுமாறு உங்களிடம் (ராகுல்) ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனால் என் அறிவுரையை நீங்கள் கேட்பது இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதது, உங்கள் தாயாருக்கும் (சோனியாகாந்தி) கவலை அளிக்கிறது.

    இன்னும் காலம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் அணிந்துள்ள அரைக்கை சட்டை நன்றாக இருக்கிறது. மோடியின் குர்தாவுக்கு சரியான போட்டியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாலு சொன்னதை கேட்டு, இதர தலைவர்கள் உரக்க சிரித்து மகிழ்ந்தனர். வெட்கம் கலந்த புன்னகையுடன் லாலுவை பார்த்த ராகுல்காந்தி, ''நீங்களே சொல்லி விட்டதால், அது நடக்கும்'' என்று கூறினார்.

    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    பீகார் முதல்வரம், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

    இப்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன், மேலும்  நரேந்திர மோடியை எதிர்கொள்ளவும் உடல் தகுதியுடன் இருக்கிறேன். நாட்டின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் ஒரு கூட்ட நிரலை தயார் செய்வோம். 2024ல் பாஜகவை எதிர்த்துப் போராட அந்தந்த மாநிலங்களில் பணியாற்றும்போது ஒன்றிணைந்து முன்னேறுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்கிறது.
    • எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

    பாட்னா:

    பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

    நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்பதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதாகவும் மெகபூபா குறிப்பிட்டார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசும்போது, எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து, நாட்டில் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

    • நிதிஷ்குமார் நாடு முழுவதும் பயணித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
    • எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும்,

    பாட்னா:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

    இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

    தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள். இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் 6 மாநில முதல் மந்திரிகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    பாட்னா:

    மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

    சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலையொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம். அடுத்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12-ம் தேதி இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என தெரிவித்தார்.

    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது.
    • இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    பாட்னா:

    மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தற்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.
    • கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாட்னா:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மேற்கொண்டார்.

    தொடக்கத்திலேயே அவரது முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தற்போது பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். அப்போது ஜூன் 23-ந்தேதி (இன்று) பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பாரதிய ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஒன்றிணைந்து எதிர்க்க ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான சந்திரசேகரராவ், நவீன் பட்நாயக், குமாரசாமி, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, ஓவைசி போன்றவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    போபால்:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத்துக்கு, சூரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயிலில் 32 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயது மதிக்கத்தக்க அவரது ஆண் நண்பர் ஒருவரும் சென்றார்.

    அவர்கள் இருவரும் ஜார்க்கண்டில் இருந்து சூரத்துக்கு சென்றபோது இணைப்பு ரெயிலை தவறவிட்டதால் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இரவு 10 மணியளவில் சூரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுபெட்டியில் ஏறினார்கள். அந்த ரெயிலில் சுமார் 60 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் குவாலியரை தாண்டி ரெயில் சென்று கொண்டிருந்தபோது 3 வாலிபர்கள் அந்த இளம்பெண்ணின் ஆடைகளை பிடித்து கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினார்கள். சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்த மற்ற பயணிகள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை.

    ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். அவரது நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இளம்பெண்ணால் எழுந்து நடக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரது நண்பர் கிழிந்த ஆடைகளால் பெண்ணின் உடலை மூடி, மருத்துவ உதவி பெறுவதற்காக அடர்ந்த காட்டில் கொட்டும் மழையில் 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்றார். ஆனால் 2 கிராமங்களில் இருந்து மக்களிடம் அவர் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.

    இதையடுத்து அவர் 3-வதாக ஒரு கிராமத்துக்கு சென்று உதவி கேட்டார். அந்த கிராமத்தில் வசித்த ஒரு வயதான தம்பதிகள் அவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அந்த பெண்ணுக்கு ஒரு சேலையை கொடுத்து அணிவித்தனர்.

    பின்னர் அவரது காயங்களுக்கு மருந்து தடவினார்கள். அதன்பிறகு அந்த பெண்ணும், அவரது நண்பரும் மருத்துவமனைக்கு செல்லவும் உதவினார்கள். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் கடந்த 19-ந்தேதி நடந்து உள்ளது.

    இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் 3 வாலிபர்களையும் தேடிவருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் அமைதி, ஒற்றுமைக்கான வேலைகளை செய்கிறோம்
    • அவர்கள் (பா.ஜனதா) பிரிவினைக்கான வேலைகளை செய்கிறார்கள்

    பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதாவை எதிர்க்கும் 20 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அவர்கள் பாட்னா வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாட்னா வந்தடைந்தார். அவர் காங்கிரஸ் அலுவலகம் சென்று கட்சித் தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது ''இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருப்பது இரு சித்தாந்தத்திற்கு இடையிலான போர்.

    ஒரு பக்கம் காங்கிரசின் ஒற்றுமை சித்தாந்தம். மறுபக்கம் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரிவினை சித்தாந்தம். வெறுப்புணர்ச்சியை அன்பால்தான் வெல்ல முடியும், வெறுப்பால் வெல்ல முடியாது.

    பா.ஜனதா வன்முறை, வெறுப்பை பரப்புதல், நாட்டை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் அமைதி, ஒற்றுமைக்காக வேலை செய்து வருகிறோம். இங்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வந்துள்ளனர். ஒன்றிணைந்து பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

    கர்நாடகாவில் வெற்றி பெற்றதுபோல் தெலுங்கானா, சத்திஸ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ஜனதா எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் மாற்றத்தை பார்ப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் ஏழை மக்கள் பக்கம் நிற்கிறோம். பா.ஜனதா என்றால் 2 அல்லது 3 பேருக்கு ஆதாயம் கிடைப்பது'' என்றார்.

    மல்லிகார்ஜுனா கார்கே ''நாங்கள் பீகாரில் வென்றால், அதன்பின் நாடு முழுவதும் வெல்ல முடியும்.'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்
    • பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியுமா? இந்த வேலையை செய்வது யார்? என்பது மில்லியன் கேள்வி. அப்படி ஒருங்கிணைத்தாலும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பில்லியன் கேள்வி.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்ககும் முதற்படியாக நிதிஷ் குமார் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். 18-க்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்கள் புறப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி., ரவி சங்கர் பிரசாத் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை கிண்டல் செய்துள்ளார்.

    ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து கூறும்போது ''நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார். ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்). ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள்'' என்றார்.

    ×