என் மலர்
பீகார்
- குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
- இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.
பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.
- பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும்
- முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
பீகார் மாநில முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன் பிறகு பா.ஜ.க-உடனான கூட்டணியில் இருந்து விலகினார். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக 'இந்தியா' கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காணொலி காட்சி மூலம் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதனைத்தொடர்ந்து, அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதனைத்தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தினை துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் புறக்கணித்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் அரசியலில் பரபரப்பான சூழல் நிழவி கொண்டிருக்கும் இந்த நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவிப்பு.
- மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார்.
பாட்னா:
பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்துவந்தார். அதன்பின் 2022-ல் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.
பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளதும் நிதிஷ் குமாரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபோன்ற காரணங்கள் எல்லாம் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியில் சேர முடிவு செய்தால், வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி பீகாரின் பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான சுஷில்குமார், அரசியலில் கதவுகள் நிரந்தரமாக மூடப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.
- இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி.
- திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனியாக போட்டியிடுவதாக அறிவிப்பு.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வந்தார். பின்னர் 2022-ல் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.
பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளது. இதுவும் நிதிஷ் குமார் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே பீகார் மாநில முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்த நிலையில், மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார். லாலுவின் இளைய மகன் துணை முதல்வராக உள்ளார். மற்றொருவர் மந்திரியாக உள்ளார். ஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் இவர்களை குறிவைத்துதான் நிதிஷ் குமார் பேசினார் என செய்தி வெளியானது.
வெளிநாட்டில் வசித்து வரும் லாலுவின் மகள் இதனால் கோபம் அடைந்து நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்ப அந்த கருத்துகளை நீக்கினார்.
இது எல்லாம்தான் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

பா.ஜனதா மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் தலைவர்கள் அவரை வரவேற்க தயாராக இல்லை. கூட்டணியில் இணைத்தாலும் முதல்வர பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் கூட்டணியில் இணைத்து மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர முடிவு செய்தால், வருகிற 4-ந்தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை.
- மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம்.
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சி தேசிய அளவிலான கட்சி. மற்ற கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்- மம்தா பானர்ஜி), பீகார் (நிதிஷ்குமார்- ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி யாதவ்- லாலு கட்சி), உத்தர பிரதேசம் (அகிலேஷ் யாதவ்) மாநில கட்சிகள் இதற்கு உதாரணம்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரிராஜ் கூறுகையில் "இந்தியா கூட்டணி பரஸ்பர கூட்டணி இல்லை. அது ஆதாயத்திற்கான கூட்டணி. மேற்கு வங்காளம், பீகார், டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்று பார்ப்போம். இந்த இந்தியா கூட்டணிதான் காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்காக சதி செய்கிறது.
- ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
- எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பிதழ் இல்லை.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்ததில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
கொடுக்கப்பட்ட தலைவர்களில் பலர் அயோத்தி செல்வது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மேலும், ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில பீகார் மாநில கல்வித்துறை மந்திரி சந்திர சேகர் கூறுகையில் "நீங்கள் காயம் அடைந்தால், எங்கே செல்வீர்கள்? கோவிலுக்கா? அல்லது மருத்துவமனைக்கா?.
நீங்கள் கல்வி கற்று அதிகாரியாக வேண்டும், எம்.எல்.ஏ.-வாக வேண்டும் அல்லது எம்.பி.யாக வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்வீர்களா? அல்லது பள்ளிக்கு செல்வீர்களா?.
ஃபதே பஹதுர் சிங் (ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.) உள்ளிட்டோர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?. சாவித்திரிபாய் புலே தெரிவித்ததை அவர் மேற்கோள் காட்டியுள்ளா். கல்வி அவசியம் இல்லையா?. போலி இந்துத்துவா, போலி தேசியவாதம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடவுள் ராம் நாம் ஒவ்வொருவருக்குள்ளும், எல்லா இடத்திலேயும் இருக்கும்போது, நீங்கள் அவரை எங்கே சென்று சென்று தேடுவீர்கள்" என்றார்.
- முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
- கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாட்னா:
சமீப காலமாக நாடு முழுவதும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் முறையில் பணம் மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மருத்துவதுறை ரீதியாக ஆசை வார்த்தைகளை கூறி நூதன மோசடியை அரங்கேற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-
பீகார் மாநிலம் நவாடா பகுதியில் 'பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி' என்ற பெயரிலான நிறுவனத்தில் பணி புரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் நபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம்.
இதற்காக முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் பெண்களின் அழகை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வைப்புத்தொகை செலுத்தினால் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.
அவ்வாறு கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த சில வாலிபர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணத்தை செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நாட்கள் பல சென்ற பின்னரும் கடைசி வரை பெண்களின் புகைப்படங்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கு தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் பீகார் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நவாடா பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
மேலும் அலுவலகத்தில் இருந்து செல்போன்கள், பிரிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முன்னாகுமார் என்பவர் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
- விபத்தால், யாருக்கும் காயம் இல்லை என தகவல்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள உல்டா புல் என்ற இடத்தில் ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று காலை சாலை வழியாக ரெயில் பெட்டியை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென பிரேக் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது.
இதில் லாரி இரண்டாக உடைந்து, ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தால், யாருக்கும் காயம் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீகாரில் சாலை வழியாக கொண்டு சென்ற விமானம் மேம்பாலம் அடியில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, சாலையில் ரெயில் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரல்.
- விமானம் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் நேற்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானத்தை அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.
இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.
மேம்பாலம் அடியில் விமானம் சிக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல், கடந்த நவம்பர் மாதம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் கொண்டு செல்லப்பட்டபோது ஆந்திரா மாநிலத்தில் உள்ள பபாட்லா மாவட்டத்தில் மேம்பாலம் அடியில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தலைமறைவான மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முசாபர்பூர்:
பீகார் மாநிலம் முசாபர்பூர் ராம்பாக் சவுக் பகுதியில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தவர் அப்ரோஸ் காத்ரி. நேற்று முன்தினம் இவர் தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம மனிதர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். அப்ரோஸ் காத்ரி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்தவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் அவரை நோக்கி 3 முறை சுட்டான். இதில் தலையில் குண்டுகள் பாய்ந்த அப்ரோஸ் காத்ரி அப்படியே நடுரோட்டில் சுருண்டு விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் இந்த சம்பவம் அரங்கேறியது.
அவரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தயது. உடனே அவர்கள் ஒன்று திரண்டு அப்ரோஸ் காத்ரி உடலுடன் நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இறைச்சிக் கடைக்காரர் சுட்டுக்கொல்லப்படும் பரபரப்பு வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மனதை பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- பீகாரில் நிதிஷ் குமார்- தேஜஷ்வி யாதவ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- பீகாரின் எதிர்காலம் தேஜஷ்வி யாதவ் தலைமையில் இருப்பதாக லாலு கூறியதாக மத்திய மந்திரி தெரிவித்திருந்தார்.
பா.ஜனதாவை 2024 மக்களவை தேர்தலில் வீழ்த்தி சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அப்போது மம்தா பானர்ஜி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை தேர்வு செய்வார்கள் என நிதிஷ் குமார் எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தயங்கியதாகவும், அதனால் கூட்டத்தின் பாதிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.
இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியா கூட்டணி கரை சேருவது கடினம் எனவும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.
பீகாரில் நிதிஷ் குமார் லாலு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், லாலு பிரசாத் பயணம் செய்த விமானத்தில் சென்றுள்ளார். அப்போது இருவரும் அரசியல் குறித்து பேசியதாக தெரிகிறது.
பின்னர் விமான பயணத்தின்போது லாலு பிரசாத் யாதவ் தன்னிடம் "தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் பீகாரின் எதிர்காலம் இருக்கிறது" என நம்புவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கு இந்த கருத்து மேலும் அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகனும், துணை முதல்வருமான தேஜஷ்வி யாதவ் "மத்திய அமைச்சர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. தனது தந்தை அவ்வாறு கூறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "கிரிராஜ் சிங் தனது தந்தையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மட்டன் விருந்து வைக்க விரும்புவதாக தெரிவித்தார்" என்றார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ஜனதாவின் தேர்தல் திட்டத்தின்படி, கிரிராஜ் தனது எதிர்கால அரசியல் குறித்து கவலை தெரிவித்ததாக தேஜஷ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.
லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.






