என் மலர்tooltip icon

    இந்தியா

    காயம் அடைந்தால் கோவிலுக்கு செல்வீர்களா? மருத்துவமனைக்கு செல்வீர்களா?- பீகார் மந்திரி
    X

    காயம் அடைந்தால் கோவிலுக்கு செல்வீர்களா? மருத்துவமனைக்கு செல்வீர்களா?- பீகார் மந்திரி

    • ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
    • எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பிதழ் இல்லை.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்ததில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

    கொடுக்கப்பட்ட தலைவர்களில் பலர் அயோத்தி செல்வது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மேலும், ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த நிலையில பீகார் மாநில கல்வித்துறை மந்திரி சந்திர சேகர் கூறுகையில் "நீங்கள் காயம் அடைந்தால், எங்கே செல்வீர்கள்? கோவிலுக்கா? அல்லது மருத்துவமனைக்கா?.

    நீங்கள் கல்வி கற்று அதிகாரியாக வேண்டும், எம்.எல்.ஏ.-வாக வேண்டும் அல்லது எம்.பி.யாக வேண்டும் என்றால் கோவிலுக்கு செல்வீர்களா? அல்லது பள்ளிக்கு செல்வீர்களா?.

    ஃபதே பஹதுர் சிங் (ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.) உள்ளிட்டோர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?. சாவித்திரிபாய் புலே தெரிவித்ததை அவர் மேற்கோள் காட்டியுள்ளா். கல்வி அவசியம் இல்லையா?. போலி இந்துத்துவா, போலி தேசியவாதம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    கடவுள் ராம் நாம் ஒவ்வொருவருக்குள்ளும், எல்லா இடத்திலேயும் இருக்கும்போது, நீங்கள் அவரை எங்கே சென்று சென்று தேடுவீர்கள்" என்றார்.

    Next Story
    ×