என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
    • அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொண்டார்

    குவைத்தில் பணியாற்றி வரும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினரை விமானம் ஏறி வந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது,

    ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவரின் 12 வயது மகள், ஒபுலவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்றபோது அங்கு அந்த சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் அலைபேசியில் கூறியுள்ளார். உறவினர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஒரு முடிவுடன் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொன்றுவிட்டு, அதே நாளில் குவைத் திரும்பினார்.

    கொலையைத் தொடர்ந்து குவைத் சென்ற பிரசாத் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மகளின் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான் கொலை செய்ததாக கூறியிருக்கிறார் . இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்வதற்கு ஆவன செய்து வருகின்றனர். 

    • கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது.
    • தக்காளியை மூட்டை மூட்டையாக சந்தைக்கு வெளியே கொட்டினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டி கொண்டாவில் தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது. விவசாயிகள் அப்பகுதியில் விளைவிக்கும் தக்காளிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தக்காளியை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமான தக்காளி குறைந்த விலைக்கு ஏலம் விடுவதாகவும், வியாபாரிகள் உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டினர்.

    பின்னர் தாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை மூட்டை மூட்டையாக சந்தைக்கு வெளியே கொட்டினர். அங்கிருந்த சிறு வியாபாரிகள் போட்டி போட்டு தக்காளியை மூட்டைகளில் அள்ளிச்சென்றனர்.

    தக்காளிக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கூறி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்:-

    கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது.

    தற்போது சிறு வியாபாரிகள் தரம் இல்லாத தக்காளிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் தரமான தக்காளிக்கும் அதே விலை நிர்ணயிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தனர். 

    • இந்திய தரப்பில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ருசித்த 2-வது வீரர் ஆவார்.
    • எங்கள் சொந்த தெலுங்கு பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ்.

    உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.

    18 வயதான குகேஷ், செஸ் உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

    இந்திய தரப்பில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ருசித்த 2-வது வீரர் ஆவார்.

    உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக செஸ் சாம்பியனான டி.குகேஷுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எங்கள் சொந்த தெலுங்கு பையன், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ், சிங்கப்பூரில் 18 வயதில் உலகின் இளைய செஸ் சாம்பியனாகி வரலாற்றை எழுதுவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    அவரது சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் காலங்களில் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    ஆந்திர முதல்வரின் இத்தகைய பதிவு நெட்டிசன்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    ஆந்திர முதல்வரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னையில் பிறந்தவரான குகேஷ்-ஐ 'தெலுங்கு பையன்' என்று குறிப்பிடுவது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டிற்கு பெருமை தேடிக் கொடுத்த இளம் சாம்பியனை அனைவரும் உரிமை கொண்டாடலாம், ஆனால் மொழி வாரியாக பிரிப்பது வீண் சர்ச்சைகளையே உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    • மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு விடுதியில் இருந்து தப்பியோடியனர்.
    • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியனர்.

    விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், தனியார் பள்ளி விடுதியில் இருந்து தப்பிச் சென்ற 4 சிறுவர்கள், விஜயவாடாவில் பிடிபட்டனர்.

    4 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டு, விசாகப்பட்டினர் அழைத்துச் சென்று, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர், 'லக்கி பாஸ்கர்' படம் பார்த்த பிறகு அதேபோல வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

    விடுதியில் இருந்து மாணவர்கள் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொருளாதார நெருக்கடியால் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
    • கடன் பெற்ற ஒரு வாரத்தில் திருப்பி செலுத்த வற்புறுத்தல்.

    ஆந்திர மாநிலத்தில் கடன் வழங்கும் செயலி (Loan App) ஏஜெண்ட்டின் மோசமான செயலால் திருமணம் முடிந்த இரண்டு மாதத்திற்குள் வாலிபர் ஒருவர் உயிரிழந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    கடன் வழங்கும் செயலிகள் சிலரின் பொருளாதார நிலையை பயன்படுத்தி அவர்களை கடன் பெற தூண்டுகின்றன. கடன் வழங்கும்போது நல்ல விதமாக பேசும் ஏஜெண்ட்-கள் கடன் வழங்கிய பின்னர் அதை வசூலிக்கும்போது மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுண்டு. இதுபோன்ற சம்பவத்தால்தான் வாலிபர் உயிர் பறிபோகியுள்ளது.

    ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நரேந்திரா. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். 25 வயதாகும் நரேந்திரா கடந்த அக்டோபர் மாதம் அகிலா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    இந்த ஜோடி விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தது. பருவமழை மற்றும் வானிலை காரணமாக கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் கடன் வழங்கும் செயலியை நாடியுள்ளார். அந்த செயலியில் 2 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

    கடன் பெற்ற நிலையில் பணத்தை உடனடியாக செலுத்தும்படி செயலி ஏஜெண்ட் துன்புறுத்தியுள்ளார். மோசமான வார்த்தைகளால் திட்டி தகவல் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து நரேந்திரா கடனை முழுமையாக அடைக்க முடிவு செய்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து தகவல் அனுப்பப்பட்டு வந்தது.

    அந்த ஏஜெண்டிடம் நரேந்திரா மனைவி மற்றும் உறவினர்கள் செல்போன் நம்பர் இருந்துள்ளது. ஒரு வாரமாக மோசமான வார்த்தைகளால் மெசேஜ் அனுப்பி வந்த நிலையில், நரேந்திராவின் மனைவி அகிலா படத்தை ஆபாசமாக சித்தரித்து, அகிலா மற்றும் நரேந்திரா உறவினர்களுக்கு அந்த ஏஜெண்ட் அனுப்பியுள்ளார். இந்த படத்துடன் விலை நிர்ணயித்துள்ளார்.

    தன்னுடைய ஆபாச படம் தனது செல்போனுக்கு வந்தது குறித்து நரேந்திராவிடம் அகிலா விசாரிக்க, அப்போதுதான் கடன் வழங்கும் செயலயில் கடன் பெற்றதாகவும், கடன் பெற்ற ஒரு வாரத்தில் இருந்து தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே அவர்களது உறவினர்கள் பலர் இந்த படம் தொடர்பாக நரேந்திராவிடம் விசாரித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த நரேந்திரா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

    காதல் திருமணம் செய்த மூன்று மாதத்திற்குள் 2 ஆயிரம் கடனுக்கான நரேந்திரா தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செயலி ஏஜெண்ட் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    மாநில மற்றும் மத்திய அரசுகள் இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளை நம்பி, கடன் பெற்று சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் பொருளாதார சூழ்நிலையில் சிக்குபவர்கள் இதுபோன்ற செயலிகளில் கடன் பெற்று தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற செயலிகளை கண்டறிந்து அரசுகள் நிரந்தரமாக தடை செய்தால்தான்  உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

    • பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார்.
    • கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பவன் கல்யாணை அவதூறாக பேசியும், எச்சரித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பவன் கல்யாண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக மல்லிகார்ஜுன ராவ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் அவ்வாறு பேசியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    • தொல்லை தாங்காமல் அந்த சிறுமி , 6 மாதங்களுக்கு முன்பு பாட்டி வீட்டுக்கு சென்றார்.
    • நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராகவேந்திரா சிறுமி தூங்கிக்கொண்டிருந்த அறையைத் தட்டியுள்ளார்.

    ஆந்திரப் பிரதேசத்தில் 3 வருடமாக ப்ரொபோஸ் செய்தும் காதலை ஏற்காத 17 வயது சிறுமியை 21 வயது வாலிபர் வீடு புகுந்து தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் நந்திகோட்கூர் நகரில் உள்ள பைரெட்டி காலனியில் தனது தாத்தா பாட்டி வீட்டில் சிறுமி இருந்தபோது நேற்று இரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    களுகோட்லா கிராமத்தைச் சேர்ந்த ராகவேந்திரா [21 வயது] கடந்த சில ஆண்டுகளாக காக்கிநாடா மாவட்டத்தில் சமர்லகோட்டாவைச் சேர்ந்த அந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைப் பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொல்லை செய்து வந்துள்ளார்.

    அந்த நபரின் தொல்லை தாங்காமல் அந்த சிறுமி , 6 மாதங்களுக்கு முன்பு நந்திகோட்கூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்றார். ஆனால் அங்கும் அவரை பின்தொடர்ந்து ராகவேந்திரா தொல்லை செய்துள்ளான்.

    இந்த நிலையில்தான் நேற்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராகவேந்திரா சிறுமி தூங்கிக்கொண்டிருந்த அறையைத் தட்டியுள்ளார். சிறுமி கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்து கதவை உள்ளே இருந்து ராஜேந்திர பூட்டினான். பின்னர் சிறுமி மீது தான் பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளான்.

     உதவிக்காகக் கத்த முடியாதபடி சிறுமியின் வாயை ராகவேந்திரா இறுக்கியதாக கூறப்படுகிறது. தீ பற்றி எறிந்த நிலையில் சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

    முன்னதாக சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும், சிறுமியின் பாட்டி விழித்து கதவை தட்டியுள்ளார். ஆனால் சிறுமி முழுவதும் எறிந்த பிறகே ராகவேந்திரா கதவை திறந்துள்ளான்.

    ராகவேந்திராவின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முயன்ற அவனை அவரது  அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் ராகவேந்திராவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

     

    • ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
    • ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரா துணை முதல் மந்திரியுமான பவன் கல்யாண் சகோதரர் நாகு பாபு. இவர் ஜனசனா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

    தனது சகோதரரை ஆந்திர அமைச்சரவையில் மந்திரியாக்க வேண்டும் என பவன் கல்யாண் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார்.

    ஏற்கனவே ஆந்திர அமைச்சரவையில் ஒரு மந்திரி பதவி இடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள பதவியில் நாக பாபுவை மந்திரியாக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

    • கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பவன் கல்யாணை அவதூறாக பேசியும், எச்சரித்தும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பவன் கல்யாண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளை கும்பல் சென்ற கார் ஐதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது.
    • 2 சுங்க சாவடிகளை கடந்த ஒரே காரில் வேறு வேறு நம்பர் பிளேட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், ராய பார்ட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.

    வங்கிக்குள் சென்ற கொள்ளை கும்பல் கியாஸ் கட்டர் மூலம் வங்கியில் இருந்த லாக்கரை உடைத்தனர். லாக்கரில் இருந்த ரூ. 13.61 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    வங்கியில் நடந்த கொள்ளை குறித்து போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். கொள்ளை கும்பல் சென்ற கார் ஐதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதானது. தனியார் லிப்டிங் வாகனம் மூலம் காரை மெக்கானிக் கடைக்கு எடுத்துச் சென்று பழுது நீக்கினர். பின்னர் தாங்கள் ஜவகர் நகரில் தங்கி இருந்த வாடகை வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்துவிட்டு மகாராஷ்டிரா வழியாக உத்தரப் பிரதேசம் நோக்கி சென்றனர்.

    பீபி நகர் சுங்க சாவடியை கடக்கும்போது காரில் வேறு ஒரு நம்பர் பிளேட் மாற்றப்பட்டு இருந்தது. 2 சுங்க சாவடிகளை கடந்த ஒரே காரில் வேறு வேறு நம்பர் பிளேட் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் மகாராஷ்டிரா சென்று கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கொள்ளை கும்பலின் முக்கிய குற்றவாளியான ஒருவர் வேறு பகுதி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது. அவரையும் மடக்கி பிடித்து அவரிடம் இருந்த 7.50 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.

    • ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • போலீசார் 120 கிலோமீட்டர் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், சரூர் நகரில் இருந்து நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹயத் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் மற்றும் டிரைவர் நோயாளியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மெஹபூபா பாத் மாவட்டம், லட்சுமி நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் காலபைரவா என்கிற வெங்கடேஸ்வரலு (55). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ்சில் யாரும் இல்லாததால் அதனை கடத்திக் கொண்டு சென்றார்.

    நோயாளியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு வெளியே வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆம்புலன்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் சோதனை செய்தபோது ஆம்புலன்ஸ் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிட்யாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஜெனாரெட்டி மற்றும் போலீசார் பாமன குண்டா ரெயில்வே மேம்பாலத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தும்படி கூறினார்.

    ஆனால் வெங்கடேஸ்வரலு சப் இன்ஸ்பெக்டர் ஜனா ரெட்டி மீது ஆம்புலன்ஸ் மோதி விட்டு சென்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் உஷார் அடைந்த போலீசார் ஆம்புலன்ஸை தங்களது வாகனங்களில் துரத்திச் சென்றனர். கொல்லப்பட் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ்சை வழிமறித்தனர். அப்போது வெங்கடேஸ்வரலு ஆம்புலன்ஸை பின்னோக்கி எடுத்து சென்று வேறு திசையில் மீண்டும் ஐதராபாத் சாலையில் ஓட்டி சென்றார்.

    இதனால் விரக்தி அடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரும் சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தினர். லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட வெங்கடேஸ்வரலு ஆம்புலன்சை மீண்டும் வேறு சாலை வழியாக திருப்பி வேகமாக சென்றார்.

    அப்போது ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்சில் இருந்து தப்பி ஓடிய வெங்கடேஸ்வரலுவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் வெங்கடேஸ்வரலு சிட்யாலா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிச் செல்லப்பட்ட வாகனத்தை போலீசார் 120 கிலோமீட்டர் விரட்டி சென்று மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

    ×