என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருப்பதியில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது.
- பவுர்ணமியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.
உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 82,999 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,875 பக்தர்கள் முடீ காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர்.
திருப்பதி:
கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார்.
பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குதிப்பதை வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறினார்.
சக நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்த போது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த 2 பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுமன் வெளியே வராததால் பதற்றம் அடைந்தனர். அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் சுமனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதளுக்கு பிறகு பாறைகளுக்கு இடையில் சிக்கிய சுமனை பிணமாக மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக எரவாரி பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுமன் பாறையின் மீது இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தலக்கோணா நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.
நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஆபத்தாக உள்ள பாறைகளை நீக்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கடப்பாவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டது.
- தினமும் ஒன்று 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மீது சென்று வருவதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு என்று ஆகம விதிகள் உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆகம விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி திருப்பதி மலைக்கு மது மாமிசம் புகைப்பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாற்று மதத்தினரின் அடையாளங்களைக் கொண்ட நபர்கள் மற்றும் அவரது வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
மேலும் ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்கவும் தடை செய்யப்பட்ட பகுதியாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அடிக்கடி ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள் ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மத்திய அரசு தடை விதிக்கப்பட்ட பகுதியாக ஏழுமலையான் கோவிலை அறிவிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கடப்பாவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் பெங்களூருவில் இருந்து வரும் விமானங்கள் திருப்பதிக்கு வந்து கடப்பா செல்லும்போது ஏழுமலையான் கோவில் மீது செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தினமும் ஒன்று 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மீது சென்று வருவதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி.
உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு மிரட்டி வந்தனர்.
இதனால் விரத்தி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அன்னவரம் போலீஸ் நிலையம் பகுதியில் தனியாக வீடு வாங்கி குடியேறினார். இருப்பினும் ரவுடிகள் அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீனிவாசன் வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தனர். ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவியை காரில் கடத்திச் சென்றனர். மறைவான இடத்தில் அடைத்து வைத்தனர்.
பின்னர் ஸ்ரீனிவாசன் உறவினர்களுக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்தால் கணவன், மனைவி இருவரையும் விடுவிப்போம், போலீசுக்கு சென்றால் அவர்களை கொலை செய்து விடுவதாகவும் போனில் தெரிவித்தனர்.
ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர். ஆனால் கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிக்க முடியும் என தெரிவித்தனர்.
இதை அடுத்து ஸ்ரீனிவாசன் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
மேலும் கடத்தல்காரர்கள் ஸ்ரீனிவாசனின் உறவினர்களிடம் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது கடத்தல் கும்பல் உள்ளூரிலேயே இருப்பது தெரிய வந்தது.
நேற்று மாலை அன்னவரம் கட்டிப்புடி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரில் வந்த கடத்தல் கும்பல் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து தம்பதி மீட்கப்பட்டனர்.
விஜயவாடாவை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3-ந்தேதி ஆஷாட பூர்ணிமா நடக்கிறது.
- 17-ந்தேதி ஸ்ரீவாரி ஆனிவார ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜூலை 1-ந்தேதி சனி திரயோதசி,
3-ந்தேதி ஆஷாட பூர்ணிமா,
வியாச பூஜை, குரு பூர்ணிமா,
13-ந்தேதி சர்வ ஏகாதசி,
15-ந்தேதி சனி திரயோதசி,
17-ந்தேதி ஸ்ரீவாரி ஆனிவார ஆஸ்தானம்,
22-ந்தேதி ஆண்டாள் திரு ஆடிப்பூரம் சாத்துமுரை,
ஸ்ரீவாரு புசைவாரி தோட்ட உற்சவம்,
30-ந்தேதி நாராயணகிரி தோட்டத்தில் சத்ர ஸ்தாபன உற்சவம்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
- நாளை கவச பிரதிஷ்டை நடக்கிறது.
- ஞாயிற்றுக்கிழமை கவச சமர்ப்பணம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்கக் கவசங்களை எடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்து தங்க முலாம் பூசி மீண்டும் உற்சவர்களுக்கு அணிவிப்பது ஜேஷ்டாபிஷேகம் ஆகும்.
அதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கவச்சாதி வாசமும், நாளை (சனிக்கிழமை) கவச பிரதிஷ்டை, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கவச சமர்ப்பணம் நடக்கிறது. விழாவையொட்டி 3 நாட்களுக்கு காலை மகாசாந்தி ஹோமம், புண்யாஹவச்சனம், காலை 10 மணிக்கு உற்சவர்களான சாமி, தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் ஷடகலச ஸ்தாபனம், மாலை சாமி வீதி உலா நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் வரும் ஜேஷ்டா நட்சத்திரத்தின் தொடக்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
திருப்பதி:
சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி.
இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் கீர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஊரில் உள்ள பெரியவர்கள் இவர்களது காதலை கண்டித்தனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். வேறு சாதியை சேர்ந்த வாலிபரை மகள் காதலிப்பதை கீர்த்தியின் தந்தை அவமானமாக கருதினார்.
எவ்வளவு கண்டித்தும் இருவரும் ரகசியமாக சந்திப்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
கீர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரவியது.
காதலி இறந்த தகவல் அறிந்த கங்காதரன், பங்காருபேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கோவிலில் தரிசனத்தின் போது உடைக்கப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களுடன் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.
- வீட்டில் சிறுவர்கள் சாமிக்காக உடைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திரிவேணி(30). தம்பதியின் மகன்கள் யஷ்வந்த் (5), ஜஸ்வந்த்(3).
சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன், ஐதராபாத் அருகே உள்ள குசைகுடா சோனியா நகரில் குடிபெயர்ந்தார்.
நேற்று சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
கோவிலில் தரிசனத்தின் போது உடைக்கப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களுடன் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.
வீட்டில் சிறுவர்கள் சாமிக்காக உடைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தேங்காய் துண்டு ஜஸ்வந்த் தொண்டையில் சிக்கியது.
திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் தாய், தந்தை கண்முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- விடுதி அறையின் பக்கவாட்டில் கிருஷ்ண கேதாரி ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண கேதாரியுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்தவர் கிருஷ்ண கேதாரி.
இவர் ராஜ மகேந்திரபுரத்தில் உள்ள ஜி எஸ் எல் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு தற்போது அதே கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை விடுதி அறையின் பக்கவாட்டில் கிருஷ்ண கேதாரி ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண கேதாரியுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவித்ரோற்சவம் நாளை தொடங்கி ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
- இன்று மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை, உற்சவங்களில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்கான பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கோவிலில் இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. அதற்காக, இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் நடக்கிறது.
30-ந்தேதி உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், கலசபூஜை, ஹோமம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. 1-ந்தேதி காலை கிரந்தி பவித்ரா சமர்ப்பணம், மாலை யாக சாலை பூஜை, ஹோமம் நடக்கிறது. 2-ந்தேதி காலை மகா பூர்ணாஹுதி, கலசோத்வாசனம், பவித்ர சமர்ப்பணம் நடக்கிறது.
அன்று மாலை 6 மணிக்கு மூலவர்களுக்கு கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரருக்கு ஏகாந்தமாக ஆஸ்தானம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.
- கடந்த 3 நாட்களாக தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்து வருகின்றனர்.
- கடந்த 3 மாதங்களாக திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறையிலும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருந்தது.
அதிகபட்சமாக 36 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் கூட்டம் குறைந்தது. கடந்த 3 நாட்களாக தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்து வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மட்டும் அங்குள்ள வைகுந்தம் கியூ காம்ளக்ஸ் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.
நேரடி இலவச தரிசனத்தில் சுமார் 10 நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 71,615 பேர் தரிசனம் செய்தனர். 30,219 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- லெதர்பேக் ஆமைகளுக்கு எலும்புக்கூடு இல்லை.
- விசாகப்பட்டினம் கடற்கரையில் லெதர்பேக் ஆமை கடைசியாக 2016-ம் ஆண்டு வெளியே வந்தது.
திருப்பதி:
உலகின் மிகப்பெரிய ஆமை இனமான லெதர்பேக் கடல் ஆமை 7 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகப்பட்டினம் கடற்கரையில் அரிதாகத் தோன்றியது.
தண்டதி கடற்கரையில் மீனவர்கள் குழு ஒன்று கயிற்றில் சிக்கியிருந்த ஆமையைக் கண்டுபிடித்தனர். அதை மீட்டு கடலில் விட்டனர். வனவிலங்கு பாதுகாவலர் ஒருவர் ஆமையை பிடித்து கடலில் விடும் வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனால் லெதர்பேக் ஆமை பலரது கவனத்தைப் பெற்றது.
"எங்கள் பகுதியில் லெதர்பேக் ஆமைகள் இருப்பது அசாதாரணமானது அல்ல என்றாலும், கடற்கரையோரங்களில் அவற்றைக் காண்பது அரிது.
ஆலிவ் ரிட்லி போன்ற மற்ற உயிரினங்களை போல் இல்லாமல், லெதர்பேக் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு பொதுவாக வருவதில்லை.
லெதர்பேக் ஆமைகளுக்கு எலும்புக்கூடு இல்லை. மாறாக, அவற்றின் கார்பேஸ் எண்ணெய் சதை மற்றும் நெகிழ்வான, தோல் போன்ற தோலால் மூடப்பட்டிருக்கும்.
இந்தியாவில், அவை அந்தமான் தீவிலும், நிக்கோபார் தீவு மற்றும் கிரேட் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.
"பொதுவாக நமது மீனவர்கள் தங்களுக்குப் பயன்படாத மீன்களைப் பிடிப்பதில்லை. பல்வேறு மீனவர்கள் ஆமைகளை விடுவித்து, அவற்றை மீட்டு பாதுகாப்பாக நீரில் விடுகிறார்கள்.
விசாகப்பட்டினம் கடற்கரையில் லெதர்பேக் ஆமை கடைசியாக 2016-ம் ஆண்டு வெளியே வந்தது. லெதர்பேக் ஆமைகள் அழியும் நிலையில் உள்ளன.
கடல் மாசுபாடு மற்றும் குப்பைகள், சில சமயங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன என கடல் உயிரியலாளர் ஸ்ரீசக்ரபிரணவ் தெரிவித்தார்.






