என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மாணவி விடுதிக்கு சென்றதும் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினார்.
- அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக கே.யு.சி. போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவருடைய நண்பர் அகில். அன்வேஸ் அவரது காதலியுடன் அங்குள்ள ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
அப்போது அகில் எனது தோழி ஒருவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகிறார். அவளையும் கோவிலுக்கு அழைத்து வருகிறேன் என தெரிவித்தார் .
திட்டமிட்டபடி அன்வேஷ் அவரது காதலி மற்றும் அகில் அவரது தோழியான கல்லூரி மாணவி ஆகியோர் காரில் கோவிலுக்கு சென்றனர். நேற்று கோவிலில் இருந்து கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
வழியில் அன்வேஷ் தனது காதலியை வெங்கடாபூர் என்ற இடத்தில் இறக்கி விட்டார். பின்னர் அகில் மற்றும் அவரது தோழி ஆகியோருடன் காரில் சென்றனர்.
கோமாடிப்பள்ளி சோதனை சாவடி அருகே வந்தபோது அகிலின் தோழி காரை நிறுத்தும்படி கூறிவிட்டு அருகில் உள்ள புதர் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அவளது அழகில் மயங்கிய அன்வேஷ் அவளை அடைய வேண்டும் என திட்டமிட்டார். உடனே அவரது நண்பர் அகிலிடம் காரிலிருந்து இறங்கி கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி அகில் காரில் இருந்து இறங்கி கடைக்கு சென்றார்.
அந்த நேரத்தில் அன்வேஷ் புதர் பகுதிக்குச் சென்ற கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
அகில் வருவதற்குள் இருவரும் காருக்கு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி அழுது கொண்டே இருந்தாள். இது பற்றி அகில் கேட்டபோது அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.
மாணவி விடுதிக்கு சென்றதும் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக கே.யு.சி. போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வேஷை கைது செய்தனர்.
- சந்திரபாபு நாயுடன் கடந்த மாதம் அமித் ஷாவை சந்தித்து பேசினார்
- இரண்டு நாள் பயணமாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி செல்கிறார்
ஆந்திர பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும சந்திக்க இருப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு அமித் ஷா மற்றும் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் மாதம் 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர்.
- மே மாதம் ரூ.109.99 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமும் 100 கோடியை தாண்டியது.
ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர். 11-ந் தேதி 92,238 பேரும், 10-ந் தேதி 88,626 பேரும், 17-ந் தேதி 87,762 பக்தர்களும், 25-ந் தேதி 87,407 பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
18-ந் தேதி அன்று அதிகபட்சமாக ரூ.4 கோடியே 59 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.123.07 கோடி, பிப்ரவரியில் ரூ.114.29 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.120.29 கோடி, ஏப்ரலில் ரூ.144.12 கோடி, மே மாதம் ரூ.109.99 கோடி, ஜூன் மாதம் ரூ.116 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.
- பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது. மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாலிபர்கள், மாணவர்களிடம் இளம்பெண்களை வைத்து மயக்கி பல ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.
இதுகுறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று இரவு பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.
மசாஜ் சென்டரில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்படும் ஸ்வைப் எந்திரம் மற்றும் ரூ. 32 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்த 14 வாடிக்கையாளர்கள் தாங்கள் மிகவும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என போலீசாரிடம் கெஞ்சினர். ஆனாலும் அவர்களை விடவில்லை. மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர். வாடிக்கையாளர்கள் 14 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது விபசாரத்திற்கு தள்ளப்பட்ட 10 பெண்களை மீட்டனர். அங்கிருந்த 18 வாடிக்கையாளர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே இரவில் 14 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் 32 பேரை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
- பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.
- சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் மது, மாமிசம், பீடி, சிகரெட், கஞ்சா வெளியிட்ட பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வளர்ப்பு பிராணிகளை வாகனங்களில் அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் ஒரு வேனில் திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் வந்த வேனில் வீட்டு வளர்ப்பு நாயை அழைத்து வந்தனர்.
அலிப்பிரி சோதனை சாவடியில் சரிவர வாகனத்தை சோதனை செய்யாததால் பக்தர்கள் நாயை மலைக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி மலைக்கு நாயுடன் வந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் வளர்ப்பு நாயை எடுத்து வந்த பக்தர்களை மடக்கினர். நாயுடன் திருப்பதி மலைக்கு வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் அந்த பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.
சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும்.
- விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார்.
8-ந்தேதி முதல் பயணிகள் ரெயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் வந்தே பாரத் ரெயில் விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, வழியாக சென்னைக்கு வந்து அடைகிறது.
இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும். முக்கிய 2 நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்று உள்ளது.
வழியில் இந்த ரெயில் நிறுத்தம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என விஜயவாடா கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆந்திராவில் ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திரா பாத்திற்கும், செகந்திரா பாத்தில் இருந்து திருப்பதிக்கு என 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தற்போது விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு 3-வது வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும்.
- மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகள் உள்ளன.
இந்த விலங்குகள் இரவு நேரத்தில் உலாவுகின்றன. இவற்றுக்கான பாதைகளும் வனப்பகுதியில் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் இறை தேடி பக்தர்கள் செல்லும் மலை பாதை அருகே நடமாடுகிறது.
சமீபத்தில் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்றது. ஆனால் அங்கே இருந்தவர்கள் விரட்டிச் சென்றதால் சிறுத்தை பயந்து போய் சிறுவனை வாயிலிருந்து கீழே போட்டுவிட்டு தப்பியது.
திருப்பதி அடுத்த கர்நூல் மாவட்டத்தில் நல்ல மலை என்னும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் தான் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் இறந்தார். இங்கு ஏராளமான புலிகள் உள்ளன.
நல்லமலை வனப்பகுதியில் இருந்து சேஷாசலம் பகுதிக்கு புலிகளுக்கான பாதை அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நல்லமலையிலிருந்து புலிகள் சேஷாசலம் வனப்பகுதி வரை சுதந்திரமாக சுற்றி வரும் என வனத்துறை அதிகாரி மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி சேஷாசலம் பகுதி வரை புலிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பகுதி வரை புலிகள் வர வாய்ப்புள்ளது.
இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறுத்தைகள் குழந்தைகளை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது.
பெரிய புலிகள் நடமாடினால் பக்தர்களின் கதி என்னாவது என்பதே பீதியாக உள்ளது. முதலில் அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும். ஆங்காங்கே 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் தைரியமாக திருப்பதி மலைக்கு நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.
- மாணவி சைக்கிளில் பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது.
- மாணவி கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்ரீகாகுளம்:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் பட்டப்பகலில் பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டில் இருந்து இன்று காலையில் வழக்கம்போல் மாணவி சைக்கிளில் பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது.
இதைப் பார்த்த சக மாணவிகள், அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். மாணவி கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
- சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டது.
- இந்த சிலை 21 அடி அகலம், 8.5 அடி உயரம் கொண்டது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே மரத்திலான உலகின் மிகப்பெரிய அனந்த சயன ஸ்ரீ மஹா விஷ்ணு மர சிலையை வடிவமைத்து கோவிலுக்கு வழங்கியது.
21 அடி அகலம், 8.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை உலகிலேயே மிகப் பெரிய விஷ்ணு மர சிலையாகும்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. மியான்மர் நாட்டில் 3 ஆண்டுகளாக இதனை செய்துள்ளனர்.
சிலை முழுவதும் வடிவமைத்த பின்னர், சிலை அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு சிலையை அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜைகள் செய்தனர்.
இந்த மஹாவிஷ்ணு சிலையை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தார். அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது.
நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
மதம் என்பது தனிப்பட்டது, கலாசாரம் என்பது அனைவருக்கும் உரியது என வெங்கய்யா நாயுடு கூறினார்.
- பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.
- சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
திருப்பதி:
ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது.
தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை.
ஊறுகாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக பல இடங்களில் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிராமம் முழுவதும் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தை ஊறுகாய் கிராமம் என்று அழைக்கின்றனர்.
ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமம். இங்கு பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே ஊறுகாய் வாசனை துளைக்கிறது.
அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஊறுகாய் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊறுகாய்களை தயார் செய்து வருகின்றனர்.
இங்குள்ள சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
கோதாவரி ஆற்றின் துணை நதியான வசிஷ்டா கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அங்கு ஊறுகாய்க்கு தேவையான அனைத்து மாங்காய் எலுமிச்சை போன்றவை கிடைக்கின்றன.
இதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்
அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிளாஸ்டிக் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கு மண் ஜாடிகளிலும் ஊறு காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. இதனை 70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.
- கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
- நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற 5-ந் தேதி சந்திப்பு நடைபெறலாம் என அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் பா.ஜனதா சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் திருப்பதி மற்றும் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் ஜெகன்மோகன் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினர்.
அவர்கள் வருகையின்போது ஜெகன்மோகன் கட்சி தலைவர்கள் சந்தித்து பேச முயன்றனர். அதனையும் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் புறக்கணித்தனர்.
இதனால் பா.ஜனதா தெலுங்கு தேசம் கூட்டணி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு பா.ஜனதா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில்:-
நாங்கள் ஒருபோதும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. மத்திய அரசுடன் நல்ல உறவை பேணுவோம்.
ஒரு கட்சியாக நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். மக்கள் பணிக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு தொடரும் என்றார்.
பிரதமர் மோடி, அமித்ஷா உடன் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்புக்கு பிறகு கூட்டணியில் மாற்றம் எதுவும் ஏற்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கடப்பாவில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன் 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மேலே பறந்தன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய ஆட்டோபஸ் படை வீரர்கள் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அடிக்கடி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் திருப்பதி தேவஸ்தானம், ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது.
கோரிக்கையை பரிசீலனை செய்த விமானத்துறை அதிகாரிகள், ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறக்கக் கூடாத பகுதியாகக் கருதப்படவில்லை. காற்றின் திசையை பொருத்து திருமலையில் மலைகளுக்கு மேலே வழக்கமாக விமானங்களின் பாதை மாற்றப்பட்டு வருகிறது, எனத் தெரிவித்துள்ளனர். ரேணிகுண்டாவில் உள்ள மத்திய விமான நிறுவனத்தைக் கேட்டால் பரிசீலனை செய்யப்படும், எனக் கூறுகிறார்கள்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கடப்பாவில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதனால் பெங்களூருவில் இருந்து வரும் விமானங்கள் திருப்பதியை அடுத்த ரேணிகுண்டா வந்து அங்கிருந்து கடப்பா செல்லும்போது, ஏழுமலையான் கோவில் மேலே பறந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் தினமும் ஒன்று அல்லது 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மேலே பறந்து செல்வதாக மத்திய அரசு விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மேலே பறந்தன. ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறந்து செல்வது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது, எனப் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.






