மசாஜ் சென்டர்களில் வாலிபர்களை மயக்கி விபசாரம்- 14 இளம்பெண்கள் மீட்பு

ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர். பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
மசாஜ் சென்டர்களில் வாலிபர்களை மயக்கி விபசாரம்- 14 இளம்பெண்கள் மீட்பு
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இங்கு சில தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது. மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாலிபர்கள், மாணவர்களிடம் இளம்பெண்களை வைத்து மயக்கி பல ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று இரவு பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்து கொண்டிருந்தபோதே கையும் களவுமாக போலீசார் மடக்கி பிடித்தனர்.

மசாஜ் சென்டரில் இருந்து ஆணுறை பாக்கெட்டுகள், ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்படும் ஸ்வைப் எந்திரம் மற்றும் ரூ. 32 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அங்கிருந்த 14 வாடிக்கையாளர்கள் தாங்கள் மிகவும் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என போலீசாரிடம் கெஞ்சினர். ஆனாலும் அவர்களை விடவில்லை. மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த 4 பெண்களை மீட்டனர். வாடிக்கையாளர்கள் 14 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் அங்கிருந்த மற்றொரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது விபசாரத்திற்கு தள்ளப்பட்ட 10 பெண்களை மீட்டனர். அங்கிருந்த 18 வாடிக்கையாளர்களும் சிக்கிக்கொண்டனர். இந்த மசாஜ் சென்டர் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரே இரவில் 14 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர் 32 பேரை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com