search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Hill"

    • அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும்.
    • மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகள் உள்ளன.

    இந்த விலங்குகள் இரவு நேரத்தில் உலாவுகின்றன. இவற்றுக்கான பாதைகளும் வனப்பகுதியில் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் இறை தேடி பக்தர்கள் செல்லும் மலை பாதை அருகே நடமாடுகிறது.

    சமீபத்தில் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்றது. ஆனால் அங்கே இருந்தவர்கள் விரட்டிச் சென்றதால் சிறுத்தை பயந்து போய் சிறுவனை வாயிலிருந்து கீழே போட்டுவிட்டு தப்பியது.

    திருப்பதி அடுத்த கர்நூல் மாவட்டத்தில் நல்ல மலை என்னும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் தான் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் இறந்தார். இங்கு ஏராளமான புலிகள் உள்ளன.

    நல்லமலை வனப்பகுதியில் இருந்து சேஷாசலம் பகுதிக்கு புலிகளுக்கான பாதை அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நல்லமலையிலிருந்து புலிகள் சேஷாசலம் வனப்பகுதி வரை சுதந்திரமாக சுற்றி வரும் என வனத்துறை அதிகாரி மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி சேஷாசலம் பகுதி வரை புலிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பகுதி வரை புலிகள் வர வாய்ப்புள்ளது.

    இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறுத்தைகள் குழந்தைகளை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது.

    பெரிய புலிகள் நடமாடினால் பக்தர்களின் கதி என்னாவது என்பதே பீதியாக உள்ளது. முதலில் அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும். ஆங்காங்கே 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் தைரியமாக திருப்பதி மலைக்கு நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×