search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Purnima"

    • ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மாவிளக்கு போடுவார்கள்.
    • ஆடி மாதம் எள் தீபம் ஏற்றுங்கள் இது எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும்.

    1. திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன். இவர் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.

    2. ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    3. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள்.

    4. ஆடி மாதத்தில் தான் சதுர்மாஸ் விரதம் தொடங்குகிறது. அதாவது சன்யாசி போன்ற பிரியர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து பூஜை புனஸ்கரங்களை தொடருவர். இந்த காலத்தில் தான் பல ஊர்வன வகையை சேர்ந்த ஜீவராசிகள் மழை வெள்ளத்தை தாங்க முடியாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளிவரும். அப்போது நடந்தால் அவைகள் மிதிபட்டு, துன்பப்பட்டு இறக்க நேரிடும் என்பதால் சன்யாசிகள், சாதுக்கள் ஒரு இடத்தில் போய் அமர்ந்து நாலு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பர். வியாச பூஜையும் நடக்கும். இது ஆடி பவுர்ணமியில் குரு பூர்ணிமா என்ற பெயரில் நடக்கும்.

    5. ஆடி மாதம் வரும் ஏகாதசியை மகாராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். காவடி போல் தோளில் இரு பக்கமும், பால் அல்லது தயிர் எடுத்துக் கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலை தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடுநடுவே செல்வந்தர்கள் அவர்களுக்கு உணவு பந்தல் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

    6. ஆடி மாதத்திலேதான் ஜீவ நதிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. இதை ஜலப்பிரவாஹப்பூஜை என்று சொல்கிறார்கள். காவேரி அம்மனுக்கு மசக்கை என்று ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுகிறார்கள்.

    7. அன்னை காமாட்சியும் சிவனை நோக்கித் தவம் இருந்து பின் ஈசனை அடைந்த மாதம் இந்த ஆடி மாதம்தான். ஆடி மாதம் சிலர் தேவியை வாராஹியாக வழிபடுவர். இவள் நமக்கு தைரியத்தை வழங்கி சத்ருவை அடக்குகிறாள்.

    8. அன்னையை பரா சக்தியாக கண்ட ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம். ஆகஸ்டு 15-ல் வருகிறது. ஷீரடியில் ஷீரடி பாபா உத்சவம் ஆடி மாதம் பிரமாதமாக நடக்கும்.

    9. உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகாதேவிக்கு, ஏழைகளான சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் உணவும் கொடுத்த நிகழ்ச்சி நடந்ததும் ஆடி மாதத்தில்தான். அதன் காரணமாகவே ஆடி மாதத்தில் வேப்பிலைச் சேலை கட்டி அம்மனை வலம் வருவதும், அவளுக்கு கஞ்சி, கூழ் வார்க்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும் தென் மாவட்டங்களில் ஆடிச் செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோவில்களில் பெண்கள் அம்பாளுக்கு மாவிளக்கு போடுவார்கள். இல்லத்தரசிகள் குத்து விளக்கு பூஜை செய்வர். ஸ்ரீதுர்காதேவிக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவார்கள்.

    11. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் கோ பத்ம விரதம் (பசு வழிபாடு) கடைப்பிடித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பர்.

    12. ஆடி மாதத்தில் அவதரித்த நாயன்மார்கள்& சுந்தரமூர்த்தி நாயனார். கலிய நாயனார், புகழ்சோழர், மூர்த்தி நாயனார் ஆகியோர் ஆவர். ஆளவந்தார், புண்டரி காஷர், கந்தாடை தோழப்பர், பத்ரி நாராயணர் போன்ற ஆழ்வார்கள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான்.

    13. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடைபெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார். ஆடி சுவாதியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும் புறப்பாடும் நடைபெறும்.

    14. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில், உதங்க முனிவருக்கு ஜவண்ணங்காட்டி அருளியதன் நினைவாக பஞ்சப் பிராகார விழா நடைபெறும்.

    15. கொடு முடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப்பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மாவிளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்துவிட்டு வருவர்.

    சர்க்கரைக் காப்பு

    திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி சுவாசினி பூஜை நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த அம்மனுக்கு ஸ்ரீசக்ர மாலை உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த அம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட குணம் பெறலாம் என்கிறார்கள். சர்க்கரையுடன் நெய் சேர்த்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, முந்திரிப் பழங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

    எள் எண்ணை ஏற்றுங்கள்

    ஆடி மாதம் காற்று அதிகமாக வீசும். இது தொற்று நோய்களை பரவச் செய்து விடும். இதை தடுக்கும் ஆற்றல் எள் எண்ணை தீபத்துக்கு உண்டு. எள் எண்ணையில் இரும்புச்சத்து உள்ளது. எள் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றும் போது, அது சூடாகி பிராண சக்தியை அதிகப்படுத்தும். இந்த பிராண சக்தி தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குத்தரும். எனவே ஆடி மாதம் அடிக்கடி எள் தீபம் ஏற்றுங்கள்.

    • திருப்பதியில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது.
    • பவுர்ணமியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது.

    உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 82,999 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,875 பக்தர்கள் முடீ காணிக்கை செலுத்தினர்.

    ரூ.4.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள்.
    • நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்.

    புதுடெல்லி:

    குரு பூர்ணிமா விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

    நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியை தெரிவிக்கும் நாள். நமது சமூகம் கற்றலுக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது புனிதமான ஆஷாதா பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். புத்த பெருமானின் உன்னதமான போதனைகளை நினைவு கூர்வதோடு நீதியும் கருணையும் கொண்ட சமுதாயம் பற்றிய அவரது அறிவொளி பார்வையை நனவாக்க நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம் என்றார்.

    குரு பூர்ணிமா நாளில் நமக்கு வழிகாட்டும் குருமார்களை வணங்கி வழிபட வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #GuruPurnima #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியானது குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தனக்கு கல்வி புகட்டிய, வழிகாட்டிய குருமார்களை போற்றும் விதமாக குரு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். குருவை வணங்கி ஆசி பெறுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவது மரபு.

    அவ்வகையில் இந்த ஆண்டிற்கான குரு பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தட்சிணாமூர்த்திக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    இதையொட்டி பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.



    “இன்று குரு பூர்ணிமா நாள். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கு நேர்மறையான சிந்தனைகளையும் வார்த்தைகளையும் தருகின்ற, சரியான செயல்களுடன் நம்மை வழிநடத்துகின்ற ஒவ்வொரு குருவுக்கும் மரியாதை செலுத்துவோம். இந்த குரு பூர்ணிமா நன்னாளில் குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #GuruPurnima #NirmalaSitharaman
    ×