குரு பூர்ணிமா- பிரதமர் மோடி வாழ்த்து

நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள்.நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்.
குரு பூர்ணிமா- பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

குரு பூர்ணிமா விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையை பற்றி நமக்கு பலவற்றை கற்று தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் இது நன்றியை தெரிவிக்கும் நாள். நமது சமூகம் கற்றலுக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது புனிதமான ஆஷாதா பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். புத்த பெருமானின் உன்னதமான போதனைகளை நினைவு கூர்வதோடு நீதியும் கருணையும் கொண்ட சமுதாயம் பற்றிய அவரது அறிவொளி பார்வையை நனவாக்க நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com