search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழிகாட்டும் குருவை வணங்குவோம் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குரு பூர்ணிமா வாழ்த்து
    X

    வழிகாட்டும் குருவை வணங்குவோம் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் குரு பூர்ணிமா வாழ்த்து

    குரு பூர்ணிமா நாளில் நமக்கு வழிகாட்டும் குருமார்களை வணங்கி வழிபட வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #GuruPurnima #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியானது குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தனக்கு கல்வி புகட்டிய, வழிகாட்டிய குருமார்களை போற்றும் விதமாக குரு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். குருவை வணங்கி ஆசி பெறுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவது மரபு.

    அவ்வகையில் இந்த ஆண்டிற்கான குரு பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தட்சிணாமூர்த்திக்கு இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    இதையொட்டி பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.



    “இன்று குரு பூர்ணிமா நாள். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமக்கு நேர்மறையான சிந்தனைகளையும் வார்த்தைகளையும் தருகின்ற, சரியான செயல்களுடன் நம்மை வழிநடத்துகின்ற ஒவ்வொரு குருவுக்கும் மரியாதை செலுத்துவோம். இந்த குரு பூர்ணிமா நன்னாளில் குருவின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கட்டும்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #GuruPurnima #NirmalaSitharaman
    Next Story
    ×