என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical College Student Murder"

    • விடுதி அறையின் பக்கவாட்டில் கிருஷ்ண கேதாரி ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண கேதாரியுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்தவர் கிருஷ்ண கேதாரி.

    இவர் ராஜ மகேந்திரபுரத்தில் உள்ள ஜி எஸ் எல் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு தற்போது அதே கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை விடுதி அறையின் பக்கவாட்டில் கிருஷ்ண கேதாரி ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண கேதாரியுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×