என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
- உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஆஸ்தானம் நடக்கிறது.
22-ந்தேதி ஆண்டாள் சாத்துமுறை, காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஆண்டாளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிந்தராஜசாமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அலிபிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானமும், சிறப்புப்பூஜைகளும் நடத்தப்படுகிறது.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு ராம் நகர் குடியிருப்பு, கீதா மந்திரம், ஆர்.எஸ்.மாட வீதியில் உள்ள விக்னசாச்சாரியார் கோவில், சின்னஜீயர் மடம் வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
- ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
மலைப் பாதையில் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது மலை பாதைகளில் அடிக்கடி விபத்தில் சிக்கும் தனியார் வாகனங்களை கண்டறிய வேண்டும். அந்த வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும் வெளியூர் பக்தர்களிடம் வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனை தடுக்க ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து திருப்பதி மலையில் பக்தர்கள் வசதிக்காக ப்ரீபெய்டு கார் சேவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்தது.
நேற்று 64 ஆயிரத்து 347 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,358 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.5.11கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தீட்சித் ரெட்டியின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று இருந்தனர்.
- தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரை சேர்ந்தவர் தீட்சித் ரெட்டி (வயது 21). இவர் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு டாக்டருக்கு படித்து வந்தார்.
இந்த நிலையில் தீட்சித் ரெட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். தீட்சித் ரெட்டிக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வந்தனர்.
தீட்சித் ரெட்டியின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று இருந்தனர்.
தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்.
வெளியூர் சென்றிருந்த அவரது பெற்றோர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது தீட்சித் ரெட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
- 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:-
ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் காதலித்து வருகிறார்களா அல்லது விதவைப் பெண்களா என்ற விவரங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு வழங்கப்படுகிறது .
விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்திச் செல்வது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.
இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:-
ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார். அவருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை வழங்கியது. எந்த மத்திய புலனாய்வு அதிகாரி இவருக்கு சொன்னார்.
நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் பள்ளி காதல், கல்லூரி காதல் என சினிமாவில் நடிக்கிறார்கள்.
அதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.
பவுன் கல்யாண் பேசிய புள்ளி விவரத்திற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 10 நாட்களுக்குள் ஆதாரம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 17-ந் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
- பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இதையொட்டி ஏழுமலையான் கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் பணி இன்று காலை நடந்தது.
தெலுங்கு வருட பிறப்பு ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 நாட்களுக்கு மட்டும் கோவில் முழுவதும் பரிமளம் என்ற வாசனை திரவியம் மூலம் கோவில் கருவறை கொடிமரம் மற்றும் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்படுகிறது.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கூடுதல் நேரம் காத்திருந்தனர்.
- சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
- ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.
திருப்பதி:
ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நேற்று நடந்த விழாவில் பேசியதாவது:-
எங்கள் ஆட்சியில் தொழிலதிபர்களுடன் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்ததாக தொழிலாளர்கள், டிரைவர்களுடன் ஒப்பந்தம் மட்டுமே செய்து கொண்டார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மதுபான ஆலை தொழிலில் தான் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நம்பிக்கை வைத்து பெரிய தொழிலதிபர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய வரிசையில் நிற்கிறார்கள்.
அதன் மூலம் ரூ.13 லட்சம் கோடி மதிப்பீலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளோம். இதனால், மாநிலம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
ஆனால், சிலர் மாநிலத்தை விட்டு தொழிற்சாலைகள் வெளியேறுவதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி நடப்பதை பார்த்து அனைவரும் பாராட்டுகின்றனர். ஒய்.எஸ்.ஜெகன் என்பது வெறும் பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட்.
அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 175 தொகுதிகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இதற்காக மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.
- 17-ந்தேதி ஆணி வார ஆசானம் நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்த பிறகு பக்தர்களின் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. ஆனால் வார இறுதி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.
சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 24 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்ததால் விவரிக்க முடியாத அளவு பக்தர்கள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் லட்டு கவுண்டர்கள் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து லட்டு கவுண்டர்களிலும் லட்டு வழங்கப்பட்டாலும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை.
இதனால் பக்தர் ஒருவருக்கு நான்கு லட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டது. கூடுதலாக லட்டுக்களை வழங்க வேண்டும் என லட்டு வழங்கும் தேவஸ்தான ஊழியர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி ஆணி வார ஆசானம் நடைபெறுகிறது. இதனையொட்டி நாளை காலை கோவில் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கொண்டு வரும் வி.ஐ.பி. பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 88,836 பேர் தரிசனம் செய்தனர். 35,231 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை பெற தேவஸ்தான அலுவலகத்தில் பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 செலுத்தும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது.
தினமும் 400 பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
- பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
- துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.
திருப்பதி:
ஆந்திரா அரசு "வீட்டிற்கு வீடு நம் ஆட்சி" என்னும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி அமைச்சர்கள் எம்.பி,எம்.எல்.ஏ என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும்.
பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
இந்நிலையில் துணை முதல் அமைச்சர் நாராயணசாமி சித்தூர் மாவட்டம், குண்ட்ராஜு இன்லு எனும் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது திருப்பதி ஆயுதப்படை போலீஸ்காரர் யுகேந்திரன், கிராமத்தில் உள்ள சாலை குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அவரது குறைகளை எடுத்துக் கூறினார். மேலும் இதுபற்றி அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த துணை முதல் அமைச்சர் நாராயணசாமி, யுகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.
அதன் பின்னர் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ்காரர் யுகேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.
- போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், கஞ்சர பாலத்தை சேர்ந்தவர் கடற்படை அதிகாரி. இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பள்ளியில் உதவியாளராக இருப்பவர் சத்யா ராவ் (வயது 40). சிறுமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் சத்யா ராவ் வசித்து வருகிறார்.
இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வருவதால் மாணவிக்கு பாடம் கற்றுக் கொடுக்கவும், ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கவும் சத்யா ரா வ் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை சத்யா ராவ் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்தார்.
வீட்டில் அவரது பெற்றோர் இருக்கும் நேரத்தில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
மேலும் மாணவியின் நிர்வாண வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு அனுப்பி வைத்தார். அவர்களும் வீடியோவை காட்டி மாணவியை பணிய வைத்து கட்டாயமாக பலாத்காரம் செய்தனர்.
கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பலமுறை மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
கடந்த 6-ந் தேதி மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதனை கண்ட அவரது தாய் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் அனைத்தையும் தனது தாயிடம் மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து மாணவியின் தாய் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சத்யாராவ் மாணவியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு சத்யாராவை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோதனை சாவடிகளை தாண்டி இவர்கள் மலை மீது எப்படி டி.வி.க்களை கொண்டு வந்தனர் என தெரியவில்லை.
- கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப், ஷெஹனாஸ். இவர்கள் திருப்பதி போலீஸ் நிலையம் அருகே உள்ள வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
அப்போது உள்ளூர் தயாரிப்பு டிவிகள் மீது பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முகமது ஆசிப், ஷெஹனாஸ் ஆகியோர் ஒரு காரில் போலி டி.வி.களை ஏற்றிக் கொண்டு அலிப்பிரி வழியாக திருப்பதி மலையில் உள்ள ஜி.என்.சி சோதனை சாவடிக்கு வந்தனர்.
தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முகமது ஆசிப் ஒட்டி வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் டி.வி.க்களை விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த விஜிலென்ஸ் போலீசார் இருவரையும் பிடித்து திருமலை போலீசில் ஒப்படைத்தனர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்வதை தடுக்க அலிப்பிரி, ஸ்ரீவாரி மெட்டு, அபாய ஆஞ்சநேயர் சாமி கோவில் ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன.
சோதனை சாவடிகளை தாண்டி இவர்கள் மலை மீது எப்படி டி.வி.க்களை கொண்டு வந்தனர் என தெரியவில்லை.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் உள்ளூர் தயாரிப்பு டிவிக்கள் மீது பிரபல நிறுவன ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
- குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வார விடுமுறை இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று முன் தினம் முதல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
இலவச தரிசனத்துக்கு செல்லும் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பி ஷீலா தோரணம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 86,781 பேர் தரிசனம் செய்தனர். 44,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.3.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி மலைப் பாதையில் நேற்று பக்தர்கள் வந்த கார் சாலையோரம் தடுப்பு சுவரில் மோதியது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்.
மலைப்பாதையில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பக்தர்கள் காயம் அடைந்து வருகின்றனர்.
விபத்தை தடுக்கும் விதமாக போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக செல்லக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
- ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறேன் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
- போலீஸ் அதிகாரிகள் சொர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் சொர்ணலதா.
அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை ஊழியர்கள் 2 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சூரி பாபு என்பவரை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.1 கோடி 2000 ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் ஒரே நேரத்தில் ரூ.10 லட்சம் கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்தனர்.
இதையடுத்து சூரிபாபு நேற்று முன்தினம் இரவு ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிம்ம தாரா என்.ஆர்.ஐ ஆஸ்பத்திரி அருகே வந்தார்.
சிறிது நேரத்தில் ஓய்வுபெற்ற கடற்படை ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சிறிது நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா தன்னுடைய வாகனத்தில் ஆஸ்பத்திரி அருகே வந்தார்.
போலீஸ்காரர் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு மற்றும் ஹோங்கா ஆகியோர் உடன் வந்தனர்.
பணத்துடன் சூரி பாபு உள்ளிட்ட 3 பேரை மடக்கி பிடித்தனர். ரூ.12 லட்சம் லஞ்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறேன் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
இதையடுத்து சூரி பாபு இன்ஸ்பெக்டர் சொர்ண லதாவிடம் ரூ.12 லட்சத்தை கொடுத்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சூரி பாபு இன்ஸ்பெக்டர் சொர்ணலதா ரூ.12 லட்சம் பணம் வாங்கியது குறித்து டி.எஸ்.பி. வித்யாசாகரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொர்ணலதாவிடம் விசாரணை நடத்தினர். இதில் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து சொர்ணலதா, போலீஸ்காரர் ஹேம சுந்தர், ஊர்க்காவல் படையை சேர்ந்த ஸ்ரீனு, ஹோங்கா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






