என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ரீபெய்டு கார்"

    • ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    மலைப் பாதையில் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

    அப்போது மலை பாதைகளில் அடிக்கடி விபத்தில் சிக்கும் தனியார் வாகனங்களை கண்டறிய வேண்டும். அந்த வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    மேலும் வெளியூர் பக்தர்களிடம் வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனை தடுக்க ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து திருப்பதி மலையில் பக்தர்கள் வசதிக்காக ப்ரீபெய்டு கார் சேவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளி கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்தது.

    நேற்று 64 ஆயிரத்து 347 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,358 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.5.11கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×