என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.
    • காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது லோகேஷ் சிறுமியிடம் எங்காவது வெளியில் சென்று வரலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவி கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அவர் வகுப்புக்கு செல்லாமல் பள்ளி சுற்று சுவர் அருகே தனது புத்தகப் பையை வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் விஜயவாடா மச்சிளிப்பட்டினம் நெடுஞ்சாலைக்குச் சென்று லோகேஷ்-க்கு போன் செய்தார். காரில் வந்த லோகேஷ் மாணவியை ஏற்றிக்கொண்டு உய்யூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பர் நரேந்திரனுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வரவழைத்தார். அப்போது வாலிபர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

    இதனால் மாணவி மயக்கமடைந்தார். அவருக்கு தண்ணீர் தெளித்து சுயநினைவு வரவழைத்தனர். பின்னர் மாணவியை இரவு வீட்டின் அருகே இறக்கி விட்டனர்.

    காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார். அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

    இந்த நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவியின் புத்தகப்பை இருப்பதைக் கண்ட காவலாளி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

    மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசில் புகார் செய்தனர். மறுநாள் காலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் லோகேஷ் மற்றும் நரேந்திரனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.
    • குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் மேலே வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ.

    கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா குழந்தைக்கு உணவு ஊட்டினார். கீதா ஸ்ரீ உணவு சாப்பிட மறுத்து அடம் பிடித்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சினேகா வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து வந்து குழந்தையின் தலையில் அடித்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த கீதா ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஆத்திரத்தில் அடித்ததில் மகள் இறந்ததை நினைத்து சினேகா கதறி துடித்தார்.

    மகளை கொலை செய்தது தெரிந்தால் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவார் என எண்ணிய சினேகா மகளை வீட்டின் முன்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டார்.

    இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிணம் மேலே வந்தது.

    அங்கிருந்த நாய்கள் குழந்தை பிணத்தை இழுத்துச் சென்றன. இதனைக் கண்ட பொது மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக இருந்தது சினேகாவின் குழந்தை கீதா ஸ்ரீ என தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் சினேகாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் விசாரணையில் கீதா ஸ்ரீ சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கரண்டியில் அடித்ததாகவும் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மாரெட்டி சிறப்பு தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
    • பிரமோற்சவம் போன்ற முக்கிய உற்சவங்களின்போது சுவாமிக்கு அலங்காரம் செய்ய 1200 கிலோ தங்க நகைகளும், வெள்ளி 10 ஆயிரம் கிலோ உள்ளது.

    திருப்பதி:

    வாரணாசியில் சர்வதேச கோவில்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மாரெட்டி சிறப்பு தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் 30 நாடுகளில் இருந்து பல்வேறு இந்து கோவில்களின் மேலாளர்கள் பங்கேற்றனர்.

    இதில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி பேசியதாவது:-

    திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் 71 கோவில்கள், 11 அறக்கட்டளைகள், 14 மருத்துவமனைகள், 35 கல்வி நிறுவனங்கள், 9 வேத பள்ளிகள், 4 கோசாலைகள், 300 திருமண மண்டபங்கள், 10 தொண்டு நிறுவனங்கள், 4 மொழிகளில் வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி, ஆதரவற்றோருக்கான பாலமந்திரம் மற்றும் தேவஸ்தானத்தின் கீழ் 2 அருங்காட்சியகங்கள் உள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ரூ.17 ஆயிரம் கோடி ரொக்க பணம், 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர பிரமோற்சவம் போன்ற முக்கிய உற்சவங்களின்போது சுவாமிக்கு அலங்காரம் செய்ய 1200 கிலோ தங்க நகைகளும், வெள்ளி 10 ஆயிரம் கிலோ உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சென்னை உள்ளூர் ஆலோசனைக் குழுத்தலைவர் சேகர்ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • ‘டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
    • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல் ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்- சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதனுடன், மேலும் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட், ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட 'சி-55' ராக்கெட் போன்று 'கோர்-அலோன்' என்ற நவீன பயன்பாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு ஏஜென்சிகளின் செயற்கைக்கோள் பட தேவைகளுக்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. அத்துடன் எஸ்.டி. என்ஜினீயரிங் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல் மற்றும் துல்லியமாக பெறக்கூடிய படங்கள் மற்றும் 'ஜியோஸ்பேஷியல்' என்ற தொழில்நுட்ப துறைக்கு இதைப் பயன்படுத்த முடியும்.

    'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் ஆனது 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கைத் துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலை தகவல்களை பகல் மற்றும் இரவு நேரங்களில் வழங்க முடியும். துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டதாகும்.

    23 கிலோ எடை கொண்ட 'விலேக்ஸ்- ஏஎம்' என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், 'ஆர்கேட்' என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், 'எக்ஸ்ப்ளோரர்' என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், 'ஸ்கூப்-2' என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் 6 செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட்டுக்கு தகவல் தொடர்பு சேவை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். இஸ்ரோவின் அனைத்து முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளும் பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் பைபர் கேபிள்கள் வழியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கேபிள்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை வழியே செல்கிறது.

    எனவே வரும் 26-ந்தேதி வரை சென்னை, பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட இஸ்ரோவுக்கான இணைப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். கேபிள் செல்லும் நெடுஞ்சாலைகளில், சாலை பராமரிப்பு பணி உட்பட எந்தப்பணிக்கும் பள்ளம் தோண்டுதல் தொடர்பான பணிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ராக்கெட் ஏவுவதற்கு எந்த தடையும் இல்லாத தகவல் தொடர்பு சேவையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கு இஸ்ரோ கடிதம் அனுப்பியுள்ளது.

    • முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை கணவன் தனது செல்போனில் பார்த்துள்ளார்.
    • இதைக் கண்ட இரண்டாவது மனைவி ஆத்திரத்தில் கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.

    அமராவதி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த்பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார்.

    கணவன் ஆனந்த்பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு இரண்டாவது மனைவி வீரம்மா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக வீரம்மா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த்பாபு அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்த்பாபுவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த இரண்டாவது மனைவியின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஷேக் தவுலத் பீக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று முகமது இலியாஸ் என்ற மகன் உள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த குல்சர்கானுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன.

    திருப்பதி:

    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சர்கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது செல்போன் ராங் கால் மூலம் ஆந்திர மாநிலம், நந்தியாலா அடுத்த கடிவேமுலாவை சேர்ந்த ஷேக் தவுலத் பீ என்ற இளம் பெண்ணை தொடர்பு கொண்டார். இதையடுத்து இருவரும் அடிக்கடி நட்பாக பேசி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. ஷேக் தவுலத் பீக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று முகமது இலியாஸ் என்ற மகன் உள்ளார்.

    காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து குல்சர் கான் இந்த 2010-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து கள்ளப்படகு மூலம் சட்ட விரோதமாக மும்பை வழியாக இந்தியாவிற்கு வந்தார். பின்னர் குல்சர் கான் தவுலத் பீயை திருமணம் செய்து கொண்டார்.

    அந்த 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.இதன் மூலம் இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த குல்சர்கானுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. இதன் மூலம் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளை பாகிஸ்தான் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து இருந்தார். பின்னர் சவுதி அரேபியா வழியாக பாகிஸ்தான் செல்ல ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் குல்சர்கானிடம் நடத்திய விசாரணையில் அவர் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து குல்சருக்கானை கைது செய்து ஐதராபாத் சரளப்பள்ளியில் உள்ள ஜெயிலில் அடைத்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதங்களில் ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    கொரோனா தொற்று பரவல் குறைந்தது எடுத்து மீண்டும் குல்சர் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை விடுவிக்க கோரி தவுலத் பீ நீதிமன்றத்தை நாடினார்.

    இதையடுத்து கடந்த வியாழக்கிழமை குல்சர் கானை நீதிமன்றம் விடுதலை செய்தது.

    மேலும் விடுதலை செய்யப்பட்ட குல்சர் கான் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது எனவும் வரும் 27-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் போது வெளிநாடு அனுப்புவதா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • பக்தர்களுக்கு குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வார இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திருமலையில் குவிந்தனர். வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

    இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 84,430 பேர் தரிசனம் செய்தனர். 38, 662 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 3.45 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து ரமேஷ், பூர்ண சந்திரனுடன் சேர்ந்து கலப்படம் செய்யப்பட்ட அல்ட்ரா சோல்ம் என்ற ஆபத்தான போதை மாத்திரைகளை உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள பல மருந்து நிறுவனங்களில் இருந்து வரவழைத்தனர்.

    இதற்கு அம்பர்பேட்டை சேர்ந்த ராகவ ரெட்டி (வயது 55) என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தார்.

    மருந்து கடைகளில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகளை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தனர்.

    மேலும் இவர்களுக்கு மருந்து நிறுவனங்களில் இருந்து சட்ட விரோதமாக மருந்துகளை கடத்தி வருவதற்கு ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமணன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நதீம், டெல்லியை சேர்ந்த அருள் சவுத்ரி ஆகியோர் உதவி செய்து வந்தனர்.

    இதன் மூலம் ரமேஷ் பல்வேறு மாவட்டங்களுக்கு தனது மருந்து விற்பனையை விரிவு படுத்தினார்.

    இவர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஆபத்தான போதை மருந்துக்கு ஆயிரக்கணக்கானோர் அடிமையாகினர். போதை மருந்து விற்பனை குறித்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் தலைமையில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து விற்பனை குறித்து துல்லியமான தகவலை பெற்றனர். ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் எங்கு எங்கு போதை மருந்து விற்பனை செய்கிறார்கள் என கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மலாக் பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த ரமேஷ், ராகவா ரெட்டி ஆகியோரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.29 லட்சத்து 72 ஆயிரத்து 850 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
    • பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ராயகடா, கோராபுட் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் முதல்கட்டமாக பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் பொது வகுப்புப் பெட்டிகளில் குறைந்த விலை உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளன.

    "பொது பெட்டிகள் ரெயிலின் இரு முனைகளிலும் அமைந்திருப்பதால், பயணிகள் தங்கள் தேவைகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.

    எனவே பயணிகளின் சிக்கனமான உணவு, தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் சேவையை எளிதாக்கும் வகையில் இந்த பெட்டிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் ஸ்டால்கள் அமைக்க சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் இதுபோன்ற ஸ்டால்களை அமைப்பதில் போதுமான கவனம் செலுத்துமாறு அனைத்து துறைகளுக்கும் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • விபத்து குறித்து புள்ளம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பக்கவாட்டில் இருந்து அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி பேருந்து மீது மோதியது.

    ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் இன்று மாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    கடப்பாவில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அன்னமயா மாவட்டம் புள்ளம்பேட்டை அருகே சென்றபோது, பக்கவாட்டில் இருந்து அதிவேகமாக வந்த சிமெண்டு லாரி, பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது. மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்தது.

    பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ராஜம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து புள்ளம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அக்டோபர் மாதத்திற்க்கான திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்களின் முன்பதிவு வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு உள்ளிட்டவை வரும் 24-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    அக்டோபர் மாதத்திற்க்கான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுவோர் உள்ளிட்டோரின் முன்பதிவு வரும் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக வரும் 25-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்க்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது.

    இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,721 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,078 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.
    • நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி அடுத்த வெங்கடகிரியில் ஒய்.எஸ்.ஆர். நேதன்னா நேஸ்தம் திட்ட 5-வது தவணை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் வெளிச்சம் கொண்டு வரவும், அவர்களுக்கு உதவவும் ஒய்.எஸ்.ஆர்.நேதன்னா என்ற திட்டத்தில் மூலம் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

    ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 80 ஆயிரத்து 686 கைத்தறி நெசவாளர்களுக்கு கணக்கில் நேரடியாக ரூ.193.64 கோடி டெபாசிட் செய்யப்படும்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் 4 திருமணங்கள் செய்து கொண்டவர். அவர்அரசை விமர்சிக்க தகுதியற்றவர். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார்.

    கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.

    சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகன்தான் பவன் கல்யாண். பாலகிருஷ்ணாவின் மருமகனும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

    அவர்கள் அரசைபற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×