என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான ரூ.17 ஆயிரம் கோடி, 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு
- திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மாரெட்டி சிறப்பு தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.
- பிரமோற்சவம் போன்ற முக்கிய உற்சவங்களின்போது சுவாமிக்கு அலங்காரம் செய்ய 1200 கிலோ தங்க நகைகளும், வெள்ளி 10 ஆயிரம் கிலோ உள்ளது.
திருப்பதி:
வாரணாசியில் சர்வதேச கோவில்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மாரெட்டி சிறப்பு தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் 30 நாடுகளில் இருந்து பல்வேறு இந்து கோவில்களின் மேலாளர்கள் பங்கேற்றனர்.
இதில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி பேசியதாவது:-
திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் 71 கோவில்கள், 11 அறக்கட்டளைகள், 14 மருத்துவமனைகள், 35 கல்வி நிறுவனங்கள், 9 வேத பள்ளிகள், 4 கோசாலைகள், 300 திருமண மண்டபங்கள், 10 தொண்டு நிறுவனங்கள், 4 மொழிகளில் வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி, ஆதரவற்றோருக்கான பாலமந்திரம் மற்றும் தேவஸ்தானத்தின் கீழ் 2 அருங்காட்சியகங்கள் உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான ரூ.17 ஆயிரம் கோடி ரொக்க பணம், 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பிரமோற்சவம் போன்ற முக்கிய உற்சவங்களின்போது சுவாமிக்கு அலங்காரம் செய்ய 1200 கிலோ தங்க நகைகளும், வெள்ளி 10 ஆயிரம் கிலோ உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உள்ளூர் ஆலோசனைக் குழுத்தலைவர் சேகர்ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.






