என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை.
    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவிலான நடமாடும் 2 ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார்.

    அதில் ஒன்று திருமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான டிரைவர்கள் இரவில் தங்குமிடமாக ஒதுக்கப்பட உள்ளது.

    மற்றொன்று ராம்ப கீச்சா 3-வது விடுதி அருகே அமைக்கப்பட்டுள்ளது அதில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம்.

    திருப்பதியில் அறைகள் குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை.

    பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    கன்டெய்னர் வடிவில் நடமாடக்கூடிய தங்கும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.

    அவை இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.25 லட்சம் ஆகும்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

    மேலும் கன்டெய்னர் அறைகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திராவில் காணாமல் போன பெண்களில் 78 சதவீதம் பேர் மீட்கபட்டுள்ளனர்.
    • சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஏன் மகளிர் போலீஸ் நிலையங்களை அமைக்கவில்லை.

    திருப்பதி:

    ஜனசேனா கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஏராளமான இளம் பெண்கள் காணாமல் போனதாக குற்றம் சாட்டினார்.

    அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் இருவரும் பெண்களை மதித்து பேசியதாக சரித்திரம் இல்லை.

    ஆந்திராவில் காணாமல் போன பெண்களில் 78 சதவீதம் பேர் மீட்கபட்டுள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர் தெளிவு படுத்தி உள்ளார்.

    ஆந்திராவை தவிர வேறு எங்கும் இது நடக்கவில்லை என கூறிய பவன் கல்யாண் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற முதல் 10 மாநிலங்களை பற்றி பேச மறுப்பது ஏன்?

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஏன் மகளிர் போலீஸ் நிலையங்களை அமைக்கவில்லை. பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மகளிர் ஆணையத்தை குறி வைத்து பேசுவதை நிறுத்த வேண்டும்.

    பவன் கல்யாணுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். பெண்கள் முன்னிலையில் அவர் என்னுடன் விவாதத்திற்கு வர தயாரா?. பவன் கல்யாண் நடித்த மோசமான படங்களால் இளம்பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.
    • கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார். வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கிராமத்தில் உள்ளவர்களை திடீரென மர்ம நோய் தாக்கியது. நோய் தாக்குதலில் ஒரு சிலர் இறந்தனர். அப்போது கிராம மக்கள் ரஷ்மோ மாந்திரீகம் செய்யும் சூனியக்காரி எனவும், அவர் மாந்திரீகம் செய்ததால் தான் ஊரில் நோய் பரவியதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர்.

    இதனால் கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ரஷ்மோ குறி சொல்லும் குடிசைக்கு வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரஷ்மோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த லஷ்மணன் ராவ் மற்றும் சிந்தேரி அப்பாராவ் ஆகியோர் பெண் மந்திவாதி ரஷ்மோவை கொலை செய்து குடிசைக்கு வெளியே வீசியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.800 கோடி மதிப்பில் திருச்சானூரிலிருந்து அலிபிரி வரை பறக்கும் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
    • திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் மீது கிரேன் மூலம் 50 டன் எடை கொண்ட சிமெண்ட் தூண் பொருத்தும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பறக்கும் சாலை திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.800 கோடி மதிப்பில் திருச்சானூரிலிருந்து அலிபிரி வரை பறக்கும் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.

    அதன்படி மத்திய அரசு சார்பில் ரூ.400 கோடியும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.200 கோடியும், திருப்பதி மாநகராட்சி சார்பில் ரூ.200 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு கருடா வாராவதி என்ற பெயரில் பணிகள் தொடங்கப்பட்டன.

    பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி சீனிவாச சேது என்ற பெயரில் திட்டத்தை மாற்றினார். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் மீது கிரேன் மூலம் 50 டன் எடை கொண்ட சிமெண்ட் தூண் பொருத்தும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் பெல்ட் அறுந்து வேலை செய்துகொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது சிமெண்ட் தூண் விழுந்தது.

    இதில் உடல் நசுங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிஜித் கோஷ் (வயது 20), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த படா மண்டல் (44) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு என தனியாக விடுதி நடத்தப்படுகிறது.

    இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த விடுதியில் கர்னூல் மற்றும் காவாலி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கர்னூல், காவாலி என்ற பெயரில் தனித்தனியாக குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு கல்லூரி உணவகத்தில் சமையல் செய்யப்படுகிறது.

    இந்த உணவுகளில் காரமான ஆந்திரா மிளகாயை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென கர்னூல் பகுதி மாணவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதிக அளவு மிளகாய் உணவில் சேர்க்கப்பட்டது.

    இதற்கு காவாலி பகுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உணவில் போதுமான அளவு மட்டுமே மிளகாய் சேர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சேர்க்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர் .

    இதனால் விடுதியில் தங்கி உள்ள இரு தரப்பு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் தாக்கினர்.

    இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

    உணவில் மிளகாய் சேர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மோதிக்கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

    • போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.
    • கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    வாகனங்களில் செல்பவர்கள் தற்போது ஹெட்செட், இயர்போன் போன்றவற்றை கழுத்தில் அணிந்தபடி அதிகளவில் செல்கின்றனர்.

    மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிய படியும், கழுத்தில் போன் ஹெட் செட் மாட்டி பேசியபடி செல்லும்போது கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.

    ஆந்திராவில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

    அதன்படி இயர் போன், போன் ஹெட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை அதிகமாக விதிக்க வேண்டும்.

    இதன்மூலம் விபத்துக்களை குறைக்க முடியும் என தெரிவித்து இருந்தனர்.

    போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

    வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கார், பைக், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் கழுத்தில் போன் ஹெட்செட், இயர் போன் மாட்டி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ அல்லது கழுத்தில் போன் ஹெட்செட் மாட்டி இருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
    • தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தராபத் மல்கப் பேட்டையை சேர்ந்தவர் அனுராதா (வயது 55). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    ஐதராபாத் மலைக் பேட்டையை சேர்ந்தவர் சந்திர மவுலி. வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தையை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது நர்சு அனுராதாவுடன் அவரது தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய சந்திரமவுலியின் தந்தை நர்சு அனுராதாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இதனையடுத்து அனுராதாவை அவரது வீட்டில் கீழ் தளத்தில் தங்க வைத்தார்.

    சந்திரமவுலி குடும்பத்தினர் நர்சு அனுராதா உடன் சகஜமாக பழகினர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் சந்திரமவுலிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அனுராதாவிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.

    இந்த நிலையில் அனுராதா கொடுத்த கடனை திருப்பித் தருமாறு சந்திரமவுலிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் அனுராதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று சந்திர மவுலி அனுராதா வீட்டிற்கு சென்றார். சத்தம் கேட்காமல் இருக்க வீட்டில் உள்ள ஜன்னல், கதவுகளை மூடினார். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அனுராதாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

    பின்னர் டைல்ஸ் கட்டர் கருவி மற்றும் கத்தியை கொண்டு அனுராதாவின் உடலில் இருந்து தலையை தனியாக துண்டித்தார்.

    உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். துர்நாற்றம் வீசாமல் இருக்க ரசாயனங்களை உடல் பாகங்களில் தடவினார். அனைத்து உடல் பாகங்களையும் பிரிட்ஜில் அடைத்தார். மேலும் வெளியே துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஸ்பிரே அடித்து வந்தார்.

    துண்டிக்கப்பட்ட நர்சு தலையை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்றார். திகலகுடா, மூசி ஆற்றின் கரையில் தலையை வீசிவிட்டு வந்தார். நர்சு அனுராதா திடீரென மாயமாகி விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடல் பாகங்கள் இருந்த அறைக்கு யாரும் செல்லாதபடி பூட்டு போட்டார்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஆற்றுப்பகுதிக்குச் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் கவரில் தலை இருப்பதை கண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த தலையை மீட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 750 போலீஸ் நிலையங்களில் காணாமல் போய் கண்டுபிடிக்க படாத பெண்களின் விவரங்களை சேகரித்தனர்.

    தலை கிடந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித்திரிந்தது கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து சந்திர மவுலியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுராதா கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்திர மவுலியை கைது செய்தனர். பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த உடல் பாகங்களை மீட்டனர். அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைதான சந்திரமவுலியை ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மூடப்பட உள்ளது.
    • திருக்குள ஆராத்தி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தையொட்டி தெப்பகுளத்தில் உள்ள தண்ணீர் அகற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இதனையொட்டி இந்த ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருக்குளம் பராமரிப்பு பணிகளுக்காக முதல் 10 நாள் தண்ணீர் முழுவதும் அகற்றப்படும். அதன் பிறகு சீரமைப்பு பணிகள் நடைபெறும்.

    ஒரு மாதம் மூடுப்படுவதால் இதனால் திருக்குள ஆராத்தி ரத்து செய்யப்பட்டுள்ளது. தெப்பகுளத்தில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த ஒரு சிறந்த மறுசுழற்சி அமைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது.

    இதனால் குறிப்பிட்ட அளவு நீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 73,137 பேர் தரிசனம் செய்தனர். 27,490.பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • லட்சுமி நாராயணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹப்சிகுடாவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது உறவினரான ராமன்தாபூரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் லட்சுமி நாராயணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருப்பினும் தன்னை காதலிக்குமாறு இளம் பெண்ணிற்கு லட்சுமி நாராயணன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

    இதுகுறித்து இளம் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இளம்பெண்ணின் பெற்றோர் லட்சுமி நாராயணனை கண்டித்தனர்.

    மேலும் அவரது மனைவியிடமும் தெரிவித்தனர். இதனால் லட்சுமி நாராயணன் இளம்பெண் மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை இளம்பெண் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு காரில் வந்த லட்சுமி நாராயணன் இளம்பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என காரில் ஏற்றிக்கொண்டார். பின்னர் ஐதராபாத் நகர மையப்பகுதியான உப்பல் பகாயத் ஹச். எம்.டி.ஏ லேஅவுட்க்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இளம்பெண்ணின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. அவர் வலியால் அலறி துடித்தார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    இதனை கண்ட லட்சுமி நாராயணன் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உப்பல் பகாயத் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமி நாராயணனை கைது செய்தனர்.

    • திருப்பதியில் இருந்து மலைப்பாதை வழியில் திருமலைக்கு மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் 15 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி, திருமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேகம் மந்தமாக காணப்படுகிறது.

    ஊட்டி, கொடைக்கானல் போன்று லேசான பனிக்காற்று வீசுவதால் திருப்பதி மலையில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி மலைப்பாதையில் திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை விளக்கு போட்டபடி செல்கின்றன.

    திருப்பதியில் இருந்து மலைப்பாதை வழியில் திருமலைக்கு மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

    அவர்கள் மழை குளிரால் அவதியடைந்துள்ளனர்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளெக்சில் இரவு நேரத்தில் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களும், கோவில் நடை திறந்த பின்னர் அதிகாலை நேரத்தில் குளித்து விட்டு சாமி தரிசனத்திற்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளிரை தாங்கியபடி தரிசனத்திற்குச் சென்று திரும்புகின்றனர்.

    சிறுவயது குழந்தைகள், நடுத்தர வயது முதியோர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் குளிரை தாங்கும் கம்பளி ஆடைகளினால் தயார் செய்யப்பட்ட ஸ்வெட்டர்கள், தலைகுல்லா மற்றும் பெட்ஷீட்களை அணிந்தபடி திருப்பதி மலையில் உலா வருவதை காண முடிகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 73,796 பேர் சாமி தரிசனம் செய்தனர். 28,840 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர்.

    ரூ.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது.

    இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இன்று (25-ந் தேதி) காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
    • ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.

    திருப்பதி:

    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில், ஆந்திராவில் 108 அடி உயர ராமர் சிலையை அமைக்க அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள மந்ததிராலயத்தில் துங்கப்பத்ரா நதிக்கரையில் புகழ்பெற்ற ராகவேந்திரர் சாமி கோவில் உள்ளது. இந்த நகரில் பிரமாண்டமாக ராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம் 10 ஏக்கர் நிலத்தை ராமர் சிலை கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கியது. இதில் அழகிய பூங்கா அமைப்புடன் உலகிலேயே உயரமான 108 அடி உயர பஞ்சலோக ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

    ஜெய் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் 500 கோடி ரூபாய் செலவில் 108 அடி உயர பஞ்சலோக சிலையாக இது உருவாகிறது.

    குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் வஞ்சி சுதார் இந்த சிலையை வடிவமைக்கிறார்.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரமாண்ட ராமர் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த ராமர் சிலை பிரமாண்டமானது. இது மந்திராலயம் நகரத்தை பக்தி உணர்ச்சியுடன் மூழ்கடிக்கும், "நமது செழுமையான மற்றும் பண்பாடு நாகரீக உறுதிப்பாட்டில் மக்களைத் தளராமல் இருக்க ஊக்குவிக்கும்.

    இந்த சிலை பிராந்தியத்தில் சனாதன மதத்தை பரப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

    ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்து கலாச்சாரத்தில் 108 மிகவும் புனிதமான எண்.

    2½ ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என அமித்ஷா தெரிவித்தார்.

    விழாவில் ராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள், ராஜ்யசபா முன்னாள் உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

    ×