என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கன்டெய்னர் அறைகள் அறிமுகம்
    X

    கன்டெய்னர் அறையில் உள்ள படுக்கை வசதி.

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கன்டெய்னர் அறைகள் அறிமுகம்

    • சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை.
    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவிலான நடமாடும் 2 ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார்.

    அதில் ஒன்று திருமலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான டிரைவர்கள் இரவில் தங்குமிடமாக ஒதுக்கப்பட உள்ளது.

    மற்றொன்று ராம்ப கீச்சா 3-வது விடுதி அருகே அமைக்கப்பட்டுள்ளது அதில் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கலாம்.

    திருப்பதியில் அறைகள் குறைவாக உள்ளது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அதிக ஓய்வு இல்லங்கள் கட்ட வனத்துறை அனுமதி இல்லை.

    பல இடங்களில் உள்ள பழைய ஓய்வு இல்லங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    கன்டெய்னர் வடிவில் நடமாடக்கூடிய தங்கும் ஓய்வறையில் ஒரே நேரத்தில் 12 பேர் தங்கும் வகையில் படுக்கைகள், குளியல் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.

    அவை இரண்டும் சேர்ந்து மொத்தம் ரூ.25 லட்சம் ஆகும்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது திருப்பதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

    மேலும் கன்டெய்னர் அறைகளை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×