என் மலர்tooltip icon

    இந்தியா

    லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    • மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.
    • காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது லோகேஷ் சிறுமியிடம் எங்காவது வெளியில் சென்று வரலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து மாணவி கடந்த 20-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அவர் வகுப்புக்கு செல்லாமல் பள்ளி சுற்று சுவர் அருகே தனது புத்தகப் பையை வைத்துவிட்டு சென்றார்.

    பின்னர் விஜயவாடா மச்சிளிப்பட்டினம் நெடுஞ்சாலைக்குச் சென்று லோகேஷ்-க்கு போன் செய்தார். காரில் வந்த லோகேஷ் மாணவியை ஏற்றிக்கொண்டு உய்யூரில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்தார். பின்னர் தனது நண்பர் நரேந்திரனுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வரவழைத்தார். அப்போது வாலிபர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக சிறுமியை பலாத்காரம் செய்தனர்.

    இதனால் மாணவி மயக்கமடைந்தார். அவருக்கு தண்ணீர் தெளித்து சுயநினைவு வரவழைத்தனர். பின்னர் மாணவியை இரவு வீட்டின் அருகே இறக்கி விட்டனர்.

    காதலன் மற்றும் அவரது நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டதால் மாணவி மனமுடைந்தார். அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.

    இந்த நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே மாணவியின் புத்தகப்பை இருப்பதைக் கண்ட காவலாளி இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாணவியின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்தனர். அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவி பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

    மாணவியை லோகேஷ் காரில் ஏற்றி சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசில் புகார் செய்தனர். மறுநாள் காலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் லோகேஷ் மற்றும் நரேந்திரனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×