search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கள்ளப்படகில் வந்து இளம்பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வாலிபர்- 10 ஆண்டுக்கு பிறகு நாடு திரும்ப விருப்பம்
    X

    கள்ளப்படகில் வந்து இளம்பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வாலிபர்- 10 ஆண்டுக்கு பிறகு நாடு திரும்ப விருப்பம்

    • ஷேக் தவுலத் பீக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று முகமது இலியாஸ் என்ற மகன் உள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த குல்சர்கானுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன.

    திருப்பதி:

    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சர்கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது செல்போன் ராங் கால் மூலம் ஆந்திர மாநிலம், நந்தியாலா அடுத்த கடிவேமுலாவை சேர்ந்த ஷேக் தவுலத் பீ என்ற இளம் பெண்ணை தொடர்பு கொண்டார். இதையடுத்து இருவரும் அடிக்கடி நட்பாக பேசி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. ஷேக் தவுலத் பீக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று முகமது இலியாஸ் என்ற மகன் உள்ளார்.

    காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து குல்சர் கான் இந்த 2010-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து கள்ளப்படகு மூலம் சட்ட விரோதமாக மும்பை வழியாக இந்தியாவிற்கு வந்தார். பின்னர் குல்சர் கான் தவுலத் பீயை திருமணம் செய்து கொண்டார்.

    அந்த 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.இதன் மூலம் இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த குல்சர்கானுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. இதன் மூலம் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளை பாகிஸ்தான் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து இருந்தார். பின்னர் சவுதி அரேபியா வழியாக பாகிஸ்தான் செல்ல ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் குல்சர்கானிடம் நடத்திய விசாரணையில் அவர் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து குல்சருக்கானை கைது செய்து ஐதராபாத் சரளப்பள்ளியில் உள்ள ஜெயிலில் அடைத்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதங்களில் ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    கொரோனா தொற்று பரவல் குறைந்தது எடுத்து மீண்டும் குல்சர் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை விடுவிக்க கோரி தவுலத் பீ நீதிமன்றத்தை நாடினார்.

    இதையடுத்து கடந்த வியாழக்கிழமை குல்சர் கானை நீதிமன்றம் விடுதலை செய்தது.

    மேலும் விடுதலை செய்யப்பட்ட குல்சர் கான் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது எனவும் வரும் 27-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் போது வெளிநாடு அனுப்புவதா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×