என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், மோர் டீ காபி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
- திருப்பதியில் நேற்று 92,216 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
நேற்று காலை முதல் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் சீலா தோரணம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று திருப்பதியில் கடுமையான வெயில் கொளுத்தியதால் வரிசையில் காத்திருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், மோர் டீ காபி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நேற்று மாலை முதல் பக்தர்களின் வருகை 2 மடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 92,216 பேர் தரிசனம் செய்தனர். 43,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தக் கோழி சீனப் பாண்டம் என்று அழைக்கப்படுகிறது.
- வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் உயர்ந்தால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் இர்பான். இவர் பொம்மை போல காட்சியளிக்கும் கோழி ஒன்றை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்துள்ளார்.
இந்த கோழி பட்டுப் போன்ற இறகுகளும் உறுதியான உடலும் கொண்ட பொம்மையைப் போல தோற்றமளிக்கிறது.
இந்தக் கோழி சீனப் பாண்டம் என்று அழைக்கப்படுகிறது. தலை முதல் கால் வரை மென்மையான வெள்ளை இறகுகள் உள்ளது.
இந்த கோழியை பார்க்க பலர் தனது வீட்டிற்கு வருவதாக இர்பான் கூறினார். அவற்றின் இறைச்சியை சாப்பிடலாம். ஆனால் பலர் அவற்றை வளர்க்க விரும்புகிறார்கள்.
அதிக வெப்பத்தை தாங்க முடியாது. வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் உயர்ந்தால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என இர்பான் கூறினர்.
- ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2ல் உள்ள எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
- எந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் எஃகு ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஆலையில் எஃகு உருக்கும் அமைப்பு-2ல் உள்ள எந்திரத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென்று மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு புகை மூட்டம் ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடினார்கள்.
ஒரு எந்திரத்தில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் தீ அருகில் இருந்த கேபிள்கள், எந்திரங்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது.
- பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
- பக்தர்களின் முகங்களைப் பதிவு செய்ய ஏற்கனவே சோதனை ரீதியாக முக அங்கீகாரம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதியில் பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
இதன் மூலம் நாள் முழுவதும் தரிசனம் செய்ய வரிசையில் நுழையும் பக்தர்கள் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் வரிசையில் தரிசனத்திற்கு நிற்பவர்கள் விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
இதனால் பக்தர்கள் தரிசன நேரத்தை சரியாக அறிந்து கொள்வார்கள்.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேர் கோவிலுக்கு வருகிறார்கள் என்பது குறித்த அறிவியல் தகவல்கள் தேவஸ்தானத்திலும் இல்லை.
பக்தர்களின் முகங்களைப் பதிவு செய்ய ஏற்கனவே சோதனை ரீதியாக முக அங்கீகாரம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஏ.ஐ. தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 77,579 பேர் தரிசனம் செய்தனர். 34, 064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.74 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட டாக்டர் ராம ரெட்டி கடந்த 2023-ம் ஆண்டு வரையில் 50 பட்டங்களை பெற்றார்.
- உடலில் மூச்சு இருக்கும் வரை கல்வியை தொடர்வேன் என ராம ரெட்டி தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திர வரத்தை சேர்ந்தவர் பிரபல மனநல டாக்டர் ராம ரெட்டி (வயது 70). படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2023-ம் ஆண்டு வரையில் 50 பட்டங்களை பெற்றார்.
2024-ம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றலில் கரக்பூர், மும்பை, சென்னை, உள்ளிட்ட ஐ.ஐ.டி.களில் 11 பட்டங்களை பெற்றார். 70 வயதில் 61 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். உடலில் மூச்சு இருக்கும் வரை கல்வியை தொடர்வேன் என ராம ரெட்டி தெரிவித்தார்.
- மகளிர் மன்ற அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடினர்.
- சிறுவர், சிறுமிகளின் உடல்களைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் கன்டோன்மென்ட் துவாரபுடியில் உள்ள மகளிர் மன்ற அலுவலகத்தில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதே பகுதியை சேர்ந்த உதய் (வயது 8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய சிறுவர்கள் 4 பேரும் தெருவில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது மகளிர் மன்ற அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த காரில் ஏறி விளையாடினர்.
கார் கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டனர். காருக்குள் காற்று போகாததால் 4 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைகள் கார் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை.
சிறுவர், சிறுமிகள் காருக்குள் இருந்து கதறி அழுதனர். கார் கதவு மூடப்பட்டு இருந்ததால் அவர்களின் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.
சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேரும் காருக்குள்ளேயே இறந்து விட்டனர்.
விளையாடச் சென்ற சிறுவர், சிறுமிகள் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் அவர்களது பெற்றோர்கள் தேடிச் சென்றனர். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மகளிர் மன்ற அலுவலகத்தில் இருந்த ஊழியர் காரை பார்த்தபோது அதில் 4 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அருகில் உள்ளவர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் கார் கதவை திறந்து காரில் இருந்து மீட்டனர்.
சிறுவர்களை பரிசோதித்து பார்த்த போது மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.
சிறுவர், சிறுமிகளின் உடல்களைப் பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இறந்தவர்களில் சாருமதி, சரிஷ்மா இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், பீலேரு அடுத்த பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது..
அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு அதில் இருந்த 3 பேரின் உடல்களை பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
- 3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட 101-வது ராக்கெட்டிலிருந்து 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது. முதல் 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்த நிலையில் 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்,
இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
2-வது அடுக்கு பிரியும் வரை பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும். பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வுக்கு பிறகு விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
- பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இரு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தது. 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
- பூமி கண்காணிப்புக்காக இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
- இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு மட்டுமே ஆகும் என இஸ்ரோ தெரிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது.
பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்றும், ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது இஸ்ரோவின் 101-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
- மக்களுக்கு நன்மை பயக்க வலுவான தலைமை தேவை.
- திராவிட நிலம் பல தனித்துவமான அம்சங்களின் தொகுப்பாகும்.
திருப்பதி:
எம்.ஜி.ஆரின் பேரன் சத்திய ராஜேந்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய குழுவினர் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணை சந்தித்தனர்.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக நிலைமை அந்த மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிகள், கலாசாரம், மதத்தை பாதுகாத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இந்த நிகழ்வில் பவன் கல்யாண் பேசியதாவது;-
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் என் பார்வையில் உள்ளன. அவற்றை தீர்ப்பதில் ஜனசேனா தனது பங்களிப்பை வழங்கும். மக்களுக்கு நன்மை பயக்க வலுவான தலைமை தேவை. அப்போதுதான் மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் நமது திறன்களை அங்கீகரித்துள்ளது. அதற்குக் காரணம் நாட்டின் வலுவான தலைமை. சமூகத்தில் ஒற்றுமை இருக்கும்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சட்டம் ஒழுங்கு பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தனர்.
பொதுப்பிரச்சினைகளை தீர்ப்பதில் அந்த உணர்வு தொடர வேண்டும். திராவிட நிலம் பல தனித்துவமான அம்சங்களின் தொகுப்பாகும். எந்த மாநிலத்திலும் நிலையான தலைமையை நீங்கள் விரும்பினால், தேர்தல்களில் வாக்குகள் சிதறுவதை தடுப்பது முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்கால அரசியலில் ஒரு வலுவான கூட்டணி தேவை .
இவ்வாறு அவர் கூறினார்.






