என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Rama Reddy"

    • படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட டாக்டர் ராம ரெட்டி கடந்த 2023-ம் ஆண்டு வரையில் 50 பட்டங்களை பெற்றார்.
    • உடலில் மூச்சு இருக்கும் வரை கல்வியை தொடர்வேன் என ராம ரெட்டி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராஜ மகேந்திர வரத்தை சேர்ந்தவர் பிரபல மனநல டாக்டர் ராம ரெட்டி (வயது 70). படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2023-ம் ஆண்டு வரையில் 50 பட்டங்களை பெற்றார்.

    2024-ம் ஆண்டு தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றலில் கரக்பூர், மும்பை, சென்னை, உள்ளிட்ட ஐ.ஐ.டி.களில் 11 பட்டங்களை பெற்றார். 70 வயதில் 61 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். உடலில் மூச்சு இருக்கும் வரை கல்வியை தொடர்வேன் என ராம ரெட்டி தெரிவித்தார்.

    ×