என் மலர்
இந்தியா

PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி: தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம் - இஸ்ரோ தலைவர்
- இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
- 3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட 101-வது ராக்கெட்டிலிருந்து 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது. முதல் 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்த நிலையில் 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்,
இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
2-வது அடுக்கு பிரியும் வரை பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும். பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வுக்கு பிறகு விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






