என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்கள் தங்களது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
    பொதுவாக ஒரு தகவல் என்றால் தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கமான ஒன்றாக இருக்கும்.

    ஆனால் பெண்கள் இந்த விசயத்தில் அப்படியே வேறுபடுகின்றனர். இது பற்றி ஆய்வு முடிவு வெளியிட்டுள்ள முடிவில், மற்ற பெண்களுடன் இருக்கும்போதுதான் தங்கள் அந்தரங்க விசயங்களை பெண்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

    தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும்போது அவர்களிடம் பல விசயங்களை பகிர்ந்து கொள்வதுடன் அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.



    இவ்வகையை சேர்ந்த பெண்கள் 35 சதவீதத்தினர் உள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்களே தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும்போது அந்தரங்கம் தொடர்பான பேச்சை தொடங்குகின்றனர்.

    இதில் பெரும்பாலும் திருமணம் பற்றிய பேச்சு தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் ஒன்றாக சேர்ந்து விட்டால் அவர்கள் பல விசயங்களையும் அலச ஆரம்பித்து விடுவார்கள்.

    அந்த வரிசையின்படி பார்த்தால் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதான். அவர்களில் 64 சதவீதத்தினர் தங்களது கணவர்களை குறித்து பேசுவதாக தெரிவித்துள்ளனர்.



    மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் உறவுமுறைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களில் தோழிகளுடன் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை மேற்கொள்வர்.

    தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக பெண்கள் குறைந்தது 50 நிமிடங்களாவது எடுத்துக்கொள்கின்றனர். அதில் 10 சதவீதத்தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

    பெண்கள் இரவு பொழுதை தங்களின் நெருங்கிய நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். மிக சிறப்புடன் பொழுதை கழிப்பதற்கு தேவையான அனைத்து விசயங்களிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
    பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம்.
    பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

    இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.

    கர்ப்பப்பை எடுக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

    வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வருகிறது. குறிப்பாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தான் அதிகமாக வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவது போல் இருக்கும். மேலும் சிலருக்கு தயிர் போல கட்டியாகவும், முட்டையின் வெண்கரு போன்று வழுவழுப்பாகவும் வருவதுண்டு. வியாதியின் குணம் நாட்பட நாள்பட நிறமும் மாறுபடும். இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு வகையான நோய்.



    இந்த நோய் வருவதற்கான காரணங்கள் .......

    * தவறான உணவுப் பழக்கங்கள்.

    * கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.

    * சுகாதாரமற்ற உள்ளாடைகள்.

    * சுய இன்பம் காணுதல்.

    * மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.

    * ஊளை சதை உள்ளவர்கள் ரத்த சோகை உள்ளவர்கள்.

    * உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் ஏற்படும் பெண்கள்.

    * கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் உள்ளவர்கள்.

    * சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம்.

    * ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

    * தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.

    * சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

    * அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது.

    * மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.

    * எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.



    நோயைத் தவிர்க்க :

    * உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    * பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    * உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

    * சத்தான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    உணவு முறைகள்:

    * உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

    * எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

    * மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

    * இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

    இந்த நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    * தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

    * பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

    * சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.



    * வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

    * அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

    * இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

    * ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

    * நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

    * புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது!

    * மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

    * கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.

    * புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.

    * வேப்பமரப் பட்டை, பூ, வேர், காய், பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்!

    * பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!

    * உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.
    நோயின் வேகம் அதிகமாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
    தம்பதியர் முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத்தகுதிகளோடு இருக்கின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.

    இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க, 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை. முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு.



    30 வயதில், குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். இயல்பாகவே, 40 முதல் 45 வயதிற்குள், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும், வலிமை குறைவாக தான் இருக்கும். அதேநேரம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைந்து விடும். அதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு என்பது மிகவும் சிரமம்.

    45 வயதிற்கு மேல், மிக சில பெண்களுக்கு மட்டுமே, குழந்தைப்பேறு வாய்க்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இதனால், குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது.

    அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மன அழுத்தம், உடல் நலம் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
    கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும்.

    தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்சனைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

    கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

    வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.



    எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
    உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

    நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம். இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

    அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

    அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.



    வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம். பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.

    பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்சனை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.

    இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம். கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும். எனவே அதிக உயரம் இல்லாத செருப்பை அணிவது நல்லது.
    பெரும்பாலான பெண்களை தலை வலி பிரச்சினை ஆட்கொள்ளும். சரியான வேளைக்கு சாப்பிடாததாலும் ஒவ்வாமை பிரச்சினையினாலும் தலைவலி தோன்றக்கூடும்.
    40 வயதை கடந்த பெண்கள் உடல் எடை விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை மெல்ல தலை தூக்கும். அதுவே பின்னாளில் பலவிதமான வியாதிகள் தோன்றுவதற்கு வழிவகை செய்துவிடும்.

    உடல் பருமன் பிரச்சினைக்கு கொழுப்பின் அளவுதான் முதன்மை காரணமாக அமைகிறது. மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து புரதச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள், பயறு வகைகள், முழுதானியங்களை உட்கொண்டு வருவதும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

    நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு எடை அதிகரிப்புதான் மூல காரணமாக அமையும். ஆதலால் கொழுப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்து வர வேண்டும். அதற்கு தக்கபடி சீரான உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருவது அவசியம். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் அன்றாட வாழ்க்கை முறையாக்கிக் கொள்ள வேண்டும்.



    40 வயதை கடந்த பெண்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். 40 வயதை கடக்கும் பெண்கள் கண் நோய் பாதிப்புக்கும் ஆளாக நேரிடும். வெள்ளெழுத்து, கண் அழுத்த நோய் போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும். ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்து வருவது நல்லது.

    பெரும்பாலான பெண்களை தலை வலி பிரச்சினை ஆட்கொள்ளும். பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்குபவை. சரியான வேளைக்கு சாப்பிடாததாலும் ஒவ்வாமை பிரச்சினையினாலும் தலைவலி தோன்றக்கூடும். இவை தற்காலிகமானவை. அதேவேளையில் தொடர்ச்சியாக தலைவலி ஏற்பட்டாலோ, அடிக்கடி தலைவலி வந்து கொண்டிருந்தாலோ, மருத்துவரிடம் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.

    அதிலும் எதிர்பாராத வேளையில் திடீரென்று அதிக வலியுடன் தலை பாரமானாலோ, அந்த சமயத்தில் பார்வையில் மாற்றம் ஏற்பட்டாலோ உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தைராய்டு பிரச்சினையும் பெண்களின் உடல்நிலையை பாதிக்கும். அதிக சோர்வு, மறதி, உடல் எடை அதிகரிப்பு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, தூக்கமின்மை, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பல பாதிப்புகளை தைராய்டு ஏற்படுத்தும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மீள்வது எளிது.
    சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது. வழக்கமாக வரும் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, இன்னும் இரண்டு முக்கியமான காய்ச்சல்களும் இருக்கின்றன. கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அந்த இரண்டு காய்ச்சல்கள் பற்றியும் பார்த்துவிடலாம்...

    சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும், இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது.

    பன்றிக்காய்ச்சல்

    இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம். குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம்.

    இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.



    வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine - TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.

    டெங்கு(Dengue)


    டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம்.

    குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.

    எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
    கணவரின் சில செயல்கள் பெண்களை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் தன்னுடைய துணையின் விருப்பம் கருதி, அவற்றை அன்பாக எடுத்துக் கொள்ளவே செய்கிறார்கள்.
    எவ்வளவு தான் வெளிப்படையாக, மனதுக்குத் தோன்றியதை செய்யும் பெண்ணாக இருந்தாலும், அந்த விஷயங்களில் எல்லா பெண்களுக்குமே கூச்சம் இருக்கத்தான் செய்கிறது. அது தான் ஆண்களை கிறங்கடிக்கிற பெண்மையின் அழகும் கூட. உடலுறவின் போது ஆண்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சில பொதுவான விஷயங்களைப் பெண்கள் அசௌகரியமாக உணர்கிறார்கள்.

    என்ன மாதிரியான விஷயங்களை படுக்கையில் செய்யாமல் இருந்தால் பெண்கள் சந்தோஷமடைவார்கள்?

    ஆண்கள் நண்பர்களுடனும் தனியாகவும் ஆன்லைன் மூலமாகவே பல விஷயங்களைப் பார்த்து கிளர்ச்சி அடைந்திருப்பார்கள். அதனால் தான் உறவு கொள்ளும்போது அதிக எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஆனால் பெண்கள் அவ்வாறில்லை.

    ஆண்கள் தான் பார்த்து ரசித்து கிளர்ச்சியடைந்த சில விஷயங்களை, செய்து, இன்பமாக இருக்க வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் பெண்களுக்கு ஆண்கள் விரும்பும் சில வித்தியாசமான பொசிசன்கள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.



    நம் நாட்டில் டாய்ஸ் வைத்து  விளையாடும் பழக்கமெல்லாம் மேலை நாடுகளைப் போல் இல்லையென்றாலும் சில ஆண்கள் டாய்ஸ் போன்று ஏதாவது காய்கறிகளைப் பயன்படுத்தும் போது பெண்கள் அசௌகரியமாக நினைக்கிறார்கள்.

    உடலுறவில் முழுமையாக ஆண்கள் ஈடுபடும் போது, வீணாகும் ஆற்றலால் வியர்வை அதிகமாக உண்டாகிறது. ஆனாலும் அதைப்பற்றி ஆண்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் பெண்களுக்கு அது சங்கடமான நேரமாக உணர வைக்கிறது.

    பெண்களைத் தொடர்ந்து சில நிமிடங்கள் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலே வெட்கம் அவர்களைப் பிடுங்கித் தின்னும். அதனாலேயே ஆண்கள் தங்களை ஆடையின்றி வெளிச்சத்தில் பார்க்க நினைப்பதை, பெண்கள் வெட்கத்தோடு தவிர்க்கிறார்கள்.

    இதுபோன்ற சில செயல்கள் பெண்களை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் தன்னுடைய துணையின் விருப்பம் கருதி, அவற்றை அன்பாக எடுத்துக் கொள்ளவே செய்கிறார்கள்.  

    மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும்.
    மதுவின் பிடி மனித வாழ்க்கை கலாசாரத்தோடு இணைந்து விட்டது என்பது கொடிய உண்மை. மது அருந்தும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது வேதனையின் உச்சம். சில பெண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை காட்டிக்கொள்ள குடிக்கிறார்கள்.

    மது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும். பெண்கள் மது போதையில் வீழ்ந்துவிட்டால் போதை தெளிய காலதாமதமாகும். ஆண்கள் உடலில் இருக்கும் தண்ணீரை விட பெண்கள் உடலில் தண்ணீரின் அளவு குறைவு. இதனால் போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். பெண்களுக்கு உடல்ரீதியாக போதையை தாங்கும் சக்தி மிக குறைவு.

    பெரும்பாலான பெண்கள் தனியாக குடிக்க முன்வருவதில்லை. வீட்டில் உள்ள ஆண்களே இதற்கு பழக்கி விடுகிறார்கள் அல்லது வேறுவழியில் பழகிக்கொள்கிறார்கள். பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உடனிருக்கும் ஆண்கள் குடிக்க கற்றுக்கொடுத்து விட்டு, அதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தனிமை, காதல் தோல்வி, கணவன் மீதான வெறுப்பு, குடும்பப் பிரச்சினை என்று ஏதேனும் விஷயத்தின் ஆறுதலுக்காக குடிக்க ஆரம்பித்து பிறகு அடிமையாகிவிடுகிறார்கள்.



    குடிக்கு அடிமையாகிக்கிடக்கும் ஆண் சமூகத்தை திருத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. மேலும் குடியால் நேரடியான உடல்நல பாதிப்புகள் வெகு சீக்கிரத்தில் ஏற்படுவதும் பெண்களுக்கே!.

    உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.

    அந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

    போதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது. உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது. மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.



    குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.

    பள்ளி, கல்லூரி மாணவியர்களிடம் மதுபழக்கம் துளிர்விட ஆரம்பித்திருப்பது உடனே கிள்ளியெறியப்பட வேண்டியது. குடி பெண்களின் எதிர்காலத்தை மொத்தமாக கருவறுக்கும் செயலின் தொடக்கம். படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியலை நீட்டுகிறார்கள் மருத்துவர்கள்.

    அதிகமாக குடிக்க பழகிவிட்டால் திடீரென்று நிறுத்தவும் முடியாது. அவ்வாறு முயற்சித்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் இக்கட்டான சூழல் உருவாகும். இன்று அதிகமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் குடிக்கு அடிமையான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
    உங்களுக்கு உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் தோன்றினால் உங்களுக்கு ஹார்மோன் பிரச்சினை இருக்க வாய்ப்புண்டு.
    * பெண்களே உங்கள் மாதவிடாய் நேரத்திற்கு முன்பாக, மாதவிடாய் நிற்கும் காலத்தில், கர்ப்ப காலத்தில் உடல் உப்பியது போலவும் எரிச்சலாகவும், உங்களின் முழு சக்தியோடு நீங்கள் செயல்பட முடியாதது போலவும் தோன்றுகின்றதா? உங்களுக்கு ஏதேனும் ஹார்மோன் பிரச்சினை இருக்க வாய்ப்புகள் உண்டு.

    * முறையான பருவ காலத்தில் 21&35 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்படும்.

    இதுமாதம் தோறும் முறையாக நிகழாவிட்டால் ஹார்மோன் பிரச்சினை இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளவும். மாதவிடாய் நிற்க முன்வரும் காலத்தில் மாதவிடாய் முறையற்று இருக்கக் கூடும் என்பது இயற்கையே.

    * தூக்கம் சரிவர இல்லையெனில் ஹார்மோன் பிரச்சினை இருக்கக் கூடும். அது போலவே இரவில் அதிக வியர்வை, படபடப்பு போன்றவை குறைந்த ஹைட்ரஜன் ஹார்மோன் அளவினால் இருக்கலாம்.



    * மாத விடாய்க்கு முன்னால் ஓரிரு பளு இயற்கையே. ஆனால் தீரா தொடர் அடர்ந்த பளு பாதிப்பு எனில் ஹார்மோன் பிரச்சினை உள்ளதா என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

    * பெண் ஹார்மோன்கள் மாறுபாட்டினால் உணவு செரிமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

    * ஹார்மோன் பாதிப்பு தொடர் சோர்வு, தூக்கம் இவற்றினைத் தரலாம்.

    * மனச்சோர்வு தேவையற்று இருக்கின்றதா? ஹார்மோன் பிரச்சினையும் காரணமாக இருக்கலாம்.

    * பிறப்புறுப்பில் வறட்சி, தலைவலி, எடை கூடுதல் இவையெல்லாம் ஹார்மோனின் காரணத்தினால் ஏற்படலாம். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும்.
    குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
    எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம் என்கிறோம். ஆனால், வாழ்வின் பெரும் நிகழ்வு, குழந்தை பெற்றுக்கொள்வது. அதைப் பற்றிய எந்த ஒரு திட்டமிடலும் பெரும்பாலும் தம்பதிகளுக்கு இருப்பதில்லை. குழந்தைப் பிறப்பை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

    1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

    2. ”பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.

    3. பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை  பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.

    4. தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.

    5. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.



    6. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தரிப்பதற்கு முன்னர் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போட வேண்டும்.   

    7. ஆண், பெண் இருவரும் ‘உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ’ என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை  சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.

    8. குழந்தை பிறந்த பின் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார செலவினங்களை யோசித்து திட்டமிட வேண்டும்.

    9. உடலளவில் ஆண், பெண் இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

    10. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.

    திட்டமிட்டு குழந்தை  பெற்றுக்கொள்ளும் போது தாய்மைக்காலம் மட்டுமின்றி வாழ்வு முழுவதும் இனிக்கும். குழந்தை வளர்ப்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு புது உயிரை தங்கள் வீட்டுக்கு வரவேற்கும் உற்சாகத்துடனும், பொறுப்புடனும் தம்பதிகள் தயாராகுங்கள்!
    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. இதனை போக்கும் வழிமுறையை பார்க்கலாம்.
    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. வலியைப் போக்கும் வழியும், அந்த நேரங்களில் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

    28 நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும். இதற்கு, வலி நிவாரணி மாத்திரைகளைதான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. சரியான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே வலி குறைந்த மாதவிலக்கை எதிர்கொள்ளலாம்.



    மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த பருப்பு வகைகள், கால்சியம் சத்துள்ள கேழ்வரகு, மீன், முட்டை, கீரை, புரோகோலி, வைட்டமின் சி சத்துள்ள காய்கறி மற்றும் பழங்கள், சோர்வைப் போக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், உடல்சூட்டைக் குறைக்க இளநீர், நீர்மோர், வெந்தயம், வெள்ளரி, தேவையான தண்ணீர், வெண்ணெய், மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம். மேலும், இந்த நாட்களில் எடை குறையும் என்பதால், அதை ஈடுகட்ட புரதம் நிறைந்த பருப்பு வகைகளும், சர்க்கரைக்குப் பதிலாகத் தேனையும் சாப்பிடலாம்.

    மாதந்தோறும் வலி அதிகரித்துக்கொண்டே சென்றால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் பிரச்னையாகவும் இருக்கலாம். தொடர்ந்து, வலி குறையாத மாதவிலக்கை எதிர்கொண்டால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
    பெண்களுக்கு அழகையும், தன்னம்பிக்கையையும் குதிகால் செருப்புகள் வழங்கினாலும் கூடவே நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளையும் உருவாக்குகின்றன.
    பெண்களிடம், ‘நீங்கள் குதிகால் செருப்புகளை அணிய என்ன காரணம்?’ என்று கேட்டால், “அவை எங்களுக்கு கம்பீரமான தோற்றத்தை தருவதோடு, நளினமான நடையையும் தருகிறது. தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது!” என்கிறார்கள். இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல் அழகையும், தன்னம்பிக்கையையும் குதிகால் செருப்புகள் வழங்கினாலும் கூடவே நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளையும் உருவாக்குகின்றன.

    குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுகிறார்கள். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். இந்த வலி அவர்களது அன்றாட செயல்பாடுகளை முடக்கிப்போட்டுவிடும்.

    ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.



    குதிகால் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

    கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள். பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

    அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

    குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பான தாக இருக்கும். குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

    குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும். அதிகநேரம் குதிகால் செருப் பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.



    குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். கைகளை முன்னும் பின்னும் நீட்டி அசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும். குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

    மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும். மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற் பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும். குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

    அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும். கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.
    ×