என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண் பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு வரும் பல்வேறு சந்தேகங்களுக்கு தாய்மார்கள் விளக்கமளிக்க வேண்டும்.
    பெண் பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும். அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும்.

    எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.

    மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.

    பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவு ரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும்.



    மனநிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்பு போன்றவை இருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செல்லித் தரவேண்டும்.

    அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.

    அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும், அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது, விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.

    எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி நாப்கினைக் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.

    மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கமான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.
    ஆண்களுக்கும், பெண்களுக்கும் தாம்பத்தியத்தில் வெவ்வேறு விதமான விருப்பு, வெறுப்புகள் இருக்கும். இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று, கனவே கண்டுவிடுவார்கள். சில ஆண்களுக்கு ஒல்லியான பெண்ணைப் பிடிக்கும்.

    சில ஆண்களுக்கு ஓரளவான பெண்ணைப் பிடிக்கும், மேலும் சில ஆண்களுக்கு குண்டு பெண்களைப் பிடிக்கும்.

    இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், உடலுறவில் அதிக நாட்டம் இல்லாத ஆண்களுக்குத் தான் குண்டான பெண்களைப் பிடிக்கும் என்கிறார்கள்.

    காரணம் குண்டான பெண்களுடன் உடலுறவு மேற்கொள்வது மிகவும் சுலபம். சில ஆண்கள் ஓரளவு பருமன் உள்ள பெண்களை விருப்புகிறார்கள். இவர்கள் நடுத்தர ஆண்கள் ஆவர்.



    மேலும் சில ஆண்கள் மிகவும் ஒல்லியான பெண்களையே விருப்புவது வழக்கம். இவர்கள் பெரும்பாலும் கில்லாடிகள்.

    எனவே பெண்கள் ஆனாலும் சரி ஆண்கள் ஆனாலும் சரி, தமதுவாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது, அழகைப் பார்த்து, வெள்ளை நிறத்தைப் பார்த்து தேர்ந்தெடுப்பதை விடுத்து, தமக்குபிடித்த உடல்வாகோடு உள்ள ஆண்களை தேர்வு செய்வது நல்லது.

    பெண்கள் என்ன தான் காதல் வேறு, காமம் வேறு என்று கதைஅளந்தாலும், ஒரு பெண்ணுக்கு கட்டில் சுகம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால், அவள் எப்பொழுதும் தன் கணவனோடு எரிந்துவிழுந்து தான் வாழ்க்கையை நடத்துவாள்.

    அதுவே 90% சதவீதமான பெண்களில் காணப்படுகிறது. இதில் 5% சதவீதமான பெண்கள், வேறு துணையை நாடுகிறார்கள். மேலும் சில பெண்கள், இதற்காக கள்ளக்காதலை நாடுகிறார்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    ’பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே பிரதான காரணமாக இருக்கக்கூடும். அமிலம், காரம் நிறைந்த உணவுகள், வறுத்த, பொரித்த உணவுகள், செரிமானத்துக்கு சிரமமானவை, கோலா பானங்கள், செயற்கை பழரச பானங்கள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.



    மேலும், சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. அரைமணி நேரம் கழித்து 45 டிகிரி சாய்மானத்தில் இருந்துவிட்டு உறங்கச் செல்லலாம். உறங்கும்போது இடதுபக்கம் சாய்ந்து உறங்குவது உணவுக்குழாயில் உள்ள உணவும் அமிலங்களும் உதரவிதானம் கடந்து வருவதைத் தடுக்கும். மேலும் இப்படி உறங்குவது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நல்லது.

    உறங்கும்போது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையும், வயிற்றின் அடிப்புறம் ஒரு தலையணையும் வைத்துக்கொள்ளலாம். பிரசவ காலத்துக்கு என சிறப்பான தலையணைகள், படுக்கைகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால் நீங்களாக சுயவைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.’
    சில பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
    ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலினத்தவர்களின் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் ஆண்களில் மட்டும் தான் சுரக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

    ஆனால் உண்மை என்னவென்றால் பெண்களின் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவிலும், ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது.

    சில பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரந்தால், அவர்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

    பெண் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால் ஏற்படும் மாற்றங்கள் :

    பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால், அவர்களின் முகம், கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்கள் இது போன்ற உடல் உறுப்புகளில் முடி வளர்ச்சிகள் அதிகமாகும்.



    ஒரு பெண்ணின் முகத்தில், முகப்பருக்கள் அடிக்கடி அதிக தொல்லைகள் ஏற்பட்டால், அது அப்பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

    நமது உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் இருந்தால், திடீரென்று உடல் பருமனடைந்து, சர்க்கரை அல்லது உப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கச் செய்யும்.

    நமக்கு மாதந்தோறும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், அது அப்பெண்ணிற்கு பி.சி.ஓ.எஸ் என்னும் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

    தலைமுடியின் அடர்த்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே அதிக முடி உதிர்வுகள் இருந்தால், அது அவர்களின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிககரித்துள்ளது என்று அர்த்தமாகும்.

    ஒரு பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் இருந்தால், அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் புதிய சதை வளர்ச்சியின் மூலம் ஏற்படும் கட்டியினால் பெண்குறியின் அளவு பெரிதாக இருக்கும்.
    முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான பரிசோதனைகளையும், சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.
    முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது.

    முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது, முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது, கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது இவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.

    முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு, சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும் வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம்,  முதுகு தண்டு வளைவு இவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

    பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கு சில தனிப்பட்ட பரிசோதனைகளும் அதற்கேற்ற சிகிச்சை முறையும் தேவை.

    * பெண்களின் பிறப்பு உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக முதுகு வலி ஏற்படலாம்.

    * மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்பு காரணமாக கீழ் முதுகு வலி ஏற்படலாம்.

    * நாற்காலியில் சரிந்து விழாமல் முதுகு தண்டுவடம் நேராய் இருக்கும்படி நிமிர்ந்து உட்காருங்கள். ஆனால் வெகு நேரம் இப்படி உட்காருவதும் முதுகு வலியினை ஏற்படுத்தும். ஆகவே அவ்வப்போது எழுந்து சிறிது நடங்கள்.

    * அதிக தொப்பை உடையோர் முதுகு வலி பற்றி கூறுவர். ஆக அதிக தொப்பையை கண்டிப்பாய் குறைக்க வேண்டும்.

    * அக்கு பஞ்சர் சிகிச்சை வலி நிவாரணத்தில் நல்ல பலன் அளிப்பதாகக் கூறப்படுகின்றது.

    * அதிக நோய் மற்றும் தொடர்ந்து இருக்கும் இருமல் இவற்றால் ஏற்படும் கீழ் முதுகு வலி சிகிச்சை பெற்ற பின் நீங்கி விடும்.



    * எலும்பினை பலவீனம் படுத்தும் சிலவகை மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    எப்போதும் சிலர் உடல் தசை வலி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனை பாதிப்பவர் கூறும் அறிகுறிகளில் இருந்து மருத்துவர் முடிவு செய்வார். கழுத்து பிடிப்பு என்பர். ஆனால் எக்ஸ்ரேவில் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தசை வலி எந்த உறுப்பையும், எந்த மூட்டினையும் பாதிக்காது. ஆனால் விடாத வலியும் சோர்வும் இருக்கும்.

    * வலி, சோர்வு, தூக்கமின்மை, மனச்சோர்வு இவையெல்லாம் இதன் அறிகுறி ஆகும்.

    * சில குறிப்பிட்ட இடங்களை அழுத்தும் போது வலி இருக்கும். 25-60 வயது உடையோர் அதிகமாக இதனைக் கூறுவர்.

    * பரம்பரையும் காரணமாகலாம்.

    * ஹார்மோன்களும், சில ரசாயன மாற்றங்களும் இதற்கு காரணம் ஆகின்றன. அதிக குளிர், குறைந்த (அ) அதிக உடல் உழைப்பு மனச்சோர்வு, குறைந்த தூக்கம் இதற்கு காரணம் ஆகின்றன. இதற்கான தீர்வு.

    * சாதாரண வலி மாத்திரைகளை மருத்துவர் அளிப்பார்.

    * முறையான உடற் பயிற்சி அவசியம் அதிக உடற் பயிற்சி கூடாது.

    எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
    முறையான ‘மசாஜ்’ நன்மை பயக்கும்.
    ‘அக்கு பஞ்சர்’ முறை உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையாய் பயின்ற வரிடம் செல்லவும்.
    தீயானம் செய்யுங்கள். மன உளைச்சல் இன்றி இருங்கள்.
    கண்டிப்பாக மேற்கூறிய முறைகள் உங்களுக்கு சிறந்த முன்னேற்றம் அளிக்கும்.
    கணவன் - மனைவி இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்க்காமல் செய்ய வேண்டும்.
    கணவன், மனைவி உறவின் முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபட மட்டுமல்ல, மனம் விட்டு பேசவும், ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொள்ளவும், ஊக்கமளிக்கவும் கூட சிறந்த இடம் படுக்கையறை. படுக்கையறையை தம்பதிகளின் இல்லற பந்தத்தின் கரு என்றும் கூறலாம்.

    உங்கள் இருவருக்குமான நெருக்கமான படுக்கையறையில் சில விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். சில விஷயங்களை தவிர்க்காமல் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உறங்க வேண்டியது மிகவும் அவசியம். இது, உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கத்தையும், இல்லற பந்தத்தின் இணைப்பையும் அதிகரிக்கும்.



    எலக்ட்ரானிக் பொருட்களை உங்கள் படுக்கை அறைக்குள் எடுத்து செல்ல வேண்டாம். இது உங்கள் ஆழ்ந்த தூக்கத்தை மட்டுமின்றி இல்லறத்தையும் கெடுக்கும் தன்மை கொண்டதாகும். முக்கியமாக இது மூன்றாம் நிலை ஆழ்ந்த உறக்கத்தை சீர்கெடுக்கிறது. இதனால், உங்களுக்கு உடல் அசதி ஏற்படும்.

    படுக்கை அறைக்கு சென்றதும் கொஞ்ச நேரம் இருவரும் படுக்கையில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டே கூட பேசுங்கள். இது கணவன் மனைவி மத்தியிலான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். தயவு செய்து இந்நேரத்தில் சண்டை சச்சரவு பற்றி பேசிவிட வேண்டாம்.



    ஆண், பெண் இருவரும் படுக்கை அறையில் எதிர்பார்க்கும் விஷயம் கொஞ்சுதல். ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு கணவன், மனைவி படுக்கை அறையில் மட்டுமே கொஞ்சிக்கொள்ள முடியும். எனவே, ஆசை தீர உங்கள் மனைவியை / கணவனை அவ்வப்போது கொஞ்சுங்கள். மேலும், நீங்களும் கொஞ்சும்படியாக நடந்துக் கொள்ள வேண்டும்.

    தினமும் இரவு உறங்கும் முன்னர் முத்தம் கொடுத்து குட் நைட் கூறி உறங்க செல்லுங்கள். கண்டிப்பாக அடுத்த நாள் காலை எந்த சண்டையும் வராது. நாளும் நிம்மதியாக செல்லும். தீண்டாமை ஒரு பாவ செயல். படுக்கையறையில் இது கொடுமை என்றே கூறலாம்.

    ஆம், உங்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறக்க வேண்டும் எனில், தீண்டுதலும், கொஞ்சி விளையாடுதலும் இருக்க தான் வேண்டும். இதை நிறுத்தினாலும் கூட இல்லற மகிழ்ச்சியின் ஓர் பகுதியில் இழப்பு ஏற்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
    கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர்.
    லண்டன்:

    பெண்களை கர்ப்பபை புற்று நோய் அதிக அளவில் தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    அந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு ஓஎன்எக்ஸ்-0801 என பெயரிடப்பட்டுள்ளன.

    இந்த மருந்தில் உள்ள ‘போலிக்‘ அமிலம் புற்று நோய் பாதித்த செல்களக்குள் ஊடுருவுகிறது. இதன் மூலம் புற்று நோய் கட்டிகளின் அளவை படிப்படியாக சுருக்கி சிறியதாக்குகின்றன.

    மேலும் இந்த மருந்தினால் நல்ல நிலையில் உள்ள செல்கள் அழியாது. புற்று நோய் பாதித்த செல்கள் மட்டுமே அழிகின்றன. இந்த மருந்தை இங்கிலாந்தில் உள்ள புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருந்து தயாரிப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    இந்த மருந்தை கர்ப்பபை புற்று நோய் பாதித்த 15 பெண்களுக்கு பயன்படுத்தினர். அவர்களில் 7 பேருக்கு புற்று நோய் கட்டி சுருங்கி சிறியதானது. இதன் மூலம் இம்மருந்து மூலம் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    மாதவிலக்கு நாட்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். இந்த நாட்களில் பெண்கள் சில குறிப்பட்ட வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது.
    மாதவிலக்கு என்பது பெண்களுக்கு உடல் ரீதியாக உண்டாகக்கூடிய இயற்கை சுழற்சி முறை. அந்த சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள்.

    சிலருக்கு இடுப்பு வலி உண்டாகும். சில பெண்களுக்கு தீராத வயிற்றுவலி உண்டாகும். அந்த சமயங்களில் உடலுக்கு ஆற்றல் அதிகம் தேவை. ஆனால் பலரும் மாதவிலக்கு நாட்களில் சரியாக சாப்பிடுவதில்லை. சிலர் என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் எதையாவது சாப்பிட்டு வலியை இன்னும் கொஞ்சம் கூடுதலாக்கிக் கொள்கிறார்கள்.

    சில உணவுகளைத் தவிர்த்தாலே மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.



    பெருநகரங்களில் வாழ்கிற பல பெண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் இந்த மாதவிலக்கு நாள்களில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும். அது மாதவிலக்கு சமயத்தில் அவர்களுக்கு பெரும் அசெளகர்யத்தை ஏற்படுத்திவிடும்.

    பேக்கிங் பொருட்களான பிரட், கேக், பன் போன்றவற்றை கட்டாயம் மாதவிலக்கு நாட்களில் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றுவலியை உண்டாக்கும்.

    டின்களில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட எந்த உணவுகளையும் சாப்பிடவே கூடாது. அவற்ரைற அறவே ஒதுக்க வேண்டும். அதில் அதிக அளவு சோடியம் கலக்கப்பட்டிருக்கும். அது மாதவிலக்கு நாட்களில் வயிற்று உபாதைகளை உண்டாக்கிவிடும்.

    காபி ஒருவகையில் ஊக்கத்தைக் கொடுத்தாலும் அது முறையற்ற மாதவிலக்கை உண்டாக்கிவிடும். அதனால் மாதவிலக்கின்போது காபியை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

    சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
    மாதவிலக்கு இப்படி இரண்டு விதங்களிலும் பெண்களுக்கு இன்னல் தரக்கூடியது. அதிக ரத்தப் போக்கு எப்படி ஆபத்தானதோ, அதைவிட மோசமானது மாதவிடாய் வராத நிலை.
    வந்தாலும் இம்சை... வராவிட்டாலும் இம்சை... மாதவிலக்கு இப்படி இரண்டு விதங்களிலும் பெண்களுக்கு இன்னல் தரக்கூடியது. அதிக ரத்தப் போக்கு எப்படி ஆபத்தானதோ, அதைவிட மோசமானது மாதவிடாய் வராத நிலை. ‘அமெனோரியா’ எனப்படுகிற அந்த நிலை குறித்த தகவல்களை, அறிகுறிகள், தீர்வுகளோடு பார்க்கலாம்.

    மாதவிலக்கு வராத நிலையை ‘அமெனோரியா’ என்கிறோம். தொடர்ந்து 3 மாதவிடாயைத் தவற விட்டவர்களுக்கும், 15 வயதுக்கு மேலாகியும் பூப்பெய்தாத பெண்களுக்கும் அமெனோரியா பிரச்சனை இருக்கலாம். காரணங்கள்...

    பல்வேறு காரணங்களினால் இந்தப் பிரச்சனை வரலாம். பெண்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைக்காக அவர்கள் எடுத்துக் கொள்கிற மருந்துகளின் பக்க விளைவாலும் நிகழலாம். கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் மற்றும் மெனோபாஸ் காலங்கள் போன்றவை இயல்பானவை.

    கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வோருக்கும் மாதவிடாய் வராமல் போகலாம். மாத்திரைகளை நிறுத்திய பிறகும், அந்த சுழற்சி முறைப்பட சில நாட்கள் ஆகும். உடலுக்குள் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனங்களும் இதற்கு ஒரு வகையில் காரணமாகலாம்.மனநல சிகிச்சைக்கான மருந்துகள், புற்றுநோய்க்கான கீமோதெரபி மருந்துகள், ரத்த அழுத்த மருந்துகள், அலர்ஜி மருந்துகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் மாதவிடாய் தற்காலிகமாக வராமல் இருக்கலாம். வாழ்க்கை முறை மாறுதல்கள்...

    சிலர் பருமனைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சராசரியை விடவும் மிகக் குறைவான எடைக்கு வருவார்கள். அது அவர்களது ஹார்மோன் அளவுகளைப் பெரிதும் பாதித்து, அதன் விளைவாக மாதவிடாய் வராமல் செய்யும்.அதே போல அளவுக்கதிமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் இந்த நிலையை சந்திக்கலாம். மிகக் குறைவான உடல் கொழுப்பு, அளவுகடந்த உடல் உழைப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால்தான் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகிற பெரும்பாலான பெண்கள் இந்தப் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.



    மன அழுத்தத்துக்கும் மாதவிடாய்க்கும் கூட மிக நெருங்கிய தொடர்புண்டு. மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதிதான் மாதவிடாய்க்குக் காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. அதீத மன அழுத்தம் ஏற்படுகிற போது, மாதவிடாயும் கரு உருவாதலும் தற்காலிகமாக தடைப்படலாம்.இவை தவிர...

    பிசிஓஎஸ் எனப்படுகிற பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (சினைப்பை நீர்க்கட்டிகள்) பிரச்சனை உள்ளவர்களுக்கும், அளவுக்கதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் தைராய்டு சுரப்பிக் கோளாறு உள்ளவர்களுக்கும், பிட்யூட்டரி சுரப்பியில் கட்டிகள் உள்ளவர்களுக்கும் கூட மாதவிடாய் நின்று போகலாம்.

    திருமணமான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தால், அது அவர்களது கருத்தரிப்பைப் பாதிக்கும். ஈஸ்ட்ரோஜென் சுரப்புக் குறைபாட்டினால் மாதவிடாய் வராமலிருந்தால், அது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற பிரச்சனைக்கு வழி வகுக்கலாம்.

    என்னென்ன சோதனைகள்?

    மாதவிடாய் வராமலிருக்க, கர்ப்பம் தரித்திருப்பது காரணமா என்பதை உறுதிப்படுத்துகிற சோதனை.-தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதற்கான ரத்தப் பரிசோதனை.

    - சினைப்பைகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை அறிய ரத்தத்தில் எஃப்.எஸ்.ஹெச் (FSH ), புரோலாக்டின் என்கிற ஹார்மோன் அளவுக்கான சோதனை போன்றவை அவசியம். கூடவே மருத்துவர் அவசியம் என நினைத்தால், ஸ்கேன் சோதனையையும் வலியுறுத்துவார்.

    தீர்வுகள் :

    காரணத்தைக் கண்டறிந்த பிறகு அதற்கான சரியான மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு ஹார்மோன் சிகிச்சைகள் உதவும். தைராய்டு அல்லது பிட்யூட்டரி சுரப்பிகள் தொடர்பான பிரச்சனைகள் என்றால், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டி போன்ற அரிதான காரணங்களுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். பிரச்சனையின் தீவிரம் பொறுத்து மருத்துவர் அதைப் பரிந்துரைப்பார்.

    சிலர் பருமனைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சராசரியை விடவும் மிகக் குறைவான எடைக்கு வருவார்கள். அது அவர்களது ஹார்மோன் அளவுகளைப் பெரிதும் பாதித்து, அதன் விளைவாக மாதவிடாய் வராமல் செய்யும்.

    பெண்கள் வெளிப்படையாக பேசாதிருக்கும் விஷயங்கள் பல இருக்கின்றன. குழந்தை பிறந்த பிறகு தற்காலிகமாக மாதவிடாய் சுழற்சியில் சில மாற்றங்கள் தென்படலாம்.
    குழந்தை பிறந்த பிறகு பெண்கள் வெளிப்படையாக பேசாதிருக்கும் விஷயங்கள் பலவன இருக்கின்றன. அதில், மாதவிடாயும் ஒன்று. குழந்தை பிறந்த பிறகு தற்காலிகமாக மாதவிடாய் சுழற்சியில் சில மாற்றங்கள் தென்படலாம்.

    ஓரிரு மாதத்தில் இது சரியாகிவிடும். இல்லை என்றால் நீங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பமான பிறகும், குழந்தை பிறந்த பிறகும் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், மாதவிடாய் சுழற்சியில் மற்றம் ஏற்பட வாய்புகள் உண்டு.
    பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

    கர்ப்பம் தரித்த பிறகு மாதவிடாய் நிற்க வேண்டும் ஆயினும், 25% பெண்கள் மத்தியில் பெண்ணுறுப்பு வழியாக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது, கர்ப்பக் காலத்தின் ஆரம்பக்கட்டதிலும், இறுதிக் கட்டத்திலும் சிலருக்கு ஏற்படுகிறது.

    கர்ப்பத்தின் முதல் 13 வாரங்களுக்குள் கர்ப்பப்பை வாய் மூலமாக இரத்தப்போக்கு ஏற்படுலாம். இது ஒருவேளை கருச்சிதைவு என்ற அச்சம் அளிக்கலாம். இல்லையேல் கருச்சிதைவாக கூட இருக்கலாம். இது 15 - 20% கருச்சிதைவிற்கான வாய்ப்பாக அமையலாம். எனவே, நீங்கள் ஆரம்பத்திலேயே மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.



    குழந்தை பிறந்த பிறகு தாய்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு, மாதவிடாய் சுழற்சியில் சில மாற்றங்கள், நாட்கள் தள்ளி போவது ஏற்படலாம். தாய் பால் ஊட்டும் ஆறு மாதங்கள் வரை இது இருக்கலாம். இதற்கு காரணம் அதிக அளவில் சுரக்கும் புரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் என கூறப்படுகிறது. இந்த புரோலேக்ட்டின் ஹார்மோன் தான் தாய் பால் சுரக்க காரணமாகும்.

    தாய் பால் ஊட்டினாலும், ஊட்டாவிட்டாலும் இந்த மாதவிடாய் பிரச்சனை 4 - 8 வாரங்களுக்கு இருக்க தான் செய்யும். மேலும், தாய் பால் ஊட்டாமல் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதகமாக அமையும்.

    வெளிப்படையாக கூற வேண்டும் எனில், பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் தள்ளி போவது அல்லது, ஓர் மாதம் வராமல் இருப்பது சாதாரணம். பிரசவத்திற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்தும் மாதவிடாய் வராவிடில் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    பிரசவம் முடிந்த 6 வாரங்கள் கழித்தும் இரத்தப்போக்கு ஏற்படுவது, இரத்தப்போக்கில் அடர்த்தியான கட்டிகள் போன்று வெளிப்படுவது போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை காண்பித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
    ஆண்களுக்கு இருந்த அத்தனை கெட்டப் பழக்கங்களையும் இன்று பெண்களும் கடைபிடிக்க தொடங்கி விட்டார்கள். இதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.
    முன்பொரு காலத்தில் ஆண்களுக்கு இருந்த அத்தனை கெட்டப் பழக்கங்களையும் இன்று பெண்களும் கடைபிடிக்க தொடங்கி விட்டார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று இந்த கெட்ட பழக்கத்திற்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். புகைப் பிடிப்பதில் ஆண்களைவிட இந்தியப் பெண்கள் கில்லாடிகள் என்று அமெரிக்க மெடிக்கல் அசோசியேசன் 22 வருடங்களாக நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

    அந்த ஆய்வின்படி, இந்தியாவில் தற்போது 12.1 மில்லியன் பெண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். இது அமெரிக்க பெண்களைவிட அதிகம் என்கிறது அந்த தகவல். இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒருவர் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை 8.2. கடந்த 1980-ம் ஆண்டில் இந்தியாவில் புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 33.8 சதவீதமாக இருந்தது. தற்போது அது 23 சதவீதமாக குறைந்துள்ளது.

    உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 721 மில்லியனாக இருந்த புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 967 மில்லியனாக அதிகரித்துள்ள வேளையில் இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10 ஆண்களில் 3 பேர் சிகரெட் பிடிக்கிறார்கள். 20 பெண்களில் ஒருவர் சிகரெட் பிடிக்கிறார். மேலும் இந்தியாவில் புகைப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6.1 சதவீதமாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5.1 சதவீதமாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.



    புகைப்பிடிப்பது கெடுதல் என்று என்னதான் மருத்துவர்கள் ஒருபக்கம் கத்தினாலும் மது மற்றும் புகைப்பிடித்தல் இன்றைய பேஷனாக மாறியிருக்கிறது. இந்த ஆய்வுதான் உலக அளவில் புகைத்து தள்ளுவதில் ஆண்களைவிட இந்திய பெண்கள் கில்லாடிகள் என்றும் தெரிவிக்கிறது.

    பெண்களின் புகைப்பிடிக்கும் பழக்கும் ஏற்படுத்தும் பாதிப்புகள் :

    * புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

    * புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

    * புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

    * பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause) சீக்கிரமே துவங்கி விடும்.

    * பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

    * பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
    வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிய மருத்துவப் பரிசோதனைகள் உதவுகின்றன.
    குழந்தை பிறப்பு ஒரு வரம் என்றால் கர்ப்பம் ஒரு தவம். அதிலும் முதல் மூன்று மாதங்கள் என்பது கர்ப்ப காலத்தில் மிக முக்கியமான பருவம். கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த முதல் ட்ரைமஸ்டரின்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடுவது, வைட்டமின்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்பது, பயணங்களை தவிர்ப்பது, போதுமான ஓய்வு ஆகியவற்றோடு மருத்துவப் பரிசோதனைகளும் மிகவும் அவசியம். வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிய மருத்துவப் பரிசோதனைகள் உதவுகின்றன.

    ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால் பொதுவாக கருவுற்ற 11-14 வாரங்களில் எடுக்கலாம். ஆனால், கருவுற்றிருப்பவர்களுக்கு வயிற்றுவலி இருந்தாலோ சிறிய அளவிலான உதிரக்கசிவு இருந்தாலோ உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். 5, 6 வாரங்களில் டேட்டிங் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

    ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ அபார்ஷன் செய்திருந்தாலோ இதற்கு முன்பான கர்ப்பத்தில் குழந்தை சரியாக கருப்பையில் அமராமல் டியூபிலேயே தங்கியிருந்தாலோ கர்ப்பம் அடைந்தவுடன் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பம் அடையும் முன் மாதவிடாய் சுழற்சி சரியாக மாதா மாதம் வராமல் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் கர்ப்பம் அடைந்தவுடன் ஸ்கேன் எடுப்பது நல்லது.

    இதன் மூலம் பிரசவ தேதியை சரியாகக் குறிக்க முடியும். சிலருக்கு வயிறு வழியாக அல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாய் இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு அவர்கள் உடல்வாகு, கருவின் உடல் நிலைக்கு ஏற்ப முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம்.



    சில சமயங்களில் முதல் முறை பார்க்கும்போது குழந்தையின் இதயத்துடிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது இருக்கும். தொடர்ந்து சிறிய அளவிலான உதிரக் கசிவு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

    11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு ஆகியவற்றைப் பார்க்க முடியும். சென்ற பகுதியில் சொன்னது போல முதல் மும்மாதத்திலேயே இந்த உறுப்புகள் எல்லாம் உருவாகிவிடும்.

    இதற்குப் பிறகான மாதங்களில் இவை வளர்ச்சி அடையத் தொடங்கும் என்பதால் முதல் மும்மாத ஸ்கேனிலேயே குழந்தைக்கு உடல் ஊனம் ஏதும் இருந்தாலும் கண்டறிய இயலும். முதல் மும்மாதத்தில் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (Nucheal thickness).

    தோலின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
    ×