என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள் என்ன என்பதையும், அதை தீர்க்கும் வழிமுறையையும் நாம் இப்பொழுது கீழே பார்க்கலாம்.
    பெண்களே!!! உஷாராக இருங்கள். நீங்கள் நோயற்ற வாழ்வினை வாழ...தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வீர்களாயின் கண்டிப்பாக ஆயுட்காலத்தின் அழகினை உங்கள் குடும்பத்துடன் இணைந்து குதூகலத்துடன் வாழ்ந்து மகிழலாம் என்பதே உண்மையானதொரு விசயமாகும். பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள் என்ன என்பதனை நாம் இப்பொழுது கீழே பார்க்கலாமா?

    * புற்றுநோய்கள் பலவிதம். அவற்றுள் பெண்களை தாக்கும் புற்றுநோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறதாம்...நீங்கள் உண்ணும் உணவில் அதிகம் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் இருக்குமாயின் புற்றுநோயை விட்டு நீங்கள் விலகுவது சுலபமாகும். ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் எவற்றிலெல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

    நீங்கள் அருந்தும் கீரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேனீர், பேரிக்காய், ஆப்பிள்கள், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், இலை காய்கறிகள் ஆகியவற்றில் இந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் அதிகம் இருக்கிறதாம். தவிர்க்காமல் இவற்றை எல்லாம் எடுத்துகொள்ளுங்கள்.

    * பெண்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நோய் பக்கவாதம் என்று சொல்ல...அந்த நோயோ அவர்கள் வாழ்க்கையை செயழிலக்க செய்து செதுக்கிய பொம்மைபோல் அசைவற்று அவர்களை அமரவைக்கிறது. இந்த பக்கவாதம் உங்களை தொட்டுபிடிக்க கூடாது என்றால்... நீங்கள் சிலவற்றினை செய்தாக வேண்டும்.  

    ஆரோக்கியமான இரத்த அழுத்தம் தான் இந்த பக்கவாதத்தையே செயழிலக்க செய்து உங்களை காப்பாற்றுகிறதாம். அத்துடன் ஆரோக்கியமான எடையையும் பராமரித்து சோடியம் உட்கொள்ளலை குறைத்து வந்தால் பக்கவாதமே உங்கள் உடல் ஆரோக்கியத்தை கண்டு பயந்து ஓடுகிறது. உங்கள் வயதிற்கு ஏற்ப பொட்டாசியத்தினை உட்கொள்ளுதலும் பக்கவாதத்திலிருந்து உங்களை காப்பாற்றுகிறது.



    * பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல்பருமன். உங்கள் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக கருதப்படுவது பதப்படுத்தப்பட்ட பொருள்களை உண்ணுவதே. சோம்பலும் நம் உடல் பருமன் அதிகரிக்க முக்கியமானதொரு காரணமாகும். ஒரே இடத்தில் நடைப்பிணமாய் நாம் அமர...உடல் பருமன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

    * பெண்களின் வாழ்வில் பெரும் கல்லை பாரமின்றி இறக்கி உயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய் தான் இந்த மார்பக புற்றுநோயாகும். வல்லுனர்களின் வாக்குபடி இந்த நோயினை விரட்டமுடியும் என்கின்றனர். இந்த நோய் பாதிக்கும் ஆரம்ப காலத்திலே கவனமாக செயல்பட்டு சிகிச்சை மேற்கொண்டால்...நம்மால் இந்த மார்பக புற்று நோயிலிருந்து பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

    * இன்றைய நிலவரப்படி எலும்புப்புரையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவிகிதம்.. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் வாயிலாக இந்த நோயிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள். எலும்புகளை வலுப்படுத்துதல், கால்ஷியத்தை அதிகம் உட்கொள்ளுதல், எடை தூக்கும் பழக்கம் என சில வழிகளால் இந்த எலும்புப்புரை வராமல் காக்க முடியும் என சொல்ல...வந்த பிறகும் காக்க முடியும் என்ற ஓசையும் காதுகளில் விழத்தான் செய்கிறது.

    * மன அழுத்தம் என்பது ஆண்களை அழுத்துவதனை காட்டிலும் பெண்களை ஒரு சதவிகிதம் அதிகமாகவே அழுத்துகிறதாம். சில சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் மன அழுத்தம் அதிகரிக்க...பல காரணங்களினால் சொந்த வாழ்க்கையின் மீது அனைவரும் பழி போட்டு காய் நகர்த்துகின்றனர் என்பதே உண்மை.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என மூத்த அனுபவமிக்க பாட்டி ஒருவர் கூறுகின்றார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    கர்ப்பம் தரித்த பின் அது ஒவ்வொரு பெண்ணிற்கும் உணர்வுபூர்வமான நேரம்தான். என்ன குழந்தை, எப்படி இருக்கும், நமக்கு ஏதாவது நேருமா என பல விதமாக அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்படி குழப்பிக் கொள்ளவே தேவையில்லை. மருத்துவரின் அறிவுரையின் படி நடந்து சரியான நேர்த்திற்கு உண்வருந்தினாலே இயல்பாய் எந்த வித சிரமமின்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். அந்த காலக் கட்டத்தில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என மூத்த அனுபவமிக்க பாட்டி ஒருவர் கூறுகின்றார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும். நீங்கள் கர்ப்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கர்ப்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் ஃபோலிம் அமில மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், கோழி, , தானியங்கள் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

    மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விட்டமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விட்டமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழந்தைபிறப்பில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கலாம்.



    சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கர்ப்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

    கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கர்ப்பமானவுடன் மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம்.

    உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், ரத்த அல்லது நீர் கசிந்தால், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் வந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.
    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இப்போதை விட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரசவம் எந்த வித சிக்கலும் இல்லாததாக இருந்தாலும், ஒரு தாய்க்கு ஐந்து ஸ்கேன்கள் வரை பரிந்துரைக்கப்படுகிறது. ஸ்கேன் எளிதில் பெறக்கூடியாதாகவும், விலை மலிவாகவும் உள்ளது.

    மேலும் ஸ்கேன்கள் மருத்துவர்களுக்கு குழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் நிலை போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக தருகிறது. இது குழந்தையை பற்றி மருத்துவர்கள் முழுமையாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கிறது.

    ஆனால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உங்கள் குழந்தையின் படத்தை பெற அதிக அதிர்வெண் ஒலி அலைகளை வெளிப்படுத்துகிறது. இந்த அலைகள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக 36 டிகிரி C வெப்பநிலை இருந்தால், இது 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 40டிகிரி செல்சியஸ் ஆக மாறுகிறது. இதனால் தீய விளைவுகள் ஏற்படலாம். ஆனால் சாதாரணமான 2டி, 3டி, 4டி போன்ற ஸ்கேன்கள் செய்யும் போது, மிக குறைந்த அளவு (1டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான) வெப்பம் மட்டுமே அதிகரிக்கிறது.

    உங்கள் குழந்தை அமோனோடிக் திரவத்தில் மிதப்பதால், இந்த அதிக அளவு வெப்பம் உங்கள் குழந்தையின் உடலில் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாமல், பாதுக்காக்கிறது.



    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த ஸ்கேன் செய்யும் போது குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவார்கள். இந்த ஸ்கேனை முப்பது நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் செய்வதில்லை

    உங்கள் மருத்துவர் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்வார். அவை:

    உங்களுக்கு இரட்டை குழந்தை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளாக இருக்கலாம்.

    உங்கள் கர்ப்பத்தை சிக்கலாக்கும் மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.

    நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம்.

    முந்தைய ஸ்கேன் ரிப்போட்டுகளின் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.

    இதற்கு முன்னர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம்.

    முந்தைய பிரசவம் உங்களுக்கு மிகவும் சிக்கலாக இருந்திருக்கலாம்.
    பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். இது எதனால் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
    பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் உடல் எடையை அதிகப்படுத்தும். இது எதனால் ஏற்படுகிறது? எப்படி சரி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதற்கு குடும்ப சூழ்நிலை உணவு கட்டுப்பாடு இன்மை சுற்றுசூழல் போன்ற காரணங்களை சொல்லலாம்.

    இப்போது இருக்கிற அதிகப்படியான உஷ்ணம், மழையின்மை, கம்ப்யூட்டரில் இரவு பகல் பாராமல் உட்காருவது, ஏசியில் உட்காருவதால் தூய்மையான காற்று நம் உடம்பில் படாமல் இருப்பது, நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் யூரியா போன்ற உரங்களை போட்டு வளர்ப்பது, பழங்களை கல், கெமிக்கல் போட்டு பழுக்க வைப்பது போன்ற காரணங்களால் நாம் சாப்பிடும் உணவுகளில் சக்தியில்லாமல் போய் விடுகிறது. அதே போன்று அந்த காலத்தில் கிணற்று நீர், ஆற்று நீர், ஊற்று நீர் என்று ஆரோக்கிய நீரை குடித்து ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்போது கெட்டநீர் கிடைப்பது அதிகமாகி பணம் கொடுத்து நீரை வாங்குவது கூட கஷ்டமாக உள்ளது.

    ஆக பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகள் பரம்பரை வாகு, உணவு, நீர், சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் வருகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லலாம். மேலும் மாதவிடாய் ஒழுங்காக வராததற்கு காரணம்

    1. தைராய்டு பிரச்சினை
    2. பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்)
    3. நீர் கட்டிகள் (பாலிஸ்டிக் ஒவரி)
    4. ரத்தமின்மை

    தைராய்டு: கழுத்தில் உள்ள தைராய்டு கிளான்ஸ் அதிகமாகவோ, குறைவாக சுரப்பது தான் தைராய்டு பிரச்சினை. இதனால் மாதவிடாய் சரியாக வராது. மாதவிடாய் சரியாக வராததால் உடல் எடை அதிகமாகிவிடும். தைராய்டு பிரச்சனையால் முடி கொத்து கொத்தாக கொட்டும். மனசிதைவு அதிகமாகும். டென்ஷன், கோபம் அதிகமாகும். குரல் கம்மியாகி பேச முடியாமல் போகும். பெண்களுக்கு ஆண்குரல் போல் மாறும். மாதவிடாய் சரியாக வராது.

    பைபராய்டு (கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள்) : மேலே சொன்ன பிரச்சினைகள் வரும்போது ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த டெஸ்டில் குறைவாகவோ அதிகமாகவோ தைராக்சின் சுரந்தால் மருத்துவர் சொன்ன மருந்தை எடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை டெஸ்ட் எடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி குறைவாகவோ, அதிகமாகவோ மருந்து எடுக்க வேண்டும். சொன்னால் அதன்படி செய்ய வேண்டும்.



    சிலபேர் ஒருமுறை தைராய்டு டெஸ்ட் எடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுப்பார்கள். 3 வருடங்கள் அதே மருந்தை எடுப்பார்கள் இதனால் மாத்திரையின் பக்க விளைவு தான் அதிகமாக வரும். அதனால் தைராய்டு பிரச்சினைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை டெஸ்ட் எடுப்பது நல்லது. குறைந்தால் மருந்தை நிறுத்துவது நல்லது. குழந்தை பிறக்காததற்கு முக்கிய காரணம் தைராய்டும் ஒரு காரணமாகும்.

    நீர் கட்டிகள் (பாலிஸ்டிக் ஒவரி): ஹார்மோன் பிரச்சினையால் கர்ப்பபையில் நீர்கட்டிகள், பைபராய்ட் கட்டிகள் உண்டாகும். இதனாலும் மாதவிடாய் சரியாக வராது. இதனால் உடல் எடை அதிகமாகும். இந்த கட்டிகளும் குழந்தை பிறக்காததற்கு ஒரு காரணம்.
    மேலே கூறிய காரணங்களை சரியாக கண்டுபிடித்து மூலிகை மருந்து, மூலிகை உணவு போன்றவற்றை எடுத்து முத்திரைகள் , அக்கு டச், நடை பயிற்சிகள் செய்து 100 சதவீதம் சரியாகி எடை குறைக்கலாம்.

    ரத்தமின்மை (அனிமிக்): ரத்தம் குறையும் போது உடலில் நீர் கோத்து (ரத்தத்திற்கு பதில் உடல் முழுவதும் குத்து வலி வரும். உடல் எடை அதிகமாகும். தலைமுடி கொத்து கொத்தாக கொட்டும். ரத்தம் இன்மையால் மாத விடாய் வராது. உடல் எடை கூடும். இந்த ரத்தம் இன்மையை உணவு, பழங்கள், நடைபயிற்சி மற்றும் அக்குடச், அக்கு பிரஷர், மூலிகை மருந்து மூலம் ரத்தம் 100 சதவீதம் ஏறும்.

    ரத்தம் குறைவதால் பின்காலத்தில் பலதரப்பட்ட வியாதிகள் வரும். சிறுநீரக கோளாறு வரும் போது ரத்தத்தில் யூரியா, கிரியேட்டின் அறை அதிகரித்து ரத்த அளவு மிகவும் குறையும். புற்றுநோய் தாக்குதலின் போதும் மிகவும் குறையும். இதனால் சிறுவயதிலிருந்தே ரத்த விருத்திக்கு புஷ்டியான உணவு உயற்பயிற்சி செய்யும் போது பிற்காலத்தில் ரத்த பாதிப்பு வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    ரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் முதல் நிலை நோயும், ரத்தத்தில் சில பொருட்களின் அளவு குறைந்து போதல் மற்றும் இல்லாமல் போதல் என்ற இரண்டாம் நிலை நோயும், வந்து இந்த இரண்டு நிலை நோய்களும் சரியான மருத்துவத்தை பயன் படுத்தாமல் தவறான மருத்துவத்தை பயன்படுத்துவதால் தான் மூன்றாவது நிலை நோயான ரத்தத்தின் அளவு குறையும் நோய் வருகிறது.

    எப்போது ரத்தத்தின் அளவு குறைகிறதோ! அப்போது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான ரத்தம் கிடைக்காதலால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும். இனி ரத்தத்தை எப்படி அதிகரிக்க வைப்பது என்பதை பார்க்கலாம். சரிவிகித உணவை சாப்பிட வேண்டும், பழங்களில் தினமும் பப்பாளி, மாதுளம் பழம், ஆப்பிள், பேரிச்சம்பழம், அத்திபழம், நெல்லிக்காய், கொய்யாப் பழம், போன்ற பழங்கள் கலந்த கலவையாகவும் சாப்பிடலாம்.



    1. ஆப்பிள் : தினமும், ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் அவசியமில்லை என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உள்ளது. ஆப்பிள் பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டது. இதிலுள்ள பெக்டின் எனும் பொருள் நம் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த சோகைக்கு ஆப்பிள் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து பாஸ்பரஸ், ஆர்சனிக். ரத்தத்தை விருத்தி செய்கிறது. உணவுக்கு அரைமணிநேரம் முன்பும் படுக்கைக்கு செல்லும் முன்னும் ஒரு டம்ளர் ஜுசை சாப்பிடும் போது ரத்த சோகை போகிறது. இதே மாதிரி மாதுளம் பழம் நீறும் ரத்தம் விருத்தி அடைகிறது.

    2. பேரிச்சை: மிகவும் அதிக சத்துள்ள பழம், இயற்கை யான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் என்ற சர்க்கரைப் பொருட்கள் அடங்கியுள்ளது. கரும்புச்சாறை விட சிறந்தது. அதிரடியாக 1 மாதத்தில் ஒரு யூனிட் இரத்தம் அதிகரிக்க கீழேயுள்ளதை செய்யுங்கள். 1/4 கிலோ பேரிச்சம் பழம் கொட்டை நீக்கி ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும், அதில் 1/4 கிலோ சுத்தமான தேனை ஊற்றவும், 1 டப்பி குங்குமபூவை தூவவும் இக்கலவையை காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து பாட்டிலில் போடவும் இரவு சாப்பாட்டிற்கு பிறகு 2 பேரிச்சம் பழம் சாப்பிட்டு 1 டம்ளர் பால் சாப்பிடவும், (பசும் பால் மிகவும் நல்லது).இது முடிந்த பிறகு அத்திபழத்தை தேனுடன் கலந்து, அதையும் இரவு இரண்டு பழமும் பாலும் சாப்பிடவும்.

    நிச்சயம் 1 மாதத்தில் ஒரு யூனிட் இரத்தம் அதிகரிக்கும். மாதவிடாய் பிரச்சினை போய் எடை குறைய தினமும் காலையும் மாலையும் 10 அடிக்கு நடைப்பயிற்சியும், இயற்கை உணவும், நில முத்திரை தினமும் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    சிட்கா வைத்தியம் :


    ஆரோக்கியமான குழந்தை பிறக்க:


    கணவன் - மனைவி இருவரும் இரவு உணவுக்குப்பின் பழுத்த செவ்வாழைப்பழம் (இயற்கை முறையில் பயிரிடப்பட்ட) ஆளுக்கு ஒன்று சாப்பிட்டு ஒரு தம்ளர் பாலில் குங்குமப்பூ போட்டு சாப்பிடவும், ஆண்களுக்கு விந்து அதிகப்படுத்தியும், பெண்களுக்கு கர்ப்பப்பை பலம் ஆகியும் விரைவில் குழந்தை பிறக்கும்.

    சிவப்பணுக்கள் அதிகரித்து ரத்த புஷ்டி உண்டாக:

    ஒரு ஆப்பிள் பழத்தை நன்றாக வெந்நீரில் கழுவி (மெழுகு போய்விடும்) துண்டாக வெட்டி அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டால் ரத்த புஷ்டி உண்டாகும். (ஆப்பிளை வெட்டி வைக்கும் போது அது கறுப்பாக மாறி அதில் இரும்புசத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

    டாக்டர். ஆர்.பானுமதி
    செல்: 73974 07283

    சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் சுரப்பு குறித்து கவலைக் கொள்வார்கள். இங்கு தாய்ப்பால் சுரப்பு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் வழியே தான் அச்சத்துக்கள் கிடைக்கும். பிரசவத்திற்கு பின் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும். ஆனால் மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா என்று கேட்டால், உடல்நல நிபுணர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்.

    இக்கட்டுரையில் தாய்ப்பால் சுரப்பு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடைகள் மற்றும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் சுரப்பு என்று வரும் போது, அதற்கும் மார்பக அளவிற்கும் சம்பந்தமே இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு சிறிய அளவில் மார்பகங்கள் இருந்தால், குறைவாக தாய்ப்பால் சுரக்குமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    * மார்பகங்களில் உள்ள கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்து தான் ஒருவரின் மார்பக அளவு உள்ளது. எனவே மார்பக அளவிற்கும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

    * கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்களின் விளைவால், மடிச்சுரப்பிகள் தூண்டப்பட்டு, தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது.



    * தாய்ப்பால் உற்பத்தியான பின், மார்பகங்களின் அளவு சற்று பெரிதாகும். இதற்கு காரணம் மடிச்சுரப்பிகளின் அளவு சற்று பெரிதாவது தானே தவிர, தாய்ப்பால் உற்பத்தி மார்பக அளவைப் பொறுத்தது அல்ல.

    * தாய்ப்பால் உற்பத்தி மற்றொரு காரணியாலும் பாதிக்கும். அது என்னவெனில், குழந்தை அதிகளவில் தாய்ப்பாலைக் குடித்தால், தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.

    * கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின் மார்பக அளவில் சிறிதும் மாற்றம் இல்லாவிட்டால், அப்பெண்ணிற்கு போதுமான சுரப்பி திசுக்கள் இல்லை என்று அர்த்தம். அத்தகைய பெண்களுக்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். இப்பிரச்சனையை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

    * பெண்ணிற்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கு அதிகமாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்தது, மார்பக அறுவை சிகிச்சை மற்றும் புகைப்பிடித்தல் போன்றவைகள் காரணங்களாகும்.
    ஆஸ்துமா பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

    திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனையுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய். இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது.

    ஏனென்றால் டி.பிக்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்!

    கர்ப்பகாலத்தில் என்ன பிரச்சனை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள்.
    இன்று பெண்களை கவரும் வகையில் சரியான அளவு, ஏராளமான வண்ணங்கள், பாதுகாப்பு, நம்பிக்கை, சவுகரியம் என எல்லாம் கலந்த கலவையாக கச்சிதமாக பிராக்கள் வடிவமைக்கப்படுகின்றன.
    பெண்கள் ‘பிரா’ அணியும் வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. ஒரு நீண்ட துணியை மார்பில் கட்டி முதுகின் பின்னால் முடிந்து கொள்ளும் வழக்கம் அப்போதிருந்தது. அதுவே கொஞ்சம் மாறி ரவிக்கைக்குள் அணியும் சிறிய உடையாக (பிரா) மாறியது. அது அவர்களுக்கு அழகு, நம்பிக்கை, சவுகரியத்தை அளித்தது. அதனால் வரவேற்பு அதிகமானது. அனைவரும் அணிய தொடங்கியதால் ஆடை வடிவமைப்புபோலவே உள்ளாடை வடிவமைப்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

    1889-ம் ஆண்டு மே 30-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ‘ஹர்மினி காடோலே’ முதன்முதலில் பிராவை வடிவமைத்தார். இது ஆடைக்குள் அணியும் உள்ளாடை என்பதால் அளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எளிமையாக பயன்படுத்தும் வகையில் இருந்ததால் அனைவரும் விரும்பி வாங்கினார்கள். அழகுடன், பாதுகாப்பும் தந்த உள்ளாடைகள் ஒரு அத்தியாவசிய ஆடையாக மாறியது. அதனால் இன்று பல நிறுவனங்கள் உள்ளாடைகளை மட்டுமே வடிவமைத்து விற்பனை செய்கின்றன.

    விக்டோரியா ராணி காலத்தில் அரசிக்கு உள்ளாடை வடிவமைத்தவர்கள் ‘கோர்ஸெட்ஸ்’ எனப்படும் கோட்டு போன்ற அமைப்புடைய மேலாடையை வடிவமைத்தார்கள். அதன் உட்புறத்தில் ஜாக்கெட் போன்ற அமைப்பைக் கொண்ட ஆடையின் பின்புறத்தில் பல நாடாக்கள் இருந்தன. அதனை இழுத்து பின்புறம் முடிச்சுபோட வேண்டும். ராணியின் குடும்பத்தினர் அணிவதை பார்த்து, அதே போன்று வடிவமைத்து பல பெண்கள் அணிய ஆசைப்பட்டார்கள். ஆனால் சாதாரண பெண்களுக்கு அந்த டிசைன் அசவுகரியமாக இருந்தது.

    பின்னர் மெல்லமெல்ல பல மாற்றங்களை அடைந்து நவீன ‘பிரா’க்கள் வெளிவரத் தொடங்கின. இன்று சரியான அளவு, ஏராளமான வண்ணங்கள், பாதுகாப்பு, நம்பிக்கை, சவுகரியம் என எல்லாம் கலந்த கலவையாக கச்சிதமாக பிராக்கள் வடிவமைக்கப்படுகின்றன.



    ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் பெரும் சர்ச்சையை சந்தித்தது ‘பிரா’க்கள். அப்போது கிட்டத்தட்ட ஜாக்கெட்டின் பாதி அளவுடன் கூடிய மெல்லிய துணியால் வடிவமைக்கப்பட்டு முன்னால் முடிச்சுபோடும் விதத்தில் ‘பிரா’க்கள் இருந்தன. அளவில் குறைந்தது என்பதால் அதற்கு மேல் ஜாக்கெட் அணிய வேண்டும். பார்க்க கொஞ்சம் கவர்ச்சிகரமாக இருந்ததால் வெளிவேலைக்குச் செல்லும் பெண்கள் அத்தகைய பிரா அணிவதை விரும்பவில்லை.

    சில நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் சில இடங்களில் பெண்கள் ஜாக்கெட் அணிவதையே எதிர்த்தார்கள். பிந்தைய காலங்களில் ஜாக்கெட் இல்லாமல் உடல் முழுவதும் புடவையை சுற்றிக்கொண்டார்கள். அதையே அன்றைய பெண்கள் சவுகரியம் என்று கருதியதால், அப்போது அறிமுகமான பிராக்கள் அதிக சர்ச்சைகளை உருவாக்கியது.

    ‘குடும்பப் பெண்கள் உள்ளாடை அணியக்கூடாது’ என்ற பிற்போக்கான வாதம்கூட அப்போது எழுப்பப்பட்டது. ஜாக்கெட் அணிவதுகூட தவறானது என்று பலர் பெண்களை தடுத்து நிறுத்தினர். அதில் உள்ள பாதுகாப்பை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. நகர்ப் புறத்திலிருந்து கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்டு போகும் பெண்களுக்கு இந்த உள்ளாடை, ஜாக்கெட் விவாதம் அப்போது பெரும் பிரச்சினையாக இருந்தது.

    இன்றும்கூட நம் நாட்டில் உள்ளாடையை ஒரு ஒதுக்கப்பட்ட விஷயமாகவே சிலர் பார்க்கிறார்கள். பிராவை பலர் கண்ணில்படும்படி உலர்த்தக்கூடாது. ‘பிரா’ பட்டை ஜாக்கெட்டிற்கு வெளியே தென்படக்கூடாது. ஜாக்கெட் நிறத்திற்கு மாறான நிறத்தில் பிரா இருக்கக்கூடாது. வெள்ளை ஜாக்கெட்டுக்கு, கருப்பு பிரா அணியக்கூடாது. இப்படி பல விதமான பார்வைகள் உள்ளன.



    இந்த உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தவறான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் உடல் நலமும் பாதிக்கப்படும். முதுகு வலி, தோள்பட்டை வலி, மூச்சுத் திணறல், உடல் எரிச்சல், அஜீரணக் கோளாறு போன்றவை அடிக்கடி ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் பொருத்தமற்ற பிராக்களும் காரணமாக இருக்கலாம். திரையில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் கூட உள்ளாடை விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

    1990-ல் இது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ‘இது ஒரு சவுகரியமான உள்ளாடையாக இருந்தாலும் இதை எப்போதும் அணிந்து கொள்ளக் கூடாது’ என்று ஆய்வு முடிவை வெளியிட்டார்கள். ‘தொடர்ந்து இறுக்கமான பிராக்களை அணிந்தால், மார்பக தசைகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அதிக இறுக்கத்தால் தோல் வியாதிகள் உருவாகவும் வழி வகுக்கிறது. ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

    அதனால் தேவையான நேரத்தில் மட்டும் அணிந்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தப்பட்டது. இது ஆரோக்கியம் சார்ந்த அறிவிப்பாகும். வியர்வை கசிவால் நோய் தொற்றுகளும் ஏற்படுகிறது. அதனால் சரியான அளவு உள்ளாடைகளை தேர்வு செய்து முறையாக அணிந்துகொள்ள பழக வேண்டும். ஆனால் நம் நாட்டில் இது பற்றி மற்றவரிடம் ஆலோசனை கேட்க தயங்குகிறார்கள்.

    சரியான முறையில் பிரா அணிவது பற்றி “யூ-டியூபில்” வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை 10 லட்சம் பேர் அதை கண்டிருக்கிறார்கள். ஏதேனும் அசவுகரியம் என்றால் அது எதனால் என்று பாருங்கள். உங்கள் உடலமைப்பிற்கு எப்படிப்பட்ட ‘பிரா’வை தேர்வு செய்வது என்பதையும் வலைத்தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ‘பிரா’ என்பது அழகு, நம்பிக்கை, சவுகரியம், பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.
    பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது.
    பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது. இக்காலத்தில் பெண்கள் உடலில் வரைமுறையின்றி டாட்டூக்களை போட்டு கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் நச்சுமிக்க பொருளானது சரும புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடியது.

    மேலும் எய்ட்ஸ் போன்ற நோய் உள்ளவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திய உபகரணங்களை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால் எச்.ஐ.வி., ஹைபடைடிஸ் பி மற்றும் சி போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். வியர்வை சுரப்பிகள் மற்றும் பால்குழாய்களில் ஏற்படும் அடைப்பானது நோய்தொற்றினால் ஏற்படக்கூடியது. இதனால் மார்பகம் சிவப்பாதல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

    சில சமயங்களில் மார்பகங்களினுள் தீங்கு விளைவிக்காத திரவம் நிறைந்த கட்டிகள் உருவாகி வலியினை உண்டாக்கும். மாதவிடாய் காலங்களில் இந்த கட்டிகள் பழுத்து அதிக வலியினை உண்டாக்கும். மார்பக நாளங்களில் வீக்கம் ஏற்பட்டால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் வீங்கி, பருமனாகி தொட்டாலே அதிக வலியினை ஏற்படுத்தும்.

    மார்பக காம்புகளின் வழியே இரத்தம் கலந்த திரவம் வெளிவந்தால் புற்றுநோய் அல்லாத கட்டிகள் உள்ளதென்று அர்த்தம். இது பாப்பில்லோமா என்னும் வைரஸானது பால் குழாய்களில் அதிகம் வளர்ச்சி அடைந்ததால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இப்பிரச்சனை ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.

    பெண்களின் மார்பகம் வீங்குதல், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை ஏற்படும் போது அதை சரி செய்ய முட்டைகோஸை மார்பகங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.



    இம்முறையை செய்யும் முன்னர் ஒரு மணி நேரம் முட்டைகோஸை ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளுமை அடைந்த பிறகு, அதன் வெளிப்புற இலைகளை உரித்து வீசி விட்டு, இரண்டாம் அடுக்கு லேயர் இலைகளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.

    இரண்டாம் அடுக்கு இலைகளை பயன்படுத்தும் முன்னர் அதை இதமான நீரில் கழுவி கொள்ளுங்கள். அந்த முட்டைகோஸ் இலைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

    ஸ்டெம் பகுதியை நீக்கிவிடுங்கள். இலைகளை சரியாக மார்பக பகுதியில் நிற்கும் படி வைக்க வேண்டும். முலைகாம்பு பகுதியில் மட்டும் படாதபடி பார்த்துக் கொள்ளவும். இப்போது சுத்தமான அந்த முட்டைகோஸ் இலைகளை மார்பகத்தை கவர் செய்தது போல கட்ட வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமானது. அதன் பிறகு நீக்கிவிடலாம்.

    நன்மைகள் :

    இதை மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக செய்து வந்தால், மார்பகம் வீங்குதல், இரத்த நாளவீக்கம், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை சரியாகும். உங்கள் மார்பகங்கள் நலத்துடன் அல்லது நன்கு மாறுதல் ஏற்பட்டு இருப்பது போன்று உணரும் பட்சத்தில் இதை நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.
    கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் உன்னதமான காலம். உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம்.
    கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் உன்னதமான காலம், அப்போது உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். இதோ உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்ளலாம்..

    * சீன பாலின விளக்கப்படம், குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பலங்கால முறையாகும். பல அம்மாக்கள் இது உண்மையாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதில் பெண்ணின் கருத்தரித்த வயதையும், கருத்தரித்த மாதத்தையும் கொண்டு பிறக்கப்போவது ஆணா அல்லது பெண்ணா என அறிந்து கொள்ளலாம்.

    * உங்களது திருமண மோதிரத்தை ஒரு நூல் அல்லது தலை முடியில் கோர்த்து அதை வயிற்றிற்கு மேலே சுத்தி விட்டால், அது வலுவான வட்ட இயக்கத்தில் சுற்றினால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை, அல்லது முன்னும் பின்னுமாக ஊஞ்சலாடினால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை. இது துல்லியமான முறையில்லை.



    * இது கருவுற்ற பெண்ணின் வயிற்று பகுதியை பார்த்து கணிக்கப்படுகிறது. கருவுற்ற பெண் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிற்கும் போது தொப்புள் பகுதி உடலின் மேல் புறமாக இருப்பது போல தோன்றினால், அது பெண் குழந்தை. அல்லது அடிப்பகுதி நோக்கி இருந்தால் அது ஆண் குழந்தை. இது பெரும்பாலும் ஆதரமற்ற ஒரு பரிசோதனை தான்.

    * பாலின முன்கணிப்புக் கோட்பாடுகளின்படி, ஒரு குழந்தையின் இதய துடிப்பும், ஒரு பெண் குழந்தையின் இதய துடிப்பும் கணிசமாக வேறுபடும். இந்த கோட்பாடு குழந்தையின் பாலினத்தை அடையாளம் காண உதவும். குழந்தையின் இதயம் நிமிடத்திற்கு 140 துடிப்பிற்கும் குறைவாக இருந்தால், அது ஒரு பையன் என்றும், ஒரு நிமிடத்திற்கு 140 க்கு மேல் இருந்தால், பெண் என்றும் கூறப்படுகிறது.

    * குழந்தையின் விஷயத்தில், பிறக்க போவது ஆணா, பெண்ணா என்று தாய்க்கு கர்ப காலத்தில், தோன்றும் உள்ளுணர்வு பெரும்பான்மையாக பொய் ஆவது இல்லை.

    * உங்களுக்கு எடுக்கும் பசி கூட உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரியப்படுத்தும். உங்களுக்கு அதிகமாக இனிப்பு பசி எடுத்தால், பிறக்க போவது பெண்ணாக இருக்கும். உப்பு அல்லது புளிப்பு பசி எடுத்தால், பிறக்க போவது ஆண் குழந்தை. உங்களுக்கு எந்த சுவையில் உள்ள உணவை அதிகம் சாப்பிட தோன்றுகிறது என்று கணக்கெடுத்து வைப்பது உங்கள் குழந்தையின் பாலினத்தை பற்றி அறிய உதவும்.



    * காலையில் தொடர்ந்து நோய்வாய்ப்படுதல் பெண் குழந்தைக்கான அறிகுறியாகும். பெண் குழந்தைக்கான ஹார்மோன்கள் அதிகமாக வளர வேண்டியிருப்பதால், தாய் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உள்ளது.

    * சருமம் உடைதல் கர்ப்ப காலத்தில் நடக்கும் பொதுவான மாற்றமாகும். ஆனால் உங்களுக்கு அதிக காலங்கள் இந்த சருமம் உடைதல் பிரச்சனை நீடித்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகும், ஏனென்றால் பெண் குழந்தை தாயின் அழகை திருடுகிறதாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அடிப்படை கணிப்புகள் சரியாக இருக்கும்!

    * அல்ட்ராசவுண்ட் சோதனை வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலை ஒரு ஸ்கிரீனிங் முறையில் காண்பதாகும். 18-24 வாரங்கள், அல்ட்ராசவுண்ட் டெஸ்டை பெற இது சிறந்த காலம் மற்றும் அது நம்பகமான தகவலை அளிக்கிறது.

    * டிரானோ பரிசோதனை ஒரு எளிய வழியாகும். இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை சேகரிக்க வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க வேண்டும். இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. அதன் நிறம் நீலமாக தோன்றினால் பிறக்க போவது கட்டாயமாக ஆண் குழந்தை தான்.

    பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இப்போது பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்.
    பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இதற்கு ஹார்மோன்கள் முக்கிய காரணமாகும். பெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

    * சுகப்பிரசவத்தின் போது, பெண்கள் 500 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடும். அதுவே சிசேரியன் பிரசவத்தின் போது, 1000 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடுகிறது.

    * பெண்களின் இயல்பான நிலையில் இருக்கும் கர்ப்பப்பை 3 இன்ச் நீளமும், 2 இன்ச் அகலமும், 30 கிராம் அளவிற்கு குறைவான எடையுடனும் இருக்கும் சிறிய உறுப்பாகும்.

    * கருவுறாத முட்டை கருப்பை சுவர் செல்களுடன் சேர்ந்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இந்த சுழற்சி 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் கூட தொடர்ச்சியாக நிகழ்கிறது.

    * சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால், திடீரென உடல் எடை உயர்வு போன்ற உணர்வு, தூக்கமின்மை போன்ற பல உடல், மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    * பெண்கள் குழந்தை பெற்ற பின் அவர்கள் உடலின் ஹார்மோன் அளவுகள் திடீரென குறையும். இதனால் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) என்ற மனநலப் பிரச்சனைகள் 15 சதவீத பெண்களை பாதிக்கிறது.

    * மெனோபாஸூக்கு பின் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் இழப்பு காரணமாக 20% பெண்கள் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.



    * ஒரு பெண் குழந்தை, தன் தாயின் கர்ப்பத்தில் சிசுவாக வளரும் போதே அதன் வாழ்நாளுக்கான கருமுட்டைகள் உருவாகியிருக்கும்.

    * மாதவிடாய்க்கு பின் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இழப்பால், மாரடைப்பு ஆபத்து பெண்களுக்கு அதிகமாகின்றது.

    * கருமுட்டை என்பது சரும செல்லை விட 4 மடங்கு பெரியது ரத்த சிவப்பணுவை விட 26 மடங்கு பெரியது. விந்தணுவை விட 16 மடங்கு பெரியது.

    * கருவில் 7 மில்லியன் கருமுட்டைகளுடன் வளரும் பெண் குழந்தை பிறக்கும் போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கும். பூப்படையும் போது, 4 லட்சம் கருமுட்டைகள் மீதமிருக்கும். அதன் வாழ்நாளில் 500 கருமுட்டைகள் வரை வெளிப்படும்.

    * ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் தோராயமாக 3.500 நாட்களை மாதவிடாயுடன் கழிப்பதுடன், 81% பெண்கள் மாதவிடாய் நாட்களில் அடிவயிறு வலியால் துன்புறுகிறார்கள்.

    * மாதவிடாய் நாட்களுக்கு முன் நடைபெறும் ஹார்மோன் ஏற்ற, இறக்க மாறுபாடுகளால் 30% பெண்கள் மூட் ஸ்விங்ஸ் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

    * பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பகாலத்தின் ஒன்பதாவது மாதத்தில் ஏறக்குறைய 40 செ.மீ அளவுக்கு நீளமாக இருப்பதுடன், குழந்தையின் நஞ்சுக்கொடி 5 கிலோ எடையைச் சுமந்திருக்கும்.
    கருசிதைவிற்கு பின் நமது கருப்பையை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். இயற்கை முறையில் கருப்பையை சுத்தம் செய்வது எப்படி தெரிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் சிலருக்கு, கருமுட்டை கோளாறு காரணமாக சில நேரத்தில் தானாகவே கரு கலைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் போது, கருசிதைவிற்கு பின் நமது கருப்பையை சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். எனவே கருச்சிதைவு ஏற்பட்ட பின் இயற்கை முறையில் கருப்பையை சுத்தம் செய்வதற்கு சூப்பரான டிப்ஸ் இதோ!

    கருச்சிதைவு ஏற்பட்ட கருப்பையை சுத்தம் செய்வது எப்படி?

    பிரண்டை மற்றும் குறிஞ்சா வேரை சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து, வயிற்றின் மீது தடவி வந்தால், வயிற்றில் இறந்த நிலையில் இருக்கும் சிசு வெளியில் வந்து விடும்.

    கறிவேப்பிலை, முருங்கை இலை, வேப்பிலை மற்றும் கடுக்காய் ஆகிய அனைத்தையும் சமஅளவு எடுத்து, அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதை நன்றாக காய்ச்சி, குடித்து வர வேண்டும்.

    இவ்வாறு செய்து வந்தால், நமது வயிற்றில் உள்ள கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கர்ப்பப்பை சுத்தமடையும்.
    எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் காலம் முழுவதும் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கும் தாய்மைக்கு தலை வணங்குவோம்!
    அன்பு.. அரவணைப்பு.. அர்ப்பணிப்பு.. அத்தனையும் ஒருசேர கலந்த தியாகத்தின் பிறப்பிடம் தாய்மை. குழந்தை கருவில் வளரும்போதே தனது வாய்க்கு கட்டுப்பாடு விதித்துக்கொண்டவள். குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே தன்னுடைய விருப்பமான உணவுகளை வெறுத்து ஒதுக்கியவள். குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக தன்னுடைய ஆசைகளை அடக்கி, அவர்களின் ஒவ்வொரு தேவைகளையும் உணர்வுபூர்வமாக உணர்ந்து, அவைகளை நிறைவேற்ற முழுமூச்சாக பாடுபடுபவள். காலங்கள் உருண்டோடி போயிருக்கலாம். ஆனால் தாய்மையின் குணம் மட்டும் மாறியதே இல்லை.

    சிறுவயதில் தாய் தங்களை எப்படி வளர்த்தாள் என்பதை பிள்ளைகள் அறிந்திருக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தங்களது குழந்தைகளை மனைவி எப்படி வளர்க்கிறாள் என்பதை பார்த்தே தாய்மையின் அர்ப்பணிப்பு வாழ்க்கையை உணர்வுபூர்வமாக உணரலாம். ஏழையாக இருந்தாலும், மாடமாளிகையில் வாழ்ந்தாலும் வசதி வாய்ப்பில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஏழைத்தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பும், பணக்கார தாயின் குழந்தை பாசமும் ஒரே அளவுகோலாகத்தான் வெளிப்படும்.

    குழந்தையின் பசி போக்காமல் தான் உணவு உண்ண விரும்ப மாட்டாள். விளையாட்டு மோகத்தில் குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தாலும், விளையாட்டு காட்டியே சாப்பிட வைத்துவிடுவாள். குழந்தையின் பசி நீங்கினால்தான் நிம்மதி அடைவாள். தன் குழந்தை வாய் பேச முடியாதவனாகவோ, ஊனமுற்றவனாகவோ, உருவமே உருமாறி காட்சி யளிப்பவனாகவோ இருந்தாலும் முகம் சுளிக்காமல் அரவணைப்பு காட்ட தாயால் மட்டுமே முடியும்.



    ஆறுதல் வார்த்தைகள் ஆயிரம் பேர் கூறலாம். ஆனால் உள்ளார்ந்த அன்பு தாயிடம் மட்டுமே உணர்வு பூர்வமாக வெளிப்படும். ஆறுதலோடு, அரவணைத்து துயரத்திலும், சந்தோஷத்திலும் துணை நிற்பாள். வசதி, வாய்ப்புகள் வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆனால் தாய்மை வெளிப்படுத்தும் பாசம் என்றென்றும் மாறாதது. எல்லா பிள்ளைகளிடமும் பாரபட்சம் காண்பிக்காமல் ஒரே மாதிரியாகவே வெளிப்படும். மனித பிறப்புக்கு மட்டுமல்ல உலக உயிர்கள் அனைத்துக்கும் அன்னையே பிரதானம். அனைத்து உயிர்களிடமும் தாய்மை வெளிப் படுத்தும் பாசத்தில் பாகுபாட்டுக்கு இடமில்லை என்பதே நிதர்சனம்.

    ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டப்பட்டு வருகிறது. இன்றைய நாள் அன்னையின் அர்ப் பணிப்பு வாழ்க்கையை நினைவுகூரும் நாளாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. என்றென்றும் தாய்மையின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங் கள். குறிப்பாக முதுமை காலத்தில் அவர்களை உடன் வைத்து உபசரித்து, அன்பாக ஆறுதல் மொழி பேசி அரவணையுங்கள். வயோதிகம் அவர்களின் வாழ்க்கையை சுமையானதாகவோ, தனிமைப்படுத்துவதாகவோ கருத வைத்துவிடக்கூடாது. அவர்கள் மன மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ரசித்து வாழ பக்கபலமாக இருங்கள்.

    கருவில் தாங்கி, கண்ணயராது வளர்த்து ஆளாக்கிய தாயை காலமெல்லாம் கண் கலங்காமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. பெற்றெடுத்தபொழுது மகிழ்ந்ததை காட்டிலும் உங்களுடைய அன்பான உபசரிப்பால் என்றென்றும் அவர்களை மகிழ்விக்க செய்யுங்கள். ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அன்பையும், அரவணைப்பையும் மட்டும்தான். எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் காலம் முழுவதும் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டிருக்கும் தாய்மைக்கு தலை வணங்குவோம்!
    ×