என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    இன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர்.
    இன்றைய பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள், அரிசியில் கலோரி அதிகம். வெயிட் போட்டுவிடும் என்று, சாப்பிடும் அளவை மிகவும் குறைத்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் ஒரு கப் அளவுகூடச் சாதம் சாப்பிட மறுக்கின்றனர். இது மிகவும் தவறு. வளரும் பருவத்தினருக்கு அரிசி சாதம் ரொம்பவே முக்கியம்.

    மனிதனுக்கு உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களில் பெரும் பங்கு தானிய உணவுக்குத்தான் சேரும். அதில் அரிசியும் ஒன்று. சமீபகாலமாக இளம் வயதினர் அரிசி உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால், தங்கள் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான பழக்கத்தை நம்பி வருகின்றனர். இந்த உணவுப் பழக்கம் பல உடல்நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

    அரிசி, நம் உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின் (Riboflavin) உள்ளிட்ட பி காம்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்களைத் தரக்கூடியது. தினமும் அரிசியை 200 முதல் 350 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசியில் நார்ச்சத்து என்பது மிகமிகக் குறைவு. எனவே அரிசியின் முக்கால்வாசி அளவுடன் கண்டிப்பாகக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அதில் ஒன்று கீரையாக இருந்தால், மிகச் சிறப்பு. இதுவே ஒரு சமச்சீரான உணவாக இருக்கும்.



    அரிசி உணவு மட்டுமே உடல் பருமனுக்குக் காரணம் என்பது முற்றிலும் தவறு. இன்றைய அவசர வாழ்க்கையில், பெரும்பாலான டீன் ஏஜ் பெண்கள் சரியான நேரத்தில் தூங்குவதோ, உண்பதோ கிடையாது. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து, காலை லேட்டாக எழுகிறார்கள். இதனால், காலை உணவை மதிய வேளையில் உண்பதால், மதிய உணவும், இரவுக்கான உணவும் தள்ளிப்போகிறது.

    இது முற்றிலும் தவறான பழக்கம். உணவு சரியாகச் செரிமானம் ஆகாது. மேலும், இப்படியான பழக்கம் தொடரும்போது, அரிசி உணவு மட்டுமல்லாமல், எந்த உணவும் உடலைப் பருமனாக்கிவிடும். உடல் ஆரோக்கியத்தைப் பெரும் அளவில் பாதித்துவிடும். எனவே, தகுந்த நேரத்துக்குத் தூங்குதல் மற்றும் உணவு உண்ணுதல் என்பது மிக அவசியம். அரிசியையும் கோதுமையையும் கிட்டத்தட்ட சரிசமமாக உண்ணவேண்டும்.



    அரிசி உணவை முற்றிலும் தவிர்க்கும்போது பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இதர வைட்டமின்கள் நம் உடலுக்குக் கிடைக்காது. ரிபோஃபிளேவின் குறைபாட்டால் வாய்ப்புண், உதடு வெடிப்பு, நாக்குப்புண் போன்ற பாதிப்புகள் வரும். அதிலும், டீன் ஏஜ் பெண்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருவதுடன் உடல் சோர்வு ஏற்படும்.

    உழைப்புக்கு அரிசி உணவுதான் பெஸ்ட். சின்ன வயதிலே அரிசி சாதத்தைக் குறைத்து சாப்பிட்டு வந்தால், நாற்பது வயதுக்கு மேல் உடலில் தளர்ச்சி ஏற்பட்டுவிடும். புழுங்கல் அரிசியை வீட்டில் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தலாம். சிகப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, கேரளா அரிசி போன்றவை அரிசி வகைகளில் மிகவும் சிறந்தவை. இவற்றின் சுவை சற்றுக் குறைவாக இருந்தாலும் மற்ற அரிசி வகைகளைவிட உடலுக்கு நல்லது. பாலிஷ் செய்த அரிசியைத் தவிர்ப்பது நல்லது.
    மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒருசில மோசமான தவறுகளையும் தங்களை அறியாமலேயே செய்வார்கள். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
    மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அனுபவிக்கும் ஒன்று. இக்காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மேலும் மாதவிடாய் காலத்தின் போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலுடனும் கோபத்துடனும் நடந்து கொள்வார்கள்.

    அதோடு மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒருசில மோசமான தவறுகளையும் தங்களை அறியாமலேயே செய்வார்கள். இங்கு மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன

    மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள் ஒன்று தான் உணவுகளைத் தவிர்ப்பது. நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுகள் தான் வழங்குகின்றன. அந்த உணவுகளைத் தவிர்த்தால், அதனாலேயே கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

    ஜங்க் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே மாதவிடாய் காலத்தில் ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.



    மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களால் கடுமையாக அவஸ்தைப்படக்கூடும். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.

    பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்கமாட்டார்கள். இப்படி தூங்காமல் இருந்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் தூக்கத்தைத் தவிர்க்காதீர்கள்.

    மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம். இக்காலத்தில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். எனவே முடிந்தவரை மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள்.

    யோகா, உடற்பயிற்சி போன்றவை உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் அதை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்ப்பதே நல்லது.

    பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணி நோய்த்தொற்றுக்களையும், துர்நாற்றத்தையும் உண்டாக்கும். ஆகவே இக்காலத்தில் துணிகளுக்கு பதிலாக சுத்தமான சானிடரி பேடுகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
    2010-ம் ஆண்டு வரை 5 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15 சதவீதமாக அதிகரித்தது. தற்போது 30 சதவீதமாக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.
    பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமை அடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவம் ஆவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 முதல் 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம். பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்.

    1970-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 5 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15 சதவீதமாக அதிகரித்தது. தற்போது 30 சதவீதமாக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.

    சிசேரியன் பிரசவத்தால் பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி, தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்பு பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும்.



    ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப் பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம். சிசேரியன் பிரசவத்தில், தாயின் கர்ப்பப் பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும் பட்சத்தில், தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

    சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, தொற்றுநோய்கள் என பிறந்த முதல் 3 நாட்களில் பல பிரச்சினைகள் ஏற்படலாம். நிறைமாதமான 37 - 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்களை தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்.
    பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சிறுநீர் தொற்று. சிறுநீர் தொற்று பிரச்சனை எந்த முறையில் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    சிறுநீரகத் தொற்று, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதனால் அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரை குறைவாக வெளியேறுதல் உட்பட பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

    சிறுநீரகத் தொற்றுக்கான காரணங்கள் மற்றும் அதை சரிசெய்வதற்கான டிப்ஸ்கள்

    * சுகாதாரமில்லாத டாய்லெட்டை பயன்படுத்துதல், சிறுநீரை அடக்குதல், தண்ணீர் குறைவாக குடித்தல், தண்ணீர் குடிக்காமல் இருத்தல், தொடர்ந்து ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது, உடல் சூடு, உடம்பில் நீர்ச்சத்து குறைபாடு, சர்க்கரை வியாதி, ஸ்டீராய்டு எடுத்துக் கொள்ளுதல், சுகாதாரமில்லாத குடிநீர், தோல் வியாதிகள், ஆல்கஹால் பயன்பாடு, மரபணுக் கோளாறு உட்பட பல்வேறு காரணங்களால் சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது.

    * தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரில் வெட்டி வேர் போட்டு குடிக்கலாம்.

    * உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணி, செளசெள, சுரைக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.



    * பழங்களில் தர்பூசணி, கிர்ணிப்பழம், திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி எடுத்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காயை பச்சடி செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.

    * கால் கட்டை விரலில் வெள்ளை சுண்ணாம்பு வைத்தால் சிறுநீரால் ஏற்படுகிற கடுப்பு குறையும்.

    * தொப்புள்ளைச் சுற்றி விளக்ககெண்ணெய் தடவினால் உடல் சூடு குறையும்.

    * நீர் மோர் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேணடும்.

    * நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி பவுடர் வாங்கி கசாயம் செய்து குடிக்கலாம்.



    * சூடான நீரில் சீரகத்தை சிறிது போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து சாப்பிடலாம்.

    * வெந்தயத்தை மோரிலோ அல்லது இளநீரிலோ ஊற வைத்து குடிக்கலாம்.

    * வெள்ளரி விதையை அரைத்து தொப்புள்ளைச் சுற்றி பற்று போல் போட்டால் சரியாகும்.

    * நெல்லை பொடியாக்கி கசாயம் வைத்து சாப்பிடலாம்.

    * சோற்றுக்கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை பச்சையாக சாப்பிடலாம். உடல் சூடு தணிந்து சிறுநீரகத் தொற்று சரியாகும்.
    கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.
    ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார்.



    கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள்.

    எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.



    85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

    சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம். எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.
    உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம்.
    இன்றைக்கு வேலைக்குப் போகும் பெண்களிடையே கேஸுவல் வியர் என்றால் அது தோலை கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ், லெக்கின்ஸ், ஸ்லிம் ஃபிட் டாப்ஸ், டைட் குர்தி வகையறாக்கள் மட்டுமே என்றாகி விட்டது. அதே போல பெரும்பாலன பெண்கள் ஹை ஹீல்ஸ் பயன்படுத்துகின்றனர். உயரமான பெண்களே கூட பென்ஸில் ஹீல் என்று சொல்லக்கூடிய மெல்லிய கூரான ஹீல்ஸ் பொருத்திய காலணிகளை அணிய விரும்புகிறார்கள்.

    இந்த பென்ஸில் ஹீல் வகை செருப்புகளை முன்பெல்லாம் ராம்ப் வாக் மாடல்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள். இப்போது கல்லூரி, அலுவலகம் என எல்லா இடங்களிலும் இவற்றைப் போட்டுக் கொண்டு செல்வது ட்ரெண்டியான விசயமாகக் கருதப்படுவதால் பெண்கள் தங்களுக்கு அவை அசெளகரியமாக இருந்த போதிலும் அவற்றைப் பயன்படுத்தத் தயங்குவதே இல்லை.

    ஆனால் நமது அதிகப்படியான ஃபேஷன் அடிக்‌ஷன் கூட ஒரு கட்டத்தில் நாட்பட்ட முதுகுவலி, மூட்டு வலி, கழுத்து வலி, கண் எரிச்சல், போன்றவற்றிற்கு காரணமாகி விடுகின்றனவாம். இதை லண்டனில் இயங்கும் பிரிட்டிஷ் ஸிப்ரோபிராக்டிக் அசோஸியேசன் (BCA) குழும விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் தங்களது தொடர் ஆராய்சிகள் மூலம் தகுந்த சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறது.



    இதில் ஆச்சரியம் என்னவென்றால் 73 % பெண்கள் தங்களுக்கு வரக்கூடிய முதுகுவலிக்கு தாம் தினமும் பயன்படுத்தும் வார்ட்ரோப் தான் முக்கிய காரணம் என்பதை உணர்ந்தும், உணராமல் அலட்சியமாக இருப்பது தான் அவர்களை மேலும் தீரா வலியில் தள்ளி விடுகிறது. இதில் 28% பெண்களுக்கு மிக நன்றாகவே தெரியும், தங்களது முதுகுவலி, கழுத்து வலிக்கு பிரதான காரணமே தாங்கள் பயன்படுத்தும் இறுக்கமான உடைகளும், தமது உடல்வாகுக்கு சற்றும் பொருத்தமில்லாத உயரமான அல்லது கனமான காலணிகளும் தான் என்பது. ஆனாலும் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் தொடர்ந்து அதே விதமான ஆடைகளையும், செருப்புகளையுமே பயன்படுத்து வருகின்றனர் என்பது பல கட்ட ஆய்வுகளின் பின் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இவை மட்டுமல்ல இவர்களில் 10% பெண்கள் உடை மற்றும் காலணிகள் மட்டுமல்லாது, உடைகளுக்குப் பொருத்தமாக அணிவதாகக் கூறிக் கொண்டு கனமான கற்கள் வைத்த அல்லது பீட்ஸ்கள் என்று சொல்லப் படக் கூடிய பெரிய குண்டுமணிகளுடன் கூடிய ஆபரணங்களை வேறு தினசரி பயன்படுத்துகின்றனராம். இவை அனைத்துமே எந்த வகையிலும் ஒரு சராசரிப் பெண்ணின் உடல்நலனுக்கு நன்மை தரக்கூடிய விசயமே இல்லை.

    ஏனெனில் இவை அனைத்துமே பெண்களின் கழுத்து, முதுகு மற்றும் இடுப்புப் பகுதிகளின் இயல்பான இயக்கத்தை தடை செய்கின்றன. இதனால் அந்த இடங்களில் சிறிதி, சிறிதாக ஆரம்பமாகும் வலி தொடர்ந்து அவற்றைப் புழக்கத்தில் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் தீரா வலியாகத் தங்கி விடுகிறது என BCA ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



    உடலை இறுக்கிப் பிடிக்கும் கனமான ஜீன்ஸ்கள் (இடுப்பு வலி)
    இடுப்பைக் கவ்வும் மெல்லிய லெக்கின்ஸ் வகையறாக்கள் (இடுப்பு வலி)
    வட இந்திய ஸ்டைலில் அணியப்படும் கனமான நெக்லஸ்கள், காது தொங்கட்டான்கள், மூக்குத்திகள் ( கழுத்து வலி, கண் எரிச்சல், தலை வலி)
    பென்ஸில் ஹீல்ஸ் எனப்படும் உயரமான ஹீல் வைத்த செருப்புகள் (முதுகு வலி)

    மேற்கண்ட உடைகளையும், ஆபரணங்களையும் தவிர்த்தாலே போதும் பெரும்பாலான பெண்கள் தங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மூட்டு வலி, முதுவலி, கழுத்து வலி மற்றும் தலை வலிப்பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கிறது BCA ஆய்வு முடிவுகள்.
    பச்சிளம் குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற மன அழுத்தம், குழந்தையை பராமரிப்பதில் காட்டும் அக்கறை போன்றவை உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிவிடும்.
    கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை சராசரியாக 10 முதல் 13 கிலோ வரை அதிகரிக்கும். இந்த எடை அதிகரிப்பு குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமானதாகும். பிரசவத்தின்போது குழந்தையின் எடையோடு சேர்ந்து 4 கிலோ வரை எடை இழப்பு ஏற்படும். கர்ப்ப காலத்துக்கு முன்பு இருந்து வந்த எடைக்கு மீண்டும் திரும்ப பெண்கள் மெனக்கெடுவார்கள்.

    சீரற்ற உணவு கட்டுப்பாடு, சத்தில்லாத ஆகாரங்கள் உண்பது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை எடை அதிகரிப்புக்கு காரணங்களாகும். எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக உணவின் அளவை ரொம்பவும் குறைத்து விடக் கூடாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சத்துள்ள உணவுகளை தேவையான அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

    பச்சிளம் குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற கவலையில் எழும் மன அழுத்தம், பசி மறந்து குழந்தையை பராமரிப்பதில் காட்டும் அக்கறை போன்றவை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிவிடும். பால், தயிர், பீன்ஸ், பருப்புகள், மீன், முட்டை, தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



    அதில் இருக்கும் புரத சத்துக்கள் தாய்-சேய் இருவருடைய உடல் நலனுக்கும் நன்மை சேர்க்கும். ஒமேகா-3 கொண்ட கொழுப்பு அமில உணவுகள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுவடைய உதவும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அவை தாயின் உடல் எடை குறைவதற்கும் வழி வகுக்கும்.

    சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடையையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். பால் பருகுவதும் எலும்புகளை வலுவாக்கும். சுகப்பிரசவம் ஆன பெண்கள் 3 வாரங்களுக்கு பிறகு எளிதான உடற்பயிற்சிகளை செய்ய பழகிக்கொள்ள வேண்டும். குழந்தை பராமரிப்புக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி தினமும் பயிற்சியை தொடர வேண்டும்.

    போதுமான நேரம் தூங்கவும் வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஆழ்ந்து தூங்கி ஓய்வு எடுக்கும் பெண்களின் உடல் எடை குறைய தொடங்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நன்கு தூங்கி எழுந்தால் குழந்தையை சோர்வின்றி கவனிப்பதற்கு ஏதுவாக உடல் நலனும் மேம்படும்.
    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு, நவீனமுறையில் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை செய்யப்படுகிறது. கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கலாம்:-

    பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகளவு ரத்தப்போக்கு, இடையில் ஏற்படும் ரத்தப்போக்கு, வயிற்றின் அடியில் பின்புறம் ஏற்படும் வலி, முதுகு வலி, அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கர்ப்பப்பையில் ஏதேனும் கோளாறுகள் இருக்கலாம் என்று கண்டறியலாம்.

    மேற்கண்ட அறிகுறிகள் காரணமாக கர்ப்பப்பையில் உள்ள தசைகளில் வீக்கம் அல்லது வலி, கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கில் அதிகளவில் மாற்றம் ஏற்படுதல், அடிவயிற்று வீக்கம் அல்லது வலிஉண்டாகுதல், கர்ப்பப்பையின் பக்கத்தில் இருக்கும் சுரப்பிகளில் நீர் தேக்கம், கர்ப்பப்பை வீக்கம் மற்றும் சுரப்பிகளின் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.



    இந்த நிலையில் கர்ப்பப்பை பிரச்சினை தீவிரமாகும்போது கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. தற்போது அதிநவீன வீடியோ லேப்ராஸ்கோப்பி என்ற நவீன சிகிச்சைமுறையில் பாதுகாப்பாக கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.

    இந்த சிகிச்சை மூலம் ஓரிரு வாரங்களில் நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். இந்த லேப்ராஸ் கோப்பிக் ஹிஸ்ட்ரெக்டமி சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்படுவதால் நோயாளிக்கு வலி இருக்காது. லேப்ராஸ்கோப் ட்ரேக்கார் (சிறிய தொலை நோக்கு கருவி) என்ற கருவியின் உள் பகுதியில் கேமரா செலுத்தப்படுகிறது.

    இதனால் நோயாளியின் உடலின் உள்ளே இருக்கிற உறுப்புகள் பல மடங்கு பெரியதாக 3 டி திரையில் மிக தெளிவாகவும், துல்லியமாகவும் தெரிகிறது. இதனால் மருத்துவ நிபுணர்கள் மிக எளிதாக சிகிச்சைஅளிக்க முடிகிறது. கர்ப்பப்பை நீக்கப்பட்ட பிறகு அடிவயிற்றுப்பகுதியில் உள்ள சிறு துளைக்கு தையல் போடப்படுகிறது. அல்லது டேப் போட்டு ஒட்டப்படு கிறது. சில மாதங்களில் தழும்பே இல்லாமல் அந்த இடம் மாறிவிடுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை.
    அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர் வெளியேறும் யுரேத்திரா துவாரத்துக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான்.

    அதாவது நான்கு முதல் ஐந்து செ.மீ. தான் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு இந்த இடைவெளி 15 செ.மீ. தவிர, சிறுநீர் வெளியேறும் துவாரம், மலம் கழிக்கும் பகுதி, பிறப்புறுப்பின் வாய் என எல்லாமே பெண்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

    இதில் ஏதாவது ஒன்றில் தொற்று ஏற்பட்டால் கூட அது மற்றவற்றை பாதிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, சிறுநீர் வெளியேறும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி, அடிவயிற்றில் வலி… இவையெல்லாம் சிறுநீர் பிரச்சினைக்கான அறிகுறிகள். இதற்கெல்லாம் காரணம் கிருமிகள்.

    இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சிறுநீர் கழித்ததும் அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிடாயின் போது உறுப்புகளை சுத்தமாக தண்ணீர் கொண்டு முன் புறத்தில் இருந்து பின் புறமாக கழுவவேண்டும்.



    மாற்றி கழுவும் போது மற்ற உறுப்பு துவாரத்தில் உள்ள பாக்டீரியா கிருமிகள் சிறுநீர் கழிக்கும் துவாரத்தில் தங்கி தொற்று ஏற்பட வழிவகுக்கும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் “ஸ்ட்ரெட்ஸ் யூரினரி இன்கொன்டினன்ஸ்’ என்ற பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

    சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சினையாலும் அதைச் சுற்றியிருக்கும் தசைகள் தளர்வடைவதாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும். இவர்கள் தும்மினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, ஏதாவது எடையை தூக்கும் போதோ அல்லது குனிந்து நிமிரும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படும்.

    பொதுவாக மற்றவர்கள் 4 முதல் 6 மணி வரை சிறுநீரை அடக்க முடியும். ஆனால் இவர்களால் அடக்க முடியாது. சிறுநீர்ப்பை முழுக்க சிறுநீர் தேங்கி இருக்கும் போது லேசான தும்மல் வந்தால் கூட பெரும் அளவில் கசிவு ஏற்படும். சிலர் அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    இந்தப் பிரச்சினை சுகப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள், சீறுநீர் நோயாளிகள், தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமனாக உள்ளவர்களை அதிகம் பாதிக்கும். இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் அசௌகரியத்தால் அவர்கள் மனதளவில் பாதிப்படைகிறார்கள்.



    வெளியே சொல்லவும் கூச்சப்படுகிறார்கள். ஆனால் இனி இந்தப் பிரச்சினையை கண்டு கூச்சப்படாமல் அதற்கான நிபுணரை அணுகி அறுவை சிகிச்சை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் .

    சுகப் பிரசவம் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு சிறுநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு திருமணமான புதிதில் பல பெண்கள் சிறுநீர் பிரச்சினையால் அவதிப்படுவார்கள். இது அந்த காலகட்டத்தில் ஏற்படும் சாதாரண விடயம்தான்.

    நாளடைவில் அது சரியாகி விடும். சில சமயம் உடல் உறவின் போது அவர்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சினை காரணமாக சிறுநீர்ப் பை பாதிப்படையும். அதற்குத் தகுந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலே போதும்.

    அதேபோல் பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சினை இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக யாருமே சிறுநீரை அடக்கக் கூடாது. ஒரு நாளைக்கு தேவையான இரண்டரை லிட்டர் தண்ணீரை அனைவரும் பருக வேண்டும்.

    கருத்தடை சாதனம் பயன்படுத்துவதாலும் பெண்களுக்கு சிறுநீர்ப்பை பாதிப்படையும். அதேபோல் பிரசவக் காலத்திலும் சிறுநீர் தொற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் அது குழந்தையை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

    பெண்களுக்கு உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது.
    பெண்களுக்கு உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. உள்ளாடைத் தேர்வில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டிய விழிப்புஉணர்வுத் தகவல்களை பார்க்கலாம்.

    ``ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில் தன் மார்பக அளவில் ஆறு முறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின் வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்பகாலத்தின்போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பிறகு, பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும்.

    தாய்ப்பாலூட்டு வதை நிறுத்திய பிறகு, பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும். இப்படிப் பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் பலர் அதற்கேற்ற வாறு தங்களின் பிரேஸியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

    பொதுவாக, பெண்கள் பிரேஸியர் வாங்கும்போது 32, 34, 36 என உடல் சுற்றளவின் அடிப்படையிலேயே அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அதன் கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது A,B,C என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. உதாரணமாக, 34A என்பது உடலின் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34B என்பது சராசரி கப் சைஸும் 34C என்பது சிறிய கப் சைஸும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமன்றி, கப் சைஸையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.



    அதிக இறுக்கமாக அல்லது தளர்வாக பிரேஸியர் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும்போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம். பாலூட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளைத் தவிர்க்க கட்டாயம் பிரேஸியர் அணிய வேண்டும்.

    குழந்தை பிறப்புக்குப் பின் சில பெண்கள் பிரேஸியர் அணியும் பழக்கத்துக்கு விடைகொடுத்து விடுகிறார்கள். அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்ட விஷயம். மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும் செல்களின் தொய்வைக் குறைக்கவும் பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது.

    * சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து எப்போதும் காட்டன் பிரேஸியரையேப் பயன்படுத்தவும்.

    * வெயிலில் அதிகம் செல்பவர்கள் புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    * உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா சைஸையும் மாற்றிப் பயன்படுத்தவும்.

    * பொதுவாக, ஒரு பிரேஸியரை ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரைப் பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லூஸாகி, ஹூக் உடைந்து, துணி நைந்து போனவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
    தாம்பத்தியத்தில் சில பெண்களுக்கு அதிகளவில் நாட்டம் இருக்காது. அதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் சில வெளியில் சொல்ல முடியாத காரணங்களும் இருக்கதான் செய்கிறது.
    தாம்பத்தியத்தில் சில பெண்களுக்கு அதிகளவில் நாட்டம் இருக்காது. அதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும் சில வெளியில் சொல்ல முடியாத காரணங்களும் இருக்கதான் செய்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

    1. உடலுறவின் போது வலி
    2. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல்
    3. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.

    பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்

    1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
    2. பரபரப்பு, மனச்சோர்வு
    3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
    4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
    5. டீன் ஏஜ் பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.



    ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்


    ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.

    பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயல உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
    மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும்.
    மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. இப்படி கிடைக்கும் மாத்திரைகளை பெண்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க, கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

    மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி என மருத்துவர் கூறுகிறார் கேளுங்கள்.

    மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்

    விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல... எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்.



    மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால் அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது.

    டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

    இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். இதனால் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்.

    மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.

    ×