என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டாம் என்றும், குளிர்ச்சியான நீரை பருக வேண்டாம் என்றும் கூறுவதற்கான காரணத்தை பார்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பெரியவர்கள் பால் கொடுக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார்கள். அவை எல்லாம் அர்த்தம் இல்லாத மூட நம்பிக்கை என நீங்கள் நினைக்க வேண்டாம்.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டாம் என்றும், குளிர்ச்சியான நீரை பருக வேண்டாம் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் பின்னணியை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

    குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களுக்கு தாயின் உடல் சற்று ஆரோக்கியமில்லாமல் இருக்கும். இதனால் அவர்கள் குளிர்ந்த நீரில் குளித்தாலோ, குளிர்பானங்கள் அல்லது குளிர்ந்த நீரை பருகினாலோ அவர்களுக்கு சளி பிடிக்க கூடும்.

    தாய்க்கு சளி பிடித்திருந்தாலும் கூட, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு சளி பிடிப்பதில்லை. ஏனெனில் வைரஸ் தொற்றுகள் தாய்ப்பாலை பாதிப்பதில்லை. ஆனால், தாயின் உடலில் இருந்து வெளியேறும் சளி அல்லது நீர்மங்கள் குழந்தையின் மீதுப்பட்டால் குழந்தைக்கும் சளி பிடிக்கிறது. தாய்க்கு சளியின் அறிகுறி தெரியும் முன்னரே குழந்தைக்கு சீக்கிரமாக சளி பிடித்துவிடும்.

    குளிர்ச்சியான பானங்களை குடிப்பது பாலின் தன்மையை மாற்றுவதில்லை. ஆனால் அதிகமாக ஐஸ் சேர்த்து குடிப்பதை நிறுத்திவிட்டு, அதிகளவில் நீர்மங்களை பருகுவது சிறந்தது. இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு உதவும்.

    பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவு புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமின்றி நீங்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட பாலூட்டும் போது 400 கலோரிகள் அதிகமாக சாப்பிட வேண்டியது அவசியம்.

    உங்களுக்கு குளிர்பானங்களை பருக பிடித்தால், பிரஷ் ஜீஸில் ஐஸ் போட்டு, கோடைகால மதிய வேளைகளில் பருகுங்கள். இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் உண்டாகாது.
    ஆஸ்துமா பிரச்சனைகள் கர்ப்பகாலத்தில் பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் போன்ற சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் கர்ப்பகால பெண்களை பாதிக்கும் போது, எந்த மாதிரியான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா பிரச்சனை, கருவிற்கு ஆக்ஸிஜன் செல்வதை தடுத்து விடும். இந்த பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டால், அது கர்ப்பிணி பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கி, கர்ப்பிணி பெண்களின் மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நஞ்சுக்கொடி ஆகியவற்றை பாதிப்படையச் செய்யும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், கருவில் உள்ள குழந்தை சிறிதாக, சரியான எடையின்றி பிறப்பதற்கும் அல்லது குழந்தை இறந்து பிறப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்துகளை குறைக்க முடியும்.

    கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் குழந்தையின் அசைவுகள் மற்றும் மூச்சுக்குழாய் மற்றும் கருவிற்கு ஆக்ஸிஜன் சரியான அளவில் செல்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    பெண்கள் அதிகமாக இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சரியான அளவு இரத்தம் பெண்களின் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.
    பெண்கள் அதிகமாக இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த பற்றாக்குறை இருக்கிறது. கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சரியான அளவு இரத்தம் பெண்களின் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.

    உங்களுக்கு இரத்தசோகை உண்டாகுமா என்பதை இந்த சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 1. முதல் பிரசவத்தில் அதிக இரத்த போக்கு 2. 20 வயதிற்கு முன்னர் தாயாவது 3. குறைவான உணவு சாப்பிடுவது 4. இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது 5. மாதவிடாயின் போது அதிக இரத்தபோக்கு 6. மிகக்குறைந்த கால இடைவெளியில் இரண்டாவது குழந்தை 7.விட்டமின் சி உணவுகளை குறைவாக உண்பது..

    உங்களுக்கு இரத்தசோகை இருப்பதை இந்த சில அறிகுறிகள் வெளிப்படுத்திவிடும். 1. தலை சுற்றல் 2. தலைவலி 3. மூச்சு விடுவதில் சிரமம் 4. நெஞ்சு வலி 5. எரிச்சலடைவது மற்றும் கவனமின்மை 6. வெளிர் நிறம் கொண்ட கண்களின் அடிப்பகுதி, மேல் அன்னம் மற்றும் நகங்கள் 7. ஸ்பூன் வடிவில் நகங்கள் இருப்பது.

    நீங்கள் உங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள முதல் மாதம் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லும் போதே அவர் உங்களது இரத்ததின் அளவை பரிசோதனை செய்துவிடுவார். நீங்கள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் இதனை நிவர்த்தி செய்யலாம்.

    சிறிதளவு இரத்த குறைபாடு இருந்தால் அதற்காக நீங்கள் அதிகம் பயப்பட தேவையில்லை. உரிய சிகிச்சைகளை எடுத்து கொண்டால் போதுமானது. ஆனால் இதனை கவனிக்காமல் நீண்ட நாட்கள் விட்டுவிடுவது ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.

    நீங்கள் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றால் அது குழந்தையை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. நீங்கள் கர்ப்பத்தின் ஆறு மாதம் வரை இரத்த சோகையை சரி செய்யாமலேயே வைத்திருந்தால், அது குழந்தை குறைந்த உடல் எடையுடன் பிறக்க காரணமாகிவிடும்.

    மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். உணவுகளை தவிர்க்காமல் இருங்கள். மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, ஆரஞ்ச் ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு சில உணவுகள் இரும்பு சத்தை உடல் உறிஞ்ச தடையாக இருக்கும். காபி, டீ, சோயா ஆகியவற்றை சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டு விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இரும்பு சத்து உணவுகளை சாப்பிடுங்கள்.

    பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் சிறுநீரக தொற்றிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணத்தை இப்போது பார்க்கலாம்.
    சிறுநீரக தொற்றை உண்டாக்கும் கிருமி ஈகோலை என்கின்ற பேக்டீரியா. இந்த பாதிப்பு ஆண் பெண் என இருவருக்கும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம் தாக்கப்படும் இந்த தொற்றிற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

    கிருமிகள் சிறுநீரக பாதையில் உருவாகி, அதனை கவனிக்காமல் அப்படியே விடும்போது, அது பலமடங்கு பெருகி, சிறுநீர் பாதையிலிருந்து பரவி சிறுநீரகப் பை மற்றும் கடைசியாக சிறு நீரகத்தை அடைகிறது.

    சிறுநீர் பாதையில் உண்டாகும்போது ஆரம்ப நிலை எனலாம். அப்போது, எரிச்சல், அடிவயிறு வலி, காய்ச்சல் ஆகியவை உண்டாகும். அது தீவிரமாகும்போது சிறுநீரகத்தை அடைகிறது. இதனால் சிறுநீரகமே பாதிக்கும் நிலை உண்டாகும்.

    ஆரம்ப நிலையில் அதிக நீர் குடித்தால், கிருமிகள் வெளியேறிவிடும். அதோடு மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம். தீவிரமாய் இருந்தால் அதற்குரிய பரிசோதனைகளை செய்து என்னவென்று ஆராய்தல் நல்லது.

    இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் இரண்டுமே சிறுநீரக்தொற்றை உண்டாக்கும். காரணம் சிறுநீர்ப்பாதையும், ஆசன வாயும் அருகருகே இருப்பதால் எளிதில் கிருமிகள் தாக்கிவிடும்.

    சர்க்கரை வியாதி இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது சிறுநீரிலும் வெளியேற்றப்படும். சிறுநீர், சிறு நீர்ப்பையில் அதிக நேரம் தங்கும்போது, சர்க்கரையால் அதிக அளவு கிருமிகள் உருவாகி தொற்றை ஏற்படுத்திவிடும்.

    சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்தால் அவை கிருமிகளை உருவாக்கிவிடும். ஆகவே அவ்வப்போது சிறுநீரை கழித்துவிடுதல் அவசியம்.

    இது தவிர சுத்தமான உள்ளாடை அணியாமலிருப்பது, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைக்காமலிருப்பது, போதிய அளவு நீர் குடிக்காமலிருப்பது ஆகியவைகளும் சிறுநீர் தொற்றை ஏற்படுத்தும்.
    தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
    தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

    அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

    * கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

    * குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

    * மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

    * எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

    * அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

    * கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

    * அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

    * சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

    * மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

    * கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

    * தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

    * அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

    * இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.

    மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.
    குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிரும் இரட்டைக் குழந்தையென்றால் அதீத கவனம் தேவை.
    குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிரும் இரட்டைக் குழந்தையென்றால் அதீத கவனம் தேவை. இரண்டு குழந்தைகளுக்குமான உணவு, நீர், சுவாசம் என அத்தனையையும் தாய் நிறைவேற்ற வேண்டும்.

    அதனால் நேரத்துக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் சிகிச்சை முறைகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரட்டை குழந்தைகளை சுமர்ப்பவர்களுக்கு அதிக அளவில் வாந்தியும் குமட்டலும் வந்து அலைக்கழிக்கும். அதிகாலையில் தூங்கி எழும் முன்பே இந்த தொல்லை ஆரம்பித்துவிடும்.

    வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியால் சாப்பிடவே வேண்டாம் என்பது போல் ஆகிவிடும். வாந்தி என்பது கர்ப்ப காலத்தில் சகஜமாகக் காணப்படுகிற ஒன்று தான் என்றாலும், இரட்டைக் கருவை சுமப்பவர்களுக்கு அந்த உணர்வு மற்றவர்களை விட மிக அதிகமாகவே இருக்கும்.

    அந்த வாசனைகளை சகித்துக் கொள்ள முடியாததால் விருப்பமான உணவுகளைப் பார்த்தால் விலகி ஓடிவிட வேண்டும் போல் தோன்றும். கர்ப்பம் உறுதியாகிற வரை மிகவும் பிடித்திருந்த உணவின் வாசனை, கர்ப்பம் தரித்த பிறகு மிக மோசமான வாசனையாகத் தோன்றும்.

    இந்த லிஸ்ட்டில் காபி, டீக்கு முதலிடம். இரட்டைக் கரு உருவாகியிருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களிலேயே கர்ப்பிணிகளின் எடையில் கூட ஆரம்பித்துவிடும்.

    அப்படி அதிகரிக்கிற எடை என்பது வெறும் குழந்தைகளின் எடை மட்டுமின்றி, உடலில் சேருகிற அதிகப்படியான திசுக்கள், திரவம் மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் சேர்த்தது தான்.

    வழக்கமாக கர்ப்பிணிகளுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கிற வயிறு, இரட்டைக் கர்ப்பம் சுமப்பவர்களுக்கு இன்னும் சீக்கிரமே தெரியும்.

    அடுத்தடுத்த மாதங்களிலும் வயிற்றின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும். உள்ளாடை அணிய முடியாத அளவுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகும்.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்ப காலத்தில் சகஜம். ஆனாலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது, அந்த உணர்வு இன்னும் தீவிரமாகும்.

    அளவுக்கு மிஞ்சிய களைப்பு உண்டாகும். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பதே போராட்டமாகத் தெரியும். பிரசவ ஹார்மோன் என்று சொல்லக்கூடிய Chorionic Gonadotropin Hormone அளவு மிக அதிகமாக இருக்கும்.

    இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற முதல் சிறுநீர் சோதனையிலேயே தெரியும். கர்ப்பப்பை விரிவடைவதன் விளைவாக, இரட்டைக்கரு உருவான பெண்களுக்கு கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு மாதிரியான உணர்வு உண்டாகும்.

    இதயத்துடிப்பில் வேகம் தெரியும். சாதாரண நிலையில் 70 முதல் 80 வரை இருக்கும் இதயத்துடிப்பானது, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு 95 முதல் 105 வரை கூட எகிறும்.

    காரணமே இல்லாமல் திடீரென அழுகை, தடுமாற்ற மனநிலை போன்றவையும் உண்டாகும் வாய்ப்பு உண்டு. ஒரு குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அளவோடு இருக்கும் இந்த உணர்வுகள், இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தென்படும்.

    குழந்தைகளின் அசைவைக் கூட சீக்கிரமே உணர்வார்கள் இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்கள்.
    பெண்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் மற்றும் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ”கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவு இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன.

    காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்தில் மட்டும்தான் இருக்கின்றன. அதனால் கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடலாம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடும் போது எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்.

    ”கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாது என்று சொல்வது ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண மருத்துவர்கள் சொல்வார்கள். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும்.

    சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடல் அளவில் பிரச்சனை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும்.

    சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாமல், கணவன் - மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்.
    தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச்செல்கின்றது. இதை தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    உள்ளாடை உங்கள் தோற்றத்தினை முடிவுசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான உள்ளாடைகள் உங்கள் மார்பு, முதுகு மற்றும் தோள் பகுதியில் தழும்புகளை விட்டுச்செல்கின்றது. சரியான பிராக்களை தேர்வு செய்வதன் மூலம் அதை அணியும்போது அல்லது அணிந்து கழட்டியபின் உங்கள் உடம்பில் கடும் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியும். ஆனால் இது போன்ற தழும்புகள் ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது, அதை எப்படி சிகிச்சை அளித்து ஆறவைப்பது என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

    இறுக்கமான ஸ்ட்ராப்களை சற்று தளர்த்தி அது உங்கள் உடம்பில் பள்ளங்களை ஏற்படுத்தி தழும்பை உருவாக்காமல் இருக்குமாறு செய்யுங்கள். தழும்புகளைத் தவிர்க்க இது சிறந்த மற்றும் முதலில் செய்யக்கூடிய வழிமுறை.

    பிராவின் எலாஸ்டிக் எங்கெல்லாம் அழுத்தம் தருகிறதோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லியை தடவுங்கள். இது உங்கள் உடம்பில் அழுத்தம் உள்ள இடங்கள் ஈரப்பதத்துடன் இருக்கவும் அங்கு சருமம் பாதிக்கப் படாமலிருக்கவும் உதவும்.

    இந்த பகுதியில் உராய்வினாலும் அசைவினாலும் ஏற்படும் கருமையாகவோ அல்லது சிவந்தோ போய்விட வாய்ப்புண்டு. அப்படியானால் அங்கு இறந்த சரும செல்களில் சேர்க்கை அதிகமாக இருக்கும். அதனால் அவற்றை நீக்கி சுத்தப்படுத்தவேண்டும்.

    மேற்கூறியவாறு இறந்த செல்களை அகற்றியபிறகு, அங்கு ஈரப்பதத்தை தக்கவைக்க தேவையான மாயிஸ்சரைசர் அல்லது ஈரப்பதம் தரும் ஏதாவது ஒன்றை தடவவேண்டும். இது உராய்வைக் குறைக்கும்.

    சோற்றுக் கற்றாழை குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால் நாள் முழுவதும் பிரா அணிந்துவிட்டு சோர்வடையும்போது இதமாக இருக்கும். இந்த ஆலோவெரா ஜெல்லை சிறிது தடவினால் அது தழும்பு மற்று உராய்வினால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும்.

    மிகவும் அழுத்தமான பிராவை அணிந்தபிறகு ஏற்படும் அசவுகரியம் மற்றும் வலிக்கு இந்த ஐஸ் பேக் ஒத்தடம் ஒரு இதமான சக்திய்வாய்ந்த வலி நிவாரணி. இதனால் பிராவில் உள்ள ஸ்ட்ராப் தழும்புகளைத் தவிர்க்க இது மிகவும் உதவும்.

    மஞ்சளை அரைத்து பிரா எலாஸ்டிக் அழுத்தத்தினால் நிறம் மாறிய இடங்களில் தடவுங்கள். இது நிறம் மாறிய சருமத்தை வெண்மையாக்கவும் தழும்புகளை படிப்படியாக குணமாக்கி ஆறுதல் அளிக்கவும் செய்யும்.
    சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையால் தாம்பத்திய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
    நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண்-பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்துவருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைபடுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

    சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது.

    இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.

    நடு‌த்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

    பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள். ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம்.

    ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.

    இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.
    வேரிகோஸ் வெயின் (Varicose Venis) என்பதனை உரையாடல் வழக்கத்தில் நரம்பு முடிச்சு என்றும் சுருள் சிரை நரம்பு என்றும் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
    கர்ப்பம், மாதவிடாய் நிற்றல், ஹார்மோன் மாறுபாடுகள், கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை கூட வேரிகோஸ் வெயின் பாதிப்பினை ஏற்படுத்தும்.

    * கர்ப்பம் - கர்ப்ப காலத்தில் கால்களிலிருந்து இடுப்பிற்கு வரும் ரத்தத்தின் வேகம், அளவு குறையும் வாய்ப்பு அதிகமாவதால் கால்களில் வீங்கிய ரத்த குழாய்கள் இருக்கும். ஹார்மோன் மாறுபாடுகளும் காரணமாக இருக்கலாம். பேறு காலத்திற்குப் பிறகு 12 மாதங்களில் சகஜ நிலை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

    * வெகு நேரம் நிற்கும் பணியாளர்கள் இந்த பாதிப்பிற்கு எளிதில் ஆளாகின்றனர்.

    இந்த பாதிப்போடு புண் ஏற்படலாம், ரத்த கட்டிகள் உருவாகலாம். அதிக ரத்த கசிவும் ஏற்படலாம்.

    மருத்துவர் இதனை பார்த்தே பாதிப்பினை அறிவார். அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் வால்வு பாதிப்பு போன்ற மேலும் பல தகவல்களை அறிய உதவுகின்றன.



    சிகிச்சை:

    முதலில் மருத்துவர் அன்றாட வாழ்க்கை முறையில் சில அறிவுறுத்தல்களை அளிப்பார்.

    * நீண்ட நேரம் நிற்பதனை தவிர்க்க வேண்டும்.

    * எடையினை குறைத்தல் அவசியம்.

    * ரத்த ஓட்டம் சீராக இருக்கும் படியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

    * கால்களை படுக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் உயர தூக்கி வைத்தல் அவசியம்.

    * அழுத்தம் தரும் ஸாக்ஸ், உறைகள் அறிவுறுத்தப்படும். இவை பலன் அளிக்காத போது லேசர், அறுவை சிகிச்சை என அவசியத்திற்கேற்ப சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.

    பொதுவில் நீண்ட நேரம் உட்காருவது, நீண்ட நேரம் நிற்பது இவற்றினை தவிர்ப்பதும், வேலை எதுவும் செய்யாது ‘மெத்தென’ இருப்பதனை தவிர்ப்பதும் வருமுன் காப்போனாக இருக்கும்.

    சில குறிப்பிட்ட வகை யோகா பயிற்சி முறைகள் ‘வேரிகோஸ் வெயின்’ பாதிப்பினை தவிர்ப்பதாகவும், பாதிப்பு ஏற்பட்டாலும் வலியின்றி இருக்க உதவுவதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், எந்த வகையான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

    உண்மையில், மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. `பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான்.

    இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்னையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.

    * மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது, பிசிஓடி பிரச்னையைப் போக்க உதவும்.



    * கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, `அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும்.

    * குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்கிறது ஒரு சித்த மருத்துவப் பாடல். இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.

    * ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதப்படுகிறதா? உணவில் அதிகமாக முளை கட்டிய பயறு வகைகளையும், லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவதொன்றை தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.



    * மாமிச உணவைவிட, மரக்கறி உணவே (காய்கறி, பழங்கள்) விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும்.

    * முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
    குழந்தை பராமரிப்பை பற்றி இன்றைய பெற்றோருக்கு சரிவர தெரிவதில்லை. இன்று பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம்.
    நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். பொதுவாக, பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம்.

    குழந்தைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும். இதனால், சில தாய்மார்கள் இரவிலும் குழந்தையை எழுப்பி பால் புகட்டுவார்கள். இது தேவையில்லை. பொதுவாக ஆறு வாரத்திலேயே குழந்தைக்கு, பால் அருந்தும் நேரம், தூங்கும் நேரம் என 'ரிதம் செட்’ ஆகிவிடும். எனவே இரவில் பசிக்கு அழுதால் மட்டும் பால் புகட்டினால் போதும். குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பாலே போதும். தனியாக தண்ணீர் தர வேண்டியது இல்லை. ஆறு மாதத்துக்குப் பிறகு பால் அருந்தியதும் சிறிது காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் குடிக்கச் செய்யலாம்.

    அவ்வப்போது, குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு அந்தந்த மாதத்துக்கான வளர்ச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். வளர்ச்சி குறைவாக இருந்தால் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது.

    பச்சிளம் குழந்தைதானே என்று பெற்றோர்கள் குழந்தையின் வாய் பராமரிப்பைப் புறக்கணிக்கிறார்கள். பல் முளைக்காதபோதும் வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தைக்குப் பால் புகட்டியதும் மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து குழந்தையின் ஈறுகளையும், வாயையும் துடைக்க வேண்டும். ஃபுளோரைட் குழந்தைக்கு மிக அவசியமான தாது உப்பு. அது நீரில் போதுமான அளவு இருக்கிறது.



    இரவில் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகக் குழந்தையின் தூக்கப் பழக்கத்தை மாற்றுகிறேன் என்று சில தாய்மார்கள், பகலில் நீண்ட நேரம் குழந்தையை விழித்திருக்க முயற்சிப்பார்கள். குறைந்தது, ஓராண்டு வரையில் இந்தப் பழக்கத்தை முயற்சிக்காதீர்கள். அதிகச் சோர்வும்கூட, குழந்தையின் தூக்கத்தைக் கெடுத்துவிடக்கூடும். குழந்தை எப்போதெல்லாம் தூங்க விரும்புகிறதோ அப்போது அதைத் தூங்க வைத்துவிடுங்கள்.

    குழந்தைகள் வார்த்தைகளை பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே மொழியைக் கண்டறியவும், கற்கவும் முயற்சிக்கின்றன. அதனால் பெற்றோர்கள் பொருளற்ற ஓசைகளை எழுப்புவதைக்காட்டிலும் குழந்தைகளிடம் பேச வேண்டும். ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லச்சொல்ல அந்த வார்த்தைகளைப் பேச குழந்தை முயற்சிக்கும். நாம் பேசும்போது நம்முடைய வாய் அசைவு, முக அசைவுகளை குழந்தை உற்றுநோக்கும். இதன்மூலம் குழந்தையின் மொழி திறன் மேம்படும். எனவே, குழந்தைக்குப் புரியவில்லை என்றாலும்கூடத் தொடர்ந்து பேசுங்கள். குழந்தையின் கண்ணைப் பார்த்துப் பேசுவதும், அதன் கவனத்தை ஈர்த்து, பேசத்தொடங்கும்.

    வேற்று முகம் அறியாதாது மழலை. யார் கூப்பிட்டாலும், சிரித்தபடியே ஓடிவரும். ஆனால், வளர வளர, பெற்றோரைத் தவிர, வேறு யாரிடமும் ஒட்டாது. குழந்தைக்கு, சமூகத்துடனான உறவாடல் இல்லாமல் இருப்பது நல்லது அல்ல. இதனைத் தவிர்க்க, அக்கம்பக்கத்தினரிடம் பழக விடுங்கள். நிறையக் குழந்தைகளைப் பார்த்ததும் குழந்தை துள்ளிக் குதிப்பதைப் பார்க்க முடியும். பாட்டி, அத்தை, சித்தி என்று வாரம் அல்லது மாதம் ஒரு முறை உறவினர்களிடம் கொண்டுவிடுங்கள். உறவுகளின் உன்னதத்தை உணர்ந்து, குழந்தை பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்.
    ×