என் மலர்
சமையல்
நவராத்திரி 9 நாட்களும் விதவிதமான நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வார்கள். இன்று நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்க சூப்பரான கொழுக்கட்டை சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதில் 1 சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.
மாவு நன்றாக வெந்தவுடன் மூடி போட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
இந்த உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். பின்பு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியாக வேகவைத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
சூடான கொழுக்கட்டை சுண்டல் தயார்.

குழந்தைகளுக்கு தந்தூரி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் செய்வது போன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
தந்தூரி மசாலா - சிறிதளவு
தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் - ஒன்று
வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.
வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.
பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.
சூப்பரான தந்தூரி சிக்கன் ரெடி.

தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
காய்ச்சிய பால் - அரை கப்,
உப்பு - அரை டீஸ்பூன்.
ஸ்டஃப் செய்வதற்கு:
முட்டைகோஸ் துருவல் - அரை கப்,
வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை - தலா கால் கப்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும்.
முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும்.
அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!
பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும்.
தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.
சத்தான முட்டைகோஸ் ரொட்டி ரெடி.

குழந்தைகளுக்கு தேங்காய் பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் தேங்காய் பிஸ்கட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 80 கிராம்
சர்க்கரை - 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
உப்பு - சிட்டிகை
செய்முறை
முதலில் உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பி
ன் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.
சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.

மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.
கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.
தேவையான பொருட்கள் :
கருப்புக்கவுனி அரிசி மாவு - 1 கப்.
உளுந்துமாவு - 1 கப்.
நெய் - 1 கப்.
பனைவெல்லம் - 1 கப்.
செய்முறை:
கருப்புக்கவுனி அரிசி மாவு, உளுந்துமாவு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பனைவெல்லத்தை 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாகு ஆக்க வேண்டும்.
பின்பு அதில் மாவு வகைகளை கொட்டி, கெட்டியாகாமல் கிளற வேண்டும். நன்கு வெந்ததும் நெய் விட்டு, கிளறி இறக்க வேண்டும்.
சத்தான சுவையான கருப்புக்கவுனி களி ரெடி.
கத்திரிக்காயில் சட்னி, குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்திரிக்காயை வைத்து சூப்பரான தம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 250 கிராம்,
வெங்காயம் - ஒன்று,
கத்திரிக்காய் - 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது),
தக்காளி - 3,
மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி… மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
(அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்).
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்…
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும்.
இப்போது இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.
சூப்பரான சூப்பரான கத்திரிக்காய் தம் பிரியாணி ரெடி.

காலையில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கீரை, கேழ்வரகு சேர்த்து ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
ராகி மாவு - கால் கப்
கீரை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
கீரை, வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைமாவு, ராகி மாவு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்குங்கள்.
நறுக்கியவற்றை மாவில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு ஆம்லெட்டாக ஊற்றி சிறு தீயில் வேகவிட்டு திருப்பி போட்டு எடுத்து சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.

நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இன்று ஜவ்வரிசியில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - ஒரு கப்,
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி - சிறிய துண்டு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும்.
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும்.
அரிசி நன்கு அரைபட்டவுடன்… ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.
தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.
புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகு அவல் வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு அவல் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.
வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். அடுப்பை ‘சிம்'மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் பூண்டு, மிளகு சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை- சிறிதளவு
நெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.
சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி..!

ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும் நிலையைத் தடுக்க அடிக்கடி உபயோகிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு ராஜ்மா - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
ராஜ்மாவை குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்துத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவிடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, அதில் வேகவைத்த ராஜ்மாவைச் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து அதில் அரைத்த பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான சத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.

தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஆலு மசாலாவை இன்று எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக் கிழங்கு - அரை கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள், சீரகத் தூள் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள்.
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள்.
உருளைக்கிகிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!