search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டைகோஸ் சமையல்"

    • முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும்..
    • முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல், செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்,

    வடித்த சாதம் - ஒரு கப்,

    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,

    பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்),

    மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,

    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்,

    இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபி ள்ஸ்பூன்,

    பட்டை - சிறிய துண்டு,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - 2,

    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொல பொலவென்று உதிர்ந்து விடும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின்னர் பட்டை, மிளகு, சீரகத்தூள், கடலை பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊற வைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேக விட்டு இறக்கவும்.

    இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
    • முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி - 1/2 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!

    • வாரம் ஒருமுறை முட்டைகோஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்.
    • முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவும்.

    தேவையான பொருட்கள்

    முட்டைகோஸ் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை பழம் அளவு

    உப்பு - தேவைகேற்ப

    இஞ்சி - சிறு துண்டு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    செய்முறை

    முட்டைகோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாயை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.

    வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி பரிமாறவும்.

    ×