search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க...
    X

    தோசை, இட்லிக்கு சூப்பரான சட்னி செய்யலாம் வாங்க...

    • மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
    • முட்டைகோஸில் உள்ள நார்சத்து செரிமான, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    முட்டைகோஸ் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி - 1/2 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    புளி - சிறு துண்டு (நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்)

    துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 1

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முட்டைகோஸ், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து பொன்னிறமாக தாளித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து, பின் அதில் புளிச்சாறு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றினால், முட்டைகோஸ் சட்னி ரெடி!!!

    Next Story
    ×