என் மலர்

  நீங்கள் தேடியது "Modak"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள்

  தினை அரிசி - 1 கப்
  வெங்காயம் - 1
  கேரட்  - 1
  ப.மிளகாய் - 2
  தேங்காய் - 1 துண்டு
  கடுகு - 1 தேக்கரண்டி
  உளுந்து - 2 தேக்கரண்டி
  கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  கொத்தமல்லி - 2 கைப்பிடி
  எண்ணெய் - 1 தேக்கரண்டி
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

  வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

  ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

  பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

  காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

  மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

  சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பேரீச்சம்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  நவீன மருத்துவ ஆய்வுகள் பேரிச்சம்  பழத்தை உணவில் சேர்ப்பது, உடல் வழியாக மூளையை ஊடுருவி நியூரோ டீஜெனெரேட்டிவ் எனப்படும் ஞாபக மறதி/மூளை சிதைவை உண்டாக்கும் இன்டெர்லுக்கின் (I L- 6)  போன்ற குறிப்பான்களை தடுத்து,  மூளை செல்களில் உண்டாகும் படலங்கள்  செல்களின் தொடர்பை வலுவிழக்க செய்து செல் சாவிற்கு  வழிவகுத்துவிடாமல் தடுக்கிறது. பேரீச்சம்பழத்தை பூரணமாக வைத்து கொழுக்கட்டைகளாக செய்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பது சிறந்த ஆரோக்கியமான தின்பண்டமாகவும் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் இயற்கை உணவாகும்.

  தேவையான பொருட்கள் :

  கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு 
  அரிந்த பேரிச்சம்பழம் - 50 கிராம் 
  அரிந்த பிஸ்தா/பாதம்
  முந்திரி 
  நெய் -1/2 டீ  ஸ்பூன் 
  தேங்காய் துருவல் 1/2 கப்  

  செய்முறை :

  பேரீச்சம்பழத்தை வாணலியில் போட்டு லேசாக  இளகியவுடன், மசித்து, அரிந்து வைத்துள்ள பாதம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள் கலந்து இறக்கி நெய், தேங்காய் துருவல் சேர்த்து பூரணமாக்கி கொள்ளவும், அதை மேல் மாவுடன் சேர்த்து அச்சில் வைத்து பிடித்து 6-7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

  அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று சாக்லேட் பனீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  திகட்டாத தின்பண்டத்தில் குழந்தைகளின் பட்டியலில் சாக்லேட்டிற்கே முதலிடம், அதிகமாக செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் உடல் நலம் கருதி பெற்றோர்கள் அதை வெகுவாக தவிர்த்தும் குழந்தைகளை கண்டித்தும் வருகின்றனர். ஆனால் சாக்லேட்டின் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ள தூய கோகோ பவுடர் இருதய நோய்கள் வராமல் காத்து, தோலுக்கு ஊட்டமளிக்கும். அதனுடன் பனீர் சேர்த்து கொழுக்கட்டையாக, குழந்தைகளுக்கும் பெரியவர்களும் ஆரோக்கியமான இனிப்பாக சாப்பிட தரலாம். பன்னீரில் உள்ள புரோட்டீன் எலும்பு, பற்களுக்கு ஊட்டமளித்து, நல்ல எதிர்ப்புசக்தியை தூண்டுவதாகவும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

  தேவையான பொருட்கள்:

  கிளறிய அணில் கொழுக்கட்டை மாவு 
  கோகோ பவுடர் - 1டேபிள் ஸ்பூன் 
  பனீர் துருவல் - 1 கப் 
  சர்க்கரை போடாத பால்கோவா -50 கிராம் 
  பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 
  பிஸ்தா, பாதம் சிறிதளவு

  செய்முறை :

  பனீர் துருவல், சர்க்கரை போபோடாத பால்கோவா, பொடித்த சர்க்கரை, பாதம் மற்றும் பிஸ்தாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து பூரணமாக தயார்செய்து கொள்ளவும். 

  மேல் மாவுடன் கோகோ பவுடரை சேர்த்து நன்றாக பிசைந்து தயாராக உள்ள பூரணத்தை அதனுள் வைத்து கொழுக்கட்டை அச்சில் பிடித்து 6-7 நிமிடங்கள்  வேகவைக்கவும். அணில் தயாரிப்புகளை ஆன்லைனில் பெற, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - https://shop.theanilgroup.com/
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :  

  மேல் மாவு செய்ய:


  கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
  தண்ணீர் - ஒன்றே கால் கப்,
  உப்பு - சிட்டிகை,
  எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

  பூரணம் செய்ய:

  இனிப்பு கோவா - ஒரு கப்,
  உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.  செய்முறை :

  தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்

  ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.

  மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.  

  சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.

  - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கேரட் அல்வா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :  

  மேல் மாவு செய்ய:


  கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
  தண்ணீர் - ஒன்றே கால் கப்,
  உப்பு - சிட்டிகை,
  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

  அல்வா செய்ய :


  கேரட் துருவல் - அரை கப்,
  வெல்லத்தூள் - அரை கப்,
  தேங்காய்த் துருவல் - கால் கப்,
  நெய் - தேவைக்கு,
  ஏலக்காய்த்துள் - சிட்டிகை.  செய்முறை :

  தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

  அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

  அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

  பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.

  மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

  கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.

  - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  ×