என் மலர்tooltip icon

    சமையல்

    பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறை வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய பச்சை பயறு - 1 கப்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    தாளிக்க

    கடுகு- கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் முளைகட்டிய பச்சை பயறை சேர்த்து வதக்கவும்.

    1 நிமிடம் வதக்கிய பின்னர் பயறு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    பயறு மென்மையாக வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லிதழை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான சுவையான முளைகட்டிய பச்சை பயறு பொரியல் ரெடி.
    எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணைக்கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும்.
    தேவையான பொருட்கள்:

    கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
    புளி - சிறிதளவு
    புதினா - தேவையான அளவு
    சோள மாவு - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    முதலில் கருணைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். நன்றாக வெந்த கருணைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

    தனியா தூள், கரம் மசாலா தூள் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

    பிறகு இவற்றை நன்றாக வதக்கிவிட்டு இதில் மசித்த கருணைக்கிழங்கை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் புதினா, புளி கரைச்சல், உப்பு, சோள மாவு, பிரெட் தூள் சேர்த்து கருணைக்கிழங்குடன் மசாலா நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    கருணைக்கிழங்கு மசாலாவை கபாப் குச்சியில் சொருகி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி செய்து வைத்த கபாப்பை வைத்து வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கருணைக்கிழங்கு கபாப் ரெடி.
    கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்க சத்தான சுவையான ராகி மினி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - சிறிது

    தாளிக்க :

    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உளுந்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    துருவிய தேங்காய் - 4 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, தீயை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து தண்ணீரை சிறிது சிறிதாக ராகி மாவில் ஊற்றி மரக்கரண்டி அல்லது மர ஸ்பூனால் கட்டி விழாமல் கிளறவும். இதை மூடி போட்டு ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு கைகளில் எண்ணெய் தடவிகொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    அடுப்பில் இட்லி குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இட்லித் தட்டை வைத்து துணி விரித்து, உருட்டிய கேழ்வரகு உருண்டைகளை தட்டில் வைத்து மூடி போட்டு, பத்து நிமிடம் வேக விடவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டாக உடைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காயைச் சேர்த்து சிறிது வதக்கி, பெருங்காயத்தூள், வேகவைத்த கொழுக்கட்டை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மெதுவாகப் புரட்டி இரண்டு நிமிடம் வதக்கவும்.

    அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு அம்மினி கொழுக்கட்டை ரெடி.
    வீட்டில் ரசம் மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. சூடான வடை செய்து அதை ரசத்தில் ஊற வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 2 கப்
    உளுந்தம் பருப்பு - 1 கப்
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 1

    ரசத்திற்கு :

    நீர் - தேவையான அளவு
    மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    புளி - 3 தேக்கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    கொத்தமல்லிதழை - சிறிதளவு

    செய்முறை :

    வடை செய்ய :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.

    அரைத்த மாவில் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை உருண்டைகளாக பிடித்து போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    ரசம் செய்ய :

    பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.

    கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு, மல்லித் தூள், நசுக்கிய பூண்டு, புளி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு புளியை தண்ணீரில் கரைக்கவும். நன்றாக கரைத்த பின்னர் புளி கோதல் மற்றும் பூண்டின் தோலை வெளியேற்றி விடவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

    பின்பு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க வேண்டிய அவசியமில்லை.

    பின்பு வடையை அதில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து பரிமாறும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    மழைக்கு சூப்பரான ரச வடை ரெடி.

    பழைய ரசம் இருந்தாலும் அதையும் பயன்படுத்தலாம்.
    மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு, அந்த நீரை குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும்..
    தேவையான பொருட்கள்

    கொண்டைக்கடலை - 200 கிராம்
    மிளகாய் வற்றல் - 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    கடுகு உளுந்து - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையானது
    பெருங்காயம் - ½ டீஸ்பூன்
    எண்ணெய் - தாளிக்க

    செய்முறை

    கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய், வற்றல் சேர்த்து வதக்கி கடலையில் கொட்டி கிளறவும்.

    பின்பு தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறவும்.

    சுவையான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி!

    பல்வேறு வகையான குருமாவை சுவைத்து இருப்பீங்க. இன்று தக்காளியை வைத்து சூப்பரான தக்காளி குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ. வெங்காயம் - 3,
    தக்காளி - 8,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கறிவேப்பிலை - சிறிது.

    அரைக்க:

    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 4 பல்,
    பச்சை மிளகாய் - 6,
    பட்டை, லவங்கம் - தலா 1,
    சோம்பு - கால் டீஸ்பூன்,
    மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து கொள்ளுங்கள்.

    பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    மணமணக்கும் தக்காளி குருமா ரெடி.
    நவராத்திரிக்கு மாலையில் பூஜை செய்யும் போது, நைவேத்தியமாக சுண்டல் ரெசிபிக்களை படைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று கடலைப்பருப்பு சுண்டல் செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - 1/2 கப்
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - சில துளிகள்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    கடுகு - 3/4 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
    வரமிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:

    முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!
    குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்
    பொடித்த சர்க்கரை - 1/2 கப்
    கஸ்டர்ட் பவுடர் - 1/4 கப்
    டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப்
    முந்திரிப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    வெண்ணெய் - 6 மேசைக்கரண்டி
    பால் - 1/4 கப்
    பேகிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
    உப்பு - ஒரு சிட்டிகை
    ரோஸ் எசன்ஸ் -1/4 தே.க

    செய்முறை

    பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கரண்டி வைத்து கிரீம் பதத்திற்கு இரண்டும் ஒன்று சேர்த்து வரும் வரை நன்றாக கலக்கவும்.

    பிறகு அதில் மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.

    அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கரண்டி வைத்து நன்றாக கலந்து விடவும்.

    பிறகு டூட்டி ஃப்ரூட்டி, முந்திரி பருப்பு, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

    சிறிது சிறிதாக பால் சேர்த்து ஒன்று சேர பிசையவும். (அழுத்தி பிசைய கூடாது)

    நீளவாக்கில் உருட்டி பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து (சிறிது அழுத்தமாக இருக்கும்) கவரை பிரித்து வட்ட வடிவில் வெட்டவும்.

    பிறகு அதை தட்டில் அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.(அவனை 180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடு படுத்திக் கொள்ளவும்.)

    சுவையான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட் தயார்.
    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த சிவப்பு அவலை வைத்து சத்தான சுவையான டிபனை பத்து நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு அவல் - 1 கப்
    பெரிய வெங்காயம்  - 1
    பச்சை மிளகாய் - 3
    தக்காளி  - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பீன்ஸ் - 5
    கேரட் - 1
    பட்டாணி - ஒரு கைப்பிடி
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொரிந்தவுடன் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பின்பு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து காய்கறிகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

    காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் அவலை போட்டு வேக விடவும்.

    அவல் நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான அவல் வெஜிடபிள் உப்புமா ரெடி.
    ரவை பயன்படுத்தி கேசரி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து எளிய முறையில் பத்தே நிமிடத்தில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான அளவு

    அவல் - 2 கப்
    சர்க்கரை - 1 கப்
    கேசரி பவுடர் - 2 சிட்டிகை
    முந்திரி - 15
    நெய் - 1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை

    அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

    முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.

    அவல் வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.

    கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் கமகம அவல் கேசரி ரெடி.
    நவராத்திரி முதல் நாளான இன்று இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க சத்தான பட்டாணி சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையானப் பொருள்கள்:

    பட்டாணி - 1 கப் ( Yellow peas  )
    உப்பு - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 2
    தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லி இலை - ஒரு கொத்து

    தாளிக்க:

    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    கடுகு
    உளுந்து
    காய்ந்த மிளகாய் - 1
    பெருங்காயம்
    கறிவேப்பிலை

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் லேசாக வதங்கியதும் சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறி விட்டு, தேங்காய்ப் பூ, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான பட்டாணி சுண்டல் ரெடி.
    அவலில் சிச்சடி, உப்புமா, லட்டு என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அவல் - ஒரு கப்
    சர்க்கரை - ஒரு கப்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    வெதுவெதுப்பான பால் - மாவு பிசையத் தேவையான அளவு
    சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப் (உதிர்த்துக்கொள்ளவும்)
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
    பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 15
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அவலை வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி சர்க்கரைப் பாகை ஆறவிடவும்.

    அதில் குங்குமப்பூ சேர்க்கவும்.

    வாய் அகன்ற பாத்திரத்தில் அவல் மாவு, சர்க்கரை இல்லாத கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, பால் தெளித்து மிருதுவாகப் பிசையவும்.

    பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    ஓர் உருண்டையை எடுத்து அதன் நடுவே பாதி பேரீச்சை வைத்து மூடி உருட்டிக்கொள்ளவும். இப்படி எல்லா உருண்டைகளையும் செய்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் - கோவா உருண்டைகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.

    அரை மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும்.

    சூப்பரான அவல் குலாப் ஜாமூன் ரெடி.
    ×