search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருணைக்கிழங்கு கபாப்
    X
    கருணைக்கிழங்கு கபாப்

    சூப்பரான ஸ்நாக்ஸ் கருணைக்கிழங்கு கபாப்

    எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணைக்கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும்.
    தேவையான பொருட்கள்:

    கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
    புளி - சிறிதளவு
    புதினா - தேவையான அளவு
    சோள மாவு - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    முதலில் கருணைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். நன்றாக வெந்த கருணைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

    தனியா தூள், கரம் மசாலா தூள் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

    பிறகு இவற்றை நன்றாக வதக்கிவிட்டு இதில் மசித்த கருணைக்கிழங்கை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் புதினா, புளி கரைச்சல், உப்பு, சோள மாவு, பிரெட் தூள் சேர்த்து கருணைக்கிழங்குடன் மசாலா நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    கருணைக்கிழங்கு மசாலாவை கபாப் குச்சியில் சொருகி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி செய்து வைத்த கபாப்பை வைத்து வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கருணைக்கிழங்கு கபாப் ரெடி.
    Next Story
    ×