search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவல் வெஜிடபிள் உப்புமா
    X
    அவல் வெஜிடபிள் உப்புமா

    10 நிமிடத்தில் சத்தான டிபன் செய்யலாம் வாங்க...

    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த சிவப்பு அவலை வைத்து சத்தான சுவையான டிபனை பத்து நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பு அவல் - 1 கப்
    பெரிய வெங்காயம்  - 1
    பச்சை மிளகாய் - 3
    தக்காளி  - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பீன்ஸ் - 5
    கேரட் - 1
    பட்டாணி - ஒரு கைப்பிடி
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 3 ஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொரிந்தவுடன் அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பின்பு தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து காய்கறிகளை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

    காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் அவலை போட்டு வேக விடவும்.

    அவல் நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான அவல் வெஜிடபிள் உப்புமா ரெடி.
    Next Story
    ×