என் மலர்tooltip icon

    சமையல்

    பல்வேறு நன்மைகளை கொண்ட சோயா புரதச்சத்து மிகுந்தது. மலச்சிக்கலை போக்குகிறது. புற்றுநோய் வருவதற்கு காரணமான நச்சுக்களை வெளித்தள்ளும் தன்மை கொண்டது.
    தேவையான பொருட்கள்

    சோயா பீன்ஸ் - 1/2 கப்
    துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    எண்ணெய் - அரை தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள்  - 2 சிட்டிகை
    கறிவேப்பிலை - 1 கொத்து

    செய்முறை

    சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

    கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

    ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

    சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.
    ஒரு முறை சாப்பிட்டால் மறக்க முடியாத சுவையை நாவிற்கு தரும் வட்டலப்பத்தை இன்று வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 10
    சர்க்கரை - 2 ஆழாக்கு
    தேங்காய் - 1
    ஏலக்காய் - 3
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி - 10
    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை

    முட்டையை நுரைபொங்கும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கி வடிகட்டி வைக்கவும்.

    சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்பு தேங்காயை அரைத்து சாறை பிழிந்தெடுத்து வடிகட்டிகொள்ளளவும். இதில் முதல் பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையையும் அடித்து வைத்த முட்டையையும் நன்றாக கலந்து கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

    ஏலக்காயை வாணலியில் வறுத்துக்பொடித்து முட்டை கலவையில் 1 சிட்டிகை உப்புடன் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கலவை வேக ஆரம்பித்தவுடன் மீதமுள்ள நறுக்கிய முந்தி பருப்பை மேலே தூவி மூடியை கொண்டு மூடி விடவும்.

    வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சுத்தமான குச்சியை கலவைக்குள் விட்டு பார்க்கவும்.

    கலவை வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

    ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    குறிப்பு

    வட்டலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும்.
    தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கற்பூரவல்லி இலைகள் - கைப்பிடி
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
    டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவைக்கு

    செய்முறை


    கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    கொதித்ததும் வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

    சூப்பரான கற்பூரவல்லித் தேநீர் ரெடி.
    தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை பட்டாணி - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2.

    தாளிக்க:

    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

    அரைக்க:

    ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா - 1 கட்டு,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்,
    பச்சை மிளகாய் - 5,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    முந்திரிப் பருப்பு - 6,
    பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.

    சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!
    சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 50 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    செலரி, பாஸில் இலை - சிறிதளவு,
    காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர்,
    பால் - ஒரு கப்,
    பாதாம் - சிறிதளவு (அலங்கரிக்க),
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.

    அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.

    வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து  உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.

    இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான பாதாம் செலரி சூப் ரெடி.
    ஆட்டுக் குடலில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆட்டுக் குடலில் அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்
    மஞ்சள்த்தூள் - சிறிதளவு
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி.
    குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 1 பெரிய துண்டு
    பூண்டு - 4 பல்
    பச்சை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 5
    காய்ந்த மிளகாய் - 2
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு

    செய்முறை


    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.

    சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.

    இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சுவையான இஞ்சி சூப் தயார்.

    வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - 1
    வெங்காயம் - 1  
    மோர் - 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - தேவைக்கு
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடிதாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதனுடன் கடலை மாவு, சோள மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் உதிரியாக பிசைந்துகொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

    சூப்பரான வாழைப்பூ பக்கோடா ரெடி.
    இந்த கஞ்சியை உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களும், தொப்பையை குறைக்க விரும்புபவர்களும் ஒருவேளை உணவாக எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
    தேவையான பொருட்கள்

    அகத்திக்கீரை - 2 கைப்பிடி
    புழுங்கலரிசி - 100 கிராம்
    பூண்டுப்பல் - 10
    மிளகு - 10
    வெந்தயம் - 10
    சீரகம் - அரை தேக்கரண்டி
    உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு

    செய்முறை

    அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, பூண்டை தட்டி வைக்கவும்.

    புழுங்கல் அரிசியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அகத்திக்கீரையை போட்டு அதனுடன் தட்டி வைத்த பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், வெந்தயம் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

    அகத்திக்கீரை வெந்ததும் தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

    வடிகட்டிய தண்ணீரில் பொடித்த அரிசியை போட்டு வேக வைக்கவும்

    கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு வேக வைத்த அகத்திக்கீரை போட்டு கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கஞ்சி ரெடி.
    கர்நாடகத்தில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்ற ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலமானது. இங்கு அவற்றில் இனிப்பான மங்களூர் போண்டாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    தயிர் - 1 1/2 கப்
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி!!!
    மாப்பிள்ளை சம்பா அரிசியில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. இன்று இந்த அரிசியுடன் காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாப்பிள்ளை சம்பா அரிசி - ஒரு கப்,
    முட்டைகோஸ் - கால் கிலோ,
    முள்ளங்கி, தக்காளி- ஒன்று,
    பெரிய வெங்காயம்- ஒன்று,
    பச்சை மிளகாய்- ஒன்று,
    எலுமிச்சம்பழம் - ஒன்று,
    இஞ்சித் துருவல் - சிறிதளவு,
    கொத்தமல்லி - அரை கட்டு,
    புதினா - கால் கட்டு,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    பூண்டு பல் - சிறிதளவு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    முட்டைகோஸ், முள்ளங்கியை துருவிக்கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கப் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய  பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.

    அடுத்து அதில் துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    பிறகு அதில் வெந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.

    இப்போது இதமான, மிகவும் ருசியான, சத்தான மாப்பிள்ளை சம்பா அரிசி வெஜிடபிள் கஞ்சி தயார்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பாசிப்பருப்பு போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    பாசிப்பருப்பு - 1 கப்,
    துருவிய சுரைக்காய் - அரை கப்,
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 4  
    கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:  


    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.

    அதனுடன் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லித்தழை சேருங்கள்.

    சுரைக்காயை நன்கு பிழிந்து நீரை எடுத்து விட்டு பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாசிப்பருப்பு போண்டா ரெடி.
    ×