என் மலர்tooltip icon

    சமையல்

    அதிகளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகை தினமும் சர்க்கரை நோயாளிகள் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகில் உப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு - 100 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    சிறிது தண்ணீர்,
    பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    செய்முறை  :

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாயை எண்ணெயில் விட்டு வதக்கி இறக்கும்போது பெருங்காயத்தூளைச் சேர்த்து செய்ய வேண்டும்.

    கேழ்வரகுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் செய்து ஆவியில் வேக வைத்து பின்னர் கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.

    உருண்டை பிடிக்கும் அளவுக்கு வந்தவுடன் அதை உருண்டையாக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான கேழ்வரகு உப்பு உருண்டை தயார்.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் பிடித்தது. பலாச்சுளைகளை சாப்பிடும் போது அதிலிருக்கும் கொட்டையை தூக்கி எறியாமல் சுவையான வடை தயாரிக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பலாக்கொட்டை - 25
    அரிசி மாவு - 2 கப்
    வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    இஞ்சி - 1 அங்குலம் ( பொடியாக நறுக்கியது)
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    ஓமம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பலாக்கொட்கைளை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு அவற்றை ஆறவைத்து மேலே இருக்கும் தோலை நீக்கி விட வேண்டும். பிறகு பலாக்கொட்கைளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி தழை, மிளகாய்த்தூள், ஓமம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு அந்த கலவையில் அரிசி மாவு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

    அந்த மாவை சிறிது நேரம் மூடி வைத்து வடை போல தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    25 பலாக்கொட்டைகளில் 35 வடைகள் தயாரிக்கலாம்.

    சூப்பரான பலாக்கொட்டை வடை தயார்.
    காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் செய்யும் போது அதில் காய்கறிகளை கலந்து செய்து கொடுக்கலாம். இதனால் காய்கறிகளின் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கிலோ
    உளுந்து - 1/4 கிலோ
    கேரட் - 1 கப்
    தேங்காய் - 1 கப்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    ப.மிளகாய் - 3
    முட்டைக்கோஸ் - 100 கிராம்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - விருப்பத்திற்கேற்ப
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிதம் : கடுகு, உளுந்தப்பருப்பு

    செய்முறை:

    கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், முட்டைகோஸ், புதினா, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைக்கவும்.

    பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    மறுநாள் காலை கடுகு, உளுந்தப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், தேங்காய், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை போட்டு தாளித்து மாவில் போட்டு கரைத்து கொள்ளவும்.

    பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை பணியாரமாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான வெஜிடபிள் பணியாரம் ரெடி.

    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸ், சிக்கன் சேர்த்து சூப்பரான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - 100 கிராம்
    சிக்கன் - 300 கிராம்
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    மிளகு பொடி - தேவையான அளவு
    ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    ஸ்பிரிங் ஆனியன் - 3
    பூண்டு - 5 பற்கள்

    செய்முறை

    சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, கேரட், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் எலும்புகள் கொண்ட சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகள் இல்லாத சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    குக்கரை மூடி 15 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.

    பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் விட்டு எடுத்து வைத்துள்ள எலும்புகள் இல்லா சிக்கினை அதில் போடவும். சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

    அதில் மிளகு பொடி சேர்த்துக் கொண்டு 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

    சிக்கனின் உள்ள நீர் வற்றியதும் நூடுல்ஸை சேர்த்து அதோடு குக்கரின் வேக வைத்த நீரை ஊற்றி 10 நிமிடங்கள் வேக விடுங்கள். அளவுக்கு அதிகமாகவும் நூடுல்ஸ் வேகக் கூடாது. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கெட்டியான பதம் வரும்போது வேகவைத்த காய்கறிகள் மற்றும் எலும்பு சிக்கனை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறுங்கள்.

    இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.
    கேழ்வரகில் முருங்கை கீரை சேர்த்து அடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்) - 150 கிராம்.
    உளுந்து - 50 கிராம்,
    கேரட், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
    முட்டைக்கோஸ் - 25 கிராம்,
    இஞ்சி, பூண்டு - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    குடைமிளகாய் - ஒன்று
    உப்பு-  சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும்.

    கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகள், உப்பு சேர்த்து கலக்கவும்.

    இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம்.

    கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை ரெடி.

    குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.
    இட்லி, தோசை, நாண், சப்பாத்தி, பூரிக்கு இந்த குருமா தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1

    அரைப்பதற்கு…

    துருவிய தேங்காய் - 1/2 கப்
    முந்திரி - 8
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5

    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.

    பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!
    பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.
    தேவையானவை:

    வறுத்த பச்சை பயறு - ஒரு கப்,
    பொடித்த வெல்லம் - முக்கால் கப்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    முந்திரிப்பருப்பு - 10,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:


    ஒரு பாத்திரத்தில் வறுத்த பச்சை பயறை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.

    அடி கனமான வாணலியில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.

    வெல்லம் நன்றாகக் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

    வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பச்சை பயறு மாவு சேர்த்துக் கிளறவும்.

    மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக் கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.

    நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன் கலந்தால்... சத்தான, சுவையான பச்சை பயறு புட்டு ரெடி.
    ஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம். அந்த வகையில் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லா சிக்கன் துண்டுகள் - 10
    மைதா - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று
    முட்டைகோஸ் - ஒரு கப்
    மயோனீஸ் - ஒரு கப்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சைசாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - கால் டீஸ்பூன்
    தயிர் - 2 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, தயிர், எண்ணெய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும். இதனை, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில், சிக்கன் துண்டுகள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 45 நிவீடங்கள் ஊற வைக்கவும்.

    தற்போது, மாவை உருட்டி, திரட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டுக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வேக வைத்து வறுத்தெடுக்கவும். சிக்கன் நன்றாக வேகும்வரை பிரட்டிக் கொண்டே இருக்கவும். சிக்கன் வெந்ததும் ஆறவைத்து, சிறிய துண்டுகளாக பீய்த்துக் கொள்ளவும்.

    ஒரு தட்டில் ரொட்டியை வைத்து அதன் மீது மயோனீஸ் தடவி, அதன் நடுவில் சிறிதளவு சிக்கனை வைக்கவும்.

    பின்னர் அதன்மீது, பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் வைத்து ரோல் செய்யவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் ஷவர்மா ரெடி..!.
    சோளத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள், உடல் எடையை அதிகரிப்பதற்கு பதிலாக, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். நாள் முழுவதும் உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், ஸ்நாக்ஸாக சோளத்தை சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்

    கார்ன் - 1/2 கப்
    உருளைக்கிழங்கு - 1/2 கப்
    குடைமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    பிரட் தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    செய்முறை

    ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    கார்னை கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

    அரைத்த கார்னை ஒரு பாத்திரத்தில் போடு அதனுடன் உருளைகிளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து அதில் இஞ்சி - பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு, பிரட் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின், கையில் எண்ணெய் தடவி எடுத்து வைத்துள்ள மாவு கலவையினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்களை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கார்ன் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
    பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொட்டை நீக்கிய பலாச்சுளை - 20,
    கோதுமை மாவு - 100 கிராம்,
    பொடித்த வெல்லம் - 200 கிராம்,
    கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
    நெய் - 50 மி.லி,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    செய்முறை :

    கோதுமை மாவைச் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  

    கடலைப் பருப்பை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து கொள்ளவும்.

    பலாச்சுளைகளை வேகவைத்து கொள்ளவும்.

    மிக்சியில் வேக வைத்த கடலைப்பருப்பு, பலாச்சுளையுடன் தேங்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து அதில் அரைத்த தேங்காய்ப் பருப்புடன் சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

    கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி பூரணமாக உருட்டிக்கொள்ளவும்.

    பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

    இலையில் சிறிது நெய் தடவி அதில் கோதுமை மாவை அப்பள வடிவில் திரட்டி அதன் நடுவில் பலாச்சுளை பூர்ணத்தை வைத்து மூடி, போளியாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்துள்ள போளியை போட்டு மிதமான தீயில், இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

    சூப்பரான பலாப்பழ போளி ரெடி.
    முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இன்று தினை, முருங்கை கீரை சேர்த்து சுவையான சத்தான இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலைப்பருப்பு - 1/2 கப்
    உளுத்தம்பருப்பு - 1/2 கப்
    தினை - 1/2 கப்
    கருப்பு எள் - கால் கப்
    காயா வைத்த முருங்கை இலை - அரை கப்
    கறிவேப்பிலை - அரை கப்
    கட்டி பெருங்காயம் - 5 கிராம்
    மிளகாய் வற்றல் - 50 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    பூண்டு - 10 பல்

    செய்முறை

    கடாயை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தினையை தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும்.

    அடுத்து அதில் முருங்கை கீரை, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும்.

    அடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.

    அனைத்து பருப்பு வகைகள் சேர்த்து நன்றாக ஆறவிடவும்.

    நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இப்போது சுவையான சத்து நிறைந்த தினை முருங்கை கீரை இட்லி பொடி ரெடி.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 6
    வெங்காயம் - 1
    பிரெட் தூள் - 5 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 5 டீஸ்பூன்
    கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், இடித்து வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

    அத்துடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

    பிறகு, கரம் மசாலா, தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    பின்னர், சிறிய துண்டுகளாக எடுத்து பெரிய நெல்லிக்காய் அளவில் உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சோள மாவில் முக்கி எடுத்து பிறகு, பிரெட் தூளில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்துவைத்த உருளைக்கிழங்கு உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இறுதியாக, ஒவ்வொரு உருண்டைகளிலும் குச்சி சொறுகினால், சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி..
    ×