என் மலர்
சமையல்
இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் நிறைந்த புளிச்சக்கீரையை சாப்பிடுவதால் இரத்தம் தூய்மை அடையும். பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்சனை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்சனை நீங்கும்.
தேவையான பொருட்கள் :
கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.
சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் இந்தத் தொக்கு ஜோராக இருக்கும்.

தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த ஊறுகாய் அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 20,
எள் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
கடுகு - 4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும்.
பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.
பிறகு சீரகம் எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து ஸ்டஃப்டு பச்சை மிளகாயை கொட்டவும்.
2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும்.
பிறகு பயன்படுத்தவும்.
சூப்பரான ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 டீஸ்பூன்
கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கவும்.
இதை காலையில் உணவாகவும், இரவு உணவாகவும் சாப்பிடலாம். உடலுக்கும் மிகவும் நல்லது. சற்று தண்ணீராக இருந்தால் தான் இது நன்றாக இருக்கும்.
சூப்பரான சத்தான கேழ்வரகு வெஜிடபிள் சூப் ரெடி.

நாளை விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டைகளை படைத்து விநாயகரை வழிபாடு செய்யலாம். அந்த வகையில் இன்று சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு - ஒரு கப்,
தினை - ஒரு கப்,
கேழ்வரகு - ஒரு கப்,
ஏலக்காய் - 4,
கருப்பட்டி - 2 கப்,
தேங்காய்த் துருவல் - 1 கப்
செய்முறை
கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை கொழுக்கட்டையாக பிடிக்க வேண்டும்.
பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லித் தட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி.

இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஆரோக்கியமான வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை செய்து இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 200 கிராம்,
கேரட்- 2
பீன்ஸ் - 100 கிராம்,
குடைமிளகாய் - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கேரட், பீன்ஸ், இஞ்சி, ப,மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவை சிறிது வதங்கியவுடன கேரட், குடைமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும்.
இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

அருமையான சுவையில் வெஜிடபிள் பிடி கொழுக்கட்டை தயார்.
இதையும் படிக்கலாம்.. கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை
கோதுமை மாவில் சப்பாத்தி, தோசை, பூரி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவை வைத்து இந்த விநாயகர் சதுர்த்திக்கு சூப்பரான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
சுக்கு தூள் - 1/4 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
கோதுமை மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
தேங்காய் துருவலை நெய் விட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
ஆவியில் வேகவைத்து எடுத்த மாவை ஆற வைத்து அதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள், வறுத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து சூடான வெல்ல தண்ணீர்
ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
மாவை நன்கு பிசைந்ததும் கையால் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.

உடலுக்கு நலம் தரும் கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை தயார்.
இதையும் படிக்கலாம்... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எள்ளு பூரணம் கொழுக்கட்டை
பேபி கார்னில் குறைவான கலோரி உள்ளது மற்றும் கொழுப்பு என்பது சுத்தமாக இல்லை. பேபி கார்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
பேபி கார்ன் - 10
மைசூர் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பட்டை - சிறு துண்டு
இலவங்கம் - 2
எலுமிச்சம்பழச்சாறு - 1 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி
வெண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
செய்முறை :
பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்
கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை, இலவங்கம் தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி அதனுடன் பேபி கார்னையும் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி மிளகு தூள், எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
சுவையான சத்தான பேபி கார்ன் சூப் ரெடி.

விநாயகருக்கு பிடித்தது கொழுக்கட்டை. இந்த விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் நைவேத்தியம் படைக்க எள்ளு பூரணம் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
எள்ளு பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மேல் மாவு:
ஒரு வாணலியில் அரிசி மாவைப்போட்டு, வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். 4 கப் தண்ணீரில், உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். கொதித்த நீரை, அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, ஒரு கரண்டி காம்பால் கிளறி விடவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து, கை பொறுக்கும் சூடு வந்தவுடன், நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
எள்ளு பூரணம்:
ஒரு வாணலியில் எள்ளைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். பின்னர் அதிலேயே வெல்லத்தூளைப்போட்டு ஒன்று அல்லது இரண்டு சுற்று ஓட விடவும். எள்ளும், வெல்லமும் ஒன்றாகக் கலந்தப்பின், வெளியே எடுத்து, அத்துடன் ஏலப்பொடி, மற்றும் நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
விரல்களில் எண்ணெய்த் தடவிக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இரண்டு கை விரல்களாலும் உருண்டையைப் பிடித்துக் கொண்டு, கட்டை விரல்களால் உருண்டையின் நடுவே இலேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற விரல்களைக் கொண்டு உருண்டையை அழுத்தி மாவை விரிவடையச் செய்து, ஒரு சிறு கிண்ணம் போல் ஆக்கிக் கொள்ளவும். அதனுள், ஒரு டீஸ்பூன் பூரணத்தை வைத்து, மாவின் எல்லா ஓரத்தையும் ஒன்றாகச் சேர்த்து, நடுவில் கொண்டு வந்து அழுத்தி விடவும். இவ்வாறு ஒவ்வொன்றாக செய்து வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய்யைத் தடவி, அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
இப்போது சூப்பரான எள்ளு பூரணம் கொழுக்கட்டை ரெடி.

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
தேவையான பொருள்கள்:
ஆரஞ்சு பழம் -2
பருப்பு தண்ணீர் - 2 கப்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
ப.மிளகாய் -2
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம், மஞ்சள் தூள் - தாளிக்க
மிளகு சீரகம் - 1 ஸ்பூன் (பொடித்தது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆரஞ்சு பழ சுளைகளை உரித்து 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதியை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.
பருப்பு தண்ணீருடன் கொத்தமல்லி, ஆரஞ்சு சுளைகள், ப.மிளகாய், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கழித்து தீயை குறைத்து ஆரஞ்சு சாறை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து செய்து வைத்துள்ள ரசத்தில் கொட்டவும்
சூப்பரான ஆரஞ்சு ரசம் ரெடி.

சிலோன் சிக்கன் பரோட்டாவை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
பச்சை மிளகாய், வெங்காயம் - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
சிலோன் கறி பவுடர் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
சிலோன் கறி பவுடர் செய்ய :
தனியா, சீரகம் - தலா 2 மேசைக்கரண்டி
அரிசி, சோம்பு - தலா ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
பரோட்டா செய்ய :
மைதா மாவு - 2 கப் ,
முட்டை - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
பால் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் கொரகொரப்பாக பொடியாக திரித்து கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.
அதே நெயில் வெங்காயம், பூண்டு இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை, [பாட்டி மசாலா] ளகாய் தூள், சிலோன் கறி பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.
தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.
பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும்.
தவாவில் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான்.
இப்போது சூப்பரான சிலோன் பரோட்டா ரெடி.

முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி இலை - 1 கப்,
சிறிய முள்ளங்கி - 1,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - சிறிது,
மிளகுத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள்தூள் - சிறிது,
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
முள்ளங்கி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சீரகத்தை போட்டு பொரிந்ததும், முள்ளங்கி இலை, முள்ளங்கி இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சூப் பதத்திற்கு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.
சூடாக பரிமாறவும்.

சத்தான முள்ளங்கி சூப் ரெடி
இதையும் படிக்கலாம்.. மொறு மொறு காராமணி வடை
காராமணியில் சுண்டல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காராமணியை வைத்து மொறுமொறுப்பான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காராமணி - 1 கப்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை எட்டு மணி நேரம் ஊறவையுங்கள்.
ஊறிய காராமணியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இதனுடன் வெங்காயம், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இடித்த கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையுங்கள்.

பிசைந்த மாவை வடையாகத் தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சூப்பரான காராமணி வடை ரெடி.