search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்
    X
    ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்

    ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்

    தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த ஊறுகாய் அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை மிளகாய் - 20,
    எள் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடுகு - 4 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும்.

    பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.

    பிறகு சீரகம் எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும்.

    எண்ணெயில் கடுகு தாளித்து ஸ்டஃப்டு பச்சை மிளகாயை கொட்டவும்.

    2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும்.

    பிறகு பயன்படுத்தவும்.

    சூப்பரான ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி.
    Next Story
    ×