என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும்.
    ஒரு பெண் தாய்மை அடைந்த முதல் மாதம் தொடங்கி பத்தாவது மாதம் வரையில், கருவுற்ற பெண்ணின் சிசுவுக்கு கருப்பையிலேயே நோய் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. எனவே கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்தால் கருச்சிதைவுக்கு வாய்ப்பு இன்றி சுகப்பிரசவத்திற்கு கூடுதல் வாய்ப்பு உண்டு.

    முதல் மாதம்


    சூல்கண்ட முதல் மாதம் பித்தம் அதிகரித்து அடிவயிறு நமநமவென்று வலிகண்டு வேதனையாகும். பித்தவாயு காரணமாக ஏற்படும் இந்த வயிற்றுவலியால் கரு கரைந்து கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. எனவே இதைத் தடுக்க தாமரைப்பூ, குட்டி விளா இலை இரண்டையும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, சந்தனத் தூள் 15 கிராம் சேர்த்து நீர் விட்டு அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பசும்பாலில் கலந்து கொடுக்கவும். இப்படி காலையில் மட்டும் 3 நாள் கொடுக்க கருச்சிதைவு இல்லாமல் மேற்படி வயிற்றுவலி நீங்கி விடும்.

    இரண்டாம் மாதம்

    உடல் முழுவதும் வாயு சம்பந்தப்பட்டு உடல் வலியும், வயிற்றில் வேதனையும் தோன்றும். இதனால் கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வெற்றிலை 10, தாமரை இதழ் 10, இரண்டும் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காலையில் மூன்று நாள் கொடுக்க வலி நீங்கும்.
     
    மூன்றாம் மாதம்

    கருப்பை பலவீனத்தால் திடீரென்று வயிறு வீங்கி கவ்விப் பிடிப்பது போன்ற வலி தாளாமல் துடிப்பார்கள். இதற்கு மருத்துவமுறை - வெள்ளைத் தாமரை பூ இதழ் 15 கிராம், செங்கழுநீர் 15 கிராம் சேர்த்து அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து காலையில் மட்டும் 6 நாள் கொடுக்க கருச்சிதைவு ஆகாமல் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பிக்கும்.

    நான்காம் மாதம்

    இந்த மாதத்தில் கருவுற்ற பெண்களுக்கு கருப்பையிலிருந்து ரத்தம் வெளிப்படுவதுடன் வலி கண்டால் கரு அழிவதற்கும் அறிகுறியாகும். எனவே கோரைக்கிழங்கு 15 கிராம், நொச்சியிலை 15 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து 200 மில்லி பாலுடன் கலந்து, காலை மட்டும் 3 நாள் கொடுக்க சிசு அழியாமல் காத்து வளரச் செய்யும்.

    ஐந்தாம் மாதம்

    ஐந்தாம் மாதம் கருப்பை தொடர்பான வயிற்றுக் கோளாறுகள் வந்து எந்தவிதமாக ஆரம்பித்தாலும் அல்லித் தாமரைப்பூ, விலாயிச்சை வேர் இவற்றை 15 கிராம் வீதம் அரைத்து, பசும்பாலில் கலந்து காலை வேளை 3 நாள் கொடுக்க ஐந்தாம் மாதம் கருவில் உள்ள சிசு காப்பாற்றப்படும்.

    ஆறாம் மாதம்

    ஆறாம் மாத கர்ப்பிணிக்கு குடல்வால், நீர் சுளுக்கு, கருப்பை அழற்சி, உணர்வு போன்றவைகள் தோன்றி வேதனை தரும். இதற்கு கோரைக்
    கிழங்கு, முந்திரிப்பருப்பு, பச்சைத் திப்பிலி வகைக்கு 15 கிராம் எடுத்து அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து கொடுத்து வர வலி நீங்கி சுகம் பெறும்.

    ஏழாம் மாதம்

    ஏழாம் மாதம் வயிற்றுவலி காணுமேயாகில் வெற்றிலை, சந்தனம், குட்டி விளாஇலை வகைக்கு 15 கிராம் சேர்த்து அரைத்து காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து, 3 நாட்கள் காலையில் மட்டும் கொடுக்க வயிற்றுவலி தீரும்.

    எட்டாம் மாதம்

    இந்த மாதத்தில் கர்ப்பிணியின் கை கால் அசதியும், பலவீனமும் காணும். பசியெடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டார்கள். இது நீங்க கோரைக்கிழங்கும், தாமரைப்பூவும் 15 கிராம் வீதம் அரைத்து, 3 நாள் காலை வேளை தர கருச்சிதைவு ஏற்படாமல் காக்கும்.

    ஒன்பதாம் மாதம்

    கருவுற்ற பெண்களுக்கு நோய் அணுகாமல் இருக்க அரசம் பட்டை, மருதம் பட்டை வகைக்கு 15 கிராம் அரைத்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து அத்துடன் குங்குமப்பூவும் சேர்த்து காலையில் 3 நாள் குடித்து வரவேண்டும்.

    பத்தாம் மாதம்

    பத்தாம் மாதம் பூரணமாக கரு வளர்ச்சியடைந்து இருக்கும். அடிவயிறு தளர்ந்து இறங்கவில்லையானால் நாட்டுச் சர்க்கரை, இலுப்பைப்பூவும் வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து, காலை வேளை மட்டும் 3 நாட்கள் கொடுக்க சிக்கல் இன்றி 300 நாட்கள் கழித்த பின்னர் சுகப்பிரசவம் உண்டாகும்.
    இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகை எண்ணெயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

    இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    இளநரை போக்க மூலிகை எண்ணெய்

    தேங்காய் எண்ணெய் : 100 மி.லி.
    சீரகம் : 1 ஸ்பூன்
    சோம்பு : 1/2 ஸ்பூன்
    சின்ன வெங்காயம் : 3
    கறிவேப்பிலை : 2 இணுக்கு
    கொத்தமல்லி : சிறிதளவு
    நெல்லி வற்றல் : 10 கிராம்
    வெட்டிவேர் : 5 கிராம்

    மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக இளநரை மறைவதை காணலாம். இந்த எண்ணெயை இரும்பு சட்டியில் தான் காய்ச்ச வேண்டும்.

    உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் தேப்லா மிகவும் சத்தானது. இன்று இந்த மேத்தி தேப்லாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 1 கப்,
    கடலை மாவு - 1/4 கப்,
    வெந்தயக்கீரை (மேத்தி) - 1/2 கட்டு,
    ஓமம் - 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    எள் - 1/2 டீஸ்பூன்,
    இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெந்தயக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தயக்கீரை, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தயிர், எள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.

    இதில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

    மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் சிறிது எண்ணெய் விட்டு தேப்லாவினை போட்டு சிறிது சூடானதும் திருப்பவும். இருபுறமும் எண்ணெய் தடவி நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து மேத்தி தேப்லாவை சூடாக பரிமாறவும்.

    குறிப்பு: மேத்தி தேப்லாவை 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது சூடு செய்து பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் உடற்பயிற்சி செய்தால் தசைகளை விரைவில் விரிவுபடுத்த முடியும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
    தசைகள் விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும் என்று நினைத்து பலரும் அதை பின்பற்றுகின்றனர். ஆனால் இது தவறானது.

    இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும்.

    ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

    வேகமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை வேகமாகவும், நிதானமாக செய்ய வேண்டிய பயிற்சிகளை மெதுவாகவும் செய்யவேண்டும். எந்த பயிற்சியாக இருந்தாலும் பயிற்சியாளரில் அனுமதி பெற்ற பின்னரே செய்ய வேண்டும். ஏனெனில் உங்களின் உடல்நிலைக்கு ஏற்றபடியான பயிற்சிகள் எது என்று பயிற்சியாளரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
    பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும்.
    இன்று (ஏப்ரல் 2-ந்தேதி) சர்வதேச குழந்தைகள் புத்தகதினம்.

    உலக ஆசிரியர் தினம், உலகப் பெற்றோர் தினம்போல குழந்தைகள் புத்தக தினம் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு புதிய குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் உருவாக வாய்ப்பாகவும் அமையும். சீன மொழியிலோ, ரஷிய மொழியிலோ, ஆங்கில மொழியிலோ குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி அபாரமானது.

    தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சியோ குழந்தை படைப்பாளிகளின் வளர்ச்சியோ அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்பதுதான் யதார்த்தம். ஆங்கிலேயரின் ஆதிக்கம் ஏற்படும்வரை தமிழில் குழந்தை இலக்கியம் என்பது இல்லாத ஒன்றாகவே இருந்தது. தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் பிசி என்னும் விடுகதைகள் மட்டுமே குழந்தைகளுக்கானவையாக, குழந்தைகள் விரும்புகின்றவையாக இருந்தன எனலாம். அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய பாடல்கள் குழந்தைகளுக்கு அறம் பயிற்றுவிக்கும் பாடல்களாக இருந்தன. இவற்றைக் குழந்தைகளுக்கான பாடல்களாகக் கொள்ள இயலாது.

    கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு முதலிய குழந்தைப் பாடல்களை எழுதினார். அதே காலத்தில் பாரதியாரும் ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற ஒரே ஒரு பாடலை குழந்தைப் பாடலாக எழுதி தமிழ்நாட்டுக் குழந்தைகளைத் தன்வசப்படுத்தினார். இவர்கள் இருவரும் எழுதிய பாடல்கள்தான் குழந்தைப் பாடல்கள். குழந்தைகள் பாடும் பாடல்கள். குழந்தைகள் விரும்பும் பாடல்கள்.

    இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு கா.நமசிவாய முதலியார் போன்றவர்கள் குழந்தைப் பாடல்கள் எழுதினாலும் குழந்தைகளைக் கவரும் பாடல்களை எழுதிக் குவித்தவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவே ஆவார். மாமரத்தில் ஏறலாம் மாங்காயைப் பறிக்கலாம் என்று எழுதத் தொடங்கியவர் பாடலை முடிக்கும்பொழுது குழந்தைகளை மயக்கும் மாயாஜாலம் காட்டுகிறார்.

    வாழை மரத்தில் ஏறலாம் என்றால் அடுத்த அடி வாழைக்காயைப் பறிக்கலாம் என்றுதான் நமக்குச் சொல்லத் தோன்றும். வள்ளியப்பா பாடலை முடிக்கும் நேர்த்தியைப் பாருங்கள்.

    வாழை மரத்தில் ஏறலாம் வழுக்கி வழுக்கி விழுகலாம்என்று எழுதியிருக்கிறார். இதைப் படிக்கின்ற குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.

    வள்ளியப்பா குழந்தைகள் விரும்பும் பாடல்களை எழுதினார். வள்ளியப்பா எழுதிய பாடலைப் படித்த குழந்தை, வள்ளியப்பா போலவே பாடல் எழுதும் வகையில் பாடல்களைப் படைத்தவர் அவர்.

    வள்ளியப்பா எழுதிய பாடல் நில் நில் நில் நில்லாவிட்டால் உடனே ஓடிச் செல் செல் செல், புல் புல் புல், புல்லைப் பிடுங்கி வயலை உழுதால், நெல் நெல் நெல்இதைப் படித்து ரசித்துக் குதிக்காத பிள்ளைகளே இருக்க முடியாது.

    வள்ளியப்பா ஒருமுறை கொத்தமங்கலம் சுப்புவைப் பார்க்கப் போயிருந்தார். வா வா வா வள்ளியப்பா என்று வரவேற்றவர் “உன்னால் மட்டும்தான் குழந்தைப் பாடல் எழுத முடியுமா? எங்கள் வீட்டுப் பேரனும் பாடல் எழுதியிருக்கிறான் கேள்” என்று சொல்லிவிட்டு “டேய் வந்து பாடுடா” என்றார். பாட்டி பாட்டி பாட்டி, பாட்டி சேலையை ரெண்டாக் கிழிச்சா, வேட்டி வேட்டி வேட்டி என்று அந்தப் பையன் பாடியதைக் கேட்டு மலைத்துப் போய்விட்டார் வள்ளியப்பா.இப்படிப்பட்ட பாடல்கள்தான் குழந்தைப் பாடல்களின் இலக்கணம்.

    குழந்தை இலக்கியப் படைப்பாளி என்பவன் குழந்தைகளோடு ஓடி ஆடி குழந்தைகள் பேசுவதைப் பேசி குழந்தையாக மாறினால்தான் தரமான குழந்தை இலக்கியத்தைப் படைக்க முடியும்.

    தமிழ்வழிக் கல்விதான் நாற்பதுகள் தொடங்கி எண்பதுவரை தமிழ்நாட்டில் இருந்தது. எண்பதுகளுக்குப் பின் ஆங்கிலவழிக் கல்வி மோகம் ஏற்பட்டு தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போல் கிளம்பி வளர தமிழ் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலை. யாரும் சட்டம் போட்டுப் புறக்கணிக்கவில்லை. தானாகவே புறக்கணிக்கப்பட்டு தமிழ்வழிக் கல்வி சரிந்தது. பிள்ளைகளுக்கு பாடம் தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கத் தவறினோம். வாரம் ஒருமுறை நூல்நிலைய வகுப்பு ஒன்று இருக்கும். அப்போது பிள்ளைகள் நூல்நிலையம் சென்று கதை வரலாறு பாடல் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இருந்தது. பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவ்வளவாக இருக்கவில்லை. மேலைநாடுகளில் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க நிறைய செலவழிக்கிறார்கள். சிறுவயது முதலே புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்தான் மக்கள் அறிவு வளரும் எழுத்தாளர்களின் படைப்புகள் போற்றி வாங்கப்படும்.

    வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து குழந்தை எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர்களின் படைப்புகள் வெளிவர பதிப்பாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்று குழந்தைப் புத்தகங்கள் நிறைய வெளிவர உழைத்தார். அவர் காலத்தில் குழந்தை இலக்கிய வளர்ச்சியின் பொற்காலம். ஆனால் தற்போதைய நிலை கவலைக்குரியது. நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதை வைத்து மட்டும் புத்தகங்கள் வெளிவருவது குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.

    பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி புத்தகங்களை நேசிக்கச் செய்தால் மட்டுமே குழந்தை இலக்கியம் வளரும். குழந்தை இலக்கிய வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு மகத்தானது. புத்தகங்களை குழந்தைகளுக்கு ஆசிரியர் அறிமுகப்படுத்தும் நேர்த்தி முக்கியமானது. உடல் மொழி, குரல் இனிமை, நிகழ்வை நடித்துக்காட்டிச் சொல்லும் பாங்கு, இவற்றால் அந்தப் புத்தகத்தின் வீச்சு மேம்பட வாய்ப்பிருக்கிறது.

    அமெரிக்காவில் தொடக்கப்பள்ளிகளிலேயே பிள்ளைகளைக் குழந்தைப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டும் வகையில் பாடத்திட்டத்தில் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

    வயதுக்கேற்ற வகையில் நூல்நிலையங்களில் புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். வயதுக்கேற்ற வகையில் எனது பாடல்களை மூன்று முதல் எட்டு வயது, 9 முதல் 11 வயது, 12 முதல் 16 வயது என வகைப்படுத்தி வயதுக்கேற்ற பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன். இப்படி வகைப்படுத்துவதால் அந்தந்த வயதுப் பிரிவினருக்கேற்ற புத்தகங்களை அவர்களிடம் போய்ச்சேரச் செய்யலாம்.

    இந்தக் குழந்தைகள் புத்தக தினத்தில் ஒன்றை நம் நினைவில் கொள்ள வேண்டும்.

    படிப்பது அறிவு வளர்ச்சிக்கு. ஏட்டுக்கல்வி அறிவை வளர்க்கலாம். பண்பை, அன்பை வளர்ப்பது இலக்கியங்கள் மட்டுமே. பெற்றோர்கள் நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து படிக்கச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மிகச்சிறந்த இலக்கியங்களை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். படைப்பாளிகள் குழந்தைகள் விரும்புகிற அவர்களைப் பண்படுத்துகிற தரமான இலக்கியங்களைப் படைத்துத் தரவேண்டும். சிறுவயதில் வாசிக்கும் பழக்கத்தைப் படியவிட்டால் வாழ்க்கையின் இறுதிவரை வாசிக்கின்ற பழக்கம் நம்மை விட்டு விலகாது. நிறையப் படிப்போம். பண்பை வளர்ப்போம். அன்பைப் பகிருவோம். இதுவே குழந்தை இலக்கியப் பயன்பாட்டின் உச்சம்.

    குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி, சென்னை.

    தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆரோக்கியமான நுரையீரலுக்கு செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.
    தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    ஓய்வாக இருக்கும் பொழுதும், வயிறு காலியாக இருக்கும் பொழுதும், நிமிடத்திற்கு 12-15 முறை நிதானமாக ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். மூக்கு வழியாக உள்ளிழுத்து வாய் வழியாகவும், காற்றினை வெளிவிடலாம். இவ்வாறு 5 நிமிடங்கள் வரை செய்யலாம். எளிமையான பயிற்சி, தினமும் 20 நிமிடங்களாவது நடங்கள். கால், இருதயம், நுரையீரல் இவற்றுக்கு மிகவும் சிறந்தது.

    * சிறிய எளிய புஷ் அப் செய்யுங்கள்.
    * வயிற்றிலிருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.
    * கோணல் மானலாக இல்லாமல் எப்பொழுதும் முறையாக பயன்படுத்துங்கள்.
    * சிறிய வயதினராயின் சிறிது நேரம் ஓட்டப் பயிற்சிசெய்யுங்கள்.
    * நீச்சல் பழகுங்கள்.
    * தினமும் 15 நிமிடமாவது சற்று துரித நடைபயிற்சி செய்தால் மனநிலை புத்துணர்ச்சி பெறும்.
    * சிந்தனைத்திறன் கூடும்.
    * அலர்ஜி பாதிப்புகள் குறையும்.
    * உடலின் செயல் திறன் கூடும்.
    * ஆயுள் கூடும்.
    * ஜிம்முக்கு செலவழிக்கும் காசு மீதமாகும்.
    * இளமை கூடும்
    * ஆழ்ந்த தூக்கம் கிட்டும்
    * மனம் அமைதி பெறும்.
    * மூளை செயல் திறன் கூடும்.
    * வலி மாத்திரைகள் எடுப்பது குறையும்.
    * எலும்பு வலுபெறும்.
    * கண்பார்வை தெளிவு பெறும்.
    * மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

    இதனை படித்த பின்பும் தினமும் 15 நிமிடமாவது துரித நடைபயிற்சி செய்யாமல் இருப்பீர்களா என்ன?
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    வெங்காயம் 2,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி, புதினா -  1/4 கப்,  
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    பட்டை - 2, கிராம்பு - 3,
    ஏலக்காய் - 3,
    அன்னாசி பூ - 1,
    பிரியாணி இலை - 1,
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், நெய் - 1/4 கப்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.

    இப்பொழுது கமகமக்கும் சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார்.

    இதனுடன் தயிர் பச்சடி, குருமா மற்றும் உருளைக்கிழங்கு சில்லி சேர்த்து பரிமாறவும்.

    குறிப்பு: பிரியாணி செய்யும்பொழுது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கினால் சுவை அதிகரிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    காபி, டீயை சூடாக பருகுவதற்கு தான் நிறைய பேர் விரும்புகிறார்கள். ஆனால் சூடாக காபி, டீ பருகுவதால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    டீயை சூடாக பருகுவதற்கு தான் நிறைய பேர் விரும்புகிறார்கள். அப்படி பருகுவதுதான் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் அதுவே தொண்டைக்கும், உணவு குழாய்க்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மிக அதிகமான சூட்டில் அதாவது 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் டீ பருகினால் உணவுக்குழாய் புற்றுநோய் உருவாகக்கூடும் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பர்ஹத் இஸ்லாமி.

    ‘‘காபி, டீ போன்றவைகளை தயாரித்து சில நிமிடங்களாவது ஆறவைத்து மிதமான சூட்டில் பருகுவதுதான் சரியானது. டீ தயாரித்து முடிப்பதற்கும் - பருகுவதற்கும் இடையே குறைந்த பட்சம் 4 நிமிடங் களாவது இடைவெளி இருக்க வேண்டும்’’ என்றும் சொல்கிறார்.

    டீ மட்டுமின்றி சூடான எந்தவொரு பானமாக இருந்தாலும் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் பருகக்கூடாது. டாக்டர் பர்ஹத் இஸ்லாமி தலைமையிலான ஆய்வு குழுவினர் 40 வயது முதல் 75 வயதுக்குட்பட்ட டீ பிரியர்கள் 50,045 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது உணவுக்குழாய் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தொண்டையில் இருந்து வயிற்றுக்கு உணவு செல்லும் உணவுக் குழாயின் உள் பகுதி செல்களில் இந்த புற்றுநோய் உருவாகிறது. இது இந்தியாவில் அச்சுறுத்தும் புற்றுநோய் வகைகளில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
    தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயம் எதுஎன்றால் அது இளநரை பிரச்சனை. இந்த இளநரை வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    மருத்துவரீதியாக 40 வயதிற்கு உட்பட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை என்பார்கள். இளநரைக்கு காரணம், பரம்பரை சம்பந்தமானது. ரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத்தவர்கள் இருந்தால் வாரிசாக ஏற்படும். தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்க தொடங்கும். உடல் முடிகள் நரைக்க சற்று காலம் செல்லும்.

    தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும். தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசும் ஷாம்புகளில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும். புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைவினால் முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது.

    நாளடைவில் இதுவே நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. பெண்களை விட ஆண்களுக்கே முடி மிக கறுப்பாக காணப்படுகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு பிசிஎல் என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது. எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளருவதில்லை. சில முனைகளிலுள்ள முடிகள் வளராது. வேறு சில ஓய்வில் இருக்கும். சில முடிகள் உதிரும். ஓய்வில் இருந்தவை வளரும்.

    சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து முடி வளர்க்கிறது. அங்கு தான் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும் மெலனின் என்ற சாயம் உள்ளது. அதில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் அந்த வேரில் இருந்து வளரும் முடிக்கும் கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும். ஆனால், அதே நேரம் வேறு முளைகளில் இருந்து கருமையான முடி வளரக்கூடும். படிப்படியாக மெலனின் உற்பத்தி குறைய, குறைய வெள்ளை முடிகள் அதிகரிக்கும். மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தை கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ முறைகளை மிக இளம் வயதிலேயே மேற்கொண்டால், இள நரை ஏற்படுவதை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
    விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 13-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறையை மாணவர்கள் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு அண்டை அயலார் மற்றும் உறவினர்களிடம் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் கூடி விளையாட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதில் ஈடுபட வேண்டும்.

    செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்து கொண்டு மாணவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது. அது மாணவர்களிடம் மனஅழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

    பொழுதுபோக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விட்டு மாணவர்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது. அதே நேரத்தில் மாணவ- மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசை வார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசு மற்றும் உணவு உள்பட எந்த பொருட்கள் வாங்கி கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, எங்கு செல்கிறேன்? எவ்வளவு நேரமாகும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் மாணவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மறக்காமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் நடந்த சுவையான, சோகமான நிகழ்வுகள் என்று எது இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்க கூடாது. வீட்டினரின் ஆதரவோடு தான் மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை சொன்னால் தான் அதற்கான தீர்வுகளை பெரியவர்கள் காண முடியும்.

    எந்த தவறையும் மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் விடு முறையில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்ட கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    விடுமுறை காலம் மாணவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்குள்ள திறமைகளை கண்டறிந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளையும் முறையாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    மக்காச்சோளம் ரொட்டி சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரக கல் வராமலும் தடுக்கும். இந்த ரொட்டி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்காச்சோள மாவு - 1 கப்
    தண்ணீர் - 1/2 கப்



    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் மக்காச்சோள மாவை கொட்டி அதனுடன் அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிதளவு வெந்நீரும் பயன்படுத்தி மாவை பிசைந்துகொள்ளலாம்.

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அதனை சப்பாத்தி மாவு கட்டையால் தேய்த்து ரொட்டிகளாக தயார் செய்து கொள்ளவும்.

    ரொட்டியின் விளிம்பில் விரிசல் ஏற்படும். அதனால் பட்டர் பேப்பரில் மாவை வைத்து மூடி அதன் மேல் பகுதியில் சப்பாத்தி மாவு கட்டையை தேய்த்தும் தயார் செய்யலாம்.

    சிறு தீயில் தவாவை வைத்து ரொட்டியை பரப்பி பொன்னிறம் வரும் வரை பொரித்தெடுக்கவும். ரொட்டியை அடுப்பில் கருப்பு நிறம் வரும் வரை வைத்துவிடக் கூடாது.

    இந்த மக்காச்சோளம் ரொட்டி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காது. இது சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கும் ஏற்றது. சிறுநீரக கல் வராமலும் தடுக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வயதாவதன் விளைவுகளை தவிர்க்கவும் மற்றும் உடல் தசைகளில் காயம் ஏற்படாமல் தவிர்க்கவும், உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் தேவை.
    நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை. “வயதாவதன் விளைவுகளை தவிர்க்கவும் மற்றும் உடல் தசைகளில் காயம் ஏற்படாமல் தவிர்க்கவும், உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகள் தேவை”.

    றுதியான தசைகளானவை சுமைகளை நீங்களாகவே சுமந்து செல்லவும், நாற்காலிகளிலிருந்து எளிதில் எழுந்திருக்கவும் மற்றும் நீண்ட தூரம் வேகமாக நடக்கவும் உதவுபவையாகும். உடற்பயிற்சிகள் உறுதியான தசைகள், மூட்டுகள் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவியாகவும், எலும்பு புரை நோயை குறைக்கவும் மற்றும் உட்காரும் நிலையை மேம்படுத்தி முதுகு வலியை குறைக்கவும் செய்யும்.

    அதிலும் அதிகமான தசையை கொண்டிருக்கும் வயதானவர்களுக்கு, இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். உடல் உறுதியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செய்ததன் மூலமாக, வாக்கர்களை பயன்படுத்தி நடந்து வந்த 80 மற்றும் 90 வயதான பெரியவர்கள் பலரும், பத்தே வாரங்களில் இப்பொழுது வெறும் குச்சிகளைப் பிடித்துக் கொண்டே நடக்கிறார்கள் என்று, அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சில எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வருவதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்ள முடியும்.

    வயிற்றை நெருக்குதல் (Abdominal Crunch) :

    நாற்காலியின் விளிம்பில் நேராக அமரவும். கைகள் இரண்டையும் மார்பை நோக்கி குறுக்காக வைத்துக் கொண்டு, தோள்பட்டைகள் இரண்டும் நாற்காலியின் பின்பகுதியை தொடும் வரையிலும் பின்னால் சாயத் தொடங்கவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருக்கவும் (இதனை செய்யும் போது சரியான இடைவெளிகளில் சுவாசிக்க வேண்டும்). பின்னர் துவக்க நிலைக்கு மெதுவாக வரவும்.

    கெண்டைக்கால் உயர்த்துதல் (Calf raises) :

    சற்றே உயரமான தளத்தில் (படிக்கட்டின் கீழேயுள்ள கடைசி படியை பயன்படுத்தலாம்) உங்கள் பாதம் மட்டும் படியில் இருக்குமாறும், பாதத்தின் குதிகால் பகுதி அடித்தளம் இல்லாமல், தரை தளத்திற்கு இணையாகவும் இருக்கும் வகையில் நிற்கவும். உடலின் மேல் பகுதியை சரியாக நிமிர்த்தி நிறுத்துவதன் மூலம், குதிகாலை உயர்த்தவும் மற்றும் கால் விரலின் நுனியில் நிற்கவும் முடியும். இதற்காக நீங்கள் ஒரு நாற்காலியையோ அல்லது சுவற்றையோ கூட பயன்படுத்த வேண்டியிருக்கும். இறுதியில், மெதுவாக பாதங்கள் பழைய நிலையை அடையுமாறு நிறுத்தவும்.
    ×