என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தையல் பயிற்சி பெற பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார்கள். தையல் பயிற்சி பெற்று தங்களது வீடுகளில் தையல் எந்திரங்களை வாங்கி ஆடைகளை தைத்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
    ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை என்பது ஒரு இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவதில்லை. ஜாப் ஒர்க் செய்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

    இதில் தையல் என்பது பின்னலாடை தயாரிப்பில் இன்றிமையாத ஒன்றாகும். பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு செல்கிற தொழிலாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். தொடர்ந்து அவர்களுக்கு ஏற்கனவே வேலை செய்கிற தொழிலாளர்கள் பயிற்சி வழங்குகிறார்கள். இதன் மூலம் தொழிலை பழகிக்கொள்கிறார்கள்.

    திருப்பூரில் ஆண்களை போலவே பெண்களும் பலர் வேலை செய்து வருகிறார்கள். வீடுகளில் இருந்தபடி துணிகளுக்கு பிசிறு எடுப்பது என்பது உள்பட பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது தையல் பயிற்சி பெற பெண்கள் பலர் ஆர்வம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

    திருப்பூரில் வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். வீடுகளில் இருந்தபடியே வீட்டு வேலைகளை கவனித்து விட்டு, பின்னலாடை துறை சார்ந்த ஜாப் ஒர்க்குகளையும் பல பெண்கள் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

    தொழில் தொடங்குகிறவர்கள் பலர் வங்கிகளில் கடன் தொகைகளை பெற்றுக்கொண்டு தான் தொழில் தொடங்குகிறார்கள். இதன் பின்னர் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து அந்த கடனை அடைக்கிறார்கள். தற்போது பெண் தொழில்முனைவோருக்கு பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளது. இந்த கடன் திட்டங்கள் மூலமாக பலரும் வங்கிகளில் கடன் பெற்று நிறுவனங்களை தொடங்கி வருகிறார்கள்.

    இதில் பெரும்பாலான பெண் தொழில்முனைவோர்கள் தையல் பயிற்சி நிலையங்களை அமைக்கிறார்கள். இந்த பயிற்சி நிலையங்களுக்கும் பயிற்சி பெற பல பெண்கள் ஆர்வமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பெண்கள் தையல் பயிற்சி பெற்று விட்டு தங்களது வீடுகளில் தையல் எந்திரங்களை வாங்கி ஆடைகளை தைக்கிறார்கள். பின்னலாடை தொழிலும் வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே பின்னலாடை தொழிலில் விரைவில் பெண் தொழில்முனைவோர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
    ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது.
    ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாக தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் இளைஞர்களைவிட 60 வயதை கடந்த முதியவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம். இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக ‘இறுக்கமான தோள்பட்டை’ எனப்படும் ப்ரோசன் ஷோல்டர் உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    சிறுவர்கள் ஸ்கூல் பேக் மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூட்டை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது நமது தோளும் முதுகும்தான். ஆனால் நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பல்ல. நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டைப் போல கூடுதல் சுமையைத் தாங்கும் எலும்பல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.



    இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. இதன் அறிகுறியாக தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, எந்த பக்கம் வலி இருக்கிறதோ அந்த பக்கமாக படுக்கும்போது கடுமையான வலி ஏற்படும். இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்கள், ஐந்தில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரி செய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். மனபலம் அவசியம்.

    இதுபோன்ற உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால், உளவியல் ரீதியான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தொடர்ச்சியாக ஏற்படும் மூட்டு வலி காரணமாக அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இயலாமையால் தன்னம்பிக்கை இழந்து, ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். மேலும், அடுத்தவர் மீது தேவையற்ற கோபம், வெறுப்பு ஏற்படுகிறது. அதனால், உடல் ரீதியான பலவீனம் ஏற்படும்போது, மன ரீதியாக பலம் பெற பயிற்சி மேற்கொள்வது அவசியம். முடிந்தவரை, சுயமாக முயற்சி செய்வது நல்லது. அப்படி இயலாத பட்சத்தில், மனநல மருத்துவரை அணுக தயக்கம் காட்டக்கூடாது.
    நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கு சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்...

    சிறுநீரகப் பரிசோதனை

    வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து ‘ப்ளஸ்’ (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும்.

    இரத்தப் பரிசோதனை முறைகள்ரேண்டம் இரத்த சர்க்கரை பரிசோதனை (Random Blood Sugar)இந்த பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் இரத்த சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.

    முதன்முறையாக இதை செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் இரத்த சர்க்கரை பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.

    வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை பரிசோதனை (Fasting Blood Sugar)

    இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் இதை செய்ய வேண்டும்.இதில் இரத்த சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி./டெ.லி. என்று இருந்தால் அது சரியான அளவுதான். அதுவே 101 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.

    சாப்பிட்ட பின் இரத்த சர்க்கரை பரிசோதனை (Post Prandial Blood Sugar)

    காலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர்கள், வழக்கமாக சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ளவேண்டும்.

    அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இதில் இரத்த சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால் சரியான அளவு.இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், Pre diabates. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நீரிழிவு உள்ளதாகப் புரிந்துகொள்ளலாம்.
    வட இந்திய உணவான மலாய் பன்னீர் நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த மலாய் பன்னீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்
    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்
    கிரீம் - 1/4 கப்
    வெண்ணெய் - 1/2 கப்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    லவங்கம் - 1/4 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
    சீரகம் வறுத்துப் பொடித்தது - 1/2 டீஸ்பூன்
    பொடித்த பட்டை - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 3
    முந்திரி - 15 (விழுதாக அரைக்கவும்).



    செய்முறை :

    வெங்காயத்தையும், தக்காளியையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டி, கொதிக்கும் நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து

    கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் சீரகம், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பச்சை வாசனை போன பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும், முந்திரி விழுதையும் சேர்த்து கிரேவியாக வரும்போது பன்னீரை கிரேவியில் சேர்த்து ஒரே கொதி வந்ததும் இறக்கி கிரீம் சேர்த்து பரிமாறவும்..

    சூப்பரான மலாய் பன்னீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள்.
    நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும்.  குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

    குழந்தை அதன் வயதுக்கேற்ற உயரம், உடல் எடையுடன் இருக்கிறதா என்பதை எப்போதும் கவனியுங்கள். வயதுக்கு அதிகமான உடல் எடை என்பது ஒபிஸிட்டி பிரச்சனையாகவும் இருக்கலாம். குழந்தைகளுக்கு ஒபிஸிட்டி பிரச்சனை ஏற்பட உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், பாரம்பரியம் உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் முக்கியமான காரணம். ஆரோக்கியமான உணவுகள், விளையாட்டு, போதுமான உறக்கம் இவை குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட்கள், பீஸா, பர்கர் போன்ற சாட் ஐட்டங்கள், ப்ரெசர்வேட்டிவ்ஸ் எனும் பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ராசஸ்டு உணவுகள், செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், கார்ன் சிரப், சுகர் சிரப் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட்ஸ், செயற்கையான பழரசங்கள் என ஆரோக்கியமற்ற உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் இன்று உண்கிறார்கள்.

    இவை எதுவுமே ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இந்த உணவுகள் உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பை உருவாக்கி தொப்பை, உடல் பருமனை உருவாக்குகிறது. மறுபுறம், இன்றைய குழந்தைகளில் பலரும் ஓடியாடி விளையாடுவதே இல்லை. எந்நேரமும் படிப்பு படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டே இருப்பதால் உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பதும் உடல் உழைப்பு என்பதும் விளையாட்டுதான். இன்று பல பள்ளிகள் பி.டி. பீரியட் எனும் விளையாட்டுப் பயிற்சியே இல்லாமல் இருக்கிறது.



    குழந்தைகள் உறங்கும்போதுதான் அவர்கள் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு, குழந்தை வளர்வதற்கான முக்கியமான செயல்பாடுகள், க்ரோத் ஹார்மோனின் இயக்கம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். போதுமான தூக்கம் இல்லாது போகும் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்பட்டு வளர்ச்சிக் குறைபாடு மற்றும் கொழுப்புச்சத்து சேர்வதால் உடல் பருமன் ஆகிய நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, போதுமான அளவு தூங்குவதற்கான வாய்ப்பையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம்.

    பொதுவாக, இந்தக் கால குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் எனும் பிரச்சனை ஏற்பட ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுகள் போன்ற சமூகக் காரணங்களே அதிகமாக இருக்கிறது. மன அழுத்தம் இன்றைய குழந்தைகளின் பால்யம் நம் காலத்தின் பால்யத்தைப் போல சுதந்திரம் நிறைந்தது அல்ல. பல குழந்தைகள் இன்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலைலேயே எழுந்து படிக்கிறார்கள். பிறகு பள்ளிக்குச் சென்றும் படிக்கிறார்கள். இரவு வீடு திரும்பி நள்ளிரவு வரை படிக்கிறார்கள்.

    இப்படி, இடைவெளியின்றி விளையாடப் போகாமல், ரிலாக்ஸ் செய்யாமல் படிப்பு படிப்பு என்று அதிலேயே ஈடுபடும்போது மனச்சோர்வு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த சோர்வு மன அழுத்தமாக மாறும்போது அது உடலைப் பாதிக்கிறது இதனாலும் சில குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. எந்நேரமும் படிப்பு படிப்பு என இல்லாமல் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற அவுட்டோர் விளையாட்டுகளை விளையாட அனுமதிப்பது. அவர்கள் உடல், மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

    வாய் பராமரிப்பை குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே சொல்லித்தர வேண்டியது அவசியம். சொத்தைப் பல் இருந்தால் நீங்களாகவே சிகிச்சை எடுக்காமல் பல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. இன்று சொத்தைப் பல்லை அடைப்பது உட்பட பல்வேறு நவீன பல் மற்றும் வாய் சீரமைப்புச் சிகிசைகள் புழக்கத்தில் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை மேற்கொண்டு பல் மற்றும் வாயைச் சீரமைக்கலாம். கண் பார்வைக் குறைபாடு அளவுக்கு அதிகமான செல்போன், டி.வி, கணிப்பொறி பயன்பாடு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு, ஃபோட்டோ போபியா போன்ற கண் பிரச்சனைகளை உருவாக்குகின்றன என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
    இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.
    ஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி 5 வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக் கொள்ளவும்.

    செய்முறை :

    1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம்.

    2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம்.

    3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம்.

    4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம்.

    5. தரையில் கைகளை ஊன்றி கால் முட்டியும் தரையில் ஊன்றி இருப்பது போல் செய்யலாம்.

    6. சுவர் அல்லது மேசை பிடித்துக்கொண்டு நின்ற நிலையில் கால்விரல்களை மட்டும் ஊன்றி மேலே எழும்பி செய்யலாம்.

    - இவை அனைத்தும் எவ்வாறு என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் சிறுநீர் கழிக்கும்போது அதனை நிறுத்தி பின் விட்டும் பின் நிறுத்தியும் பின் விட்டும் செய்யலாம்.

    பலன்கள் :

    சிறுநீர் கசிதல் மற்றும் தொற்றுநோய்கள் தடுக்கப்படும். இது கர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான பயிற்சி. இடுப்பெலும்பு-சுற்றுப்புற அங்கங்களுக்கு, பலம் தரும் அருமையான பயிற்சி இது! கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக மிகவும் உதவும். தினமும் இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…அந்த அளவுக்கு உடல் வலிமை பெறும்.
    முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
    முல்தானி மெட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர். முல்தானி மெட்டியானது, மாவு போல பிசைய பட்டு நேரடியாக முகத்தில் தடவப்படுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது பவுடர் வடிவில் கிடைக்கும். இது போக வெள்ளை, பச்சை, பழுப்பு மற்றும் ஆலிங் என பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கிறது.

    நம் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திட இயற்கை இந்த அதிசய பொருளை நமக்கு வழங்கியுள்ளது. அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சும், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமிநாசினி குணங்களை இது கொண்டுள்ளதால், பல்வேறு சரும நிலைகளை குணப்படுத்த உதவிடும். சிக்கனமான இந்த இயற்கை பொருள் பயன்படுத்த பாதுகாப்பானது. இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

    சரும நிறம் மேம்படும் : முல்தானி மெட்டி சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாக செயல்படுவதால், சரும நிறம் மேம்படும். 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியை தயிருடன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் புதினா பொடியை சேர்த்து, அதனை நன்றாக கலந்திடவும். இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதிகளும் தடவும். 20-30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.இதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், உங்கள் சருமத்தின் நிறம் மேம்படும்.

    சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சிடும் :

    இயற்கையாக உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால், சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். சரும துவாரங்களின் அடைப்பை நீக்கி, சருமத்தின் இயற்கையான பிஎச் அளவை சமநிலைப்படுத்தும். இது பொதுவாக வீட்டில் செய்யப்படும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தப்படுகிறது.

    தழும்புகளை நீக்கும் :

    புண்களால் ஏற்பட்டுள்ள தழும்புகள், சிறிய தீப்புண் அடையாளங்கள் அல்லது இதர தழும்பு வகைகளை பெரிய அளவில் குறைக்க முல்தானி மெட்டி உதவும்.
    உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அத்திப்பழம் - கால் கிலோ
    பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    இஞ்சி - 1 துண்டு
    தேன் - 1 டீஸ்பூன்
    பால் - 1 கப்



    செய்முறை :

    அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.

    மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த ஜூஸை ஒரு தம்ளரில் ஊற்றி பருகலாம்.

    சூப்பரான சத்தான அத்திப்பழ ஜூஸ் ரெடி.

    தேவைப்பட்டால் ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சினைகளுக்கு எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
    சினைப்பை நீர்க்கட்டி அதிகமாக இளம் பெண்களையே தாக்குகிறது. இதனை திருமணத்திற்கு முன்பே கவனித்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் அவர்களின் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெறுவது பெரிய போராட்டமாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி ( PCOS ) இருக்கும் போது கருவுறுவது இல்லை. இன்றைய இளம் தம்பதியரிடையே குழந்தையின்மை அதிகமாக இருப்பதற்கு ( PCOS ) ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது இது குறித்து பெண்கள் நலசிறப்பு சித்த மருத்துவர் டாக்டர் M.S .உஷா நந்தினி BSMS கூறியதாவது:-

    PCOS - பாதிப்புகள்

    மாதாந்திர ருது மாதக்கணக்கில் தள்ளிப்போதல், குழந்தையின்மை, முழுமையற்ற மாதவிலக்கு, அதிக உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல், வயிற்றுவலி, உடல் வீக்கம், ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு மனஅழுத்தம். மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிமையான, இயற்கையின் உருவான, பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர் வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

    இந்த சிகிச்சையின் மூலம் சினைப்பை நீர்க்கட்டி( PCOS ) 90 நாட்கள் முதல் 180 நாட்களில் முழுமையாக சரி செய்யப்படுகிறது. இதனை ஸ்கேன் மற்றும் பெண்களுக்காகமட்டுமே பிரத்யேக சித்தா, ஆயுர்வேத மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளிக்கப்படும் என்று கூறினார்.
    இரத்த வங்கியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் தகுந்த கல்வியும், சிறப்பு பயிற்சியும் பெற்றவர்களாக இருப்பதால் சிறிய, சிறிய தவறுகளும் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யவும், தவிர்க்கவும் முடியும்.
    சில மாதங்களுக்கு முன்னர், சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளவரின் இரத்தம் செலுத்தப்பட்டு அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிறந்து இரண்டு மாதம் ஆன அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று முற்றிலும் இல்லை என்ற அதிகாரபூர்வமான அறிக்கை நமக்கு ஆறுதலும், நிம்மதியும் தருகிறது. என்றாலும் கடந்த மூன்று மாதங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் எச்.ஐ.வி. தொற்று இல்லாத இரத்தம் ஏற்றப்பட்டு 20 கர்ப்பிணி பெண்கள் இறந்து போய் இருக்கிறார்கள் என்ற தகவல் மீண்டும் நமக்கு பேரதிர்ச்சியைத் தருகிறது. துறை ரீதியான நடவடிக்கைகள் மருத்துவர்கள் மற்றும் 12 மருத்துவ ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், நமக்கு ஏற்புடையதாக இல்லை.

    பொதுவாக ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்பு மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வர். இரத்தம் ஏற்றப்பட்டவுடன் 10 நிமிடத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இரத்தம் ஏற்றப்பட்டவுடன் குளிர், நடுக்கம் ஏற்பட்டால் உடனே இரத்தம் ஏற்றுவதை நிறுத்திவிட்டு ஒவ்வாமைக்கான மருந்துகளை கொடுக்க வேண்டும். இதில் பாதிப்புகளை தடுத்து விடமுடியும். இரத்தம் செலுத்தப்பட்டவுடன் 30 நிமிடத்துக்கு ஒரு முறை இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.

    அந்த நபரின் சிறுநீரை சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டும். அதில் இரத்தம் கலந்து வந்தால் கோளாறாகி விடும். 24 மணி நேரம் கடந்தவுடன் மீண்டும் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் பிரச்சினை இல்லை என்றால் ஆபத்து இல்லை. இரத்தம் ஏற்றும்போது செவிலியர்கள் அருகில் இருந்து கவனிக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இரத்தம் செலுத்தியவர்கள் இந்த முறைகளை சரியாக பின்பற்றாமல் கவனக்குறைவாக செயல்பட்டு இருந்ததாலோ அல்லது காலாவதியான இரத்தத்தை செலுத்தியதாலோ 20 கர்ப்பிணி பெண்கள் இறந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேர்ந்துள்ளது.

    ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு அதிக இரத்தம் இழக்கும் போது அவரைக் காப்பாற்ற இன்னொருவர் தானம் செய்த இரத்தமே தேவைப்படுகிறது. பெரிய அறுவை சிகிச்சை செய்யும் போது ஏற்படக்கூடிய இரத்த இழப்பிற்கு ஈடு செய்ய தானம் செய்யப்பட்ட இரத்தமே தேவைப்படுகிறது. சாதாரண பிரசவம் ஆன சில பெண்களுக்கு உதிரம் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் போது, அந்த பெண் இறக்காமல் இருக்க இரத்தமே தேவைப்படுகிறது. அதிகப்படியான இரத்த சோகை, ஹூமோபிலியா என்ற இரத்த போக்கு நோய், பெரிய தீக்காயங்கள் உள்ளவர்களுக்கும் இரத்தம் செலுத்துவதே உயிர் காக்கும் நடவடிக்கையாக இருக்கிறது.

    இவற்றையெல்லாம் பார்க்கும் போது மனித இரத்தம் உயிர் காக்கும் மா மருந்தாகவே தெரிகிறது. இதனால் தான் இரத்தம் ஒரு மருந்தாக அறிவிக்கப்பட்டு, இரத்த வங்கிகள் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் பல நடந்து வந்தாலும் செயற்கை முறையில் அங்கீகரிக்கப்பட்ட இரத்தம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்று மனித கொடையாளிகளை நம்பியே இரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டில் 2015-ன் கணக்கின்படி 304 இரத்த வங்கிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 264 இரத்த வங்கிகளே செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 94 இரத்த வங்கிகள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் உதவி பெற்று செயல்படுகின்றன. மீதமுள்ள 170 இரத்த வங்கிகள் (நாக்கோ) உதவியின்றி பெரும்பாலும் தனியார் மூலம் நடைபெற்று வருகின்றன. 76.4 சதவீத இரத்த வங்கிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்தன. மீதம் உள்ளவை தனியார் இரத்த வங்கிகளாக உள்ளன.

    இவற்றில் 108 இரத்த வங்கிகள் (41 சதவீதம்) சென்னை, கோயம்புத்தூர், காஞ்சீபுரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் அமைந்துள்ளன. 10 லட்சம் மக்கள்தொகைக்கு 3.7 சதவீத இரத்த வங்கிகள் என்ற மாநில சராசரிக்கு குறைவாக தர்மபுரி (2 சதவீதம்) கிருஷ்ணகிரி் (2.7 சதவீதம்) ஆகிய இரண்டு மாவட்டத்தில் உள்ளன. 104 இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்தக்கூறுகள் பிரித்து எடுக்கும் வசதி உள்ளன.

    அனைத்து இரத்த வங்கிகளுமே அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 38.4 சதவீதம் இரத்த வங்கிகள் மட்டுமே 2015-ம் ஆண்டு நிலவரப்படி நிலுவையில் உள்ள அனுமதியைப் பெற்றிருந்தன. மீதம் உள்ளவை அனுமதி புதுப்பிக்கப்படுவதற்காக விண்ணப்பித்து இருந்தன. இவைகளை நேரில் சென்று பார்வையிட்டு எத்தனை பேருக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 2015-ம் ஆண்டு கணக்கின்படி சேகரிக்கப்பட்ட இரத்த யூனிட் எண்ணிக்கை 8,44,908. இவற்றில் 93.1 சதவீதம் தன்னார்வ இரத்த கொடையாளிகள் மூலம் பெறப்பட்டன. மீதமுள்ளவை நோயாளிகளின் உறவினர் நண்பர்கள் மூலம் பெறப்பட்டன.

    சராசரியாக ஒவ்வொரு இரத்த வங்கியும் ஆண்டுக்கு 3500 யூனிட் இரத்தம் சேகரித்து, பராமரித்து தேவையுள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த அனைத்து செயல் முறைக்கும் பிஇரத்தியேகமான தேசிய வங்கிகள் வழிகாட்டுதல் உள்ளது. அனைத்து வங்கிகளும், ஒவ்வொரு முறையும் இவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு இரத்த வங்கியும் இரத்த யூனிட்டுகளை சேமித்து வைக்க பிஇரத்தியேகமான இரத்த வங்கி ரெப்ரிஜீரேட்டர்களை வைத்திருக்க வேண்டும். தடையில்லாத தொடர் மின்சாரம் கிடைத்திட பிஇரத்தியேக ஜெனரேட்டரை வைத்திருக்க வேண்டும்.

    இரத்தம் ஒரு மருந்து என்பதால், மற்ற மருந்துகளைப் போல காலாவதி தேதி என்ற ஒன்று இரத்தத்திற்கும் உண்டு. 2 டிகிரி முதல் 6 டிகிரிவரை பாதுகாக்கப்படும் சாகம் என்ற திரவத்துடன் கலக்கப்பட்ட முழு இரத்தம், சிவப்பணு கூறு இரத்தம் ஆகியவை 42 நாட்கள் வரை வைத்திருக்கலாம். இரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா என்ற திரவம் (மைனஸ் 30 டிகிரி) 1 ஆண்டு வரை வைத்திருக்கலாம். வெளியே எடுத்த உடன் “தாயிங்க்” உஷ்ணமேற்றுதல் முறைப்படி குறிப்பிட்ட அளவு சூடேற்றி 30 நிமிடத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும். 1 மணி முதல் 4 மணிக்குள் மருத்துவ கண்காணிப்புடன் நரம்பின் வழியாக செலுத்திவிட வேண்டும். கெட்டுபோன இரத்தம் பார்த்தாலே தெரியும்படி இருக்கும். திரி, திரியாக தெரிந்தாலே அதனை உபயோகிக்கக்கூடாது.

    இரத்த வங்கியில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், பரிசோதனையாளர்களும் தகுந்த கல்வியும், சிறப்பு பயிற்சியும் பெற்றவர்களாக இருப்பதால் சிறிய, சிறிய தவறுகளும் எளிதாக கண்டு பிடிக்கப்பட்டு, நிவர்த்தி செய்யவும், தவிர்க்கவும் முடியும். சரியாக செயல்படுத்தப்பட்டால் இரத்தம் ஏற்றுதல் ஆபத்தில்லாத ஒரு எளிதான முறை. பலருக்கு உயிர்காக்கும் சிறந்த மருந்தாக இரத்தம் இருந்து வருகிறது. சரியான இரத்தம், சரியான நேஇரத்தில், சரியான முறையில், சரியான நபருக்கு செலுத்தப்பட்டால் நன்மைகள் கோடியளவு கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட செயற்கை இரத்தம் வரும்வரை, மனித இரத்த இழப்பிற்கு மற்றொரு கொடையாளியின் இரத்தமே ஈடுசெய்யும்.

    கனிவுடனும், கவனமுடனும் செயல்படுவோம். உயிர்களைக் காப்போம்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,

    முன்னாள் துணை இயக்குனர்,

    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்.

    கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பெண்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானது. எப்படி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
    கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது மிக அவசியமானது. அதன் அடிப்படையில், வல்லுனர்கள் அளிக்கும் சில தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம். பொதுவாக, வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் மொத்த மின்சார பயன்பாட்டில் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் குளிர்சாதன பெட்டிக்கும், 20 சதவிகிதம் ஏ.சி பயன்பாட்டிலும், 8 சதவிகிதம் மின் விளக்குகளுக்கும், 32 சதவிகிதம் கெய்சருக்கும், மற்ற சாதனங்களுக்கு 28 சதவிகிதம் என்ற அளவிலும் செலவாகிறது என்று அறியப்பட்டுள்ளது.

    குளிர் சாதன பெட்டி

    சிக்கன நடவடிக்கையின் அடிப்படையில் ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறை சரியாக மூடப்படிருப்பது அவசியம். அதில் இடைவெளி இருந்தால் மின்சார பயன்பாடு அதிகமாகும். அடிக்கடி போடப்படும் சுவிட்சுகளை பயன்படுத்தும் முறையிலும் கூட மின் ஆற்றல் வீணாகும் வாய்ப்பு உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வீடுகளில் மின்சார பயன்பாட்டில் 20 சதவிகித அளவை ஏ.சி எடுத்துக்கொள்ளும் நிலையில் அதனை கச்சிதமாக பயன்படுத்த வேண்டும். அறையில் வெப்ப நிலையை அதிகரிக்கும் சாதனங்களை ஏ.சி அறையில் அவசியமில்லாமல் வைப்பதை தவிர்த்துக்கொள்ளலாம். மேலும், ஏ.சி-யின் ‘அவுட்டோர் யூனிட்’ மரத்தடி போன்ற நிழலான இடங்களில் வைப்பதன் மூலம் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தை சேமிக்க இயலும்.



    மின்சார விளக்குகள்

    அறைகளில் உள்ள மின் விளக்குகள் கிட்டத்தட்ட 8 சதவிகித மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றன. அதனால், மின் விளக்குகளை தேவைப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. சி.எப்.எல் விளக்குகள் எப்போதும் மின் சிக்கனத்துக்கு ஏற்றவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பிரிட்ஜ் பயன்பாடு

    வீடுகளின் மின்சார பயன்பாட்டில் சுமார் 12 சதவிகிதத்தை பிரிட்ஜ் எடுத்துக்கொள்கிறது. அதன் அடிப்படையில் அதிகப்படியான குளிர்ச்சி கொண்ட நிலையில் பிரீசர்களை வைத்திருப்பது பாதுகாப்பானதல்ல. மேலும், அடிக்கடி பிரிட்ஜை திறப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக, பிரிட்ஜ் மற்றும் சுவருக்கு இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். அதனால் பிரிட்ஜ் உபயோகத்துக்கான மின்சார தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவு பொருட்களை 36 முதல் 40 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையிலும், பிரீசரை 5 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையிலும் வைத்துப் பராமரிப்பதும் நல்லது.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இன்று இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பஜ்ஜி மிளகாய் - 10,
    கடலைமாவு - 150 கிராம்,
    அரிசி மாவு - 50 கிராம்,
    ஓமம் - கால் சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு,
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி ,
    சீஸ் ஸ்லைஸ் - 4 ,
    பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்ஸ் - 50 கிராம்,
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை

    ஒரு பாத்திரத்தல் கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    சூப்பரான சீஸ் மிளகாய் பஜ்ஜி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×