search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுத்து வலி"

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது மாரடைப்பு மட்டுமே.
    • முதுகுத் தண்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் மொபைல் பயன்படுத்துவது எப்படி?

    1990-களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது மாரடைப்பு மட்டுமே. ஆனால்ல இந்த காலகட்டத்தில் இதயநோய்க்கு ஈடாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அதிகம் வாட்டி வதைப்பது கழுத்து வலி மற்றும் முதுகு தண்டு வலி தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு சீரியசான பிரச்சினையையாக உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சினைகளை சரி செய்ய முடியுமா?. ஆம் சரி செய்ய முடியும் என்று கூறுகிறார், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விக்னேஷ் புஷ்பராஜ்....அவர் கூறியதாவது:-

    இளைஞர்களிடம் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்தே அவர்களின் கழுத்து வலியும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது என்றே கூற வேண்டும். முதலில் மொபைல் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். அதாவது மொபைல் பயன்பாடு பற்றி அல்ல, கழுத்துக்கும், முதுகுத் தண்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் மொபைல் போனை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுவாக மொபைல் போனை பேசுவதற்காக பயன்படுத்துவதை விட வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பார்கவும், கேம் விளையாடவுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு யாரும் மொபைல் போனை முகத்துக்கு நேராக வைத்து நிமிர்ந்து பார்ப்பது இல்லை. கைக்கு நேருக்கு நேர் வைத்து பார்க்கல, நாம தான் போன தேடி போய் பார்க்கிறோம்.

     குனிந்து கொண்டே மொபைல் பார்த்தால் கழுத்தில் இவ்வளவு பாரம் கூடுமா?

    மொபைல் போனை நிமிர்ந்த நிலையில் நேராக வைத்து பார்க்கும் போது, கழுத்தின் மேல் உள்ள தலையின் எடை வெறும் 5 கிலோ தான். ஆதே மொபைல் போனை நாம் 10 டிகிரி குனிந்து பார்க்கும்போது, நம் கழுத்தின் மீது 18 கிலோ வரை எடை கூடி பாரத்தை மேலும் அதிகரிக்கும். அதே 25 டிகிரி வரை குனிந்து பார்க்கும் போது 18 கிலோ முதல் 28 கிலோ வரை கழுத்தின் மீது எடை கூடும் என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபனமான ஒன்று.

    இப்படி பல மணி நேரம் குனிந்து கொண்டு மொபைல் போன் பார்ப்பதனால், கழுத்து பகுதியில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் அதிகரிக்கும். நாளடைவில் அந்த அழுத்தத்தால் கழுத்துப் பகுதியில் தசை தேய்மானம் ஏற்படும். பின் அதுவே எலும்புத் தேய்மானமாக மாறி வலி அதிகரிக்கும்.

    தசை தேய்மானம் எலும்புத் தேய்மானமாக மாறிய பிறகு மெல்லமெல்ல நரம்பை பாதிக்கும். அதன் விளைவு கை, கால் நரம்புகளை பாதித்து நடப்பது, எழுதுவது கடினமாகி, ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிப்பது கூட சிரமமாகும் அளவுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.

    வாழ்க்கை முறையில் சின்னதொரு மாற்றம் செய்தால் இந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதாக தவிர்க்க முடியும். அனைத்திற்கும் தீர்வாய் நாம் செய்ய வேண்டிய ஒரு சிறிய விஷயம் மொபைல் போனை நிமிர்ந்து முகத்துக்கு நேர்வைத்து பார்ப்பது தான்.

    இது ஒரு சின்ன மாற்றம் இத நாம பண்ணிட்டோம் அப்படின்னு வச்சிட்டோம்னா, ஒரு முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் பார்த்து அவங்க உங்க கழுத்து எலும்பு தேஞ்சுடுச்சு நரம்பு தேஞ்சுருச்சு நரம்பு நசுங்கிடுச்சு அப்படின்னு சொல்றதையும் பிற்காலத்தில் உங்களுக்கு ஒரு சர்ஜரி நடக்க இருக்கிறதையும் தவிர்க்க முடியும்.

    • பொதுவாக 40 வயதில் கழுத்து சவ்வு தேயத் தொடங்கும்.
    • இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது.

    கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கழுத்துவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது. கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை தசைகளால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்துவலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத் தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத் தொடங்கிவிடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டதுதான்.

    கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டி.வி. பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்குச் செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு காரணமாகிவிடும்..

    இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த தவறான பழக்கம் நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். கழுத்தை எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயை புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியை எளிதாக குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, பிசியோதெரபி சிகிச்சை போன்றவை பலன் தரும். நோயின் தன்மையை பொறுத்து எலும்பு அல்லது நரம்பு நலச் சிறப்பு மருத்துவரை நேரில் பார்த்து ஆலோசிக்க வேண்டும்.

    உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகத் தெரிந்தால் ஏற்கெனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம். இது குணப்படுத்தக் கூடியதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.

    • பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத்தொடங்கும்.
    • ‘செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ என்று அழைக்கப்படும் கழுத்து வலி பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    'செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்று அழைக்கப்படும் கழுத்து வலி பற்றி தெரிந்துகொள்ளலாம். கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தது. இப்போதோ இது வளரிளம் பருவத்தினருக்கும்கூட வந்துவிடுகிறது.

    கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையை தலையில் தாங்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொண்டிருப்பது போன்றவை இந்த மாதிரியான கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

    கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். பொதுவாக 40 வயதில் இந்த சவ்வு தேயத்தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இது தேயத்தொடங்கி விடுகிறது. காரணம், பலரும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிகமாகிவிட்டதுதான். கணினி முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

    இதுபோல் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு டி.வி. பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே டி.வி. பார்ப்பது, கழுத்தை கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது, தலையணைகளை தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்கு செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்து வலிக்கு பாதை அமைப்பவைதான். இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள்.

    அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்த தவறான பழக்கம், நாளடைவில் கழுத்து வலியை ஏற்படுத்திவிடும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் உள்ள கழுத்து வலியைச் சாதாரண வலி மாத்திரைகள், களிம்புகளால் குணப்படுத்திவிடலாம்.

    நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, பிசியோதெரபி போன்றவை பலன் தரும். நோயின் தன்மையை பொறுத்து சிலருக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு வலியும் அதிகமாகவே உணரப்படும். புதிதாகவும் வலி தோன்றலாம். எனவே, கழுத்து வலிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டு, தேவைப்பட்டால் உளவியல் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    • படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.
    • சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும்.

    நன்றாக தூங்கி, அடுத்த நாளை தொடங்க ஆவலுடன் படுக்கையில் இருந்து எழும்போது வில்லன் போன்று தோன்றி பாடாய்ப்படுத்துகிறது கழுத்து வலி. அது அன்றைய முழுபொழுதையும் அவஸ்தையாக்கிவிடும். கழுத்து வலி வரும், போகும் என்றாலும் அதை சாதாரண விஷயமாக நினைத்து தள்ளிவிடவும் முடியாது.

    செய்யும் வேலையின் பாதிப்பு, காயங்கள், தசை-எலும்பின் ஆரோக்கிய குறைபாடு, முதுகெலும்பு டிஸ்க் பிரச்சினைகள், எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்களால் கழுத்து வலி ஏற்படுகிறது. வாழ்வியல் முறை மற்றும் சிலவிதமான உடற்பயிற்சிகளால் ஓரளவு வரை கழுத்து வலியை கட்டுப்படுத்தலாம்.

    உட்கார்ந்த நிலையிலே அதிக நேரம் செய்யக்கூடிய வேலையாக இருந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறையும் இருக்கையில் இருந்து எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். கழுத்தை லேசாக அசைத்து கழுத்து தசைகளை இலகுவாக்குங்கள்.

    எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க பழகிக்கொள்ளுங்கள். நிமிர்ந்த நிலையில் இருக்க துணைபுரியும் குஷன் அல்லது தலையணையை அதற்காக பயன்படுத்துங்கள்.

    கம்ப்யூட்டரில் வேலைபார்க்கும்போது கண்களுக்கு நேராக ஸ்கிரீன் வரும்விதத்தில் மானிட்டரை அமைத்திருங்கள். கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்தினால், இடை இடையே கண்களுக்கும், கழுத்திற்கும் லேசான பயிற்சி கொடுங்கள்.

    தூங்கும்போது உயரம் குறைந்த தலையணையை பயன்படுத்துங்கள்.

    அதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், தலையை ஒருபுறமாக சாய்த்துவைக்கும் நிலையை தவிர்த்திடுங்கள்.

    படுத்துக்கொண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிகளை பார்க்காதீர்கள்.

    பஸ்சிலோ இதர வாகனங்களிலோ நீண்ட நேரம் பயணிக்கும்போது `நெக் காலர்' பயன்படுத்துங்கள்.

    வேலை பார்க்கும் நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்தை கடக்கும்போதும் கழுத்தை நான்கு முறை வட்டமாக சுற்றுங்கள். தலையை குனிந்து தாடை நெஞ்சில்படும் விதத்தில் பத்து வினாடிகள் வையுங்கள்.

    இடது பக்க காதை இடது தோளில் சாயுங்கள். 10 வினாடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, அதுபோல் வலது பக்க காதை வலது தோளில் சாய்த்து செய்யுங்கள்.

    செல்போனில் பேசி முடித்ததும் தலையை வலது, இடது புறமாக சில தடவை திருப்புங்கள்.

    தலையை மெதுவாக வட்டத்தில் சுற்றுங்கள்.

    வலியை கட்டுப்படுத்தும் வழிகள்:

    * கழுத்து வலிக்கும்போது அந்த இடத்தில் சுடுநீர் நிரப்பிய பேக்கைவைத்து ஒத்தடம் கொடுங்கள். வலி கட்டுப்படும்.

    * காட்டன் துணியை சுடுநீரில் முக்கிப் பிழிந்து கழுத்தை சுற்றி இலகுவாக கட்டிவைத்தாலும் வலி குறையும்.

    * நேராக பார்த்தபடி தலையை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி கொண்டு வாருங்கள்.

    * தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டியபடி தாடை நெஞ்சில் படும் அளவுக்கு குனியுங்கள்.

    * முடிந்த அளவு தலையை உயர்த்தியும், பின்பு தாழ்த்தியும் பத்து முறை செய்யுங்கள்.

    சில நேரங்களில் வேறு நோய்களின் அறிகுறியாகவும் கழுத்து வலி தோன்றும். அதனால் எலும்பு சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதும் நல்லது.

    ×