என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    அரிப்பு ஏற்படுவதற்குக் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நோய்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

    மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

    என்ன காரணம்?


    அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

    குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

    அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

    சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.



    காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

    அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    எச்சரிக்கும் நோய்கள்

    உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

    தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

    உணவும் மருந்தும்

    நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் சேர்த்து சூப்பரான இனிப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    பன்னீர் துருவல் - ஒரு கப்,
    காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    இனிப்பு சேர்க்காத கோவா - கால் கப்,
    பொடித்த சர்க்கரை - கால் கப்,
    வெனிலா எசன்ஸ் - சில துளிகள்,
    வறுத்துப் பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:  

    பன்னீர் துருவலுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, கோவா, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதுவே பூரணம்.

    கோதுமை மாவுடன் பால்விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும்.

    ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணம் வைத்து மற்றொரு பூரியால் மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ஒட்டவும் (மைதா பேஸ்ட் தொட்டும் ஒட்டலாம்).

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாரித்த பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் ஸ்டப்ஃடு இனிப்பு பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. எந்த உடற்பயிற்சிகள் தொப்பையை விரைவில் குறைக்க உதவும் என்று அறிந்து கொள்ளலாம்.
    கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன.

    உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகள் எரிந்து, கொழுப்பு சதவிகிதம் குறைந்துவிடுகின்றன. உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன. கொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும்.

    நாம் இளம் வயதில் வைத்திருந்தது போல வலுவான மூட்டுகள் தற்போது இருப்பதில்லை. இதனை மீட்டுக் கொண்டு வர ஜாக்கிங் அல்லது வாக்கிங் சரியாக இருக்காது. அதற்கு சரியான தீர்வு எலிப்டிகல் டிரைனர் மட்டுமே.

    சைக்கிள் பயிற்சி இல்லாமல் தொப்பை குறைப்பு சாத்தியமில்லை. கார்டியோ உடற்பயிற்சிகளால் தொப்பையை குறைப்பது முழுமையடையாது. நமது வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை வலுவடையச் செய்ய வேண்டும். சைக்கிள் பயிற்சி செய்வதன் மூலம், அடிவயிறு சீரடைதல், உடல் சுழற்சி, தசைகள் செயல்பாடு அதிகமாதல் ஏற்படும்.

    சீராக தொப்பையை குறைக்க, சைக்கிள் பயணம் மிகவும் உதவி செய்கிறது. மேலும் சைக்கிளில் பயணிப்பதன் மூலம் பல்வேறு இடங்களையும் பார்வையிட முடிகிறது. சைக்கிளின் வேகம், பயிற்சியின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து, 30 நிமிடத்தில் 250 முதல் 500 கலோரிகள் கரைக்கலாம்.

    பின்புறமாக உடலை சாய்த்து, முன்னால் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு தொப்பை குறைப்பு சாத்தியமாகிறது. தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தியும், உடலை 90 டிகிரிக்கு உயர்த்தியும் பயிற்சி செய்யலாம். 3 செட்களில் 12 முதல் 16 வரை எடுக்கலாம்.

    தொப்பையை குறைக்க மிகச்சிறந்த பயிற்சி. தரையில் படுத்துக் கொண்டு, கால்களை 90 டிகிரிக்கு நேராக உயர்த்த வேண்டும். அப்போது தலையும் சிறிது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். பயிற்சியின் தீவிரத்தைப் பொறுத்து அதிக கலோரிகளை எரிக்கலாம்.

    ஒரு பெரிய ரப்பர் பந்தில், உடலை கிடத்தி கைகளை மார்பின் குறுக்காகவோ அல்லது தலைக்கு பின்புறமாகவோ வைக்கவும். உடலை பக்கவாட்டிலும், முன்னும், பின்னும் நகர்த்தி பயிற்சி செய்யலாம்.
    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.
    பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

    இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

    பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

    செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

    பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.



    இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும்.

    உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

    உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
    மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஆரோக்கியமான டிபன் இந்த கோதுமை வெல்ல தோசை. இன்று இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - அரை கப்,
    வெல்லம் (பொடித்தது) - அரை கப்,
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    ரிஃபைண்ட் ஆயில் - கால் கப்,
    உப்பு - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    இதனுடன் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, தோசை மாவை பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் எண்ணெயை தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மெல்லிய தோசையாக வார்க்கவும்.

    சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சிவந்ததும் தோசையை திருப்பிப் போடவும். இருபுறமும் சிவந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை வெல்ல தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் தங்களது முடியை பல வண்ணங்களில் மாற்றி கொள்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வண்ணம் பிடிக்கவில்லையென்றால் இயற்கை முறையில் பழைய நிறத்திற்கு மாறுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
    ஹேர் கலரிங் முடி நிறமாற்றம் செய்து கொள்வது இப்போது நவீன நாகரிகமாக உள்ளது, பெண்கள் தங்களது முடியை பல வண்ணங்களில் மாற்றி கொள்கிறார்கள் பர்கண்டி, பழுப்பு, தங்கம் மேலும் நீளம் மற்றும் சிவப்பு போன்ற துடிப்பான வண்ணங்களிலும் மாற்றி கொள்கிறார்கள்.

    ஆனால் சில சமயங்களில் குறிப்பிட்ட வண்ணங்கள் அப்படியே நிலைத்து விடுகின்றது, அவற்றை நீக்கி பழைய வண்ணத்தை பெறுவது சிரமமான காரியம், கவலையை விடுங்கள் உங்கள் முடியை பழைய நிறத்திற்கு திரும்புவதற்கு எளிய சில வழிகளை நங்கள் வழங்குகிறோம்.

    * பேக்கிங் சோடா உங்கள் முடி நிறத்தை மென்மையாக்க உதவுகிறது. உங்களுக்கு பிடித்த ஷாம்பு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை சம அளவில் சேர்த்து கலக்கி ஒரு பேஸ்ட் போல தயார் செய்துகொள்ளவும். இந்த பேஸ்ட்யை உங்கள் முடியை ஈரமாக்கி மிதமாக மசாஜ் செய்யவும் பின்பு கழுவுங்கள், இது போல் மீண்டும் மீண்டும் நான்கு முதல் ஐந்து முறை செய்யவும். கவனிக்கத்தக்க முடிவுகளை பெறுவீர்கள்

    * எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இந்த சிட்ரிக் அமிலம் இயற்கையாகவே முடி நிறத்தை குறைக்கும் தன்மையுடையது. சிறிது எலுமிச்சை சாற்றை உங்கள் தலைமுடியில் நேரடியாக விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த பின் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு ஷவர் கேப் அணிந்து கொள்ளுங்கள். பின்னர் வெந்நீரில் ஷாம்பு போட்டு குளிக்கவும்



    * இது உங்கள் முடிவிலிருந்து வண்ணத்தை அகற்ற சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது சாயத்தை திறம்பட நீக்குவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் முடிவை செயலிழக்கச் செய்வதற்கு பதிலாக நல்ல ஊட்டமளிக்கும், முடி சேதமாவதை தடுக்கும் . உங்கள் முடியின் ஆரம்பம் முதல் வேர் வரை சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள், செய்த பின் ஒரு துண்டை சூடான நீரில் முக்கி, தலைமுடியில் சுற்றி குறைந்தது ஒரு மணி நேரம் வைத்துவிடுங்கள். இறுதியாக சூடான நீரில் கழுவவும் இது அனைத்து வண்ணங்களையும் திறம்பட போக்கவல்லது.

    * க்ளோதிங் டிடெர்ஜென்ட் பல ரசாயன கலவைகளை கொண்டுள்ளது, இவை முடியில் உள்ள 75 சதவீத வண்ணங்களை உடனடியாக நீக்கும் ஆற்றல் வாய்ந்தது. உங்கள் முடியில் உள்ள டை பிடிக்கவில்லை என்றல் பிளீச்சிங் இல்லாத டிடெர்ஜென்ட் ஒரு மேசைக்கரண்டி எடுத்து உங்கள் முடியை கழுவவும். கழுவிய பிறகு உங்கள் முடியை நன்றாக உலரவைக்கவும்

    * ஒரு சில வைட்டமின் c மாத்திரைகளை உடைத்து நசுக்கி ஒரு பேஸ்ட் பதத்தில் தயார் செய்துகொள்ளுங்கள், இந்த பசையை உங்கள் முடிகளை ஈரமாக்கி தடவுங்கள், ஒரு மணிநேரம் களைத்து கழுவுங்கள். மாயாஜாலங்களை காண்பீர்கள். ஆம். வைட்டமின் சி மாத்திரைகளில் சாயத்தை நீக்கும் இரசாயனம் உள்ளது, இது சாயத்தை 2 - 3 முறை கழுவும்போதே சாயத்தை நீக்கிவிடும்.

    * எலுமிச்சை சாற்றைப் போலவே, வினிகரின் அமிலத்தன்மை ரசாயன கலவைக்கு எதிராக சாயத்தை அகற்ற உதவுகிறது. சிறிது எண்ணெய், சிறிது வினிகரைச் சேர்த்து, வண்ணத்தை போக்கப் பயன்படுத்துங்கள். சாயம் போகும் வரை வினிகரைப் பயன்படுத்தி முடியை கழுவவும்.
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
    கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும் மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.

    அதனால் ஆணுறையைத் தவிர வேறு வழியே இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்போர் இந்த விஷயங்களைப் பின்பற்றினால், உங்கள் கவலைக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஆணுறையைப் பயன்படுத்தாமல், எப்படி கருத்தரிப்பை தள்ளிப் போடுவது என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அதற்கு வழிகள் உண்டு. இவை நூறு சதவீதம் பயன்தராது என்றாலும் 90 சதவிதம் கைக்கொடுக்கும்.

    சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்து உறவு கொள்ளுதல். அதாவது மாதவிலக்கு ஆரம்பிக்கப் போகும் முன் நான்கு நாட்களுக்குள்ளும், மாதவிலக்கு முடிந்து நான்கு நாட்கள் வரையும் எத்தனை முறை வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். இந்த காலகட்டங்களில் கரு பலவீனமுடையதாக இருக்கும். அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

    காப்பர் - டி என்பது பெண்ணின் அந்தரங்க உறுப்பில் பொருத்தும் கருவி. மருத்துவரின் உதவியுடன் இதைப் பொருத்திக் கொள்ளலாம். இதுவும் கருத்தரிப்பதைத் தடுக்கும்.

    உடலுறவின் போது, ஆண்கள் கொஞ்சம் கவனமுடன் இருக்க வேண்டும். உறவு கொள்ளும் போது, விந்தை பெண்ணுடைய உடலுக்குள் செலுத்தாமல், விந்து வெளியேறும் முன், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிட வேண்டும். இந்த முறைப்படி, 80 சதவீதம் வரை கருத்தரிப்பை தடுக்க முடியும்.

    குழந்தை பெற்ற தம்பதிகளாக இருந்தால், குழந்தை போதும் என்று நினைத்தால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், ஆணுறையைப் பயன்படுத்தாமலே கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.

    திருமணமான புதிதில் தம்பதிகளின் மத்தியில் இருக்கும் பொதுவான பயம் இந்த கருத்தரிப்பு விஷயம் தான். ஏனெனில் அவர்கள் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழ்க்கை அனுபவிக்க வேண்டுமென நினைப்பதுண்டு.
    முட்டை முற்றிலும் சத்து வாய்ந்த உணவு என்பது மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும் உண்மை. வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
    இன்று(அக்டோபர் 12-ந்தேதி)உலக முட்டை தினம்.

    காலங்காலமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் உணவில் முட்டைக்கு தனி இடம் உண்டு. முட்டை முற்றிலும் சத்து வாய்ந்த உணவு என்பது மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும் உண்மை. ஞாபக சக்தி மேம்படவும், மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், பார்வை திறனுக்கும் முட்டை பல விதங்களில் உதவுகிறது. முட்டையின் நன்மைகளைப் பரவலாகத் தெரியப்படுத்துவதற்காகவும் மனிதர்களின் வாழ்க்கையில் முட்டையின் சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், குறிப்பாக வைட்டமின்கள் ஏ, பி12, பி2, பி5 முதலியவை உள்ளன. மேலும் கோலின் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன. முட்டை சத்துகளின் தொகுப்பாகும். வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    வைட்டமின் ‘டி’யைத் தரும் உணவுகளில் இதன் மஞ்சள் கருவும் ஒன்று. கொழுப்புச் சத்துகளின் இருப்பிடமாக மஞ்சள் கரு இருப்பதால் அதை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டை சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாத நோய் வருவதில்லை. இருப்பினும் இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் முட்டையை தவிர்ப்பது நல்லது. அவர்கள் ஒரு நாளைக்கு 2, 3 முட்டைகளின் வெள்ளைக் கருவை எடுத்துச் சாப்பிடலாம்.

    முட்டையில் உள்ள புரதம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் மாவு சத்து உள்ள உணவுகள், நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால் உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது. கோழி முட்டை நம்மிடையே பிரபலமாக உள்ளது. சராசரியாக ஒரு கோழி வருடத்துக்கு 150 முதல் 200 முட்டைகள் இடும். ஒரு கோழி 21 வார வயதாக இருக்கும் போது முட்டையிடும்.



    இயற்கையாகவே முட்டைகளுக்கு பாதுகாப்பு கவசமுள்ளது. எனினும் அது எளிதில் உடையக்கூடியது. முட்டைகளை வாங்கும் போது நல்ல முட்டைகளாக ரத்தக்கறை இல்லாத முட்டைகளாக பார்த்து வாங்க வேண்டும். ஓடு உடைந்த முட்டைகளை வாங்க கூடாது. ஓடு உடைந்த முட்டை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் கெட்டுவிடும். நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் போலி முட்டையின் ஓடு பார்ப்பதற்கு பள பள வென்று இருக்கும். தொட்டு பார்த்தால் சிறிது சொர, சொரப்பாக இருக்கும். உண்மையான முட்டை இறைச்சி வாசனைத்தரும். போலி முட்டையில் எந்தவித வாசனையும் இருக்காது. போலி முட்டையை உடைத்த உடனேயே மஞ்சள் கருவும், வெள்ளைக்கருவும் ஒன்றாக கலந்து விடும்.

    முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியின் உள்அறையில் தான் வைக்க வேண்டும். இதன் மூலம் நிலையான மற்றும் குளிர் வெப்ப நிலையை பராமரிக்க முடியும். குளிர் சாதனப் பெட்டியின் கதவில் வைக்கும்போது வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக முட்டையின் தரம் கெட்டு போக வாய்ப்புள்ளது. அதை உபயோகிக்கும் போது உடலில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. முட்டைகளை மண் பானையில் வைப்பது சிறந்தது.

    குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முட்டைகளை பச்சையாக குடிக்கக்கூடாது. அது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். நாட்டுக்கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டுக்கும் சத்து ஒன்று தான். நடை முறையில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த ஒரு முழு உணவாக முட்டை திகழ்கிறது.

    முட்டைகளை நன்றாக அவித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது போன்ற விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம்.உலக அளவில் முட்டைக்கான சந்தையில் கோழிமுட்டை மட்டுமின்றி வாத்து, காடை, கவுதாரி போன்றவற்றின் முட்டைகளும் பிரபலமானவை. இந்தியா முட்டை உற்பத்தியில் 3-வது இடத்தில் உள்ளது.

    ரம்யா ராமச்சந்திரன்,

    ஊட்டச்சத்தியல் நிபுணர்
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட உருளைக்கிழங்கு கார குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பூண்டு - 10 பல்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 1,
    கீறிய பச்சை மிளகாய் - 3,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு, குழம்பு பொடி - தலா ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை:

    உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, கரைத்த புளியை ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு கார குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். அல்சர் பிரச்சனை வரக்காரணத்தையும், வந்தால் தவிர்க்க, சேர்த்து கொள்ள வேண்டிவை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    உணவுப் பழக்கத்தையும், வாழ்வியல் முறையையும் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனை அல்சர். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதால், பலரும் வயிற்றுப் புண் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

    அல்சர் என்றால்...

    அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.

    * இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம்.
    * உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது.
    * சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம்.

    காரணங்கள் என்னென்ன?

    பாக்டீரியா தொற்று (Helicobacter pylori)
    மன உளைச்சல்
    அதீத கவலை
    தவறான உணவுப் பழக்கம்
    சில வகை மருந்துகளை உட்கொள்வது
    அதிகமாகக் காபி குடிப்பது
    மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது  போன்ற பல்வேறு காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.

    தவிர்க்க வேண்டிய உணவுகள் :

    * காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.



    * பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது.

    * சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம்.

    * ரெட் மீட்டை உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.

    சாப்பிட வேண்டிய உணவுகள்:


    * நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.

    * தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம்.

    * முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம்.

    * ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.

    * கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.

    * அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

    * வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.

    * மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

    * பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.

    * முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
    மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
    செய்முறை : விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.

    பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.

    அர்த்தசின் முத்திரை

    ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள்: 10 - 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.
    இந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ,
    பெரிய வெங்காயம் - 4,
    தக்காளி - 2,
    பூண்டு - 4 அல்லது 5 பல்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

    மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

    பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

    அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×